கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை வரை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

 


கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை வரை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தள்ளுபடி : முதல்வர்


சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 6 ஆயிரம் கோடி அளவிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்


இந்த அறிவிப்பு 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரே குடும்பத்தில் அதிகமானோர் அடகு வைத்திருந்தால் களையப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிரந்தர விலக்குப் பெறும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா: சட்டப்பேரவையில் தாக்கல்...

 


நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதாவை சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.


தமிழகத்தில் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.


இந்த குழு தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் தமிழக சட்டசபையில்  மசோதா தாக்கல் செய்யப்பட்டது..



 சட்டசபை கூட்டத்திற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்புப் பட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்தனர்.நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷ் மறைவுக்காகவும், வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வெட்டிக் கொல்லப்பட்டதற்காகவும் கருப்பு பட்டை அணிந்து வந்ததாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகவல் தெரிவித்தனர்.


 சட்டசபை கூடியதும்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. கஞ்சா விற்பனை குறித்து காவல் துறையில் புகாரளித்த வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார் 


நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சட்டசபையில்  தி.மு.க. - அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில்  இருந்து வெளிநடப்பு செய்தனர்.


நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதாவை சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து பேசியதாவது;-


நீட் தேர்வை ஆரம்பம் முதலே தி.மு.க. எதிர்த்து வருகிறது.


தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.


அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடும் தொடரும் வகையில் மசோதா இருக்கும். நீட்டில் நிரந்தர விலக்கு பெறும் சட்டமசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.


12ம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.


நீட் தேர்வை எதிர்ப்பதற்கான எந்த திராணியும் அ.தி.மு.க.வுக்கு இல்லை.


சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலை நிறுத்தவும், மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும் நீட் விலக்கு சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.


கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தி உள்ளது.


நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது; சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின், பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது.


நீட் தேர்வு காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையும் கனவுகளும் தகர்ந்துள்ளது.


நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர்  அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

எந்த அரசு ஊழியர்களும் தாங்கள் விரும்பும் இடத்துக்கு மாற்றும்படி கேட்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு...

 எந்தவொரு அரசு ஊழியரும் குறிப்பிட்ட இடத்துக்கு தன்னை பணியிட மாற்றம் செய்யும்படி கேட்க முடியாது,’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு கல்லூரி பேராசிரியை, அம்ரோகா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கடந்த 2013 முதல் 2017 வரையில் பணியாற்றி வந்தார். இந்த இடத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றி முடித்ததை தொடர்ந்து, தன்னை கவுதம் புத்தாநகர் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யும்படி அதிகாரிகளிடம் விண்ணப்பம் அளித்தார். அதை அதிகாரிகள் நிராகரித்தனர். இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.



இதை விசாரித்த நீதிமன்றம், ‘மனுதாரர் முதன் முதலில் பணி நியமனம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டில் இருந்து 2013ம் ஆண்டு வரையில் கவுதம் புத்தாநகர் கல்லூரியில் தான் தொடர்ந்து 13 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். ஏற்கனவே, பணியாற்றிய இடத்துக்கு தன்னை இடமாற்றம் செய்யும்படி அவர் கோர முடியாது. வேண்டுமானால், அவர் விரும்பும் வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்ய கோரலாம்,’ என தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பேராசிரியை மேல்முறையீடு செய்தார். இதை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த 6ம் தேதி இந்த அமர்வு அளித்த தீர்ப்பில், ‘எந்தவொரு அரசு ஊழியரும் குறிப்பிட்ட இடத்துக்கு தன்னை இடமாற்றம் செய்யும்படி நிர்பந்தம் செய்ய முடியாது. தேவைக்கு ஏற்றப்படி பணியிட மாற்றம் செய்வது, அதிகாரிகளின் முடிவை பொருத்தது,’ என கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.



இன்றைய (14-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

செப்டம்பர் 14, 2021



விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கூட்டாளிகளின் மூலம் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : காரியசித்தி உண்டாகும்.


பரணி : நம்பிக்கை பிறக்கும்.


கிருத்திகை : தனவரவுகள் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 14, 2021



வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களிடம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். தவறிய சில வாய்ப்புகள் மற்றும் கடந்த கால நினைவுகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.


ரோகிணி : குழப்பங்கள் உண்டாகும்.


மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 14, 2021



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தோற்றப்பொலிவுகளில் மாற்றங்கள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதற்கான பலன்கள் கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


திருவாதிரை : மாற்றங்கள் உண்டாகும்.


புனர்பூசம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 14, 2021



பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்நிலை கல்வியில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.


பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.


ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 14, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், ஆதாயமும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : இழுபறிகள் குறையும்.


பூரம் : சாதகமான நாள்.


உத்திரம் : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 14, 2021



எந்தவொரு செயலையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மனதில் அதிகரிக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும்.


சித்திரை : இன்னல்கள் குறையும்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 14, 2021



கடினமான செயல்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வகையில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொருள் வரவுகள் மேம்படும். மறைமுகமாக இருக்கக்கூடிய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



சித்திரை : ஆதரவான நாள்.


சுவாதி : பொருள் வரவுகள் மேம்படும்.


விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 14, 2021



இனிமையான பேச்சுக்களின் மூலம் மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில செயல்பாடுகள் காலதாமதமாக நிறைவு பெறும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



விசாகம் : எண்ணங்கள் நிறைவேறும்.


அனுஷம் : நம்பிக்கை மேம்படும்.


கேட்டை : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 14, 2021



குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதில் நிதானம் வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். விதண்டாவாத சிந்தனைகளை விடுத்து விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மன அமைதி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



மூலம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


பூராடம் : நிதானம் வேண்டும்.


உத்திராடம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

---------------------------------------





மகரம்

செப்டம்பர் 14, 2021



எதிர்பார்த்த பணிகள் நிறைவு பெறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த பொருட்களின் மூலம் ஆதாயம் மேம்படும். மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதிய பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



உத்திராடம் : ஆதரவான நாள்.


திருவோணம் : தீர்வு கிடைக்கும்.


அவிட்டம் : புரிதல் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 14, 2021



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். மனதில் புத்துணர்ச்சியான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மற்றும் உதவிகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அவிட்டம் : மனக்கசப்புகள் குறையும்.


சதயம் : ஆதாயமான நாள்.


பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும். 

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 14, 2021



உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலைகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். நிர்வாக பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



பூரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------


ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும் - தமிழ்நாடு அரசு நிதித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டம்(பழைய ஓய்வூதியத் திட்டம்), குறைந்தபட்ச மாத ஓய்வூதியம், ஓய்வு பெறுவோருக்கான பலன்கள்(Pensions and Other Retirement Benefits - Tamilnadu Government Finance Department Policy Note - Contributory Pension Scheme and Limited Benefit Pension Scheme (Old Pension Scheme), Minimum Monthly Pension, Retirement Benefits)...



ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால  நன்மைகளும் - தமிழ்நாடு அரசு கொள்கை விளக்கக் குறிப்பு - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போதைய நிலை வரை - பக்கம் (4-26) - இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் தவிர ஏனைய அனைத்து மாநிலங்களிலும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என தகவல் வெளியீடு...




பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டம்(பழைய ஓய்வூதியத் திட்டம்), குறைந்தபட்ச மாத ஓய்வூதியம், ஓய்வு பெறுவோருக்கான பலன்கள்...









>>> ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால  நன்மைகளும் - தமிழ்நாடு அரசு நிதித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டம்(பழைய ஓய்வூதியத் திட்டம்), குறைந்தபட்ச மாத ஓய்வூதியம், ஓய்வு பெறுவோருக்கான பலன்கள்(Pensions and Other Retirement Benefits - Tamilnadu Government Finance Department Policy Note - Contributory Pension Scheme and Limited Benefit Pension Scheme (Old Pension Scheme), Minimum Monthly Pension, Retirement Benefits)...


ஆசிரியர் பயிற்றுநர் 500 பேர் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக மாறுதல் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு(BRTEs to B.T. Transfer Counselling & BRTEs Transfer Counselling Announced) - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்:41779/சி4/இ1/2021, நாள்:13-09-2021...


BRTE பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு....


ஆசிரிய பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் மற்றும் பொது மாறுதல் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.


பொது மாறுதல்


 2021-2022 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநில மற்றும் மாவட்டத்திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - சார்பாக.


பள்ளிக் கல்வித் துறையில் 2021-2022ம் கல்வி ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணிமாறுதல் வழங்குதல் , அதனைத் தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்பாக பார்வையில் கண்டுள்ளபடி நெறிமுறைகள் வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை நகல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது...


 >>> ஆசிரியர் பயிற்றுநர் 500 பேர் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக மாறுதல் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு(BRTEs to B.T. Transfer Counselling & BRTEs Transfer Counselling Announced) - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்:41779/சி4/இ1/2021, நாள்:13-09-2021...


>>> ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு(Transfer Counselling to BRTEs) நடத்த கல்வித்துறை உத்தரவு...



கட்டாய பணி மாறுதலில் பட்டதாரி ஆசிரியர்களாக பள்ளிகளுக்கு செல்ல உள்ள 500 ஆசிரியர் பயிற்றுநர்கள் விபரம் வெளியீடு(Details of 500 BRTEs who are going to go to Schools as Graduate Teachers in Compulsory Transfer)...



>>> கட்டாய பணி மாறுதலில் பட்டதாரி ஆசிரியர்களாக   பள்ளிகளுக்கு செல்ல உள்ள 500 ஆசிரியர் பயிற்றுநர்கள் விபரம் வெளியீடு(Details of 500 BRTEs who are going to go to Schools as Graduate Teachers in Compulsory Transfer)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

  2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ...