கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் திட்டம் பயிற்சி - கட்டகம் 7 - வினாடி வினா - உத்தேச விடைகள் ( EEM -Ennum Ezhuthum Mission Training - Module 7 - Quiz Questions & Tentative Answers)...



>>> எண்ணும் எழுத்தும் திட்டம் பயிற்சி - கட்டகம் 7 - வினாடி வினா - உத்தேச விடைகள் ( EEM -Ennum Ezhuthum Mission Training - Module 7 - Quiz Questions & Tentative Answers)...










>>>   எண்ணும் எழுத்தும் திட்டம் பயிற்சி - கட்டகம் 5 - வினாடி வினா - உத்தேச விடைகள்...



>>> எண்ணும் எழுத்தும் திட்டம் பயிற்சி - கட்டகம் 4 - வினாடி வினா - உத்தேச விடைகள்... 



>>> எண்ணும் எழுத்தும் திட்டம் பயிற்சி - கட்டகம் 3 - வினாடி வினா - உத்தேச விடைகள்...



>>> எண்ணும் எழுத்தும் திட்டம் பயிற்சி - கட்டகம் 2 - வினாடி வினா - உத்தேச விடைகள்...



>>> எண்ணும் எழுத்தும் திட்டம் பயிற்சி - கட்டகம் 1 - வினாடி வினா - உத்தேச விடைகள்...


பழைய ஓய்வூதிய திட்டம் - போராட்டம் குறித்து பெண் அரசு பணியாளரின் உரை வீச்சு (Old Pension Scheme - Female Civil Servant's Speech about Struggle) - காணொளி...



>>> பழைய ஓய்வூதிய திட்டம் - போராட்டம் குறித்து பெண் அரசு பணியாளரின் உரை வீச்சு (Old Pension Scheme - Female Civil Servant's Speech about Struggle) - காணொளி...

இன்றைய (10-05-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

மே 10, 2022



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், ஆசைகளும் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : உற்சாகம் ஏற்படும்.


கிருத்திகை : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

மே 10, 2022



தாயாருடன் தேவையற்ற விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். கலை சார்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




கிருத்திகை : விவாதங்கள் நீங்கும்.


ரோகிணி : ஆர்வம் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------





மிதுனம்

மே 10, 2022



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கேளிக்கை தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் ஏற்படும். புதிய முயற்சிகளில் உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை விட சிந்தித்து செயல்படவும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.


புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





கடகம்

மே 10, 2022



மனை சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கல்வி பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் புதிய அறிமுகம் கிடைக்கும். துன்பம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.


பூசம் : முடிவு கிடைக்கும்.


ஆயில்யம் : அறிமுகம் உண்டாகும்.

---------------------------------------





சிம்மம்

மே 10, 2022



உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். புதிய முயற்சிகள் அதிகரிக்கும். புதிய துறை சார்ந்த தேடல் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உடல் ஆரோக்கியம் நிமிர்த்தமான எண்ணங்கள் அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். திருப்திகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மகம் : தேடல் உண்டாகும்.


பூரம் : ஒத்துழைப்பு மேம்படும்.


உத்திரம் : மாற்றமான நாள்.

---------------------------------------





கன்னி

மே 10, 2022



குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். ஆதாயம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.


அஸ்தம் : புதுமையான நாள்.


சித்திரை : நெருக்கடிகள் நீங்கும்.

---------------------------------------





துலாம்

மே 10, 2022



வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் நெருக்கடிகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். பூர்வீகம் சம்பந்தமான சுபவிரயம் ஏற்படும். தடைகள் அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.


சுவாதி : இழுபறிகள் அகலும்.


விசாகம் : சுபவிரயம் உண்டாகும்.

---------------------------------------





விருச்சிகம்

மே 10, 2022



சமூக பணிகளில் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். திட்டமிட்ட பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் நுட்பமான விஷயங்களை அறிவீர்கள். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். கனிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்




விசாகம் : சிந்தித்து செயல்படவும். 


அனுஷம் : வெற்றிகரமான நாள்.


கேட்டை : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------





தனுசு

மே 10, 2022



பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் லாபம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மூலம் : அனுகூலம் உண்டாகும்.


பூராடம் : லாபம் மேம்படும். 


உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------





மகரம்

மே 10, 2022



வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திராடம் : சிந்தித்து செயல்படவும். 


திருவோணம் : மாற்றம் உண்டாகும்.


அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------





கும்பம்

மே 10, 2022



புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளில் ஈடுபாடு உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதுவிதமான பயிற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எதிர்பாராத சிலரின் அறிமுகத்தின் மூலம் தேவைகள் நிறைவேறும். நன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


சதயம் : திருப்திகரமான நாள்.


பூரட்டாதி : தேவைகள் நிறைவேறும்.

---------------------------------------




மீனம்

மே 10, 2022



மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்கள் கைகூடும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சிரமம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




பூரட்டாதி : கவலைகள் குறையும். 


உத்திரட்டாதி : முடிவு கிடைக்கும்.


ரேவதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------


இருக்கை வேண்டுமென்றால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை விளக்க அறிக்கை - நாள்: 09-05-2022 (Department of Transport - Explanatory Report that children under the age of 5 must pay a fee if they want a seat - Date: 09-05-2022)...



>>> இருக்கை வேண்டுமென்றால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை விளக்க அறிக்கை - நாள்: 09-05-2022 (Department of Transport - Explanatory Report that children under the age of 5 must pay a fee if they want a seat - Date: 09-05-2022)...


அரசு பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை தேவை எனில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்;


5 - 12 வரையிலான குழந்தைகளுக்கு அரைக் கட்டணம் வசூலிக்கப்படும்.


 - போக்குவரத்துத்துறை...


ஒரு பெண் அரசு ஊழியருக்கு, குழந்தை பிறந்த பின் சிறிது காலத்தில் இறந்த நிலையிலும் அரசாணை (நிலை) எண்: 84, நாள்: 23-08-2021ன் படி 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு Post Confinement Recuperation என்ற அடிப்படையில் முழுமையாக துய்க்கலாம் என்பதற்கான மனித வள மேலாண்மைத் துறை அரசு செயலாளர் கடிதம் (Government letter to a female civil servant on the basis of Post Confinement Recuperation of Maternity Leave for 365 days as per G.O. (Ms) No: 84, Dated: 23-08-2021 even if the child dies shortly after birth) எண்: 2287786/ அ.வி.III/ 2022-1, நாள்: 02-05-2022...



>>> ஒரு  பெண் அரசு ஊழியருக்கு, குழந்தை பிறந்த பின் சிறிது காலத்தில் இறந்த நிலையிலும் அரசாணை (நிலை) எண்: 84, நாள்: 23-08-2021ன் படி 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு Post Confinement Recuperation என்ற அடிப்படையில் முழுமையாக துய்க்கலாம் என்பதற்கான மனித வள மேலாண்மைத் துறை அரசு செயலாளர் கடிதம் (Government letter to a female civil servant on the basis of Post Confinement Recuperation of Maternity Leave for 365 days as per G.O. (Ms) No: 84, Dated: 23-08-2021 even if the child dies shortly after birth) எண்: 2287786/ அ.வி.III/ 2022-1, நாள்: 02-05-2022...

இல்லம் தேடிக் கல்வி - மே மாதத்தில் கோடை விடுமுறையில் செயல்படுதல் - தன்னார்வலர்களுக்கான வழிகாட்டுதல்கள் குறித்து சிறப்புப் பணி அலுவலர் உயர்திரு.இளம்பகவத் இ.ஆ.ப. அவர்களது கடிதம் (Illam Thedi Kalvi - Activities During the Summer Vacation in May - Guidance for Volunteers Special Mission Officer Letter) ந.க.எண்: 449/ C7/ SS/ 2021, நாள்: 09-05-2022...

 


>>> இல்லம் தேடிக் கல்வி - மே மாதத்தில் கோடை விடுமுறையில் செயல்படுதல் - தன்னார்வலர்களுக்கான வழிகாட்டுதல்கள் குறித்து  சிறப்புப் பணி அலுவலர் உயர்திரு.இளம்பகவத் இ.ஆ.ப. அவர்களது கடிதம் (Illam Thedi Kalvi - Activities During the Summer Vacation in May - Guidance for Volunteers Special Mission Officer Letter) ந.க.எண்: 449/ C7/ SS/ 2021, நாள்: 09-05-2022...



கோடை விடுமுறை காலத்தில் இல்லம் தேடிக் கல்வி-  வழிகாட்டு நெறிமுறைகள்...


இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் ஆர்வத்தின் காரணமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் முக்கிய முடிவுகள் தன்னார்வலர்களின் கருத்தினை கேட்டு ஜனநாயக அடிப்படையில்  எடுக்கப்படுகின்றன. மையங்கள் நடத்துவது தொடர்பான பல்வேறு விதமாக கருத்துக்கள் தெரிவித்துள்ள தன்னார்வலர்களின் உணர்வுகள் மற்றும் மாணவர்களின் ஆர்வம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு மே மாதத்தில் இல்லம் தேடி கல்வி மையங்கள் இயங்குவது குறித்து கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன. 


1) மே 13-ம் தேதி வரை மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்வதற்கு மாலை நேரங்களில் தன்னார்வலர்கள் உதவி செய்யலாம். 


2) 19 சதவீத தன்னார்வலர்கள் கோடைகாலங்களில் இயல்பான வகுப்பை தவிர்த்து வாசித்தல் கதை சொல்லுதல் போன்ற செயல்பாடுகளை செய்யலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு வாசித்தல் திறனை மேம்படுத்துவதற்கு கோடை விடுமுறைக் காலங்களில் தன்னார்வலர்கள் கதை சொல்லுதல் நூல் வாசித்தல் போன்ற செயல்களைச் செய்யலாம். இதற்கான நூல்களை அருகில் உள்ள சில நூலகங்களில் தன்னார்வலர்கள் உறுப்பினர்கள் ஆகி பெற்றுக்கொள்ளலாம். பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள புத்தக பூங்கொத்து மற்றும் பள்ளி நூலகங்களில் உள்ள நூல்களையும் வாசிப்பு இயக்கத்திற்காக தன்னார்வலர் களுக்கு வழங்கலாம். 


3) இல்லம் தேடிக் கல்வி மாலை நேரங்களில் செயல்படுவதால் தொடர்ந்து நடத்தலாம் என்று 16 சதவீத தன்னார்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாணவர்களும் இல்லம் தேடி கல்வி வருவதற்கு ஆர்வமாக உள்ளனர் என்றும் எனவே அவர்களது ஆர்வத்தை தடுக்கக்கூடாது என்றும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.  கோடை விடுமுறைக் காலங்களில் இல்லம் தேடி கல்விக்கு வர விரும்பும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் வகுப்புகள் எடுக்கலாம். மாணவர்கள் கல்வி பயில எந்த தடையும் இல்லை. கோடை விடுமுறைக் காலங்களில் வகுப்புகள் நடைபெறும் அதில் மாணவர்கள் பங்கேற்கலாம் என்பது குறித்த தகவல்களை பெற்றோருக்கு தன்னார்வலர்கள் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்கள் இசைவுடன் மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தன்னார்வலர்கள் இல்லம் தேடிக் கல்வி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 


4) விடுமுறை காலங்களில் மாணவர்கள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள் எனவே விளையாட்டு வழி சொல்லித் தரலாம் என்று 14 சதவீதம் தன்னார்வலர்கள் வாக்களித்துள்ளனர். விளையாட்டு மற்றும் பாடல் வழி கற்பித்தல் இல்லம் தேடி கல்வியின் பிரிக்க இயலாத அங்கமாகும்.  இல்லம் தேடிக் கல்வி மாலை நேரங்களில் நிழல் சூழ்ந்த பகுதியில் விளையாட்டு வழி கற்பிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. 

 

5) மாணவர்கள் சிலர் வெளியூர் சென்று விடுவார்கள் எனவே அவர்களுக்கு விடுமுறை வேண்டும் என்று 55 சதவீத தன்னார்வலர்கள் வாக்களித்துள்ளனர். கோடை விடுமுறை காலங்களில் மாணவர்கள் வெளியூர் செல்வது இயல்பு. அவ்வாறு வெளியூர் செல்லும் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வியில் விடுமுறை அளிக்க வேண்டும். ஒரு மையத்தில் சில மாணவர்கள் மட்டும் வெளியூர் சென்றால் மற்ற மாணவர்கள் வகுப்புகள் வர சம்மதித்தால் அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் எடுக்கலாம். வெளியூர் செல்லும் மாணவர்கள் வெளியூர் செல்லும் இடத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தில் மாலை நேரங்களில் கற்கலாம். வெளியூர் சென்ற மாணவர்கள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திரும்பிய பிறகு இல்லம் தேடி கல்வி மையத்தில் தொடர்ந்து பயிலலாம். 


6) தன்னார்வலர்கள் வெளியூர் செல்வதால் அக்காலத்தில் இல்லம் தேடிக் கல்வி நடத்த இயலாது எனவே விடுமுறை வேண்டும் என்று 8 சதவீத தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேறு சொந்த காரணங்களால் விடுமுறை வேண்டும் என்று 6 சதவீத தன்னார்வலர்கள் வாக்களித்துள்ளனர். தன்னார்வலர்கள் எதிர்வரும் போட்டி தேர்வுக்கு தயாராவது மற்றும் கோடை விடுமுறையில் வெளியூர் செல்வது ஆகிய காரணங்களால் விடுமுறை கேட்பது நியாயமான கோரிக்கைகள் ஆகும். இவ்வாறு விடுமுறை கோரும் தன்னார்வலர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு 14.5.2022  முதல் 31.5.2022 விடுமுறை வழங்கப்படுகிறது. தாங்கள் விடுமுறையில் செல்லும் நாட்கள் குறித்த விவரத்தினை மையத்தில் பயிலும் மாணவர்களுக்கும் தொடர்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் தெரிவிக்க வேண்டும். இக்காலங்களில் தன்னார்வலர்கள் ஆன்லைன் வருகைப் பதிவு செய்யத் தேவையில்லை. 


*கோடைகால சிறப்பு முயற்சிகள் மற்றும் பயிற்சிகள்*


கோடை விடுமுறையில் இல்லம் தேடிக் கல்வி மையங்களில்  கீழ்க்கண்ட சிறப்பு பயிற்சிகள் மற்றும் சிறப்பு முயற்சிகள் எடுக்கலாம்.


1) ஜூன் முதல் வாரத்திலிருந்து இல்லம் தேடிக் கல்வி மாணவர்கள் பங்கேற்கும் மாபெறும் வாசிப்பு இயக்கம் நடைபெற உள்ளது. இதற்கு தயார்படுத்தும் வகையில் மாணவர்களை நூலகங்களுக்கு அழைத்துச் சென்று நூல்கள் படிப்பதற்கு கற்றுத்தர வேண்டும்.


2) மாணவர்களின் வாசித்தல் திறனை அதிகப்படுத்த Google read along செயலி மூலம் வாசித்தல் இயக்கம் நடத்தப்பட உள்ளது. இதற்கான பயிற்சியை தன்னார்வலர்கள் இணையவழி கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான விரிவான பயிற்சி அட்டவணை மாநில அலுவலகத்திலிருந்து தனியாக அனுப்பி வைக்கப்படும்.


3) தன்னார்வலர்களின் அனுபவங்கள் மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவை குறித்து தன்னார்வலர்கள் தங்களுக்குள் கருத்து பகிர்ந்து கொள்வதற்கான கருத்து பகிர்வு இணையவழி காணொலி கருத்தரங்கங்கள் கோடை காலங்களில் நடத்தப்படும். இதில் தன்னார்வலர்கள் கலந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும். வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் இணையவழி கருத்து பகிர்வு அட்டவணையை வெளியிட்டு டெலிகிராம் செயலி, கூகுள் மீட், ஆகியவற்றின் வழியாக நடத்தலாம். 


4) எதிர் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட வேண்டிய சிறப்பு முயற்சிகள் குறித்து தொடர்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியர்கள்  மற்றும் பள்ளி மேலாண்மை குழுக்களுடன் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அரசுப்பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க உதவும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கும், பள்ளி மேலாண்மைக்குழுகளுக்கும் மாவட்ட அளவில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கலாம். 


5) இல்லம் தேடிக் கல்வி மாணவர்களுக்கு நடத்தப்படும் அடிப்படை ஆய்வு (Baseline survey) நடைமுறையை மே 13-ஆம் தேதிக்குள் தன்னார்வலர்கள் அனைத்து மாணவர்களுக்கும் நிறைவுசெய்ய அறிவுறுத்த வேண்டும்.


6) இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு வழங்கப்படும்  கையேடு மற்றும் பயிற்சி அட்டைகள் விரைவில் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு உரிய விளக்க உரையுடன் அளிக்க வேண்டும். பயிற்சி அட்டவணை மாநில அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும்.  


எனவே வழிகாட்டு நெறிமுறைகளை  தன்னார்வலர்களுக்கு ஆசிரியர் பயிற்றுநர்கள்,  மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் வாயிலாக தகவல் தெரிவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


சிறப்புப் பணி அலுவலர்

இல்லம் தேடிக் கல்வி

ஆசிரியர்களுக்கு தொந்தரவு தரும் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்படுவார்கள் - காரணம் அவர்களின் மாற்றுச் சான்றிதழில்(TC) பதிவு செய்யப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு (Students troubles teachers will be expelled from school - Reason will be registered in their Transfer Certificate (TC) - Minister of School Education)...



ஆசிரியர்களுக்கு தொந்தரவு தரும் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்படுவார்கள்.


என்ன காரணத்துக்காக மாணவர்கள் நீக்கப்படுகின்றனர் என்பது குறித்து அவர்களின்  மாற்றுச் சான்றிதழில்(TC) பதிவு செய்யப்படும். 


- சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் அறிவிப்பு...


ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


 ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுக்கக்கூடாது.


பள்ளிக்கு அலைபேசி (Cell Phone) கொண்டுவரக் கூடாது.


 ஒழுங்கீனமாக நடந்தால் டி.சி. சான்றிதழில் மாணவர் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் எனவும் கூறியுள்ளார்.



♨️ *ஆசிரியர்களிடம் அடாவடி செய்யும் மாணவர்கள் நிரந்தர நீக்கம்: அமைச்சர்


♨️ *சென்னை: ‛மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால் சான்றிதழ்களில் என்ன காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு, பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


♨️ *தமிழக பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடப்பதாக கடந்த சில நாட்களாக வீடியோக்கள் வெளிவருகின்றன. கண்ணியம் குறைவாக நடக்கும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வந்தனர். இது தொடர்பாக சட்டசபையில் பா.ம.க எம்எல்ஏ ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்ததாவது: வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திவிட்டே, பின் பாடங்கள் நடத்தப்படும். இன்றைய கால கட்டத்தில் கவனச்சிதறல்கள் அதிகரித்துள்ளது.


♨️ *மன அழுத்தத்தில் இருந்த குழந்தைகளை கட்டுப்படுத்தும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறைகூறுவது தவறு. பள்ளிகள் - பெற்றோர்கள் - அரசு ஆகியோருக்கு கூட்டுப்பொறுப்பு உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், டிசியிலும், நன்னடத்தை சான்றிதழிலும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். மாணவர்கள் பள்ளிக்கு கைப்பேசி கொண்டு வருவது முற்றிலும் தடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key

    3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...