Today's (08-08-2022) Wordle Answer: UNFIT
Today's (08-08-2022) Wordle Answer: UNFIT
மேஷம்
ஆகஸ்ட் 08, 2022
ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான இலக்குகள் பிறக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான கற்பனைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
அஸ்வினி : ஈடுபாடு உண்டாகும்.
பரணி : முன்னேற்றமான நாள்.
கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஆகஸ்ட் 08, 2022
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. பயனற்ற விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : சோர்வு நீங்கும்.
ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும்.
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
மிதுனம்
ஆகஸ்ட் 08, 2022
செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இனம்புரியாத கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
மிருகசீரிஷம் : தடைகள் விலகும்.
திருவாதிரை : நெருக்கம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : திருப்திகரமான நாள்.
---------------------------------------
கடகம்
ஆகஸ்ட் 08, 2022
போட்டிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கொண்டு முடிவு எடுப்பதை தவிர்க்கவும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஆகஸ்ட் 08, 2022
திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வேகத்தை விட விவேகமான முடிவு நல்ல மாற்றத்தை உருவாக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதிய நுணுக்கங்களின் மூலம் சில மாற்றத்தை செய்வீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : பாராட்டுகள் கிடைக்கும்.
பூரம் : குழப்பம் நீங்கும்.
உத்திரம் : உதவி சாதகமாகும்.
---------------------------------------
கன்னி
ஆகஸ்ட் 08, 2022
கட்டிடம் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த விளையாட்டுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். முயற்சிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.
அஸ்தம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சித்திரை : கவனம் வேண்டும்.
---------------------------------------
துலாம்
ஆகஸ்ட் 08, 2022
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
விசாகம் : பாராட்டுகள் கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
ஆகஸ்ட் 08, 2022
வியாபார பணிகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான முயற்சிகள் கைகூடும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொள்ளவும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பரிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : மாற்றமான நாள்.
அனுஷம் : விருப்பம் நிறைவேறும்.
கேட்டை : ஆதாயம் ஏற்படும்.
---------------------------------------
தனுசு
ஆகஸ்ட் 08, 2022
உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில உதவியின் மூலம் திருப்பங்கள் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் அமையும். சமூக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : பொறுமையுடன் செயல்படவும்.
பூராடம் : இன்னல்கள் குறையும்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
மகரம்
ஆகஸ்ட் 08, 2022
எதிர்பார்த்த சில விஷயங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதளவில் இருந்துவந்த இறுக்கம் குறைந்து புதிய கண்ணோட்டம் உண்டாகும். வீண் விவாதங்களில் ஈடுபடுவதை குறைத்து கொள்ளவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : காலதாமதம் ஏற்படும்.
திருவோணம் : தெளிவு பிறக்கும்.
அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------
கும்பம்
ஆகஸ்ட் 08, 2022
கொடுக்கல், வாங்கலில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகள் கைகூடும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும்.
சதயம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------
மீனம்
ஆகஸ்ட் 08, 2022
அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். கனிவான பேச்சுக்களால் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : இழுபறிகள் குறையும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2022 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: குடி செயல் வகை
குறள் : 1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
பொருள்:
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது
பழமொழி :
Too much rest is rust.
துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. எந்த பலனும் எதிர்பார்க்காமல் காரியங்கள் செய்ய முயல்வேன்.
2. வள்ளுவர் வாக்கு படி மற்றவர்கள் எனக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி மறவாமல் இருப்பேன்.
பொன்மொழி :
பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்; பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகின்றனர்.....ஒரிசன் ஸ்வெட் மார்டென்
பொது அறிவு :
1. தீப்பெட்டியில் இரு பக்கமும் தடவப்படும் திரவம் எது?
சிவப்பு பாஸ்பரஸ் .
2.ஒரு சிங்கம் சாதாரணமாக எத்தனை அடி தூரம் பாயும்?
20 அடி.
English words & meanings :
neu·ro·ma·ta - a tumor formed of nerve tissue., noun. நரம்பு கட்டி. பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
இந்திய சமையலைப் பொருத்த வரை கறிவேப்பிலை என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையில் ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் பீனாலிக் கலவைகள் உள்ளன. கறிவேப்பிலையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது உடலை ஆரோக்கியமாக வைக்கவும், நோய்களிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
NMMS Q 37:
கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வார்த்தைகளின் முறையான வரிசை: Learn, Exam, Result, Book.
விடை: Book, Learn, Exam, Result
நீதிக்கதை
சிட்டுக்குருவியின் ஆசை
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி.
தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.
நீதி :
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.
இன்றைய செய்திகள்
08.08.22
* கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளை கவரவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
* நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடும் நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் தமிழகம் உட்பட 7 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
* பிஹாரில் பத்து மாவட்டங்களில் நிலத்தடி நீரில் யுரேனியம் வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்டங்களில் இருந்து நிலத்தடி நீர் ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளது.
* தென் அமெரிக்க நாடான கியூபாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 121 பேர் காயமடைந்தனர். பலர் மாயமாகியுள்ளனர்.
* சர்வதேச செஸ் கூட்டமைப்பான (FIDE)வின் துணைத்தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
* உலக ஜூனியர் தடகளம்: தமிழக வீரர் செல்வபிரபு வெள்ளி வென்றுள்ளார்.
* காமன்வெல்த்: குத்துச்சண்டை, மல்யுத்தம், பாரா டேபிள் டென்னிஸ், லான் பவுல்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.
Today's Headlines
* The forest department is planning to set up a butterfly park near Kodaikanal to promote tourism and attract tourists in Thandikudi hills.
* On the occasion of the country's 75th Independence Day, the national flag is being sold at post offices for Rs.25.
* According to the Chennai Meteorological Department, 6 districts of Tamil Nadu namely Nilgiris, Coimbatore, Tirupur, Theni, Dindigul and Tenkasi are likely to receive heavy rain.
* The central government has written a letter to 7 state governments including Tamil Nadu asking them to take measures to control the spread of corona virus and to increase vaccination activities.
* Ten districts in Bihar have been found to have uranium above the limit in groundwater. In this case, groundwater from these districts has been sent for testing.
* At least 121 people have been injured in a massive fire caused by lightning at an oil depot in the South American country of Cuba. Many have disappeared.
* Viswanathan Anand from Tamil Nadu has been elected as the Vice President of International Chess Federation (FIDE).
* World Junior Athletics: Tamil Nadu's Selvaprabu won silver.
* Commonwealth: India has won medals in boxing, wrestling, para table tennis and lawn bowls.
TNSED EMIS Attendance App - தங்கள் பள்ளி நிலுவை பட்டியலில் இடம் பெறாமல் இருக்க...
1) *தங்கள் அலைபேசியில் உள்ள TNSED App ஐ *Long Press* *செய்து App info ல் *Storage* *மற்றும் App *Location* - *On ல் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்*
2) *App info உள்ளே சென்று*👇
*Location* : *Allow while using App*
*Storage*: *Allow media and files*
*என இருக்க வேண்டும்*.
🔅 *மாறாக Location and Storage *Deny என பதிவு செய்து இருப்பின் வருகை பதிவு செய்யப்பட்டதாக தங்கள் Mobile Phone ல் தோன்றும் ஆனால் Server ஐ சென்றடையாது. எனவே Deny என்பதை Allow என மாற்றம் செய்யவும்*
3) *அன்றாடம் வருகை பதிவு செய்ய தொடங்கும் முன் *Logout and Login செய்ய வேண்டும்*
4) *Today's status* *என்பதை பள்ளிகளுக்கு செல்லும் முன்னர் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்து கொள்ளவும்*.
5) *மாணவர்கள் வருகையை பதிவு செய்த பின்னர் *Save and Sync* *கொடுக்கவும்*
6) *வருகை பதிவு முடிந்த பின்னர் Attendance App ஐ Logout செய்ய கூடாது. அலைபேசியில் நடுவில் உள்ள button 🔘ஐ அழுத்தி வெளியே வரவும்*.
7) *இவ்வாறு செய்தால் அலைபேசியில் பதிவான வருகை internet சரியாக இல்லாமல் இருந்தாலும் தாங்கள் மீண்டும் internet வசதி உள்ள இடத்தை நீங்கள் அடையும் போது Attendance Server ஐ சென்றடையும்*.
8) *தலைமை ஆசிரியர்கள் மாலை ஒருமுறை TNSED APP- SCHOOL LOGIN ல் உள்ள *ATTENDANCE OVERALL STATUS* யை CLICK செய்து அனைத்து வகுப்பாசிரியர்களும் வருகையை பதிவு செய்துவிட்டார்களா என்பதை பார்த்து, பதிவு செய்யாத ஆசிரியர்களுக்கு தெரிவித்து மீண்டும் பதிவு செய்ய சொல்ல வேண்டும்*.
9) *மாலை 6 மணிக்கு மீண்டும் ஒரு முறை வருகை பதிவு செய்ததை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்*
10) *இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தங்கள் அலைபேசியில் Browsing history அனைத்தையும் clear செய்து கொள்ளுங்கள்*.
✅ 100 சதவீதம் FULLY MARKED LIST -ல் நமது பள்ளி வருவதற்கு...
✅ தலைமை ஆசிரியர்கள் & வகுப்பு ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்...
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1️⃣ தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்...
🌷 Step 1:
*Username*
School UDISE Number
*Password*
EMIS login Password
🌷 Step 2:
Today's Status.
*Fully Working*
🌷Step 3:
Click➡️ More ➡️ Settings
🌷 Step 4:
School Information *(Sync)*
Today's Status *(Sync)*
Staff List *(Sync)*
Students List *(sync)*
🌷 Step 5:
Click *Home*
🌷 Step 6:
Staff Attendance
*Save & Sync*
🌷 Step 7:
Absent teacher Class Students Attendance
*Save & Sync*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
2️⃣ வகுப்பு ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
🌹 Step 1:
*Username*
Teachers 8 Digit EMIS ID
*Password*
Ph.No 4 Digit & Year of Birth
🌹 Step 2:
2Click➡️ More ➡️ Settings
🌹 Step 3:
Today's Status *(Sync)*
Students list *(sync)*
🌹 step 4:
Click *Home*
🌹 Step 5:
Students Attendance
*Save & Sync*
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்களை மாற்றியமைக்க 8வது மத்திய ஊதியக்குழு இருக்காது என்ற கூற்றை மத்திய அரசு மறுத்துள்ளது.
7th Pay Commissionக்கு பிறகு இனி Pay Commission கிடையாது.. என்ற வதந்திக்கு முற்றுப் புள்ளி.
பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதில்...
இதன் PDF Fileஐ கீழே உள்ள Link மூலம் Download செய்து கொள்ளுங்கள்
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், அத்தகைய திட்டம் பரிசீலனையில் இல்லை என்று கூறினார். "மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்களை மாற்றியமைக்க 8வது மத்திய ஊதியக் குழுவை (சிபிசி) அமைக்க வேண்டாம் என்று அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்பது உண்மையா" என்ற கேள்விக்கு சவுத்ரி பதிலளித்தார்.
இருப்பினும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்களை மறுபரிசீலனை செய்ய மற்றொரு ஊதியக் குழுவை அமைக்க வேண்டிய அவசியமில்லை.
7வது ஊதியக் குழுவின் தலைவர், "பத்து ஆண்டுகள் நீண்ட காலத்திற்கு காத்திருக்காமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் மேட்ரிக்ஸை மதிப்பாய்வு செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளார்" என்று சவுத்ரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
சிம்லாவில் உள்ள தொழிலாளர் பணியகம் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யும். ஒரு சாமானிய மனிதனின் கூடையில் இருக்கும் பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு அய்க்ராய்ட் சூத்திரத்தின் அடிப்படையில் இது (பே மேட்ரிக்ஸ்) மதிப்பாய்வு செய்யப்பட்டு திருத்தப்படலாம். மற்றொரு ஊதியக் குழுவிற்குக் காத்திருக்காமல், அந்த மேட்ரிக்ஸை அவ்வப்போது திருத்துவதற்கு இது அடிப்படையாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது,” என்று அமைச்சர் கூறினார்.
அதிக WPI பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்களை அதிகரிக்குமா என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சௌத்ரி, சிம்லாவில் உள்ள தொழிலாளர் பணியகம் வழங்கிய AICPI-IW தரவுகளின் அடிப்படையில் DA/DR இருப்பதால் அது தேவையில்லை என்றார். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் DA/DR விகிதங்களில் மற்றொரு உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது தொடர்பாக அரசு விரைவில் முடிவு எடுக்கலாம்.
இதற்கிடையில், திரிபுரா மாநில அரசு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முறையே அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
The Union Government has denied the claim that there will be no 8th Central Pay Commission to revise salaries, allowances and pensions of Central Government Employees and pensioners. Union Minister of State for Finance Pankaj Chaudhary said in a written reply to a query that there is “No” such proposal under consideration.
Chaudhary was responding to the question on “whether it is a fact that Government is considering not to constitute 8th Central Pay Commission (CPC) to revise salaries, allowanced and pension of Central Government employees and pensioners.”
However, as per the 7th Pay commission’s recommendation, it may not be necessary to constitute another pay commission to review the salaries, allowances and pensions given to Central Government Employees and pensioners.
Chaudhary informed Rajya Sabha that the Chairman of the 7th Pay Commission had “recommended that the matrix may be reviewed periodically without waiting for the long period of ten years.”
“It (pay matrix) can be reviewed and revised on the basis of the Aykroyd formula which takes into consideration the changes in prices of the commodities that constitute a common man’s basket, which the Labour Bureau at Shimla reviews periodically. It is suggested that this should be made the basis for revision of that matrix periodically without waiting for another Pay Commission,” the minister said.
Responding to another query on whether the Government will increase the Dearness Allowance and Dearness Relief rates in view of high WPI inflation, Chaudhary said it was not necessary as DA/DR is based on AICPI-IW data provided by the Labour Bureau at Shimla.
Central Government employees and pensioners are awaiting another hike in DA/DR rates. A decision in this regard may be taken by the Government soon.
Meanwhile, the state Government of Tripura has cleared a proposal for a 5 per cent hike in dearness allowance and dearness relief for state government employees and pensioners respectively with effect from July 1.
எண்ணும் எழுத்தும் - இணைய வழி சந்திப்பின் சில முக்கிய கருத்துகள் (Ennum Ezhuthum – Some Important Concepts of Online Communication)...
🔴 Module 1 க்குரிய FA( B ) செயல்பாடானது, திங்கள்கிழமை வரை TNSED APP இல் இருக்கும்.. அதன் பின் நீக்கப்பட்டு விடும்... எனவே வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்த மாணவர்கள், திங்கள்கிழமை வருகை புரிந்த பின், FA (B) மதிப்பீட்டை மேற்கொள்ளலாம்.. திங்கள் கிழமையும் அம்மாணவன் வரவில்லை என்றால், LONG ABSENT என்று பதிவு செய்து கொள்ளவும்...
🔴 எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேட்டில், கடைசியாக கொடுக்கப்பட்டிருக்கும், *தமிழ் கையேடு( நான் கற்றவை - ப. எண் 99) ஆங்கில கையேடு( I CAN DO - ப. எண் - 103), கணித கையேடு( என்னால் முடியும்- ப. எண் - 95)* முதலியவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும் செயல்பாடுகள் *FA (A)* செயல்பாடுகள் ஆகும்...
🔴 ஈராசிரியர் பள்ளி என்றால் 1-3 வகுப்புகள் ஒரு ஆசிரியரும், 4,5 ஆம் வகுப்புகளை தலைமை ஆசிரியரும் கையாள வேண்டும்...
🔴 மூன்று ஆசிரியர்கள் பணிபுரியும் பட்சத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்துக் கொள்ள வேண்டும்...
🔴 எடுத்துக்காட்டாக ஒன்றாம் வகுப்பை ஒரு ஆசிரியரும், இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்புகளை ஒரு ஆசிரியரும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளை தலைமை ஆசிரியரும் கையாள வேண்டும்....
🔴 எந்த காரணம் கொண்டும் *மூன்று மற்றும் நான்காம்* வகுப்புகளை இணைத்து, ஒரு ஆசிரியர் கையாளக்கூடாது...
அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the Director of School Education fo...