கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SBI FASTag Balanceஐ பதிவு செய்துள்ள அலைபேசி எண்ணிலிருந்து 7208820024 என்ற எண்ணுக்கு Missed Call கொடுப்பதன் மூலம் அறியலாம் (SBI FASTag Balance can be checked by giving a Missed Call to 7208820024 from the registered mobile number)...

 

SBI FASTag Balanceஐ  பதிவு செய்துள்ள அலைபேசி எண்ணிலிருந்து 7208820024 என்ற எண்ணுக்கு Missed Call கொடுப்பதன் மூலம் அறியலாம் (SBI FASTag Balance can be checked by giving a Missed Call to 7208820024 from the registered mobile number)...



Dear SBI FASTag Customer, you can get SBI FASTag balance by missed call on 7208820024 from your registered mobile number.



எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – நவம்பர் இரண்டாவது வாரம் - 2022 (Ennum Ezhuthum Lesson Plan - November 2nd Week)...எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – நவம்பர் இரண்டாவது வாரம் - 2022 (Ennum Ezhuthum Lesson Plan - November 2nd Week)...

          


>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – நவம்பர் இரண்டாவது வாரம் - 2022 (Ennum Ezhuthum Lesson Plan - November 2nd Week)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மாணவன் தற்கொலை - ஆதாரங்கள் இல்லாமல் ஆசிரியரை குற்றம்சாட்டக்கூடாது - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் (Student's suicide - Teacher should not be accused without evidence - High Court directs)...



 மாணவன் தற்கொலை - ஆதாரங்கள் இல்லாமல் ஆசிரியரை குற்றம்சாட்டக்கூடாது - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் (Student's suicide - Teacher should not be accused without evidence - High Court directs)...


பள்ளி அல்லது ஆசிரியர் மீது குற்றச்சாட்டுவதற்கு முன்பாக தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் பெற்றோர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.


தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து, வீட்டிலும், சமூகத்திலும் பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த யுவராஜ் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார். மாணவர்களின் தலைமுடியை வெட்டியும், கால் சட்டை கிழித்தும் தலைமை ஆசிரியர் துன்புறுத்தியதால் தான் தன் மகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும், 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மாணவனின் தாய் கலா கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மாணவர்களுடைய ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில் தலைமை ஆசிரியை நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்ட தலைமை ஆசிரியர் பணியில் இருந்த காலத்தில் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 45-லிருந்து சதவீதத்திலிருந்து 90-ஆக உயர்ந்ததாகவும்  தெரிவிக்கப்பட்டது.


இந்த புகார் குறித்து மாவட்ட கல்வி தலைமை கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில், குற்றச்சாட்டுகள் தவறு என  அறிக்கை அளிக்கப்பட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தலைமை ஆசிரியர் ராபர்ட் தரப்பில், தற்கொலை செய்து கொண்ட யுவராஜ் ஒவ்வொரு மாதமும் 50 சதவீத நாட்கள் மட்டுமே வகுப்புகளுக்கு வருவார் என்றும், தனக்கு எதிரான புகார் பொய்யான புகார் என்றும், பணம் பறிக்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவன் யுவராஜ் தற்கொலை தொடர்பாக மாவட்ட தலைமை கல்வி அதிகாரி மற்றும் காவல்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெற்றோரின் குற்றச்சாட்டு உண்மை இல்லை என்று நிரூபணமாவதாக கூறி தாய் கலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை குறை கூறுவதை ஏற்க முடியாது என்றும், மாணவர்களை ஒழுங்குபடுத்த கல்வித் துறை வகுத்துள்ள விதிகளை மீறும் பொழுதுதான் அவர்களை தண்டிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்ற பொதுவான குற்றச்சாட்டால் பள்ளியின் பெயரும், பிற மாணவர்களின் நலனும் பாதிக்கப்படுவதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


மாணவர்களை நன்றாக படிக்கச் செய்யவும், ஒழுங்கம் பேணச் செய்யவும் முயற்சிக்கும் ஆசிரியர்களை ஊக்கக் குறைவுபடுத்தினால், அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது கடமையை செய்ய மாட்டார்கள் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆசிரியர்களை குறைகூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


பள்ளி அல்லது ஆசிரியர் மீது குற்றச்சாட்டுவதற்கு முன்பாக தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் பெற்றோர்கள் உணர்ந்திருக்க வேண்டும் என்றும், வீட்டிலும், சமூகத்திலும் தங்களது பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது அவர்களின் கடமை என்றும் நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





பள்ளிக்‌ கல்வி நிருவாக மறு சீரமைப்பு பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கீழ்‌ உள்ள மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்கள்‌ (தொடக்கக்‌ கல்வி/ இடைநிலை/ தனியார்‌ பள்ளிகள்‌) என பெயர்‌ மாற்றம்‌ மற்றும்‌ புதிய அலுவலகங்கள்‌ ஏற்படுத்தப்பட்டமை - பணியாளர்‌ நிர்ணயம்‌ - பள்ளித்‌ துணை ஆய்வாளர்‌ பணியிடங்கள்‌ நிர்ணயம்‌ செய்து ஆணையிடுதல்‌ - அனைத்து CEO அலுவலகங்களுக்கும் பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடம் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Restructuring of School Education Department - Rename and creation of new offices as District Education Officer posts (Primary/Secondary/Private Schools) under School Education Department - Staffing - Fixation of Deputy Inspector of Schools posts - Allotment of Deputy Inspector of Schools posts for all CEO offices School Education Commissioner Proceedings) ந.௧.எண்‌.54755/சி2/ இ1/2022, நாள்‌ 01-11-2022...


>>> பள்ளிக்‌ கல்வி நிருவாக மறு சீரமைப்பு பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌  கீழ்‌ உள்ள மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்கள்‌ (தொடக்கக்‌ கல்வி/ இடைநிலை/ தனியார்‌ பள்ளிகள்‌) என பெயர்‌ மாற்றம்‌ மற்றும்‌ புதிய அலுவலகங்கள்‌ ஏற்படுத்தப்பட்டமை - பணியாளர்‌ நிர்ணயம்‌ - பள்ளித்‌ துணை ஆய்வாளர்‌ பணியிடங்கள்‌ நிர்ணயம்‌ செய்து ஆணையிடுதல்‌ - அனைத்து CEO அலுவலகங்களுக்கும் பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடம் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Restructuring of School Education Department - Rename and creation of new offices as District Education Officer posts (Primary/Secondary/Private Schools) under School Education Department - Staffing - Fixation of Deputy Inspector of Schools posts - Allotment of Deputy Inspector of Schools posts for all CEO offices School Education Commissioner Proceedings) ந.௧.எண்‌.54755/சி2/ இ1/2022, நாள்‌ 01-11-2022...



தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌, சென்னை -6.
முன்னிலை :திரு க.நந்தகுமார்‌, இ.ஆ.ப.
ந.௧.எண்‌.54755/சி2/ இ1/2022, நாள்‌ 01-11-2022...

பொருள்‌: பள்ளிக்‌ கல்வி நிருவாக மறு சீரமைப்பு பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌  கீழ்‌ உள்ள மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்கள்‌ (தொடக்கக்‌ கல்வி/ இடைநிலை/ தனியார்‌ பள்ளிகள்‌) என பெயர்‌ மாற்றம்‌ மற்றும்‌ புதிய அலுவலகங்கள்‌ ஏற்படுத்தப்பட்டமை - பணியாளர்‌ நிர்ணயம்‌ - பள்ளித்‌ துணை ஆய்வாளர்‌ பணியிடங்கள்‌ நிர்ணயம்‌ செய்து ஆணையிடுதல்‌ - சார்பு.


பார்வை: 

1) அரசாணை (நிலை) எண்‌:.101, பள்ளிக்‌ கல்வித்‌ (வ.செ.1) துறை, நாள்‌ 18.05.2018.

2) அரசாணை (நிலை) எண்‌.108,பள்ளிக்‌ கல்வித்‌ (ப.க(1) துறை, நாள்‌ 28.05.2018.

3) அரசாணை (நிலை) எண்‌.151, பள்ளிக்‌ கல்வித்‌ (பக1(1) துறை, நாள்‌ 09.09.2022.

4) அரசாணை (நிலை) எண்‌:172,பள்ளிக்‌ கல்வித்‌ (ப.க.4(1)) துறை, நாள்‌ 30.09.2022.

5) தமிழ்நாடுபள்ளிக்‌ கல்வி ஆணையரக இணை இயக்குநரின்‌ (பணியாளர்‌ தொகுதி) செயல்முறைகள்‌ ந.க.எண்‌.49138/அ3/இ1/2022, நாள்‌ 26.09.2022.


பார்வை 3-ல்‌ கண்டுள்ள அரசாணையில்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கீழ்‌ உள்ள அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்களும்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌
(தொடக்கக்‌ கல்வி), மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ (இடைநிலை), மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ (தனியார்‌ பள்ளிகள்‌) என பெயர்‌ மாற்றம்‌ செய்யப்பட்டும்‌, புதிதாக 32 மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்கள்‌ தோற்றுவிக்கப்பட்டும்‌ ஆணை வெளியிடப்பட்டதன்‌ தொடர்ச்சியாக, பார்வை 4.ல்‌ கண்டுள்ள அரசாணையில்‌ தற்போது செயல்பாட்டிலுள்ள 120 மாவட்டக்‌ கல்வி அலுவலகங்கள்‌ மற்றும்‌ கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 32 மாவட்டக்‌ கல்வி அலுவலங்கள்‌ என மொத்தம்‌ 152 மாவட்டக்‌ கல்வி அலுவலகங்கள்‌ (தொடக்கக்‌ கல்வி - 58 / இடைநிலை 55 / தனியார்‌ பள்ளிகள்‌ 39) செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, இவ்வலுவலகங்களுக்கு பணி நிரவல்‌ மூலம்‌ பணியாளர்களை நியமனம்‌ செய்யவும்‌ அரசாணையில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளது.



கனமழை காரணமாக இன்று (03-11-2022) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday today (03-11-2022) due to heavy rain)...



கனமழை காரணமாக இன்று (03-11-2022) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday today (03-11-2022) due to heavy rain)...


1) கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (3.11.22) விடுமுறை


2) மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


3) விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.11.2022 - School Morning Prayer Activities...


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.11.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால்: அறத்துப்பால், 


அதிகாரம் - அறன் வலியுறுத்தல்.


குறள் ;


 சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு


பொருள் : 

ஆக்கம் எவனோ உயிர்க்கு. விளக்கம் - அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.


பழமொழி :

Appearance are always deceptive.


தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடாதே.



இரண்டொழுக்க பண்புகள் :


1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே. 


2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன். 


பொன்மொழி :


நேரம் இலவசமானது, ஆனால் அது விலைமதிப்பற்றது. உங்களால் அதை சொந்தமாக்கிக்கொள்ள முடியாது, ஆனால் உங்களால் அதைப் பயன்படுத்த முடியும். உங்களால் அதை வைத்திருக்க முடியாது, ஆனால் உங்களால் அதை செலவிட முடியும். நீங்கள் ஒருமுறை அதை இழந்தால் அதை உங்களால் திரும்பப் பெற முடியாது. --ஹார்வி மேக்கே



பொது அறிவு :


1. மரகத தீவு என்று அழைக்கப்படுவது எது? 


 அயர்லாந்து. 


 2. அரபியக் கடலின் அரசி என்று அழைக்கப்படுவது எது? 


 இந்தியாவில் உள்ள கொச்சி நகரம்.


English words & meanings :


Qui-no-lo-gy - study of the medicine quinine. Noun. குயினைன் என்று சொல்ல கூடிய மருந்து பற்றிய படிப்பு 


ஆரோக்ய வாழ்வு :


தேனில் உள்ள இருமலைக் குணப்படுத்தும் பண்புகள், வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அத்தகைய தேனை 5 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து 2 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைத்து சாப்பிட, வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


NMMS Q :


ஓர் இயற்கை இழையினைச் சுடரில் காட்டினால் அவ்விழை_________


விடை: எரியும்


நவம்பர் 3


அமர்த்தியா சென் அவர்களின் பிறந்தநாள்


அமார்த்ய குமார் சென் (Amartya Sen, பிறப்பு: நவம்பர் 3, 1933) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்.


நீதிக்கதை


நரியின் தந்திரம்


ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒரு கூட்டம் சேர்த்தது. எல்லா மிருகமும் வந்தது. முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டு, என் உடம்பை முகர்ந்து பார் எப்படி இருக்கு? ன்னு சொல் என்றது சிங்கம். குரங்கு வந்து முகர்ந்து பார்த்துவிட்டு வாசனை நல்லா இல்லீங்க கொஞ்சம் மோசமாத்தான் இருக்குன்னு சொல்லியது. 


சிங்கம் கோபமடைந்து என் உடம்பையா அப்படிச் சொல்றேன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது. குரங்கு கீழே விழுந்துவிட்டது. அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டு. நீ வா வந்து பார்த்து சொல்லு என்றது. கரடி அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே வந்தது. 


சிங்கத்தை முகர்ந்து பார்த்தது ஆகா! ரோஜாப்பூ வாசனை! ன்னு சொல்லுச்சு. பொய்யா சொல்றே? ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் கீழே விழுந்தது. அடுத்தப்படியா ஒரு நரியைக் கூப்பிட்டு. நீதான் சரியாச் சொல்லுவ! நீ வந்து சொல்லு என்றது. 


நரி குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்து மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்! என்று சொல்லி நரித் தந்திரமாக தப்பிக்கொண்டது. 


நீதி :

நரியின் தந்திரம் எல்லா மனிதர்களுக்கும் இருத்தல் வேண்டும்.


இன்றைய செய்திகள்


03.11.22


* வடகிழக்குப் பருவமழை | தமிழகம் முழுவதும் 5093 நிவாரண முகாம்கள் தயார்: பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தகவல்.


* ஏற்கெனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு புதிய சட்டம் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு.


* தமிழகத்தில் நிர்வாகத்துறை நடுவர்களுக்கு குற்றவியல் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


* மோர்பி பாலத்தின் கேபிள் சீரமைக்கப்படவில்லை: நீதிமன்றத்தில் அரசு தரப்பு அதிர்ச்சித் தகவல்.


* நேற்று ஒரே நாளில் 10 ஏவுகணை சோதனை: வட கொரியா மீது தென் கொரியா குற்றச்சாட்டு.


* நீல திமிங்கலங்கள் வருடத்திற்கு 10 மில்லியன் துண்டுகள் நுண் ஞெகிழி கழிவுகளை உட்கொள்வதாக விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* டி20 உலகக் கோப்பை: வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி- புள்ளி பட்டியலில் முதலிடம்.


* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்கா, சக்காரி வெற்றி.


 * ஐ-லீக் கால்பந்தின் 2022-2023 சீசன் நவம்பர் 12-ஆம் தேதி தொடங்கும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


Today's Headlines


 * North East Monsoon 5093 relief camps are ready across Tamil Nadu: Disaster Management Minister informs.


* Fixation of compensation for already acquired lands under new law: High Court orders.


 * The High Court ordered the Tamil Nadu government to provide training to administrative judges of Tamil Nadu on criminal laws.


* Tamil Nadu is likely to receive heavy rain for the next 5 days, according to the Chennai Meteorological Department.


* The central government has decided to grant citizenship to minorities who came from Pakistan, Bangladesh and Afghanistan.


* Cable of Morbi Bridge is not repaired :  Shocking statement by the government in court.


 *10 missile are tested in a single day yesterday: South Korea accuses North Korea.


* Blue whales ingest 10 million pieces of plastic waste per year, according to a report released by scientists.


 * T20 World Cup: India beat Bangladesh by thrilling victory - ranks top in the statistics 


 * Women's Tennis Championship: Sabalenka, Sakari won.


* The All India Football Federation has announced that the 2022-2023 season of I-League Football will begin on November 12.


இன்றைய (03-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 03, 2022




புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவி கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும், வாய்ப்புகளும் உண்டாகும். செலவுகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : லட்சியங்கள் பிறக்கும்.


பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

நவம்பர் 03, 2022




தொழில் சார்ந்த முதலீடுகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேம்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். கடன் தொடர்பாக இருந்துவந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வரவுகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : முயற்சிகள் மேம்படும். 


ரோகிணி : தீர்வு கிடைக்கும். 


மிருகசீரிஷம் : கீர்த்தி உண்டாகும். 

---------------------------------------




மிதுனம்

நவம்பர் 03, 2022




தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மிருகசீரிஷம் : சேமிப்பு அதிகரிக்கும். 


திருவாதிரை : தாமதங்கள் குறையும். 


புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------




கடகம்

நவம்பர் 03, 2022




மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். எந்த செயலையும் நிதானத்துடன் மேற்கொள்வது நல்லது. அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல் ஏற்படும். வியாபார பணிகளில் எதிர்பார்ப்புகள் காலதாமதமாக நிறைவேறும். உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.


பூசம் : அலைச்சல் ஏற்படும். 


ஆயில்யம் : புரிதல் உண்டாகும். 

---------------------------------------




சிம்மம்

நவம்பர் 03, 2022




உயர் அதிகாரிகளின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : மேன்மையான நாள்.


பூரம் : லாபம் கிடைக்கும்.


உத்திரம் : அனுகூலமான நாள்.

---------------------------------------




கன்னி

நவம்பர் 03, 2022




மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகளால் தெளிவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நெருக்கமானவர்கள் இடத்திலிருந்து எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.


சித்திரை : உதவிகள் கிடைக்கும். 

---------------------------------------




துலாம்

நவம்பர் 03, 2022




நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். உற்சாகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



சித்திரை : ஆதரவான நாள்.


சுவாதி : நம்பிக்கை மேம்படும்.


விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

நவம்பர் 03, 2022




உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பயணங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



விசாகம் : மரியாதை அதிகரிக்கும்.


அனுஷம் : ஒற்றுமையான நாள்.


கேட்டை : துரிதம் உண்டாகும். 

---------------------------------------




தனுசு

நவம்பர் 03, 2022




செய்யும் செயல்களில் தடை, தாமதங்கள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்களை பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். எந்தவொரு செயலிலும் முன்கோபமின்றி விவேகத்துடன் செயல்பட்டால் முன்னேற்றத்தையும், லாபத்தையும் அடைய முடியும். வரவுகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



மூலம் : தாமதங்கள் உண்டாகும். 


பூராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





மகரம்

நவம்பர் 03, 2022




உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மனை மற்றும் வீடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. வாக்கு சாதுரியத்தின் மூலம் கீர்த்தி அடைவீர்கள். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : ஆதரவான நாள்.


திருவோணம் : எண்ணங்கள் ஈடேறும்.


அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

நவம்பர் 03, 2022




சிறு தொழில், வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். கல்வி தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உழைப்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.


சதயம் : பிரச்சனைகள் நீங்கும். 


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------




மீனம்

நவம்பர் 03, 2022




எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். வேலையில் பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுப காரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.  நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். புதுவிதமான அணிகலன்கள் செய்வது மற்றும் அது தொடர்பான விருப்பங்கள் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



பூரட்டாதி : நெருக்கடியான நாள்.


உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும். 


ரேவதி : விருப்பங்கள் மேம்படும். 

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...