கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (04-08-2022) ராசி பலன்கள் (Rasi Palan), நட்சத்திர பலன்கள் (Today's (04-08-2022) Zodiac Predictions, Nakshatra Predictions)...




மேஷம்

ஆகஸ்ட் 04, 2022



செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பயணங்களின் மூலம் புதிய அனுபவமும், ஆதாயமும் உண்டாகும். வியாபார பணிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் முன்னேற்றத்தினை உருவாக்குவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு நிம்மதியை ஏற்படுத்தும். திருப்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : எதிர்ப்புகள் குறையும். 


பரணி : முன்னேற்றமான நாள்.


கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஆகஸ்ட் 04, 2022



நெருக்கமானவர்களிடத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். கால்நடை சார்ந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆர்வம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : முடிவு கிடைக்கும்.


மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும். 

---------------------------------------





மிதுனம்

ஆகஸ்ட் 04, 2022



நெருக்கடியான சூழ்நிலைகள் படிப்படியாக குறையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். கலைநயம் சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். முயற்சிகள் ஈடேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மிருகசீரிஷம் : முதலீடுகள் அதிகரிக்கும். 


திருவாதிரை : மந்தமான நாள்.


புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------





கடகம்

ஆகஸ்ட் 04, 2022



தொழில் சம்பந்தமான கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். தாயின் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் மாற்றம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும். 


பூசம் : புதுமையான நாள்.


ஆயில்யம் : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





சிம்மம்

ஆகஸ்ட் 04, 2022



புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் ஆதரவு புதிய நம்பிக்கையை உருவாக்கும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூரம் : திருப்திகரமான நாள்.


உத்திரம் : நம்பிக்கை உண்டாகும்.

---------------------------------------





கன்னி

ஆகஸ்ட் 04, 2022



எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் தடைகளுக்கு பின் நிறைவுபெறும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 




உத்திரம் : நெருக்கடிகள் நீங்கும்.


அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


சித்திரை : தடைகள் உண்டாகும்.

---------------------------------------





துலாம்

ஆகஸ்ட் 04, 2022



மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வணிகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயமும், புதிய நபர்களின் அறிமுகமும் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




சித்திரை : தெளிவு பிறக்கும். 


சுவாதி : ஒத்துழைப்பு மேம்படும். 


விசாகம் : எண்ணங்கள் அதிகரிக்கும். 

---------------------------------------





விருச்சிகம்

ஆகஸ்ட் 04, 2022



விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். நிலுவையில் இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். சிந்தனைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




விசாகம் : கவனத்துடன் செயல்படவும்.


அனுஷம் : வரவு கிடைக்கும்.


கேட்டை : புரிதல் அதிகரிக்கும்.

---------------------------------------





தனுசு

ஆகஸ்ட் 04, 2022



உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




மூலம் : புத்துணர்ச்சியான நாள்.


பூராடம் : முன்னேற்றம் ஏற்படும்.


உத்திராடம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

---------------------------------------





மகரம்

ஆகஸ்ட் 04, 2022



விவசாயம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திராடம் : லாபம் உண்டாகும்.


திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.


அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும். 

---------------------------------------






கும்பம்

ஆகஸ்ட் 04, 2022



மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.


சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூரட்டாதி : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





மீனம்

ஆகஸ்ட் 04, 2022



வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சிந்தித்து செயல்படவும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படுவது நல்லது. சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். திட்டமிட்ட பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




பூரட்டாதி : கருத்துக்களை தவிர்க்கவும்.


உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும். 


ரேவதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------





மாணவர்களின் Formative Assessment செய்வதற்கு ஏதுவாக TNSED APPன் புதிய Update (Version 0.0.34) வெளியீடு...



 TNSED - Mobile App New Update - Version 0.0.34


Ennum Ezhuthum Module Updated


Update date - 03-08-2022


 வரும் 05.08.2022 முதல் மாணவர்களின் FORMATIVE ASSESSMENT செய்வதற்கு ஏதுவாக TNSED APP தற்போது       UPDATE செய்யப்பட்டுள்ளது.


Link


👇👇👇

>>> Click Here...







நடைபெற்று முடிந்த போட்டித் தேர்வின் மூலம் கூடுதலாக சுமார் 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை, நாள்: 03-08-2022 வெளியீடு (Teachers' Recruitment Board Notification - Dated: 03-08-2022, Released to fill up about 1030 Post Graduate Teaching Posts through the completed Competitive Examination)...



>>> நடைபெற்று முடிந்த போட்டித் தேர்வின் மூலம் கூடுதலாக சுமார் 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை, நாள்: 03-08-2022 வெளியீடு (Teachers' Recruitment Board Notification - Dated: 03-08-2022, Released to fill up about 1030 Post Graduate Teaching Posts through the completed Competitive Examination)...





பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: நன்றியில் செல்வம்


குறள் : 1010

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

வறங்கூர்ந் தனையது உடைத்து.


பொருள்:

பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரும் மேகமே வறுமைப்பட்டது போலாகும்.


பழமொழி :

Everything comes to him who waits.


காக்கத் தெரிந்தவனுக்குக் காரியம் கைகூடும்



இரண்டொழுக்க பண்புகள் :


1. கடவுள் எல்லோருக்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் அதை வீண் அடித்தவன் ஏழை பயன் படுத்தியவன் பணக்காரன். 


2. நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காமல் நான் கடவுளால் தனித் தன்மையோடு அற்புதமாக படைக்க பட்டவன் என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை சிறக்கும்


பொன்மொழி :


மனிதராகப்  பிறந்த எல்லோரும் தவறு செய்கிறார்கள். மூடர்களோ அதை தொடர்ந்து செய்கிறார்கள்....புத்தர்


பொது அறிவு :


1. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் யார்? 


பச்சேந்திரி பால். 


2. நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு எது? 


கணையம்


English words & meanings :


Lacerated - to tear roughly;adjective, வேகமாக கிழித்தல், பெயரளபடை


ஆரோக்ய வாழ்வு :


வைட்டமின் பி6 என்பது கிளை ஆக்சைலேட்டின் வளர்சிதை மாற்றம் உட்பட பல்வேறு வளர்சிதை மாற்றங்களில் பயன்படுகிறது. இதன் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் போது சிறுநீரகத்தில் கற்கள் உண்டாக வாய்ப்புள்ளது.

கேரட், பால், ரிக்கோட்டா சீஸ், வெண்ணெய், வாழைப்பழங்கள், சால்மன் மற்றும் கோழி போன்ற உணவுகளில் வைட்டமின் பி6 காணப்படுகிறது.


NMMS Q 39:


33 1/2% இன் தசம வடிவம் _______ 


விடை: 0.36


ஆகஸ்ட்  04


பராக் உசைன் ஒபாமா  அவர்களின் பிறந்தநாள்


பராக் உசைன் ஒபாமா (Barack Hussein Obama, பிறப்பு: ஆகத்து 4, 1961), அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.[1] அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.


நீதிக்கதை


இரண்டு அணில்கள்


இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறை சிந்தனை செய்துவிட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம். அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது. திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும்.


அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை. உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் படவில்லை என்ற போதிலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே. உங்களுக்கு நன்றி என்றது.


இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது. கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டார் என்று கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல் என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது. பக்தியுள்ள அணில் சொன்னது, கடவுளை நம்புகிற நாங்கள் எல்லாம் துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவது இல்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போவதும் இல்லை.


அதனால் கடவுள் என்னை கீழே தள்ளி விட்டாலும் அதிலும் காரணம் இருக்கும் என்றது. ஆமாம். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுவதில்லை. மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது. கண்களை மூடி விண்ணை நோக்கி கடவுளே இந்த அவமானத்துக்கும் வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்துவிடு என்றது. அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது.


அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்தது. உன் பக்கத்துல பாம்பு என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது. தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது. சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம். அது நம்முடைய உயிரை காப்பதற்காகக் கூட இருக்கலாம். நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வேதனைக்கு இடம் ஏது.


இன்றைய செய்திகள்


04.08.22


∆ குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள்  இடத்து விலகி இருக்க வேண்டும் - ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு


∆ தமிழகத்தில் ஆகஸ்டு 6 வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

--வானிலை மையம் அறிவிப்பு.


∆ CAT தேர்வு ஆன்லைன்னில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 13 வரை அவகாசம்


∆ சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏ பிரிவில்  வைசாலி 

  ஹரி கிருஷ்ணா, 

 பி பிரிவில் வீரர் குகேஷ், 

சி  பிரிவில் அபிஜித் குப்தா ஆகியோர் வெற்றி


∆ பளுதூக்குதல் போட்டியின் 109 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் வெண்கலம் வென்றார்


Today's Headlines


∆ Stay away from people suffering from monkey measles - Union Health Department advised. 


 ∆ Widespread rain is likely to occur in Tamil Nadu till August 6.

 --Weather Center Announcement.


∆ Last date to apply online for CAT exam is 13th August


 ∆ International Chess Olympiad in A section Vaisali Hari Krishna,  

B section player Gukesh and

 Abhijit Gupta wins in C category


∆ India's Lovepreet Singh wins bronze in 109kg weightlifting event



தண்டோரா போடுவதற்கு தடை விதித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் கடிதம் (Tamil Nadu Chief Secretary's letter to all District Collectors banning Thandora)...



>>>  தண்டோரா போடுவதற்கு தடை விதித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு  தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் கடிதம் (Tamil Nadu Chief Secretary's letter to all District Collectors banning Thandora)...


தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தடைவிதித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் கிராமப்புறங்களில் முக்கிய அறிவிப்புகள் தண்டோரா மூலம் அறிவிக்கும் வழக்கம் வெகுநாட்களாக இருந்து வருகின்றது. வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை, அரசின் முக்கிய அறிவிப்புகள், விழிப்புணர்வு, சுகாதார மற்றும் மருத்துவ அறிவிப்புகள் போன்ற அறிவிப்புகள் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டனர்.


தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையிலும் இந்த தண்டோரா அறிவிப்புகள் தொடர்கின்றனர் என்று விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்தது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தலைமை செயலாளர் இறையன்பு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.


மேலும், அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட சூழலில் மக்களுக்கு அரசு கூறும் தகவல்களை தெரிவிக்க தண்டோரா போடும் நடைமுறை இனி தேவையில்லை. தடை மீறி தண்டோரா போட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.





தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority - NDMA) அனுப்பியுள்ள தகவல்...



தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority - NDMA) அனுப்பியுள்ள தகவல்:


காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையினால் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1,40,000 கனஅடி நீர் வெளியேறுவதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.






Today's (03-08-2022) Wordle Answer...

                           

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (03-08-2022) Wordle Answer: YOUTH







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹15,000 fine for shop selling overpriced juice - District Consumer Court

18 ரூபாய் அதிக விலைக்கு ஜூஸை விற்பனை செய்த கடைக்கு ₹15,000 அபராதம் - மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் திருவள்ளூர்: ₹125 மதிப்புள்ள கொய்யா ஜூஸை ₹1...