கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.11.2022 - School Morning Prayer Activities...


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.11.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் : அறத்துப்பால்


இயல்: பாயிரவியல்


அதிகாரம்: நீத்தார் பெருமை


குறள் : 30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.


பொருள்:

அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.


பழமொழி :

Action speaks louder than words.


சொற்களை விட செயல்கள் வலிமை வாய்ந்தவை.



இரண்டொழுக்க பண்புகள் :


1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே. 


2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன். 


பொன்மொழி :


நாம் நமது நேரத்தை செலவிடும் விதம் நாம் யார் என்பதை வரையறுக்கிறது. --ஜோனதன் எஸ்ட்ரின்


பொது அறிவு :


1. இந்தியாவின் பட கேமராவை முதலில் தயாரித்தவர் யார்? 


 ஆனந்த் ராவ் .


 2.கிளிசரைல் மற்றொரு பெயர் யாது ?


 நைட்ரோ கிளிசரின்.


English words & meanings :


Pa-le-o-bo-ta-ny - study of ancient plants. பண்டைய தாவரங்கள் குறித்த அறிவியல் படிப்பு 


ஆரோக்ய வாழ்வு :


ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூளை நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து ஆரியவுடன் பருகவும். வறட்டு இருமலுக்கு இதமாக இருக்கும்.


NMMS Q :


வலுவான இழை __________ஆகும்.


 விடை: நைலான்





நீதிக்கதை


ஆந்தை பெற்ற சாபம்


கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. ஆந்தைக் குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன. ஒரு நாள், ஒரு ஆந்தைக்குஞ்சு அம்மா எல்லோரும் பகலில் தான் உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். இது ஏன்? என்றது. 


நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில் தான் கண் தெரியும். அதனால் தான் நாம் பகலெல்லாம் துங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம் என்றது தாய் ஆந்தை. ஏன் கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்தார்? என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு. கடவுள் மேல் தவறில்லை. முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றது தாய் ஆந்தை. அப்படி என்ன தவறு செய்தார்? என்று கேட்டன குஞ்சுகள். 


ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகத்திடம் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை சரியில்லை. அதனால், காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் காக்காவிற்கு வைத்தியம் பார்த்து குணமாகிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடிவந்துவிட்டனர். 


அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும்பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். குயில் டாக்டருக்கு பயந்து நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டாமல் நன்றாக தூங்கிவிட்டு இரவில் எழுந்து வெளியே செல்வார். இப்படியே இருந்ததால் குயில் டாக்டரால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கோபமடைந்த குயில் டாக்டர், காக்காவை பிடித்து நன்கு திட்டி இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல் காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது. 


அன்றிலிருந்து குயில் இனத்தார் முட்டைகளை காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது. நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது என்றது தாய் ஆந்தை. அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருநாளும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம், என்றது அந்த இரு ஆந்தைக்குஞ்சுகள். செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை. 


நீதி :

பிறரை ஏமாற்றினால் நமக்கு தண்டனை தானாக வந்து சேரும்.


இன்றைய செய்திகள்


02.11.22


* சென்னை மெட்ரோவில் அக்டோபரில் மட்டும் 61.56 லட்சம் பேர் பயணம்.


* மழையால் பாதிப்பு: நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.


* தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழையும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் வணிக வரி, பதிவுத் துறைகளின் வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூ.23,066 கோடி கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.


* சீன வீரர்களுடனான கல்வான் மோதல் எதிரொலி - வீரர்களுக்கு ஆயுதமின்றி போர் பயிற்சி.


* குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து: 100 பேர் மட்டுமே நிற்க வேண்டிய இடத்தில்  ஒரே நேரத்தில் 500 பேர் வரை அனுமதி  அளித்ததே விபத்துக்கு காரணம்.


* சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளை தாங்க முடியாமல் ஐபோன் ஆலையில் இருந்து ஊழியர்கள் தப்பியோட்டம்.


* சோமாலியாவில் 120 பேர் பலியான பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சர்வதேச நாடுகளுக்கு அந்நாட்டு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


* டி20 உலகக் கோப்பை:   நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி.


* மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில நீச்சல் போட்டி: சென்னை அணி 'சாம்பியன்'.


* சர்வதேச செஸ் போட்டி: சென்னை வீரர் இளம்பரிதி முதலிடம்.


* பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்:  இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 'சாம்பியன்'.


Today's Headlines


* 61.56 lakh people travel in Chennai Metro in October alone.


* Rain affected: Chief Minister Stalin orders immediate relief aid.


* According to the Chennai Meteorological Department, there is a possibility of heavy rain in Tamil Nadu for 5 days and very heavy rain in the next 24 hours.


 * In the last 7 months in Tamil Nadu, the revenue of commercial tax and registration departments has been increased by Rs 23,066 crore as compared to last year, Minister P. Murthy has said.


 * Echoes of Kalwan conflict with Chinese soldiers - unarmed combat training for soldiers.


 * Gujarat Morbi Suspension Bridge Accident: The accident was caused by allowing up to 500 people at a time where only 100 people were supposed to stand.


 * Unable to withstand the corona restrictions in China, employees flee from the iPhone factory.


 * The somalian president has appealed to the international countries to help the victims of the terrorist attack in Somalia which killed 120 people.


 * T20 World Cup: England beat New Zealand


 * State Swimming Competition for Differently abled: Chennai Team 'Champion'.


 * International Chess Tournament: Chennai player Illamparithi tops.


*  French Open Badminton: India's Chadwick-Chirag Shetty pair won the 'Championship'. 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய (02-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 02, 2022



காப்பீடு சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். தயக்க உணர்வை குறைத்து கொள்வதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். சிரமம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




அஸ்வினி : லாபம் மேம்படும். 


பரணி : இழுபறிகள் குறையும்.


கிருத்திகை : தடைகளை அறிவீர்கள்.

---------------------------------------




ரிஷபம்

நவம்பர் 02, 2022



வர்த்தகம் சார்ந்த துறைகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும். 


ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------




மிதுனம்

நவம்பர் 02, 2022



மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் அமையும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில பணிகள் நிறைவுபெறுவதில் காலதாமதம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




மிருகசீரிஷம் : விருப்பம் நிறைவேறும்.


திருவாதிரை : மாற்றமான நாள்.


புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும். 

---------------------------------------




கடகம்

நவம்பர் 02, 2022



எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ள சில சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள். தொழில் சார்ந்த புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




புனர்பூசம் : அனுபவம் ஏற்படும். 


பூசம் : மகிழ்ச்சியான நாள்.


ஆயில்யம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

நவம்பர் 02, 2022



தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மகம் : உதவி கிடைக்கும்.


பூரம் : ஆதரவான நாள்.


உத்திரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

---------------------------------------




கன்னி

நவம்பர் 02, 2022



சகோதரர்களின் மூலம் ஆதரவான வாய்ப்புகள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை குறைத்து கொள்ளவும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்லவும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் ஆதரவற்ற சூழல் அமையும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும். 


அஸ்தம் : அனுசரித்து செல்லவும். 


சித்திரை : சோர்வு நீங்கும்.

---------------------------------------




துலாம்

நவம்பர் 02, 2022



நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : ஒற்றுமை அதிகரிக்கும். 


விசாகம் : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

நவம்பர் 02, 2022



மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சிக்கல்கள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும். 


அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.


கேட்டை : வித்தியாசமான நாள்.

---------------------------------------




தனுசு

நவம்பர் 02, 2022



நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். மனதில் குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மறைமுக திறமைகள் வெளிப்படும். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மூலம் : மாற்றமான நாள்.


பூராடம் : தனவரவு கிடைக்கும்.


உத்திராடம் : திறமைகள் வெளிப்படும். 

---------------------------------------




மகரம்

நவம்பர் 02, 2022



உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு அவ்வப்போது சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். செய்தொழிலில் மேன்மையும், முன்னேற்றமும் உண்டாகும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




உத்திராடம் : உதவி கிடைக்கும்.


திருவோணம் : வாய்ப்புகள் ஏற்படும். 


அவிட்டம் : கவனத்துடன் செயல்படவும்.

---------------------------------------




கும்பம்

நவம்பர் 02, 2022



புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அவிட்டம் : முடிவு கிடைக்கும். 


சதயம் : முதலீடுகள் அதிகரிக்கும். 


பூரட்டாதி : ஆதரவான நாள்.

---------------------------------------




மீனம்

நவம்பர் 02, 2022



உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




தமிழ்நாடு திருந்திய ஊதிய விகித விதிகள் 2017 - ஒரு நபர் குழு 2019ன் படி கூடுதல் தளங்கள் தோற்றுவித்தது - தெளிவுரை வழங்குதல் தொடர்பாக நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் (Tamil Nadu Revised Pay Scale Rules 2017 - Additional Cells Created As per One Man Committee 2019 - Finance Department Govt Additional Chief Secretary letter regarding providing clarification) கடித எண்‌.38665/ஊ.பி-2/2022, நாள்‌ 15.10.2022...



>>> தமிழ்நாடு திருந்திய ஊதிய விகித விதிகள் 2017 - ஒரு நபர் குழு 2019ன் படி கூடுதல் தளங்கள் தோற்றுவித்தது - தெளிவுரை வழங்குதல் தொடர்பாக நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் (Tamil Nadu Revised Pay Scale Rules 2017 - Additional Cells Created As per One Man Committee 2019 - Finance Department Govt Additional Chief Secretary letter regarding providing clarification) கடித எண்‌.38665/ஊ.பி-2/2022, நாள்‌ 15.10.2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...






நிதித்‌ துறை,

தலைமைச்‌ செயலகம்‌,

சென்னை - 600 009.


கடித எண்‌.38665/ஊ.பி-2/2022, நாள்‌ 15.10.2022


அனுப்புநர்‌

திரு.நா.முருகானந்தம்‌, இ.ஆ,ப.,

அரசு கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌.


பெறுநர்‌

கருவூலக்‌ கணக்கு ஆணையர்‌,

கருவூலம்‌ மற்றும்‌ கணக்குத்‌ துறை,

571, அண்ணாசாலை,

நந்தனம்‌,

சென்னை - 35.


ஐயா,


பொருள்‌:- தமிழ்நாடு திருத்திய ஊதிய விகித விதிகள்‌ 2017 - ஒரு நபர்‌ குழு 2019-ன்படி கூடுதல்‌ தளங்கள்‌ தோற்றுவித்தது - தெளிவுரை வழங்குதல்‌ - தொடர்பாக


பார்வை:- 1. அரசு ஆணை (நிலை) எண்‌.303, நிதி (ஊ.பி)த்‌ துறை, நாள்‌ 11.10.2017.

2. அரசு ஆணை (நிலை) எண்‌.90, நிதி (ஊ.பி)த்‌ துறை, நாள்‌ 26.02.2021.

3. கருவூலக்‌ கணக்கு ஆணையரின்‌ கடித எண்‌ ந.க.எண்‌.20134/டி2/2022, நாள்‌ 26.07.2022.


பார்வையில்‌ காணும்‌ கடிதம்‌ மற்றும்‌ அரசு ஆணையின்‌ மீது தங்கள்‌ கவனம்‌ ஈர்க்கப்படுகிறது. பார்வை - 2-இல்‌ காணும்‌ அரசாணையில்‌ வழங்கப்பட்டுள்ள ஐந்து கூடுதல்‌ தளங்கள்‌, பார்வை - 1-ல்‌ காணும்‌ அரசாணையின்‌ அட்டவணை - 1 மற்றும்‌ அட்டவணை-3-க்கு மாற்றீடாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, பார்வை - 2-இல்‌ காணும்‌ அரசாணையில்‌ வழங்கப்பட்டுள்ள ஐந்து கூடுதல்‌ தளங்கள்‌ வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கும்‌ பொருட்டு வழங்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.


தங்கள்‌ நம்பிக்கையுள்ள,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளருக்காக




குஜராத் மோர்பி மச்சு நதி தொங்கு பாலம் அறுந்து விழும் சிசிடிவி காட்சி (Gujarat Morbi Machu river suspension cable bridge collapsing CCTV footage)...



>>> குஜராத் மோர்பி மச்சு நதி தொங்கு பாலம் அறுந்து விழும் சிசிடிவி காட்சி (Gujarat Morbi Machu river suspension cable bridge collapsing CCTV footage)...


குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. புதுடெல்லி, குஜராத் தொங்கும் பாலம் விபத்து குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி லலித் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் பழமைவாய்ந்த பொது கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொங்கும் பாலம் அறிந்து ஆற்றில் விழுந்ததில் இதுவரை 141 பேர் இறந்ததால் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே, குஜராத் மோர்பி தொங்கும் பாலம் அறுந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



அறுந்து விழும் குஜராத் மோர்பி பாலம்;  சிசிடிவி காட்சி...


குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள மோர்பி என்ற இடத்தில் மச்சு ஆற்றுக்கு மேல் தொங்கு பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தொங்கு பாலம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 230மீ நீளமுடைய இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டு 140 வருடங்களுக்கு மேல் ஆகிறது. கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு 4 நாட்களுக்கு முன்புதான் இந்த பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.



இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிறு மாலை 6 மணி அளவில், 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்த சமயத்தில், பாலத்தில் இருந்த மக்கள் உற்சாகத்தில் ஓடி விளையாடியுள்ளனர். இதனால், அந்த தொங்கு பாலமும் ஆடத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், என்ன செய்வது என யோசிப்பதற்குள் அவர்களின் எடையைத் தாங்க முடியாத மோர்பி தொங்கு பாலம் திடீரென அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது.



அதன் பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த தேசியப் பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநிலப் பேரிடர் மீட்புப்படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கர விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் என்று தெரிகிறது. ஆனால், ஆற்றுக்குள் இன்னும் பலர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.


இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, “குஜராத் தொங்குபாலம் விபத்தில் என் நெஞ்சே வலிக்கிறது. ஒருபுறம் வலி நிறைந்த இதயம் இருந்தாலும், மறுபுறம் கடமைக்கான பாதையும் இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் மோர்பி தொங்கு பாலம் அறுந்துவிழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பார்ப்பவர்களைப் பதற வைக்கும் இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.



இன்று (01-11-2022) கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு (Today (01-11-2022) holiday announcement for schools in 8 districts due to heavy rain)...

இன்று (01-11-2022) கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிப்பு (Today (01-11-2022) holiday announcement for schools in 8 districts due to heavy rain)...


1.சென்னை

2. திருவள்ளூர்

3. காஞ்சிபுரம்

4. செங்கல்பட்டு

5. திருவாரூர் 

6. நாகை (பள்ளி, கல்லூரி )

7.மயிலாடுதுறை

8. தஞ்சாவூர்









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...






பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.11.2022 - School Morning Prayer Activities...


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.11.2022 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் : அறத்துப்பால்


இயல்: பாயிரவியல்


அதிகாரம்: நீத்தார் பெருமை


குறள் : 29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.


பொருள்:

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.


பழமொழி :

A good beginning is half the battle.


நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே. 


2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன். 


பொன்மொழி :


ஒருதாய் தன் பிள்ளைகளை பெறுவதற்காக அழலாம்.. ஆனால் பெற்றதற்காக அழக்கூடாது...விவேகானந்தர்


பொது அறிவு :


1. சக்தி தரும் வெப்பத்தின் அலகு என்ன ?


 கலோரி . 


 2.ஆல்டிமீட்டர் எதை அளக்கிறது?


 உயரத்தை.


English words & meanings :


Optio-me-try- science of examining the eyes. Noun. கண்களை பரிசோதிக்கும் அறிவியல். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரைத் தேக்கரண்டி தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம்


NMMS Q :


மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை __________ஆகும். 


விடை: ரேயான்


நீதிக்கதை


கைமேல் பலன் கிடைத்தது


அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான். 


ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான். 


சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.


இன்றைய செய்திகள்


01.11.22


* எம்பிபிஎஸ், பிடிஎஸ் இட ஒதுக்கீடு பெற்ற 7,036 பேர் 13 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.



* தமிழகத்தில் புதிதாக XBB என்ற உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக GISAID என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.


* இன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும்: தமிழக வேளாண் துறை அழைப்பு.


* மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க பொது சுகாதாரத் துறை உத்தரவு.


* குஜராத் மோர்பி நகர் கேபிள் நடைபாலம் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.


* ஜெர்மனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டேடிஸ்டா (Statista) நிறுவனம் அதிக ஊழியர்களைக் கொண்டிருக்கும் அமைப்புகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 29.2 லட்சம் ஊழியர்களைக் கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முதல் இடத்தில் உள்ளது.


* உலகில் எந்த நாட்டிலும் பிரம்மோஸ் போன்ற ஏவுகணை இல்லை. போட்டியே இல்லாத வர்த்தகம் என்பதால் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம். இதை வாங்க 14 நாடுகள் ஆர்வமாக உள்ளதால், சுமார் ரூ.41 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானி ஆ.சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.


* டி20 உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி- புள்ளி பட்டியலில் முன்னேற்றம்.


* சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு முதன்முறையாக சாம்பியன் பட்டம்: சாத்விக்-சிராக் ஜோடி சாதனை.


* துபாயில் மினி மாரத்தான் போட்டி; தமிழக வீராங்கனை லிடியா ஸ்டாலின் 2-வது இடம் பிடித்து சாதனை.


Today's Headlines



 * 7,036 MBBS, BDS reserved candidates to submit 13 documents: Directorate of Medical Education Notification


* A study by GISAID, an international research organization, has revealed that a newly mutated corona virus called XBB has been detected in Tamil Nadu.


 * All farmers must participate in today's Gram Sabha meeting: Tamil Nadu Agriculture Department invites.


*  Public Health Department orders to provide Nilavembu Kashayam to public in hospitals.


 * Death toll rises to 141 in Gujarat Morbi Nagar cable footbridge accident


* Germany-based Statista has released a ranking of organizations with the most employees. India's Ministry of Defense tops the list with 29.2 lakh employees.


 * No country in the world has a missile like BrahMos. Export opportunities are high as it is a non-competitive trade. As 14 countries are interested in buying this, there is a possibility of earning more than Rs.41 thousand crores, according to scientist A. Sivathanu Pillai.


 * T20 World Cup: Australia beat Ireland with a huge win - improvement in the points table.


 * In Super 750 Badminton ,India got Championship for the first time,record created by Shathwick-Chirag pair .


*  Mini Marathon in Dubai; Tamil Nadu player Lydia Stalin achieved 2nd position.


இன்று (01.11.2022) கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (Today (01.11.2022) holiday only for schools in Chennai, Thiruvallur, Kanchipuram, Chengalpattu district due to heavy rain warning)...

இன்று (01.11.2022) கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர்,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (Today (01.11.2022) holiday only for schools in Chennai, Thiruvallur, Kanchipuram, Chengalpattu district due to heavy rain warning)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...