கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆந்திராவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணி உள்ளிட்ட பிற பணிகளுக்கு பயன்படுத்த தடை (Prohibition of using Government School Teachers for other work including election work in Andhra)...


 ஆந்திராவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணி உள்ளிட்ட பிற பணிகளுக்கு பயன்படுத்த தடை (Prohibition of using Government School Teachers for other work including election work in Andhra)...


அமராவதி,


ஆந்திர பிரதேசத்தில் பள்ளிக் கல்வியின் தரம் குறைவாக உள்ளதால், இனி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கு வெளியே இதர பணிகள் அளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு இதர பணிகளுக்கு ஆசியர்களை அனுப்ப தடை ஆந்திர பிரதேச அரசு தடை விதித்துள்ளது.


இதற்காக ஆந்திர பிரதேச இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் தனி உதவியாளர்கள் பணியில் நியமிக்கப்பட்டிருந்த ஆசியர்கள் அனைவரையும் பள்ளிக் கல்வித் துறை திரும்பப் பெற்றுள்ளது.


பள்ளிக் கல்வி அல்லாத பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் 3ஆம் வகுப்பு மாணவர்களில் 22.4 சதவீத்தினர் மட்டுமே பாட நூலை படிக்கும் திறன் கொண்டுள்ளதாக கல்வி தரம் பற்றிய வருடாந்தர ஆய்வறிக்கை கூறியுள்ளது.








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



டிசம்பர் - 2022 துறைத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு(Release of Exam Hall Ticket for December-2022 Departmental Exams)...



 டிசம்பர் - 2022 துறைத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு(Release of Exam Hall Ticket for December-2022 Departmental Exams)...


Click Here...

https://apply.tnpscexams.in/dept-hall-ticket-download/eyJpdiI6Im14cDR0bUd2MDNvZHE5SDdVeUhYQ1E9PSIsInZhbHVlIjoiK2NqVTU1YnBUd1FobFwvRHpkUUlua3ZYTjdVYVdaeDU0SFUwVnpcL0J2akZvPSIsIm1hYyI6IjMzMDllOTA2YWUwNmU4ZTRjZGFiZjIzZmZiYjliZWNkZWY4MTY2NTQxOGZjNTgzZDVmZWUxZDI3NWJkMmY3YjAifQ==








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய இணையதளம் (New website to link Aadhaar with electricity connection)...


 மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய இணையதளம் (New website to link Aadhaar with electricity connection)...


தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதுவரை 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.


இந்நிலையில், இந்த பணிக்காக மின் வாரியம் கூடுதலாக தனி இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது.


அதன்படி, ஆதார் எண்ணை இணைக்க மட்டும் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.


இதுதவிர www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும் இணைக்கலாம்.








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இளையவர் வாங்கும் சம்பளத்தை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமை - உயர்நீதிமன்றம் உத்தரவு (It is the duty of the government to pay the salary of the junior to the senior - High Court order)...


 இளையவர் வாங்கும் சம்பளத்தை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமை - உயர்நீதிமன்றம் உத்தரவு (It is the duty of the government to pay the salary of the junior to the senior - High Court order)...



அரசு ஊழியர்களில் பணியில் இளையவர் அதிக சம்பளம் பெற்றால், அதே தொகையை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


நாகை மாவட்டம், ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-


நான் 1988-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். இதற்கு மறுநாள், அதாவது அதே ஆண்டு ஜூலை 21-ந் தேதி செல்லப்பாண்டியன் என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 2002-ம் ஆண்டு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், 2008-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றேன்.


ஆனால், செல்லப்பாண்டியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக 2008ம் ஆண்டுதான் பதவி ஏற்றார். என்னைவிட பணியில் அவர் இளையவர். ஆனால், 2008-ம் ஆண்டு எங்கள் இருவருக்கும் சிறப்பு நிலை ஊதியம் உயர்வு வழங்கும்போது, என்னைவிட அவருக்கு ரூ.3 ஆயிரம் அதிகம் ஊதியம் வழங்கப்பட்டது.


இதுகுறித்து நான் அளித்த மனுவை நாகை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நிராகரித்து 2011-ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.



இவ்வாறு அதில் கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வி.காசிநாதபாரதி, மனுதாரரைவிட 6 ஆண்டுகளுக்கு பின்னர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ஏற்ற செல்லப்பாண்டியன் ஊதியம் அதிகம் வாங்கியது மட்டுமல்ல, தற்போது அவர் வட்டார கல்வி அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்று விட்டார்'' என்று வாதிட்டார். கல்வி துறை சார்பில் அரசு வக்கீல் சி.சதீஷ் வாதிட்டார்.


இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவில், ''நாகை தொடக்க கல்வி அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். அரசு பணி விதிகளின்படி, ஒரே பதவியில் உள்ள 2 அரசு ஊழியர்களில், இளையவரைவிட பணியில் மூத்தவர் குறைவாக ஊதியம் வாங்கக்கூடாது. ஒருவேளை இளையவர் அதிக ஊதியம் பெற்றால், அதே தொகையை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.


எனவே, 2008-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி முதல் ஊதிய உயர்வை கணக்கிட்டு, மனுதாரருக்கு 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.


இன்றைய (04-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

டிசம்பர் 04, 2022




எந்தவொரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் மனதில் ஒருவிதமான பயம் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். அறிமுகமாகும் புதிய நபர்களிடம் தேவையற்ற விஷயங்களைப் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. கூட்டு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும். மேன்மை நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



அஸ்வினி : நிதானம் வேண்டும்.


பரணி : திருப்தியான நாள்.


கிருத்திகை : மேன்மை உண்டாகும். 

---------------------------------------




ரிஷபம்

டிசம்பர் 04, 2022




ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான வர்த்தக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். புதுவிதமான கனவுகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பெருமை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 



கிருத்திகை : நெருக்கடிகள் உண்டாகும். 


ரோகிணி : மேன்மையான நாள்.


மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




மிதுனம்

டிசம்பர் 04, 2022




பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். புதிய நுட்பமான சிந்தனைகள் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஜவுளி வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மிருகசீரிஷம் : பொறுப்புகள் மேம்படும். 


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.


புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------




கடகம்

டிசம்பர் 04, 2022




மனதில் குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். மனை சார்ந்த பணிகளில் லாபம் அடைவீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதை நிவர்த்தி செய்து கொள்வதற்கான ஆலோசனைகளும் கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும். 


பூசம் : சாதகமான நாள்.


ஆயில்யம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

டிசம்பர் 04, 2022




மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பத்திரம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வேலையாட்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உதவி கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



மகம் : தன்னம்பிக்கை உண்டாகும்.


பூரம் : முன்னேற்றம் ஏற்படும். 


உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

டிசம்பர் 04, 2022




குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தனவரவில் நெருக்கடியான சூழல் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். அடுத்தவர்களை பற்றிய விமர்சனங்களை தவிர்க்கவும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். கோப உணர்வுகளை குறைத்து கொள்ளவும். வெளி உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. வியாபார பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புதிய நபர்களிடம் பொறுமை வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும். 


அஸ்தம் : விமர்சனங்களை தவிர்க்கவும்.


சித்திரை : பொறுமை வேண்டும்.

---------------------------------------




துலாம்

டிசம்பர் 04, 2022




தனிப்பட்ட ஆசைகள் மற்றும் விருப்பங்கள் நிறைவேறும். வியாபார பணிகளில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். அலுவலக பணிகளில் மதிப்பு மேம்படும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். புத்திசாலித்தனமான செயல்களின் மூலம் வெற்றி கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



சித்திரை : விருப்பங்கள் நிறைவேறும்.


சுவாதி : தோற்றப்பொலிவு மேம்படும். 


விசாகம் : வெற்றி கிடைக்கும்.

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 04, 2022




வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் நிறைவு பெறும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பக்தி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



விசாகம் : சாதகமான நாள்.


அனுஷம் : தெளிவு கிடைக்கும்.


கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




தனுசு

டிசம்பர் 04, 2022




மனதிற்கு மகிழ்ச்சியான காரியங்கள் நடக்கும். வியாபாரப் பணிகளில் வீண் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். வெளி உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். எதிர் பாலினத்தவரிடம் பழகும் போது கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். இலக்கியம், கதை, கவிதை துறைகளில் இருப்பவர்களுக்கு புகழ் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மூலம் : அலைச்சல்கள் உண்டாகும். 


பூராடம் : புதுமையான நாள்.


உத்திராடம் : புகழ் கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

டிசம்பர் 04, 2022




செய்தொழிலில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வேளாண்மை சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தை சரி செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் அமையும். தெளிவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : ஆதாயம் உண்டாகும். 


திருவோணம் : அனுபவம் கிடைக்கும். 


அவிட்டம் : சாதகமான நாள்.

---------------------------------------




கும்பம்

டிசம்பர் 04, 2022




மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். முயற்சிக்கு உண்டான பலன்கள் மற்றும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் சிலருக்கு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




அவிட்டம் : இடமாற்றங்கள் ஏற்படும்.


சதயம் : அங்கீகாரம் கிடைக்கும்


பூரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------




மீனம்

டிசம்பர் 04, 2022




உத்தியோக பணிகளில் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் மேன்மை அடைவீர்கள். தனவரவுகளில் எதிர்பாராத உதவி கிடைக்கும். குடும்பத்தில் வெளி நபர்களால் சிறு குழப்பம் ஏற்படலாம். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



பூரட்டாதி : மேன்மையான நாள்.


உத்திரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும்.


ரேவதி : உதவி கிடைக்கும்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13,404 பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு - முழுமையான விவரம் (Notification for 13,404 Vacancies in Kendriya Vidyalaya Schools - Full Details)...




>>> கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13,404 பணி இடங்களுக்கான அறிவிப்பு விளம்பர எண்: 15/2022 - தேர்வு மையங்கள் விவரம் (Advertisement Number 15/2022 - Notification for 13,404 Vacancies in Kendriya Vidyalaya Schools - Examination Centres Details)...



>>> கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13,404 பணி இடங்களுக்கான அறிவிப்பு விளம்பர எண்: 16/2022 - காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை, கல்வித் தகுதிகள் விவரம் (Advertisement Number 16/2022 - Notification for 13,404 Vacancies in Kendriya Vidyalaya Schools - Vacancies & Educational qualification Details)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்களை கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) வரவேற்றுள்ளது.  காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தவர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிடங்கள்:


முதல்வர்-239 இடங்கள்


துணை முதல்வர்- 203 இடங்கள்


முதுகலை ஆசிரியர் (PGT) -1409 இடங்கள்


பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (TGT)- 3176 இடங்கள்


நூலகர் - 355 இடங்கள்


முதன்மை ஆசிரியர்- 6,414 இடங்கள்


உதவி கமிஷனர் -52 இடங்கள்


PRT -303 இடங்கள்


நிதி அதிகாரி- 6 இடங்கள்


உதவி பொறியாளர் (சிவில்)- 2 இடங்கள்


உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ) - 156 இடங்கள்


ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்- 11 இடங்கள்


மூத்த செயலக உதவியாளர் (யுடிசி) - 322 இடங்கள்


இளநிலை செயலக உதவியாளர் (LDC) - 702 இடங்கள்


ஸ்டெனோகிராபர் கிரேடு-II- 54 இடங்கள்


மொத்த காலியிடங்கள்: 13,404


வயது வரம்பு:


விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு PGT ஆசிரியர்களுக்கு 40 ஆண்டுகள் இருக்க வேண்டும். TGT களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள். கேந்திரிய வித்யாலயா (KVs) ஆசிரியர்களுக்கு வயது வரம்பு இல்லை. இடஒதுக்கீடு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் வயது தளர்வு பொருந்தும்.


கல்வித்தகுதி:


பிஜிடி பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் அந்தந்தத் துறையில் முதுகலை முடித்திருக்க வேண்டும். TGT பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் அந்தந்த பாடத்தில் இளங்கலை பட்டம் மற்றும் அதற்கான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். TGT களுக்கு, விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் CET சான்றிதழையும் கொண்டிருக்க வேண்டும்.


விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் கணினி பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.   


ஊதிய விகிதம்:


PGTக்கான ஊதியம் ரூ.47600-151100/- ஆகவும், TGTக்கு ரூ.44900-142400/- ஆகவும் இருக்கும்.


விண்ணப்ப செயல்முறை:


KVS PGT TGT விண்ணப்ப செயல்முறை ஒரு ஆன்லைன் செயல்முறையாக இருக்கும்.


தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.


ஆஃப்லைன் விண்ணப்ப படிவங்கள் எதுவும் கிடைக்காது.


ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன், அனைத்து விண்ணப்பதாரர்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்க வேண்டியது கட்டாயமாகும்.


தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், எந்த ஒரு வேட்பாளர் தேர்வின் எந்த நிலையிலும் தகுதியற்றவராக கண்டறியப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.


விண்ணப்பப் படிவத்தில் விவரங்களை நிரப்பும்போது விண்ணப்பதாரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இறுதி சமர்ப்பிப்புக்குப் பிறகு, எந்த திருத்தமும் செய்ய முடியாது.


முழுமையற்ற மற்றும் தவறாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


விண்ணப்பங்கள் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கடைசி தேதிக்குப் பிறகு, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப இணைப்பு செயலிழக்கப்படும்.  


விண்ணப்பிப்பது எப்படி?


படி 1- கேந்திரிய வித்யாலயா சங்கதனின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும், அதாவது https://kvsangathan.nic.in.


படி 2- முகப்புப்பக்கத்தில் "அறிவிப்பு" பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள KVS PGT TGT 2022 ஆட்சேர்ப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும்.


படி 3- விண்ணப்பிக்கும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.


படி 4- தொடர்புடைய விவரங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்.


படி 5- ஒரு பதிவு எண். உருவாக்கப்படும் மற்றும் மேலும் உள்நுழைவுகளுக்கு பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை பாதுகாப்பாக வைத்திருக்கும்.


படி 6- உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பப் படிவத்திற்குச் செல்லவும்.


படி 7- உண்மையான விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.


படி 8- தேவையான ஆவணங்களை தேவையான வடிவத்தில் பதிவேற்றவும்.


படி 9- விண்ணப்ப படிவத்தை செலுத்தவும்.


படி 10- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் பிரிண்ட் அவுட் மற்றும் எதிர்காலத்தில் குறிப்புகளுக்கான கட்டண ரசீதை எடுத்துக் கொள்ளவும்.


முக்கிய நாட்கள்:


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 05-12-2022


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26-12-2022 23:59 மணி வரை


மேலும் விபரங்களுக்கு: 


https://kvsangathan.nic.in/







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



ஒரே வளாகத்தில் செயல்படும் இரண்டு பள்ளிகள் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் 3 கிலோ மீட்டருக்குள் உள்ள சத்துணவு மையங்களை ஒருங்கிணைப்பு தொடர்பாக அறிக்கை அளிக்க சமூக நலத் துறை உத்தரவு (Department of Social Welfare has directed to submit a report regarding merging of feeding centers in two schools operating in the same campus and feeding centers within 3 kms)...

 ஒரே வளாகத்தில் செயல்படும் இரண்டு பள்ளிகள் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் 3 கிலோ மீட்டருக்குள் உள்ள சத்துணவு மையங்களை ஒருங்கிணைப்பு தொடர்பாக அறிக்கை அளிக்க சமூக நலத் துறை உத்தரவு (Department of Social Welfare has directed to submit a report regarding merging of feeding centers in two schools operating in the same campus and feeding centers within 3 kms)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...