கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மூன்றாவது பிரசவத்திற்கு "மகப்பேறு விடுப்பு" கோரி அரசுப்பள்ளி ஆசிரியர் வழக்கும் - உயர்நீதிமன்றத்தின் உத்தரவும் (Govt school teacher's case seeking "maternity leave" for third delivery - High Court orders)...



 மூன்றாவது பிரசவத்திற்கு "மகப்பேறு விடுப்பு" கோரி அரசுப்பள்ளி ஆசிரியர் வழக்கும் - உயர்நீதிமன்றத்தின் உத்தரவும் (Govt school teacher's case seeking "maternity leave" for third delivery - High Court orders)...


ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான கதிஜா உமாமா தனது மூன்றாவது பிரசவத்திற்கு ஓராண்டு காலத்திற்கு விடுப்பு கோரி விண்ணப்பித்தார். விண்ணப்பம் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே விடுப்பு வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பணியில் சேர்வதற்கு முன்பாகவே இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டது. பணியில் சேர்ந்த பின்னரே மூன்றாவது குழந்தைக்கு கருவுற்றதால் விடுப்பு பெற உரிமை உள்ளது. 


விடுப்பு கோரி மனுதாரர் கடந்த ஜூன் 27ம் தேதி ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுத்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவரது  விண்ணப்பத்தை பரிசீலித்து ஜூலை 7ம் தேதி முதல் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய சிறுகதை - மனைவி ஒரு மந்திரி (Today's Short Story - Wife is a Minister)...


இன்றைய சிறுகதை - மனைவி ஒரு மந்திரி (Today's Short Story - Wife is a Minister)...


கிராமம் ஒன்றில், ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது.  ஒரு நாள் அந்த  மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால், குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு, சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது.


அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன்; அவனைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றான்.


 அறிவிற்குறைந்த அந்தக் கணவன் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றான். 


எதிரேயொருவன் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தான். அவன், அந்தக் கணவனை ஏமாற்றி, கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றதும், அதற்கும் அறிவிலிக் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவனிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான். 


போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரன் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு அறிவிலிக் கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான். 


அறிவிலிக் கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் அவனைப் பார்த்து, ''அட முட்டாளே! நானும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய் - ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய் - கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய் -இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியேவிடுவாள்; அல்லது உன்னை அடித்துத் துரத்துவாள்'' என்றான். 


அறிவிலிக் கணவன், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என் மனைவியை அறிவேன்,  என்றான். 

தான் சொல்வதுதான் நடக்கும் என்றான் பக்கத்து வீட்டுக்காரன். நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர்.  நடந்தால் அறிவிலிக் கணவன் அவனது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்துவிடவேண்டும்.  நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை அறிவிலிக் கணவனுக்குத் தந்துவிடவேண்டும். இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டுக்குத் திரும்பினர். 


அண்டை வீட்டுக்காரன், அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களையெல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான். 


அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து "அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்களா?'' என்று அன்பொழுகக் கேட்டாள். 

பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி. 


பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்துவிட்டான். 


மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து, ''என்னடா  உன் மனைவி உன்னைவிட முட்டாளாக இருக்கிறாளே?' என்று கேட்டான்.


''அப்படியொன்றுமில்லை. என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும் அதைப்பிறர் முன்னால் காட்டிக்கொள்ளமாட்டாள். நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன். அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்'' என்றான் அந்த அறிவிலிக் கணவன்.


 துணையின் தியாகத்தைப் போற்றி  எத்தனைபேர் உணர்ந்து மதிக்கிறோம்?


"கணவன், மனைவி இருவரும் ஒருவர் வினையை இன்னொருவர் கூட இருந்து தூய்மை செய்து வாழ்வதே இல்லறம். இருவரிடையே பிணக்கு வரக் கூடாது. மன அலையை குறைத்து தியானம் பழக அமைதி அலை நிலைத்து விடும், சிந்தனை சிறக்கும், வெறுப்பு உண்டாகாது. அன்பும், கருணையும் தழைக்கும். சிறு தவறுகளை மன்னிக்கும் தன்மை மேம்படும். ஒருவருக்கொருவர் என்ன தேவையோ அதைச் செய்யும் மனம் உண்டாகும்" என்றும், சினம், கவலை, ஏமாற்றம் வெறுப்பு முதலியன வாழ்க்கைத் துணையை துன்பம் கொள்ளச் செய்வதை உணர்ந்து அனைவரும்  மாற வேண்டும்.


இன்றைய (12-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

டிசம்பர் 12, 2022



உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்குகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயமும், லாபமும் உண்டாகும். பயணங்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்




அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.


பரணி : முயற்சிகள் கைகூடும். 


கிருத்திகை : ஒத்துழைப்பு மேம்படும். 

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 12, 2022



செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். சகோதரர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரியோர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூக பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். நேர்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும். 


ரோகிணி : பொறுப்புகள் மேம்படும். 


மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 12, 2022



நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு மேம்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




மிருகசீரிஷம் : உதவி கிடைக்கும்.


திருவாதிரை : தனவரவு மேம்படும்.


புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------



கடகம்

டிசம்பர் 12, 2022



மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புரிதலும், அனுபவமும் மேம்படும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், இலக்குகளும் பிறக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 




புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.


பூசம் : புரிதல் உண்டாகும்.


ஆயில்யம் : இலக்குகள் பிறக்கும்.

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 12, 2022



கால்நடை தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் திருப்பம் ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் விவேகம் அவசியமாகும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தடைகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




மகம் : சாதகமான நாள்.


பூரம் : நம்பிக்கை ஏற்படும்.


உத்திரம் : அனுபவம் வெளிப்படும்.

---------------------------------------



கன்னி

டிசம்பர் 12, 2022



குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சோதனை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




உத்திரம் : எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள்.


அஸ்தம் : மாற்றம் உண்டாகும். 


சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும். 

---------------------------------------



துலாம்

டிசம்பர் 12, 2022



எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிந்தனையில் புதிய தெளிவும், உற்சாகமும் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். நுட்பமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




சித்திரை : அனுபவம் கிடைக்கும்.


சுவாதி : உற்சாகமான நாள்.


விசாகம் : நுட்பங்களை அறிவீர்கள்.

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 12, 2022



திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். விவசாய பணிகளில் அரசு சார்ந்த உதவி சாதகமாகும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஆதரவு மேம்படும். பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புகழ் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : பாராட்டுகளை பெறுவீர்கள். 


அனுஷம் : ஆதரவு மேம்படும். 


கேட்டை : உதவி கிடைக்கும்.

---------------------------------------



தனுசு

டிசம்பர் 12, 2022



பேச்சுக்களில் நிதானம் அவசியமாகும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். தனம் சார்ந்த நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எண்ணிய சில பணிகள் நிறைவுபெறுவதில் காலதாமதம் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மீது கவனம் வேண்டும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மூலம் : கவனம் வேண்டும்.


பூராடம் : நெருக்கடிகள் நீங்கும்.


உத்திராடம் : மந்தமான நாள்.

---------------------------------------



மகரம்

டிசம்பர் 12, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். நண்பர்களின் உதவியின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். வெளியிடங்களில் கோபத்தை விட விவேகத்தை கையாளவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


திருவோணம் : அனுகூலம் உண்டாகும். 


அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும். 

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 12, 2022



புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். களிப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அவிட்டம் : காலதாமதம் குறையும். 


சதயம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------



மீனம்

டிசம்பர் 12, 2022



குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




பூரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.


உத்திரட்டாதி : அனுபவம் வெளிப்படும். 


ரேவதி : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.12.2022 - School Morning Prayer Activities...

 

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.12.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: விருந்தோம்பல்


குறள் : 83

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.


பொருள்:

தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை


பழமொழி :

You can't tell a book by its cover.

எதையும் தின்னாவிட்டால் தெரியுமா தித்திப்பு, புளிப்பு?


இரண்டொழுக்க பண்புகள் :


1. எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பவன், முழு முட்டாள். எனவே முட்டாள் ஆக இருக்க மாட்டேன்.


 2. எனக்கு ஒன்றும் தெரியாது என்பவன், கற்றுக் கொண்டே இருப்பான். எனவே அமைதியாக இருந்து என் வாழ்வு மேம்பட இன்னும் கற்றுக் கொள்வேன்


பொன்மொழி :


உங்கள் பிரச்சினைகளை அடையாளம் காணுங்கள் ஆனால் உங்கள் சக்தியையும் ஆற்றலையும் தீர்வுகளுக்கு கொடுங்கள் --டோனி ராபின்ஸ்



பொது அறிவு :


1. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் யார்? 


பச்சேந்திரி பால் . 


2. இந்தியாவின் முதல் விண்கலம் எது ? 


ஆரியப்பட்டா ( 1975).


English words & meanings :


coarse - rough. adjective. சொர சொரப்பான. பெயரடை. Course - path. procedures. noun. மார்க்கம். பெயர்ச்சொல்


ஆரோக்ய வாழ்வு :


வேர்க்கடலையில் நம்முடைய உடலுக்குத் தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவை,


புரதச்சத்து,

நார்ச்சத்துக்கள்,

கொழுப்புச்சத்து,

கார்போஹைட்ரேட்,

கால்சியம்,

காப்பர்,

பொட்டாசியம்,

இரும்புச்சத்து,

சோடியம்,

மக்னீசியம்,

துத்தநாகம்,

பாஸ்பரஸ்

ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்திருக்கின்றன.


NMMS Q


15 : 224 :: 12 : ________. 1) 225. 2) 243. 3) 145. 4) 143 


விடை: 143. 


விளக்கம்: 15X15 =225; 225-1 = 224; 12X12 =144; 144 - 1= 143


நீதிக்கதை


மகா கஞ்சனின் கதை


கந்தன் என்ற ஒரு மகா கஞ்சன், ஆலங்குடி என்ற ஊரில் வசித்து வந்தான். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு சென்றார். 


விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தனர். 


அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த விமானி ஒருவர், நீங்கள் இருவரும் வாருங்கள் ஆளுக்கு நூறு ரூபாய் தான் வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம் என்றார். கஞ்சனுக்கு ஆர்வம் தான். ஆனால் செலவுக்கு பயந்து நாங்கள் வரவில்லை, என்றான். 


அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, நீங்கள் எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டால், இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும் என்றார். 


கஞ்சன் தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான். விமானம் தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சத்தம் போடாமல் இருந்தான். விமானத்தைத் தரை இறக்கினார் விமானி. 


கஞ்சனுக்கு கை கொடுத்து, நான் பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, வேறு யாராக இருந்தாலும் சத்தம் போட்டுருப்பார்கள். ஆனால், நீங்கள் சிறு சத்தம் எழுப்பவில்லை. எப்படி இது உங்களால் முடிந்தது? என்று கேட்டார் விமானி. 


நான் கூட, ஒரே ஒரு சமயம், என் மனைவி, விமானத்தில் இருந்து கீழே விழுந்தபோது! கத்த நினைத்தேன். நல்லவேலை கத்தாமல் இருந்தேன். கத்தியிருந்தால் கட்டணம் செலுத்த வேண்டிருக்கும் என்றான் கஞ்சன். அதை கேட்ட விமானி மயங்கி விழுந்தார். 


நீதி :

சிக்கனம் இருக்கலாம் ஆனால், கஞ்சத்தனம் இருத்தல் கூடாது.


இன்றைய செய்திகள்


12.12.22


* தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


* சென்னை கோயம்பேடு சந்தையில் புயல் தாக்கத்தால் 2 ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கம்: வியாபாரிகள் தகவல்.


* ரேஷன் கார்டு, முதியோர் ஓய்வூதியம் பெற சட்டப்பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம்: மாவட்ட முதன்மை சார்பு நீதிபதி தகவல்.


* முதல் முறையாக வாரணாசியில் பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டம் - தமிழக அரசு சார்பில் இன்று நினைவகம் திறப்பு.


* மகாராஷ்டிராவில் வந்தே பாரத் ரயில் உட்பட ரூ.75,000 கோடி மதிப்பில் திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.


* ஜி-7 நாடுகளின் ரஷிய எண்ணெய் விலை உச்சவரம்பு முடிவுக்கு ஆதரவில்லை என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷியா வரவேற்றுள்ளது.


* பிரமிக்க வைத்த சனி கிரகம் - நாசா பகிர்ந்த அதிசய புகைப்படம்.


* உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.


* பகல்-இரவு டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை 77 ரன்னில் சுருட்டி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.


Today's Headlines


* Chance of heavy rain in 12 districts of Tamil Nadu: Chennai Meteorological Center information.


 * 2000 tonnes of vegetables stalled in Chennai Koyambedu market due to storm: Traders informed.


 * Legal Affairs Commission can be approached for Ration Card, Old Age Pension: District Principal Pro-Judge Information.


 * Bharathiar's birthday celebration in Varanasi for the first time - Tamil Nadu Government to inaugurate the memorial today.


 * Projects worth Rs 75,000 crore including Vande Bharat Rail in Maharashtra - PM Modi launched.


 * Russia has welcomed India's stance that it does not support the end of the Russian oil price ceiling by the G-7 nations.


 * Stunning Saturn - Amazing photo shared by NASA.


 *France beat England 2-1 to advance to the semi-finals in the World Cup.


 * Day-Night Test: West Indies bowled out for 77 runs against Australia

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



மாதிரிப் பள்ளிகள் (Model School) - முதுகலை பாட ஆசிரியர்கள் - ஆஷா நிவாஸ் சமூக சேவை மையத்தில் முந்தைய ஆண்டு நீட் (NEET) தேர்வு வினாத்தாட்களைத் தட்டச்சு செய்ததில் பிழைத்திருத்தம் மேற்கொள்ளுதல் - ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க அறிவுறுத்துதல் -மாநில திட்ட இயக்குநரின் கடிதம் (Model Schools - Post Graduate Teachers - Correction of typing of previous year NEET question papers in Asha Niwas Social Service Center - Directing Relieving of Teachers - Letter from State Project Director)...



>>> மாதிரிப் பள்ளிகள் (Model School) - முதுகலை பாட ஆசிரியர்கள் - ஆஷா நிவாஸ் சமூக சேவை மையத்தில் முந்தைய ஆண்டு நீட் (NEET) தேர்வு வினாத்தாட்களைத் தட்டச்சு செய்ததில் பிழைத்திருத்தம் மேற்கொள்ளுதல் - ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க அறிவுறுத்துதல் -மாநில திட்ட இயக்குநரின் கடிதம் (Model Schools - Post Graduate Teachers - Correction of typing of previous year NEET question papers in Asha Niwas Social Service Center - Directing Relieving of Teachers - Letter from State Project Director)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு (SA) தேர்வு குறித்த ஐயங்களும், அவற்றிற்குரிய விளக்கமும் (Ennum Ezhuthum - Term 2 - Summative Assessment (SA) Exam - FAQs and their explanation)...


எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு (SA) தேர்வு குறித்த ஐயங்களும், அவற்றிற்குரிய விளக்கமும் (Ennum Ezhuthum - Term 2 - Summative Assessment (SA) Exam - FAQs and their explanation)...


கேள்வி:1.

 TN EMIS APP மூலம் தொகுத்தறி தேர்வு நடத்த வேண்டுமா?


*ஆம்... கட்டாயம் TN EMIS APP மூலம் Online வழியே 1 & 2 & 3ம் வகுப்புகளுக்கு 13.12.2022 முதல் 23.12.2022 வரையிலான கால கட்டத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தொகுத்தறி தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் இந்த Online தேர்வு மதிப்பீடு மட்டுமே தொகுத்தறி மதிப்பீடாக கணக்கிடப்படும்.



கேள்வி:2.


 TN EMIS APP வழியே வெளியிடப்படும் PDF எழுத்து தேர்வுக்குரிய வினாத்தாள்கள் வழியே 1 & 2 & 3ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவ தொகுத்தறி தேர்வு கட்டாயம் நடத்த வேண்டுமா? 

அப்படி வினாத்தாள்கள் வழியே வைக்கப்படும்  தொகுத்தறி மதிப்பீடு கணக்கில் தொகுத்தறி மதிப்பீடாக (SA) ஏற்றுக் கொள்ளப்படுமா?


*TN EMIS APP வழியே வெளியிடப்படும் PDF வடிவிலான வினாத்தாள்கள் கொண்டு இரண்டாம் பருவ தொகுத்தறி தேர்வை கட்டாயமாக நடத்த தேவையில்லை...

 *Optional ஆக எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழியே எழுத்து தேர்வு வைத்தால் நன்றாக இருக்கும் என விரும்பும் ஆசிரியர்கள்  வினாத்தாள்கள் வழியே தொகுத்தறி தேர்வை Online தேர்வுடன் இணைந்து நடத்தி கொள்ளலாம்


*அப்படி வினாத்தாள் வழியே 1 & 2 & 3ம் வகுப்புகளுக்கு தொகுத்தறி தேர்வு நடத்தினாலும் அந்த மதிப்பீடை தொகுத்தறி மதிப்பீடாக கணக்கிடப்படாது


கேள்வி:3. 


1 & 2 & 3ஆம் வகுப்புக்குரிய தொகுத்தறி PDF வினாத்தாள்கள் BRC மூலம் விலையில்லாமல் மாணவர்களுக்கு வழங்கப்படுமா?


*BRC மூலம் விலையில்லாமல் வினாத்தாள்கள் வழங்கப்படாது.... எழுத்து தேர்வை விரும்பும் 1 & 2 & 3ம் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் தாமே தமது சொந்த பொறுப்பில் வினாத்தாள்களை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு ஒருநாள் பயிற்சி அளித்தல் - 38 மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் -வழிகாட்டுதல்கள் - மாவட்டங்களுக்கு தெரிவித்தல் சார்ந்து இல்லம் தேடிக்கல்வி சிறப்புப் பணி அலுவலரின் செயல்முறைகள் கடிதம் (One-day Training of ITK Volunteers - Release of Funds to 38 Districts - Guidelines - Intimation to Districts - Proceedings Letter of Special Duty Officer for Illam Thedi Kalvi) ந.க.எண்: 449/ C7/ ITK/ SS/ 2022, நாள்: 09-12-2022...



>>> இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு ஒருநாள் பயிற்சி அளித்தல் - 38 மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் -வழிகாட்டுதல்கள் - மாவட்டங்களுக்கு தெரிவித்தல் சார்ந்து இல்லம் தேடிக்கல்வி சிறப்புப் பணி அலுவலரின் செயல்முறைகள் கடிதம் (One-day Training of ITK Volunteers - Release of Funds to 38 Districts - Guidelines - Intimation to Districts - Proceedings Letter of Special Duty Officer for Illam Thedi Kalvi) ந.க.எண்: 449/ C7/ ITK/ SS/ 2022, நாள்: 09-12-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...