கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு எண்ணும்‌ எழுத்தும்‌ திட்ட செயல்பாடுகள்‌ மற்றும்‌ கல்வி இணை செயல்பாடுகள்‌ மற்றும்‌ கல்வி சாரா செயல்பாடுகள்‌ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ - தினசரி பாடவேளைகள்‌ பின்பற்றுதல்‌ - மாவட்டக்‌ கல்வி அலுவலரின்‌ (தொடக்கக்‌ கல்வி) செயல்முறைகள்‌ ப.வெ.எண்‌: 01/அ5/2022, நாள்‌ 28.10.2022 (Procedures to be followed for Primary and Middle Schools in Ennum Ezhuthum Program Activities and Co-curricular and Extra-curricular Activities - Follow-up of Daily Lessons - Proceedings of District Education Officer (Elementary Education) P.V. No: 01/A5/2022, Dated 28.10.2022)...


>>> தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு எண்ணும்‌ எழுத்தும்‌ திட்ட செயல்பாடுகள்‌ மற்றும்‌ கல்வி இணை செயல்பாடுகள்‌ மற்றும்‌ கல்வி சாரா செயல்பாடுகள்‌ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ - தினசரி பாடவேளைகள்‌ பின்பற்றுதல்‌ - மாவட்டக்‌ கல்வி அலுவலரின்‌ (தொடக்கக்‌ கல்வி) செயல்முறைகள்‌ ப.வெ.எண்‌: 01/அ5/2022, நாள்‌ 28.10.2022 (Procedures to be followed for Primary and Middle Schools in Ennum Ezhuthum Program Activities and Co-curricular and Extra-curricular Activities - Follow-up of Daily Lessons - Proceedings of District Education Officer (Elementary Education) P.V. No: 01/A5/2022, Dated 28.10.2022)...



 வேலூர்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலரின்‌ (தொடக்கக்‌ கல்வி) செயல்முறைகள்‌

ப.வெ.எண்‌ 01/அ5/2022, நாள்‌ 28.10.2022


பொருள்‌ : தொடக்கக்‌ கல்வி - தொடக்கக்‌ கல்வி மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு எண்ணும்‌ எழுத்தும்‌ திட்ட செயல்பாடுகள்‌ மற்றும்‌ கல்வி இணை செயல்பாடுகள்‌ மற்றும்‌ கல்வி சாரா செயல்பாடுகள்‌ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ - தினசரி பாடவேளைகள்‌ பின்பற்றுதல்‌ சார்பு


பார்வை 1. தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயல்குநர்‌ மற்றும்‌ மாநில கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி இயக்குநரின்‌ இணை செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 2411/ஈ2/2020 நாள்‌ 23.06.2022


2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ இணை செயல்முறைகள்‌ ந.க.எண் ‌19528 /எம்‌/இ1/2022 நாள்‌ 11.06.2022


பார்வை 1 ல்‌ காணும்‌ தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநர்‌ மற்றும்‌ மாநில கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி இயக்குநரின்‌ இணை செயல்முறைகளில்‌ 2022-2023ம்‌ ஆண்டில்‌ நடைமுறைப்படுததப்பட்டுள்ள எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டம்‌ செயல்படுதல்‌ குறித்து உரிய வழிமுறைகள்‌ வகுக்கக்ப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.


மேற்கண்ட செயல்முறைகளின்படி 1 முதல்‌ 3 வகுப்புகளுக்கு கீழ்க்கண்டவாறு பாடவேளைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தேனி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட உள்ள பள்ளிகளில் வகுப்பறை செயல்பாடுகளை உற்றுநோக்குதல் சார்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2073/ ஜி3/ 2022, நாள்: 26-10-2022 (SCERT Director's Proceedings No: 2073/ G3/ 2022, Dated: 26-10-2022 on Regarding of monitoring classroom activities in selected schools in Theni, Pudukottai, Tiruvarur, Nagapattinam and Karur 5 Districts)...


>>> தேனி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட உள்ள பள்ளிகளில் வகுப்பறை செயல்பாடுகளை உற்றுநோக்குதல் சார்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2073/ ஜி3/ 2022, நாள்: 26-10-2022 (SCERT Director's Proceedings No: 2073/ G3/ 2022, Dated: 26-10-2022 on Regarding of monitoring classroom activities in selected schools in Theni, Pudukottai, Tiruvarur, Nagapattinam and Karur 5 Districts)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




சக ஆசிரியர்களை பழிவாங்க ‘போக்சோ’வில் மாணவிகளை பொய்ப் புகார் அளிக்கவைத்த தலைமை ஆசிரியர் மீதே போக்சோ சட்டம் பாய்ந்தது (The POCSO Act was passed on the HeadMaster who made the students file false complaints in 'POCSO' to take revenge on Teachers)...


சக ஆசிரியர்களை பழிவாங்க ‘போக்சோ’வில் மாணவிகளை பொய்ப் புகார் அளிக்கவைத்த தலைமை ஆசிரியர் மீதே போக்சோ சட்டம் பாய்ந்தது (The POCSO Act was passed on the HeadMaster who made the students file false complaints in 'POCSO' to take revenge on Teachers)...



சக ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் மாணவிகளை தவறாகப் பயன்படுத்திய மதுரை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் முயற்சியால் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.



மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ஒருவர், ஆகஸ்ட் 6-ல் ஊமச்சிகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், கருப்பாயூரணி போலீஸ் சரகத்திலுள்ள அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சைல்டு லைன் (1098) எண்ணில் அழைத்தார். அவர் பணிபுரியும் பள்ளியின் புகார் பெட்டியில் தங்களது பள்ளியில் பயிலும் இரு சிறுமிகள் எழுதிய கடிதங்கள் சிக்கியதாகவும், அதே பள்ளி ஆசிரியர் ஒருவர் தவறான முறையில் வம்பு செய்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் குறிப்பிட்டதாகவும் தெரிவித்து இருந்தார். அதன்பேரில் 3 ஆசிரியர்கள் மீது ‘ போக்சோ’ சட்டத்தில் கருப்பாயூரணி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.



இந்நிலையில், இவ்வழக்கில் சிக்கிய பெண் ஆசிரியர் ஒருவர் ,தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்கிடம் புகார் ஒன்றை கொடுத்தார். ‘‘எங்கள் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு இடையேயான விரோதப் போக்கை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்ட அப்பொய் புகார் பற்றி விசாரிக்க வேண்டும்’ ’என அவர் வலியுறுத்தி இருந்தார்.



ஐஜி-யின் உத்தரவின்பேரில், மதுரை டிஐஜி ஆர்.பொன்னி, எஸ்பி சிவபிரசாத் மேற்பார்வையில் ஊமச்சிகுளம் பெண் காவல் ஆய்வாளர் விசாரித்தார். பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமிகள், அவர்களது பெற்றோர், பள்ளி ஆசிரியர்களிடம் தனித்தனியே விசாரிக்கப்பட்டது. விசாரணையில், “நாங்களாகவே அக்கடிதத்தை எழுதவில்லை. பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறி தான் அவ்வாறு எழுதினோம். உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களிடம் தவறாக நடக்கவில்லை’’ என சிறுமிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிறுமிகள் மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


 


சிறுமிகளின் வாக்குமூலம், சாட்சிகளிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், மேற்கண்ட புகார் பொய் என தெரியவந்தது. மேலும், அப்பள்ளியில் ஆசிரியர்களுக்குள் விரோத போக்கு உள்ளதாகவும், அந்தப் பகையின் காரணமாக பழிவாங்கும் நோக்கில் பள்ளித் தலைமை ஆசிரியர் பொய்யான புகாரை உடற்கல்வி ஆசிரியர், 2 பெண் ஆசிரியர்கள் மீது சுமத்த பள்ளி மாணவிகளை பயன்படுத்தி இருப்பதும் தெரிந்தது. இது தொடர்பாக காவல் ஆய்வாளர் இறுதி அறிக்கை தாக்கல் செய்தார். இதை ஏற்ற ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றம், அக்டோபர் 31-ல் தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தது. வழக்கு பதிவு முதல் தாமதமின்றி சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 80 நாளுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி அறிக்கை சரியென தீர்ப்பு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



தவறு செய்யாதவர்கள் தண்டனை பெற்றுவிடக் கூடாது என்ற அடிப்படையில் இவ்வழக்கை தீர விசாரித்து விரைந்து உண்மையை வெளிக்கொண்டு வந்த மதுரை டிஐஜி பொன்னி, எஸ்பி சிவபிரசாத், ஊமச்சிகுளம் டிஎஸ்பி, பெண் காவல் ஆய்வாளர் அடங்கிய அதிகாரிகளை தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பாராட்டினார்.

 


எஸ்.பி கூறுகையில், ‘‘தனது சுய லாபத்திற்கென மாணவிகளை துண்டிவிட்டு, பொய் புகார் கொடுக்க வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.



சக ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் பொய் புகார் அளிக்க, மாணவிகளை தூண்டிய சம்பவத்தில் தலைமை ஆசிரியர் மீதே போக்சோ சட்டம் பாய்ந்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



மதுரை: ஆசிரியர்கள் மீது போக்‍சோ வழக்‍கில் புகாரளிக்‍க மாணவிகளைத் தூண்டிய தலைமை ஆசிரியர் சரியான விசாரணை செய்த காவல்துறைக்கு தென்மண்டல ஐஜி  அஸ்ரா கார்க் பாராட்டு...


---------------------------------------------------



மதுரையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது பொய்யாக போக்சோ வழக்குப்பதிவு செய்ய மாணவிகளை தூண்டிய தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

மதுரை மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் மற்றும் ஊமச்சிகுளம் மகளிர் காவல்நிலையத்திற்கு கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் தனது பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மீது சில மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் பெட்டியில் மாணவிகள் கடிதத்தை போட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து புகாருக்‍கு உள்ளான 3 ஆசிரியர்கள் மீதும் கருப்பாயூரணி காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் புகாருக்‍குள்ளான பெண் ஆசிரியர் ஒருவர் தென்மண்டல ஐஜியிடம் ஆசிரியர்களுக்கு இடையேயான விரோதப்போக்கில் பொய்புகாரை அளிக்‍க தலைமை ஆசிரியர் மாணவிகளைத் தூண்டியதாகவும், அதனடிப்ப​டையில் பொய்ப்புகார் அளிக்‍கப்பட்டதாகவும் ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று மனு அளித்தார். இதைத் தொடர்ந்து, புகாரளித்த சிறுமிகளை தனித்தனியே விசாரித்தபோது தாங்களாக அக்கடிதத்தை எழுதவில்லை என்றும் தலைமை ஆசிரியர் கூறி தான் அவ்வாறு செய்ததாகவும் எந்த ஆசிரியரும் தங்களிடம் தவறாக நடக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியருக்‍கு காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்‍கை விடுத்துள்ள நிலையில், குற்றம் செய்யாதவர்கள் தண்டனை பெற்றுவிடக்‍ கூடாது என்ற எண்ணத்தில் துரித விசாரணை நடத்திய காவல் துறையினருக்‍கு காவல் துறை தென்மண்டலத் தலைவர் அஸ்ரா கார்க்‍ பாராட்டு தெரிவித்துள்ளார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




பள்ளிக்‌ கல்வித்‌ துறை - நிருவாக சீரமைப்பு - மாவட்டக்‌ கல்வி அலுவலகங்களுக்கு (இடைநிலை) ஒன்றியங்கள்‌ ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது - சில‌ மாவட்டங்களுக்கு ஒன்றியம்‌ ஒதுக்கீடு - திருத்திய ஆணை வழங்குதல்‌ - சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌:45227/அ1/இ1/2022, நாள்‌: 31-10-2022 (Department of School Education - Administrative Reorganization - Allotment of Unions to District Education Offices (Secondary) and Order Issued - Allotment of Unions to Certain Districts - Issuance of Revised Order - Regarding - Proceedings of the Commissioner of School Education, Tamil Nadu No:45227/A1/E1/2022, Dated : 31-10-2022)...

 


>>> பள்ளிக்‌ கல்வித்‌ துறை - நிருவாக சீரமைப்பு - மாவட்டக்‌ கல்வி அலுவலகங்களுக்கு (இடைநிலை) ஒன்றியங்கள்‌ ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது - சில‌ மாவட்டங்களுக்கு ஒன்றியம்‌ ஒதுக்கீடு - திருத்திய ஆணை வழங்குதல்‌ - சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌:45227/அ1/இ1/2022, நாள்‌: 31-10-2022 (Department of School Education - Administrative Reorganization - Allotment of Unions to District Education Offices (Secondary) and Order Issued - Allotment of Unions to Certain Districts - Issuance of Revised Order - Regarding - Proceedings of the Commissioner of School Education, Tamil Nadu No:45227/A1/E1/2022, Dated : 31-10-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌, சென்னை-6.

ந.க.எண்‌:45227/அ1/இ1/2022, நாள்‌: 31-10-2022...


பொருள்‌: பள்ளிக்‌ கல்வித்‌ துறை - நிருவாக சீரமைப்பு - மாவட்டக்‌ கல்வி அலுவலகங்களுக்கு (இடைநிலை) ஒன்றியங்கள்‌ ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது - சில‌ மாவட்டங்களுக்கு ஒன்றியம்‌ ஒதுக்கீடு - திருத்திய ஆணை வழங்குதல்‌ - சார்ந்து.


பார்வை: 

1. அரசு ஆணை (நிலை) எண்‌:151, பள்ளிக்‌ கல்வி (ப.க.1(1)த்‌ துறை, நாள்‌ 09.09.2022.

2. அரசு ஆணை (நிலை) எண்‌:172,பள்ளிக்‌ கல்வி (ப.க.1(1)த்‌  துறை, நாள்‌ 30.09.2022.

3. சென்னை-6, தமிழ்நாடு பள்‌ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்‌ ந.க.எண்‌.45227/அ1/இ1/2022, நாள்‌. 03.10.2022


பார்வை 3-ல்‌ காணும்‌ இவ்வாணையரக செயல்முறைகளின்படி, கல்வி மாவட்ட வாரியாக ஒன்றியங்கள்‌ ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது. இதன்‌ தொடர்ச்சியாக தற்போது இணைப்பில்‌ உள்ள மாவட்டங்களுக்கு திருத்திய ஒன்றியங்கள்‌ ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்படுகிறது.


இணைப்பில்‌ உள்ள ஒன்றியங்களின்படி, சார்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலகங்களுக்கு (இடைநிலை) கோப்பினை மாற்றம்‌ செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்‌, மாற்றம்‌. செய்யப்பட்ட கோப்புகளின்‌ விவரங்களை சார்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலர்களிடமிருந்து பெற்று அதனை தங்கள்‌ அலுவலகத்தில்‌ பராமரிக்கப்பட வேண்டும்‌ எனவும்‌, மேலும்‌, மாவட்டக்‌ கல்வி. அலுவலகங்களில்‌ ஆண்டாய்வு மேற்கொள்ளும்போது மேற்கண்ட கோப்புகள்‌ உரிய பதிவேடுகளில்‌ பதியப்பட்ட விவரத்தினை உறுதி செய்யுமாறும்‌ சார்ந்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு அறிவறுத்தப்படுகிறது.


பள்ளிக்கல்வி ஆணையருக்காக


இணைப்பு :

திருத்தியபட்டியல்‌


பெறுநர்‌:

சார்ந்த முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌.


நகல்‌:

சார்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌.

சார்ந்த கருவூல அலுவலர்கள்‌.




03-11-2022 மற்றும் 04-11-2022 தேதிகளில் நடைபெறும் மதுரை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் - மாவட்ட வாரியாக ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் கடிதம் (Madurai Zonal Level Inspection Review Meeting on 03-11-2022 and 04-11-2022 - District wise appointment of Inspection Officers Letter from Commissioner of School Education) ந.க.எண் : 43363 / பிடி1 / இ2 / 2022, நாள்:01.11.2022...




>>> 03-11-2022 மற்றும் 04-11-2022 தேதிகளில் நடைபெறும் மதுரை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் - மாவட்ட வாரியாக ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் கடிதம் (Madurai Zonal Level Inspection Review Meeting on 03-11-2022 and 04-11-2022 - District wise appointment of Inspection Officers Letter from Commissioner of School Education) ந.க.எண் : 43363 / பிடி1 / இ2 / 2022, நாள்:01.11.2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் புதிய இயக்குநராக முனைவர் திரு.எஸ்.நாகராஜமுருகன் அவர்கள் பணியிட மாறுதல் மூலம் நியமனம் - அரசாணை (வாலாயம்) எண்: 398, நாள்: 01-11-2022 வெளியீடு (G.O. (Provincial) No: 398, Dated: 01-11-2022 - Appointment of Dr.S.Nagarajamurugan as the new Director of Tamil Nadu Matriculation Schools through Transfer)...


>>> தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் புதிய இயக்குநராக முனைவர் திரு.எஸ்.நாகராஜமுருகன் அவர்கள்  பணியிட மாறுதல் மூலம் நியமனம் - அரசாணை (வாலாயம்) எண்: 398, நாள்: 01-11-2022 வெளியீடு (G.O. (Provincial) No: 398, Dated: 01-11-2022 - Appointment of Dr.S.Nagarajamurugan as the new Director of Tamil Nadu Matriculation Schools through Transfer)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



2022-2023ஆம் நிதியாண்டு அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் தொகை - மாவட்டங்களுக்கு நிதி பகிர்ந்தளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (2022-2023 Financial Year - Composite School Grants for Government Primary, Middle, High and Higher Secondary Schools - Distribution of Funds to Districts - Issuance of Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha) ந.க. எண்: 08/ ஒபக/ SCG/ 2022, நாள்: 10-2022...


>>> 2022-2023ஆம் நிதியாண்டு அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் தொகை -   மாவட்டங்களுக்கு நிதி பகிர்ந்தளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (2022-2023 Financial Year - Composite School Grants for Government Primary, Middle, High and Higher Secondary Schools - Distribution of Funds to Districts - Issuance of Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha) ந.க. எண்: 08/ ஒபக/ SCG/ 2022, நாள்: 10-2022...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...