கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிகளுக்கு நடைபெற இருந்த கலந்தாய்வு தள்ளிவைப்பு - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Adjournment of the Promotion Counselling for the posts of Headmasters of High/ Higher Secondary Schools as per Madras High Court Order - Proceedings of the Commissioner of School Education ) ந.க.எண்: 35593/ சி2/ இ2/ 2022, நாள்: 11-07-2022...

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிகளுக்கு நடைபெற இருந்த கலந்தாய்வு தள்ளிவைப்பு - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Adjournment of the Promotion Counselling for the posts of Headmasters of High/ Higher Secondary Schools as per Madras High Court Order - Proceedings of the Commissioner of School Education ) ந.க.எண்: 35593/ சி2/ இ2/ 2022, நாள்: 11-07-2022...




ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம் (NHIS)‌, அரசாணை எண்‌. 204, நிதி (மருத்துவக்‌ காப்பீடு) துறை, நாள்‌ 30-6-2022ல்‌ தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய விவரங்கள் (New Health Insurance Scheme for Pensioners and Family Pensioners, G.O.Ms.No.204, Finance (Medical Insurance) Department, Dated: 30-6-2022 - Some important details)‌...

 ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌, 2022 (01-07-2022 முதல்‌ 30-6-2026 வரை)-க்கான அரசாணை எண்‌. 204, நிதி (மருத்துவக்‌ காப்பீடு) துறை, நாள்‌ 30-6-2022 அரசால்‌ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


அந்த அரசாணையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய விவரங்கள்‌:


1. 01-07-2022 முதல்‌ 30-6-2026 வரைக்கான 4 ஆண்டு கால தொகுப்புக்கு ரூ. 5,00,000/-(ரூபாய்‌ ஐந்து இலட்சம்‌) அனுமதிக்கப்பட்டுள்ளது .


2. கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஒரு கண்ணுக்கு ரூ.30,000/-அனுமதிக்கப்பட்டுள்ளது.


3. பெண்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.50,000/- அனுமதிக்கப்பட்டுள்ளது.


4. United India Insurance Company, சென்னை, இந்த திட்டத்தை செயல்படுத்தும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


5. இத்திட்டம்‌ ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களுக்கு கட்டாயமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


6. இத்திட்டத்திற்காக ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களின்‌ ஓய்வூதியத்தில்‌ 01-07-2022 முதல்‌ மாதா மாதம்‌ ரூ. 497/- பிடித்தம்‌ செய்யப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


7. குறிப்பிட்ட சிறப்பு சிகிச்சைகளுக்கு ரூ. 10,00,000/- (ரூபாய்‌ பத்து இலட்சம்‌) அனுமதிக்கப்பட்டுள்ளது.


8. அரசாணையில்‌ தெரிவிக்கப்படாத மருத்துவமனைகளில்‌ (Non-Network Hospitals) அவசரமில்லாத சாதாரண சிகிச்சை மேற்கொண்டாலும்‌, நிர்ணமிக்கப்பட்ட தொகையில்‌ 75% திரும்பக்‌ கொடுப்பதாக (Reimbursement) தெரிவிக்கப்பட்டுள்ளது.


9. உள்‌ நோயாளியாக 24 மணி நேரம்‌ மருத்துவமனையில்‌ அவசியம்‌ சிகிச்சை பெற்று இருக்க வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


10. சிறுநீரக கோளாறு (Kidney Dialysis) மற்றும்‌ -கொரோனா நோய்‌ தொற்று-19 (Critical ICU Management) க்கு ரூ. 10,00,000/- (ரூபாய்‌ 10 இலட்சம்‌) வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


11. இத்திட்டத்தில்‌ 203 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவம்‌ மற்றும்‌ அறுவை சிகிச்சை ( 89 Additional Procedures) சிகிச்சையினை 1,221 மருத்துவமனைகளில்‌ செய்து கொள்ள பட்டியலிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


12. திருமணம்‌ ஆகாத மகன்‌ (25 வயது வரை மட்டும்‌), மன வளர்ச்சி குன்றிய மகன்‌/மகள்‌ 25 வயது முடிவுற்றிருந்தாலும்‌ அவர்களுக்கு திருமணம்‌ ஆகும்வரை இத்திட்டத்தின்‌ மூலம்‌ பயனடையலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது .


13. மாத வருமானம்‌ ரூ.7850/- க்குள்‌ வருமானம்‌ ஈட்டும்‌ திருமணம்‌ ஆகாத /விவாகரத்தான / விதவைமகள்கள்‌ இத்திட்டத்தின்‌ மூலம்‌ பயனடையலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


14. தமிழ்நாடு அரசு ஓய்வூதியம்‌ பெற்று வரும்‌ வெளி மாநிலங்களில்‌ வசிப்பவர்கள்‌ அவர்களின்‌ விருப்பத்தின்‌ பேரில்‌ இத்திட்டத்தில்‌ சேரலாம்‌ எனவும்‌, இத்திட்டத்தில்‌ சேர விருப்பம்‌ இல்லாதவர்கள்‌ இத்திட்டத்தில்‌ சேர விருப்பம்‌ இல்லை என விருப்பமனு அளிக்கலாம்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


15. பல்‌ மருத்துவம்‌ மற்றும்‌ அது தொடர்பான அறுவை சிகிச்சை இத்திட்டத்தில்‌ சேர்க்கப்பட்டுள்ளது.


16. ENT தொடர்பான மருத்துவம்‌ இத்திட்டத்தில்‌ சேர்க்கப்பட்டுள்ளது.


17. அரசு மருத்துவமனைகளில்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ சிகிச்சை பெறலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


18. புதியதாக ID Card 60 நாட்களுக்குள்‌ வழங்கப்படும்‌ எனவும்‌, அதுவரை பழைய ID Cardஐப் பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>>  ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (NHIS - 2022) நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை (G.O.Ms.No.204, Dated: 30-06-2022)...






 

எண்ணும் எழுத்தும் - கற்றல் விளைவுகள் தொகுப்பு (Ennum Ezhuthum - Learning Outcomes Collection)...



>>> எண்ணும் எழுத்தும் - கற்றல் விளைவுகள் தொகுப்பு (Ennum Ezhuthum - Learning Outcomes Collection)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு - இன்று (11-07-2022) கலந்து கொள்ள வேண்டிய இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமை எண்கள் - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு (District to District Transfer Counselling - Priority Numbers of Secondary Grade Teachers to Attend Today (11-07-2022) - Notification by Director of Elementary Education)...



 மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு


முன்னுரிமை வரிசை எண் 754  முதல் 2300 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 11.07.2022 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும். இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 11.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க  வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்ந்து வரும் முன்னுரிமை வரிசை எண்களின் அடிப்படையில் அடுத்தடுத்த நாட்களில் கலந்தாய்வு நடைபெறும்.


- தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு...


☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️


DEE News


Today's counselling is upto sl.no 1500only. Please inform to all teachers immediately...


- Elementary Director.


☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️




Today's (11-07-2022) Wordle Answer...

     

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (11-07-2022) Wordle Answer: MADAM







பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.07.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.07.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்:      பொருட்பால்


இயல்:     குடியியல்


அதிகாரம்: சான்றாண்மை


குறள் :     982. 

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்

எந்நலத்து உள்ளதூஉம் அன்று.


பொருள்


சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.


பழமொழி :

An hour's cold will such out seven years' heat.

பலநாள் வெயிலை ஒருநாள் மழை தணிக்கும்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. உளி படாத கல் சிலை ஆவதில்லை. அது போலவே உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை.


2. முயற்சியும் பயிற்சியும் சாதாரண மனிதனையும் சாதனையாளராக மாற்றும்


பொன்மொழி :


உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும்


என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால்,


அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம்.


உங்களை யாராலும் தடுக்க முடியாது.


ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!


- புத்தர்



பொது அறிவு :


1.முதுகு தண்டில் உள்ள எலும்புகள் எத்தனை? 


33 . 


2.காலரா நோயை உருவாக்கும் பாக்டீரியா எது? 


விப்ரியோ காலரே


English words & meanings :


Scrutiny - close or minute examination.noun. கூர்ந்து ஆய்வு செய்தல். பெயர்ச்சொல்


ஆரோக்ய வாழ்வு :

காலராவுக்கான சிகிச்சை

இழந்த எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் திரவங்களை மாற்றுவதற்கு உங்கள் மருத்துவர் வாய்வழி ரீஹைட்ரேஷன் உப்புக் (ORS) கரைசலை பரிந்துரைப்பார்.

திரவ இழப்பைக் கட்டுப்படுத்த நரம்பு வழி திரவங்கள் செலுத்தப்படும் .

காலரா அறிகுறிகளைக் கட்டுப்படுத்த டாக்ஸிசைக்ளின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்படும்.


NMMS Q 21: 

Objection' என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகள் மூலம் உருவாக்கப்படாத வார்த்தை: 


அ) object. 


ஆ) caution. 


இ) net. 


ஈ) jet. 


விடை: caution. கொடுக்கப்பட்டுள்ள சொல்லில் a மற்றும் u ஆகிய எழுத்துகள் இல்லை. எனவே ' caution' என்ற சொல்லை உருவாக்க முடியாது.



ஜூலை 11


உலக மக்கள் தொகை நாள்

உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.



நீதிக்கதை


நரியிடம் ஏமாந்த ஓநாய்

நரி ஒன்று தாகத்தால் தவித்தது. தண்ணீர்ரைத் தேடி அலைந்தது. தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்து. கிணற்றின் அருகே சென்று கிணற்றின் கயிற்றின் ஒரு முனையில் தொங்கிக் கொண்டிருந்த வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உடனே வாளி கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீர்ரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. எப்படி வெளியேறுவது என்று யோசித்தது. மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது. 


அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது. அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்டது. நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள் என்றது நரி. ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது உள்ளே போனதும் நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது. நரி மேலே வரும் போது ஓநாயைப் பார்த்தது. நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன் என்று கூறிக்கொண்டு மேலே தாவிக்குதித்துத் தப்பியோடியது. பாவம் ஓநாய் ஏமாந்து உள்ளேயே இருந்தது. 


நீதி :

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்.



இன்றைய செய்திகள்


11.07.22


🔯தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி ஜூலை 9  அன்று அதிகபட்சமாக 120 மெகா யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.


🔯எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.


🔯சென்னையில் விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டியவர்கள் மற்றும் போஸ்டர் ஒட்டியவர்களுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


🔯மழை, வெள்ளத்தால் பல மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை தொடர்கிறது.


🔯இலங்கையில் உச்சகட்ட அரசியல் பதற்றம்: தப்பி ஓடினார் அதிபர் கோத்தபய ராஜபக்ச - நெருக்கடியால் பதவி விலகினார் பிரதமர் ரணில்.


🔯சூப்பர் டிவிசன் ஹாக்கி: கோல்மழை பொழிந்த எஸ்.டி.ஏ.டி. அணி.


🔯விம்பிள்டன் டென்னிஸ்: ஆடவர் இரட்டையரில் ஆஸ்திரேலிய ஜோடி வெற்றி.


🔯டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்: திருப்பூர் அணியை வீழ்த்தி நெல்லை அபார வெற்றி.


Today's Headlines


🔯 Wind power generation in Tamil Nadu has reached a new peak.  According to this, a maximum of 120 mega units of electricity has been generated on July 9.


🔯  Directorate of Technical Education has published the notification regarding the admission of students for MBA, and MCA courses.


 🔯 A fine of Rs 15 lakh has been imposed on those who flout garbage in public places and put up posters in violation of rules in Chennai.


🔯  Rains and floods have affected many states.  Heavy rain warning continues in Maharashtra and Telangana districts.


 🔯Extreme political tension in Sri Lanka: President Gotabaya Rajapaksa fled - Prime Minister Ranil resigned due to the crisis.


 🔯Super Division Hockey: S.T.A.D team hit  Goal rain  


 🔯 Wimbledon Tennis: Australian pair won men's doubles


 🔯TNPL  20 Over Cricket: Nellie wins by defeating the Tirupur team.




இன்றைய (11-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூலை 11, 2022



உடன்பிறந்தவர்களின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்




அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


பரணி : கவனம் வேண்டும்.


கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூலை 11, 2022



பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் மறையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சிந்தனையின் போக்கில்  மாற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




கிருத்திகை : ஏற்ற, இறக்கமான நாள்.


ரோகிணி : நம்பிக்கை ஏற்படும்.


மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------





மிதுனம்

ஜூலை 11, 2022



உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான காலதாமதம் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். முக்கிய முடிவினை எடுக்கும் பொழுது உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படவும். பரிசு கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


திருவாதிரை : காலதாமதம் உண்டாகும்.


புனர்பூசம் : நிதானத்துடன் செயல்படவும்.

---------------------------------------





கடகம்

ஜூலை 11, 2022



இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். ரகசிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




புனர்பூசம் : முயற்சிகள் கைகூடும்.


பூசம் : விருப்பம் நிறைவேறும்.


ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------





சிம்மம்

ஜூலை 11, 2022



பயணங்கள் சார்ந்த விஷயங்களில் பொருளாதாரம் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். மின்சாரம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மகம் : பொருளாதாரம் மேம்படும். 


பூரம் : புரிதல் ஏற்படும். 


உத்திரம் : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------





கன்னி

ஜூலை 11, 2022



வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்




உத்திரம் : முயற்சிகள் அதிகரிக்கும். 


அஸ்தம் : தேடல் பிறக்கும்.


சித்திரை : எண்ணங்கள் கைகூடும்.

---------------------------------------






துலாம்

ஜூலை 11, 2022



காப்பகம் தொடர்பான விஷயங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அமைதியான செயல்பாடுகளின் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும். 


சுவாதி : கவனம் வேண்டும்.


விசாகம் : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூலை 11, 2022



எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். காப்பீடு சார்ந்த துறைகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 




விசாகம் : சிந்தனைகள் மேம்படும். 


அனுஷம் : மாற்றமான நாள்.


கேட்டை : குழப்பம் உண்டாகும்.

---------------------------------------





தனுசு

ஜூலை 11, 2022



வாழ்க்கை துணையுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். ஆடம்பர சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மூலம் : சிந்தித்து செயல்படவும். 


பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


உத்திராடம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------





மகரம்

ஜூலை 11, 2022



உத்தியோக பணிகளில் உயர்வான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுபவமும், லாபமும் ஏற்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.


திருவோணம் : அனுபவம் ஏற்படும்.


அவிட்டம் : தெளிவு பிறக்கும்.

---------------------------------------





கும்பம்

ஜூலை 11, 2022



வியாபார பணிகளில் லாபம் மேம்படும். புதிய நுட்பங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். சேவை சார்ந்த துறைகளில் வித்தியாசமான சூழல் ஏற்படும். ஆர்வம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : லாபம் மேம்படும். 


சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பூரட்டாதி : வித்தியாசமான நாள்.

---------------------------------------





மீனம்

ஜூலை 11, 2022



சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர்கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்




பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.


உத்திரட்டாதி : சாதகமான நாள்.


ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...