Totally shaken by this clip. Salute to the brave and alert mother who saved her baby and the Cobra too was unharmed. But its a serious reminder to be extremely alert in monsoon season.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கரூர் புத்தக திருவிழாவை முன்னிட்டு தேவாங்கு வன உயிரினத்தை அடையாளப்படுத்தும் நூலன், நூலி உருவப்படம் வெளியீடு (Slender Loris Noolan - Nooli Logo released on the occasion of karur book festival)...
கரூர் புத்தக திருவிழாவை முன்னிட்டு தேவாங்கு வன உயிரினத்தை அடையாளப்படுத்தும் நூலன், நூலி உருவப்படம் வெளியீடு (Slender Loris Noolan - Nooli Logo released on the occasion of karur book festival)...
கரூரில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கரூரின் பிரசித்தி பெற்ற தேவாங்கு விலங்கு உருவிலான நூலன், நூலி என்ற அடையாள சின்னத்தை வெளியிட்டார்கள்...
தேவாங்கு வன உயிரினத்தை அடையாளப்படுத்தும் வகையில் ‘நூலன்-நூலி’ என்ற பெயரில் கார்ட்டூன் உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கரூர், கரூர் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 19-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 10 நாட்களுக்கு புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு புத்தக திருவிழாவிற்கான அடையாளப் படம்(லோகோ) வெளியிடப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் இதனை வெளியிட்டார்.
தேவாங்கு வன உயிரினத்தை அடையாளப்படுத்தும் வகையில் 'நூலன்-நூலி' என்ற பெயரில் இந்த கார்ட்டூன் உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் பிரபு சங்கர், பாலின சமத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகளை போற்றும் வகையிலும் 'நூலன்-நூலி' கார்ட்டூன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்காக ‘மனநலம் - உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு’ நிகழ்வினை துவக்கி வைத்து மாண்புமிகு. பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் உரை (Inaugurating the 'Mental Health - Health Awareness' event for the students of Vadalore Government Girls Higher Secondary School, Hon. Education Minister's Speech)...
மாணவர்களின் மனமும், உடலும் சிறப்பாகச் செயல்பட்டால்தான் வளமான தமிழ் சமுதாயத்தை உருவாக்க முடியும்.
அந்த மிகப்பெரும் பொறுப்பை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த வாரம் முழுவதும் மனநலம் - உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறும். 'வளமான, வலிமையான மாணவ சமுதாயத்தை உருவாக்குவோம்'!
நேற்று மாலை TN - EE MISSION TELEGRAM குழுவில் தொடக்கக்கல்வி இயக்குனருடன் VIDEO CHATல் நடைபெற்ற ஆசிரியர்கள் கேள்வி - பதில் கலந்துரையாடலில் ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு முனைவர் திரு.அறிவொளி அவர்கள் மற்றும் SCERT இணை இயக்குனர் மதிப்புமிகு திருமதி.ஸ்ரீதேவி அவர்கள் அளித்த பதிலுரைகள் (Yesterday evening in the TN-EE MISSION TELEGRAM group in the video chat with the Director of Elementary Education, the answers given by the Director of Elementary Education Mr. Arivoli and SCERT Joint Director Mrs. Sridevi to the doubts of the teachers)....
நேற்று மாலை TN - EE MISSION TELEGRAM குழுவில் தொடக்கக்கல்வி இயக்குனருடன் VIDEO CHATல் நடைபெற்ற ஆசிரியர்கள் கேள்வி - பதில் கலந்துரையாடலில் ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு முனைவர் திரு.அறிவொளி அவர்கள் மற்றும் SCERT இணை இயக்குனர் மதிப்புமிகு திருமதி.ஸ்ரீதேவி அவர்கள் அளித்த பதிலுரைகள் (Yesterday evening in the TN-EE MISSION TELEGRAM group in the video chat with the Director of Elementary Education, the answers given by the Director of Elementary Education Mr. Arivoli and SCERT Joint Director Mrs. Sridevi to the doubts of the teachers)....
👇👇👇👇👇👇👇👇👇👇👇
🔰 கேள்வி 1 : எண்ணும் எழுத்தும் வகுப்பு ஆசிரியர்கள் என்னென்ன பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்? மண்டல ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் 10 பதிவேடுகள் உள்ளடக்கிய CHECK LIST வைத்திருந்து அதில் உள்ள பதிவேடுகள் உள்ளதா என்று கேட்கிறார்கள்?
📌 *மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:*
பாடக்குறிப்பு மட்டும் எழுதினால் போதும். அதற்கும் ஒரு Format வெளியிட்டுள்ளோம்.. ஆகவே அதை மட்டும் fill செய்தால் போதும்.. மற்ற WORK DONE , ACHIEVEMENT CHART, LEARNING OUTCOMES RECORD , C&D GRADE REGISTER என எதுவும் தேவையில்லை.. அதிகாரிகள் தவறான புரிதலில் உள்ளார்கள்.. இது குறித்து ஆசிரியர்களிடம் இருந்து நிறைய புகார்கள் வந்துள்ளதால் விரைவில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கின்றோம்..
🔰 கேள்வி 2 :
*எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்கு TLM தயாரிக்க அதிக செலவாகிறது.. ஆகவே TLM தயாரிக்க நிதி ஒதுக்கி அதிலிருந்து ஆசிரியர்களுக்கு நிதி கொடுத்தால் நாங்கள் TLM செய்வதற்கு மிக உதவியாக இருக்கும்..*
🔰 *மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:*
இதுவரை எவ்வளவு செலவழித்துள்ளீர்கள்..?
📌 *ஆசிரியர்:*
2500₹
📌 *மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:*
எண்ணும் எழுத்தும் திட்டம் வந்த பிறகு தான் TLM க்கு செலவாகிறது என்று தொடர்ந்து ஆசிரியர்கள் புலம்புகிறீர்களே... அப்போ இதற்கு முன் TLM இல்லாமல் தான் வகுப்பறைக்கு சென்றுள்ளீர்களா...? TLM இல்லாமல் வகுப்பறைக்கு செல்லக்கூடாது என்று ஆசிரியர்களாகிய உங்களுக்கு தெரியாதா.. ? B. Ed. & D. T. Ed., பயிற்சியில் எதற்காக TLM தயாரிக்க கற்றுக் கொடுத்தார்கள்.. அதெல்லாம் பயிற்சியோடு முடிந்துவிட்டதா.. மூன்று மாதங்களுக்கு ₹.2500 செலவழிக்க மாட்டீர்களா.. உங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் TLM தயாரிப்பதற்கும் சேர்த்து தான்.. இது செலவில்லை.. INVESTMENT.. நாம் எப்படி கல்வி கற்று வந்தோம்.. என்னுடைய அறிவியல் ஆசிரியர் பல்வேறு விதமான கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகளைக் கொண்டு கற்பித்தார்.. அவரைப் போன்ற ஆசிரியர்களால்தான் நான் இன்று இந்த பதவியில் இருக்கிறேன்.. நீங்களும் அது போன்ற ஆசிரியர்களிடம் பயின்றதால் தான் இன்று இந்த பணியில் உள்ளீர்கள்.. ஆகவே TLM தயாரிப்பதை செலவாக கருததீர்கள்.. நானும் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி நிதி ஒதுக்குவது குறித்து பேசுகிறேன்.
📌 *SCERT JD Madam:*
பல கோடிகள் ஒதுக்கீடு செய்து எண்ணும் எழுத்தும் KIT கொடுத்துள்ளோம்.. ஆசிரியர்கள் அதை பயன்படுத்துங்கள்.. TLM என்றால் கடையில் விற்கும் chart உள்ளிட்ட பொருள்களை வாங்கி தயாரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை..
Real objects பயன்படுத்துங்கள்.. நான் ஒரு பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற போது ஒரு ஆசிரியர் வகுப்பறையில் Jasmine படத்தை chartல் வரைந்து ஒட்டியுள்ளார்..
இது வீண் செலவு இல்லையா.. நீங்கள் Jasmine காண்பிக்க விரும்பினால் சிறிது பூக்களை எடுத்துச் சென்று காண்பியுங்கள்.. முடிந்த வரை Real Objects எடுத்து செல்லுங்கள் LOW COST MATERIAL உபயோகியுங்கள்..
🔰 கேள்வி 3:
*உண்மைப் பொருள்களை எடுத்து சென்றால் அதை அன்றைய வகுப்பறையில் மட்டும் பயன்படுத்திவிட்டு எடுத்து விடுவோம்.. பார்வையிட அதிகாரிகள் வரும் போது வகுப்பறையில் TLM இருக்காதே.. அப்பொழுது நாங்கள் என்ன செய்வது?*
📌 *SCERT JD Madam:* உங்களது பாடக் குறிப்பில் துணைக்கருவிகள் தலைப்பில் உண்மை மாதிரிகள் என்று குறிப்பிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.. அதிகாரிகளிடம் அதைக் காண்பித்தால் போதுமானது.. நீங்கள் உண்மையிலேயே பயன்படுத்தி இருந்தால் அவர்கள் குழந்தைகளிடம் விசாரிப்பார்கள்.. குழந்தைகள் பொய் கூற மாட்டார்கள்..
🔰 கேள்வி 4:
*பாடல் களத்தில் பாடல்களை எல்லாம் எழுதி வைக்க வேண்டுமா? பாடல்களை நாங்கள் கற்றுக் கொடுக்க போகிறோம் பின்பு எதற்கு பாடலை Chart ல் எழுதி வைக்க வேண்டும்?
📌 *SCERT JD Madam :*
மீண்டும் மீண்டும் ஆசிரியர்கள் இதையே தான் கேட்கிறீர்கள்.. பாடல் களத்தில் எவ்வளவு பொருள்கள் வைக்க வேண்டியுள்ளது... கதைக் களத்தில் என்ன வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் களங்களை நிரப்புவதில் தான் பதற்றமடைகிறீர்கள்.. களங்கள் என்பது மாணவனை Motivate செய்வதற்கு.. பாடல் களத்துக்கு நீங்கள் சென்று டம்மி மைக் எடுத்தால் மாணவன் மிகுந்த மகிழ்ச்சி ஆகி விடுவான் ... ஐ ஆசிரியர் பாடல் பாட போகிறார் என்று... அவன் மிகுந்த மகிழ்வுடன் பாடலை பாட முன் வருவான். கதை களத்தில் ஒரு Mask ஐ கொடுக்கும்போது அதை மாட்டிக்கொண்டு அவன் மகிழ்ச்சியுடன் அந்த விலங்காகவே தன்னை நினைத்து கதையை கூறுகிறான்..
இவ்வளவு தான் நமக்கு தேவை..
களங்கள் என்பது மாணவர்களுக்கு ஒரு Motivation காக மட்டுமே.. ஆகவே பாடல்களை எழுதி ஒட்ட வேண்டியதில்லை..
🔰 கேள்வி 5:
*ஒரு ஆசிரியையின் பள்ளிக்கு இரண்டு தினங்களுக்கு முன் BEO பார்வையிட சென்றுள்ளார்.. அவர்கள் வகுப்பறையில் உள்ள சுவற்றில் 70% Fill பண்ணியுள்ளார்.. அதைப் பார்த்த BEO இது பத்தாது ஆகவே அவர்கள் வகுப்பறைக்கு அருகில் உள்ள LKG & UKG வகுப்பறை சுவற்றையும் நிரப்பி வையுங்கள் என்று கூறியுள்ளார்.. தற்போதைய பாடத்திற்கு தேவைப்படுவதை தாண்டி சுவற்றை மட்டும் நிரப்பி வைப்பது எப்படி சாத்தியமாகும்..?*
📌 *மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:*
நீங்கள் Polite ஆக அந்த BEO விடம் என்ன மாதிரி ஒட்டலாம் என்று கூறுங்கள் என்று கேளுங்கள்..
அவர்கள் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக சென்று விடுவார்கள்.. ஏனெனில் அவர்களுக்கே இதைப் பற்றி தெரியாது.. என்னடா BEOs பத்தி நாங்களே இப்படி சொல்கிறோம் என்று நினைக்காதீர்கள்.. அவர்களுக்கு தற்போது தான் கொஞ்சமாக கொஞ்சமாக பயிற்சி கொடுக்கிறோம் நிறைய அலுவலர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லை.. நாங்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகிறோம்..
🔰 கேள்வி 6 :
*ஒரு தலைமை ஆசிரியரிடம் வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள் சந்தேகம் கேட்டுள்ளார்.. அது என்னவென்றால் மூன்றாம் வகுப்பில் உள்ள அரும்பு மாணவர்கள் அவர்களது பயிற்சி புத்தகத்தில் அரும்புக்கான செயல்பாடுகளை மட்டும் செய்வார்களா இல்லை அனைத்து செயல்பாடுகளும் செய்கின்றனரா? என்று கேட்டுள்ளார்.. ஆகவே மூன்றாம் வகுப்பு அரும்பு மாணவர்கள் எந்த செயல்பாடு செய்ய வேண்டும்?*
📌 *SCERT JD Madam:*
அரும்புக்கான செயல்பாடு மட்டும் செய்தால் போதுமானது.. எழுத்துக்களே அறியாதவன் தான் அரும்பு மாணவர்.. ஆகவே அவர்களுக்கு மலர் புத்தகத்தில் உள்ள அனைத்து செயல்பாடும் செய்ய வேண்டியதில்லை..
*மேற்கண்ட கேள்விகளும் பதில்களும் அந்த VIDEO CHATல் கலந்துரையாடப்பட்டது..
*🔰📌நேற்றைய மதிப்புமிகு இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் அம்மா அவர்கள் பங்கேற்ற கலந்துரையாடலில் மேலும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன.*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
*1. முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பிற்கு கண்டிப்பாக வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது.*
*2. மூன்றாம் வகுப்பிற்கு மட்டும் வீட்டுப்பாடம் தரலாம்.*
*3.துணைக்கருவிகளுக்கான செலவுகள் ஆசிரியர்களை சார்ந்ததே.* (இயக்குநர் கருத்து)
*4. அடுத்த கல்வி ஆண்டில் "அமுதா ஆட்டுக்குட்டி பாடமே" பயின்றால் மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பதால் மாற்று ஏற்படுத்த திட்டம்.*
*5. பள்ளிகளில் வகுப்புகளை பகிர்ந்து தருவது தலைமை ஆசிரியர் பொறுப்பு. எக்காரணம் கொண்டும் 3, 4 வகுப்புகளை இணைக்கக்கூடாது.*
*6.பாடக்குறிப்பு மற்றும் FA(B) PRINT OUT தவிர எண்ணும் எழுத்தும் வகுப்பில் வேறு பதிவேடுகள் பராமரிக்கத் தேவையில்லை என்பதை அனைத்து BEO அவர்களுக்கும் மெயில் அனுப்ப உள்ளார்கள்.* (இயக்குநர்).
*7 . நேற்று 1000பேர் மட்மே கலந்து கொண்ட கலந்துரையாடல் அடுத்தமுறை 5000பேர் கலந்துகொள்ள வேண்டும் என இயக்குநர் கேட்டுக்கொண்டார்.*
*8. தாங்கள் வகுப்பறையில் சிறப்பாக செய்யும் செயல்களை குழுவில் பதிவிடும்படி கூறினார்கள்.*
*9.பெற்றோர் ஆசிரியர் கூட்டமானது உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து EE வகுப்பறை உள்ள பள்ளிகளிலும் நடத்த வேண்டும் . அப்பொழுதுதான் பெற்றோர்களுக்கு மாணவர்களின் கற்றல் அடைவு புரியும் என்றனர்.*
*10. எண்ணும் எழுத்தும் தொடர்பான சந்தேகங்களை குழுவில் பதிவுசெய்யக் கூறினர்.*
Today's (14-08-2022) Wordle Answer...
Today's (14-08-2022) Wordle Answer: KHAKI
இன்றைய (14-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஆகஸ்ட் 14, 2022
சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுயதொழிலில் பயணங்கள் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அறிமுகம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அஸ்வினி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பரணி : எண்ணங்கள் கைகூடும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
ரிஷபம்
ஆகஸ்ட் 14, 2022
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சமூக பணிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை மேம்படும். புதுவிதமான கண்ணோட்டத்தின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.
ரோகிணி : சுதந்திரம் மேம்படும்.
மிருகசீரிஷம் : மாற்றம் பிறக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஆகஸ்ட் 14, 2022
பலதரப்பட்ட அறிமுகத்தின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தனித்தன்மையின் மூலம் முன்னேற்றத்திற்கான சூழ்நிலைகளை உருவாக்கி கொள்வீர்கள். வெளியூர் சார்ந்த தொழிலில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும். மதிப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்.
---------------------------------------
கடகம்
ஆகஸ்ட் 14, 2022
வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.
பூசம் : சோர்வு உண்டாகும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஆகஸ்ட் 14, 2022
வயிறு தொடர்பான பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மகம் : பிரச்சனைகள் குறையும்.
பூரம் : மதிப்பு அதிகரிக்கும்.
உத்திரம் : ஆதரவான நாள்.
---------------------------------------
கன்னி
ஆகஸ்ட் 14, 2022
மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். காப்பீடு தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் பிறக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திரம் : தெளிவு பிறக்கும்.
அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
துலாம்
ஆகஸ்ட் 14, 2022
சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் முடிவு எடுக்கவும். வெளியூர் தொடர்பான பயணங்களால் ஆதாயம் உண்டாகும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : பொறுமை வேண்டும்.
சுவாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
விருச்சிகம்
ஆகஸ்ட் 14, 2022
நண்பர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பணிபுரியும் இடத்தில் சஞ்சலமான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் கருத்துக்களை கூறும் பொழுது கவனம் வேண்டும். எதிர்பாராத சில உதவியின் மூலம் எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : நம்பிக்கை ஏற்படும்.
அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கேட்டை : மாற்றம் உண்டாகும்.
---------------------------------------
தனுசு
ஆகஸ்ட் 14, 2022
மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். இறைவழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் உள்ள சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : காரியசித்தி உண்டாகும்.
பூராடம் : புரிதல் ஏற்படும்.
உத்திராடம் : தேடல் அதிகரிக்கும்.
---------------------------------------
மகரம்
ஆகஸ்ட் 14, 2022
உறவினர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளை செயல்படுத்தும் பொழுது சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகளால் குழப்பம் நீங்கும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சொந்த ஊருக்கு செல்வது தொடர்பான பயணங்கள் காலதாமதமாக நிறைவேறும். உணவு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : குழப்பம் நீங்கும்.
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
கும்பம்
ஆகஸ்ட் 14, 2022
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். பயணங்கள் செல்வது தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அவிட்டம் : சிந்தனைகள் உண்டாகும்.
சதயம் : தடைகள் விலகும்.
பூரட்டாதி : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
---------------------------------------
மீனம்
ஆகஸ்ட் 14, 2022
எதிர்பார்த்த சில தனவரவில் காலதாமதம் உண்டாகும். பலதரப்பட்ட குழப்பத்தால் அமைதியின்மையான சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொள்ளவும். வெளிநாடு தொடர்பான பயணங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். எந்தவொரு செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.
உத்திரட்டாதி : சிந்தித்து முடிவெடுக்கவும்.
ரேவதி : நிதானம் வேண்டும்.
---------------------------------------
உடைந்த பல்பு - நம்பிக்கையின் சக்தி பற்றிய ஒரு சிறு கதை (BROKEN BULB - A story on the Power Of Trust)...
நம் அன்றாட வாழ்வில் நம்பிக்கை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வைத்திருப்பது தவிர்க்க முடியாத நல்லொழுக்கம் என்று நீங்கள் அனைவரும் நம்புகிறீர்களா?
இந்த சிறிய கதையை ரசியுங்கள்.
எடிசன் மின்சார பல்பை கண்டுபிடித்த பிறகு தன் நண்பர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அந்த பல்பை ஒளிர வைத்து காட்டுவதற்காக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். மின் விளக்கின் கண்டுபிடிப்பை வெளியிடுவதற்கான தேதி மற்றும் நேரம் நிர்ணயிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, எடிசன் ஆய்வக உதவியாளர் ஒருவரிடம் விளக்கை முதல் தளத்தில் உள்ள ஆய்வகத்திலிருந்து தரை தளத்தில் உள்ள பிரதான மண்டபத்திற்கு எடுத்துச் செல்லும்படி கூறினார்.
படிக்கட்டில் அந்த நபர் தடுமாறி விழுந்தார், பெரிய கண்டுபிடிப்பு துண்டு துண்டாக இருந்தது. அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்! உதவியாளரும் பதற்றம் அடைந்து விட்டார். ஆனால் எடிசன் எந்த பதற்றமும் அடையவில்லை. நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டியதாயிற்று.
எடிசன் மௌனமாக தனது ஆய்வகத்திற்குச் சென்று, ஒரு வாரத்திற்குப் பிறகு, வெளியீட்டுக்கான புதிய விளக்கை உருவாக்கத் தொடங்கினார். ஆயிரம் தோல்விகளை சந்தித்து மின்சார பல்பை உருவாக்கிய அவருக்கு மீண்டும் ஒரு மின்சார பல்பை உருவாக்குவது மிகவும் எளிதாக இருந்தது. சிறு முயற்சி செய்து மீண்டும் ஒரு பல்பை உருவாக்கினார். அது மீண்டும் வெளியீட்டிற்கு தயாராக இருந்தது.
எடிசன் அதே ஆய்வக உதவியாளரை விளக்கை கீழே கொண்டு செல்ல அழைத்தார். எடிசனின் வேண்டுகோளைக் கேட்டதும் அவர் முகம் மலர்ந்தது. அவர் நம்பிக்கையுடன் விளக்கை சரியான இடத்திற்கு கொண்டு சென்றார்.
எடிசனின் நண்பர் அவரிடம் கேட்டார், "முன்பு அதை உடைத்த அதே நபருக்கு ஏன் விளக்கைக் கொடுத்தீர்கள்?"
எடிசன் பதிலளித்தார், “கடைசி முறை பல்ப் உடைந்தபோது, அந்த நபரின் இதயமும் உடைந்தது. மற்றொரு பல்ப் தயாரிப்பது கடினம் அல்ல. ஆனால் உடைந்த இதயத்தில் புத்துணர்ச்சியை செலுத்துவது மிகவும் கடினம்."
"அவர் அவரது பணியையும், அவரது பொறுப்பையும் என்னுடைய நம்பிக்கையும் நன்றாக உணர்ந்து மீண்டும் வேலை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது" என்றார் எடிசன்.
அப்போதுதான் எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த அந்த பொறுமையின் முக்கியத்துவத்தையும் அங்கிருந்த அனைவரும் உணர்ந்தார்கள்.
எடிசன் ஆயிரம் முறை தோல்வி கண்டு ஒரு மின்சார பல்பை கண்டுபிடித்தார். அந்த பல்பை தனது உதவியாளரின் கை தவறி விழுந்து உடைந்ததற்காக எடிசன் திகைக்கவில்லை. நொந்து போகவில்லை. அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் கூட அமைதியாக நடந்து கொண்ட நேர்மறை சிந்தனை உள்ள ஒரு அற்புதமான மனிதர் எடிசன்.
எடிசனின் செயல் அனைவருக்கும் மிகவும் சக்திவாய்ந்த செய்தியை தெரிவித்தது.
"பொறுமையே வெற்றிக்கு வழி"
Trust plays a very important role in our every day lives. Do you all believe that it is an indispensable virtue to possess? Enjoy this little story.
The date and time to unveil the invention of the light bulb was fixed. While the preparations for the event were on, Edison asked one of the lab assistants to carry the bulb from the lab on the first floor to the main hall on the ground floor. On the staircase the person tripped and fell and the grand invention was in pieces. All were shocked! The program had to be cancelled.
Edison silently went into his laboratory and started making a new bulb for the launch, rescheduled for a week later.
It was ready for the demonstration again. Edison called the same lab assistant to carry the bulb down stairs. His face lit up upon hearing Edison’s request. He confidently carried the bulb to the right place.
Edison’s friend asked him, “Why did you give the bulb to that same person who broke it earlier?”
Edison replied, “Last time when the bulb was broken, the person’s heart was also broken. It is not difficult to make another bulb. But to infuse fresh spirit into a broken heart is more difficult.”
Edison’s action conveyed a very powerful message to everyone.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...