>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
19-11-2022 காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்ப பெறப்பட்டன - செய்தி வெளியீடு எண்: 2078, நாள்: 19-11-2022 (Very Heavy Rain Warning issued by Department of Revenue and Disaster Management withdrawn - Press Release No: 2078, Dated: 19-11-2022)...
19-11-2022 அன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு வினாத்தாளில் கணக்கு பாடத்திலிருந்து கேட்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் உத்தேச விடைகள் (Maths Related Questions in TNPSC Group-I Exam 19-11-2022 Question Paper & Tentative Answer Key)...
தனியார் பயிற்சி நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள்...
5% விடை மாற்றங்கள் இருக்கலாம்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இன்றைய (20-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
நவம்பர் 20, 2022
கல்வி சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். சுபச்செய்திகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : மாற்றம் உண்டாகும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
ரிஷபம்
நவம்பர் 20, 2022
சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை உண்டாகும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகள் அமையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.
ரோகிணி : மாற்றமான நாள்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------
மிதுனம்
நவம்பர் 20, 2022
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் தனவரவு மேம்படும். தந்தையை பற்றிய சிந்தனைகள் மனதில் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் வித்தியாசமான அணுகுமுறைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
திருவாதிரை : தனவரவு மேம்படும்.
புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
கடகம்
நவம்பர் 20, 2022
நெருங்கிய நண்பர்களின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணிதம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். பழைய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் அமையும். நரம்பு தொடர்பான இன்னல்கள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : தடுமாற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
சிம்மம்
நவம்பர் 20, 2022
எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகமான செயல்பாடுகளால் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். வெளிவட்டாரங்களில் நட்பு அதிகரிக்கும். பணி சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். உணவு சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : நட்பு அதிகரிக்கும்.
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
கன்னி
நவம்பர் 20, 2022
உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். செய்தொழிலில் மேன்மைக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. மனதில் துறை சார்ந்த புதிய தேடல் அதிகரிக்கும். எதிர்பாராத சில செயல்பாடுகளால் திருப்பம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அஸ்தம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சித்திரை : திருப்பம் உண்டாகும்.
---------------------------------------
துலாம்
நவம்பர் 20, 2022
சிகை அலங்கார பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். முதலீடு சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : சிந்தித்து செயல்படவும்.
விசாகம் : ஆர்வம் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
நவம்பர் 20, 2022
சமூக பணிகளில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். உள்ளுணர்வு சார்ந்த சிந்தனைகளின் மூலம் புதிய முடிவு எடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபகரமான சூழல் அமையும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு உயர் பொறுப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
அனுஷம் : லாபகரமான நாள்.
கேட்டை : பொறுப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
நவம்பர் 20, 2022
வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். காப்பீடு சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் அமையும். உங்களின் மீதான கருத்துக்களில் மாற்றம் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். மறைமுகமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு தொடர்பான சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : உழைப்பு அதிகரிக்கும்.
பூராடம் : மாற்றமான நாள்.
உத்திராடம் : ஆதாயம் ஏற்படும்.
---------------------------------------
மகரம்
நவம்பர் 20, 2022
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.
திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.
அவிட்டம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
---------------------------------------
கும்பம்
நவம்பர் 20, 2022
கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் பகைமையை தவிர்க்க முடியும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
சதயம் : ஏற்ற, இறக்கமான நாள்.
பூரட்டாதி : விவேகம் வேண்டும்.
---------------------------------------
மீனம்
நவம்பர் 20, 2022
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். முக்கிய பிரமுகர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : திருப்திகரமான நாள்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
19-11-2022 அன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள் (TNPSC Group-I Exam 19-11-2022 Question Paper & Tentative Answer Key)...
தனியார் பயிற்சி நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள்...
5% விடை மாற்றங்கள் இருக்கலாம்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அரசுப் பணியாளர்கள் மருத்துவ விடுப்பு எடுப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு - தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதல் 16 (Strict restrictions on taking medical leave by government employees - Tamil Nadu Medical Council Guidelines 16)...
மருத்துவச் சான்று இனி ஒரே சமயத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே பெற முடியும். ஐந்து நாட்களுக்கு மேலும் பெற வேண்டுமெனில் பிளட் டெஸ்ட், இசிஜி, எக்ஸ்ரே போன்ற டெஸ்ட் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு மேல் ஐந்து மடங்குகளில் விடுப்பு நாட்கள் வழங்கும்பொழுது மேற்கண்ட இணைப்புகள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
மேலும் விடுப்பு சான்றிதழ் வழங்கும் மருத்துவர் தனது நோயாளியின் விவரங்களை பதிவேடு எண்ணின் வரிசை எண் மற்றும் உள்நோயாளி எனில் உள்நோயாளி பதிவேடு வரிசை எண் வரிசை ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்க வேண்டும். மேலும் மருத்துவச் சான்றின் ஒரு நகலை அவர் எப்பொழுதும் பராமரிக்க வேண்டும்.
அந்நகல் ஐந்து ஆண்டுகளுக்கு தேவைப்படும் பொழுது ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் மருத்துவ சான்றினை ஐந்து ஆண்டுகள் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இனி மருத்துவ விடுப்பு எடுப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு அவர்கள் அறிக்கை (When will the Old Pension Scheme come into effect in Tamilnadu - Report by P.M.K Founder Dr.Ramadasu)...
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று பாமக நிறுவனர் ராமதாசு அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்...
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்," பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்தும் மாநிலங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில், இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்க வேண்டிய தமிழ்நாடு அதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது வருத்தமளிக்கிறது.
சண்டிகரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.75 லட்சம் பஞ்சாப் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். அவர்களிடமிருந்து புதிய ஓய்வூதியத் திட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட ரூ.16,746 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பஞ்சாப் அரசு வலியுறுத்தியுள்ளது.
அண்மைக்காலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதன்முதலில் செயல்படுத்தியது இராஜஸ்தான் மாநிலம் தான். அப்போது ராஜஸ்தான் அரசால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது இது வெற்று அறிவிப்பாகவே இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறினார்கள். ஆனால், அனைத்து எதிர்மறை கருத்துகளையும் முறியடித்து ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதுமட்டுமின்றி, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், சமூக நீதிக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்தியாவில் 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதன் மூலம், இந்தியாவில் இனி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்ற மாயை தகர்க்கப்பட்டிருக்கிறது. இது தான் மிகவும் மகிழ்ச்சியளிக்கும் உண்மையாகும். இந்தியாவில் 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தும், தமிழ்நாட்டில் 2003ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூக பொருளாதார பாதுகாப்பை அழித்து விடும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. இன்னும் கேட்டால் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதாகும். பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்த தொகை அவ்வாறு செலுத்தப்படவில்லை; மாறாக இந்தத் தொகை தனிக்கணக்கில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால் அந்த நிதியை அரசின் கணக்கிற்கு மாற்றிக் கொள்வதில் எந்தவிதமான தடையும் இல்லை.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முன்பாகவே தமிழகத்தில் பழைய ஒய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப் பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அதன்பின்னர் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அறிக்கையை அளித்தது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமானது தான் என்று என்பது பல்வேறு மாநிலங்களில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்தே உறுதியாகியுள்ளது. எனவே, இனியும் ஏதேனும் காரணங்களைக் கூறி பழைய ஓய்வூதியத் திட்டத்தை தாமதப்படுத்தாமல், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் மூலம் உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies
234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...