கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் (Conduct of Second Term Summative Assessment Test for Class 4 and 5 students for the academic year 2022-2023 - Proceedings of the Director of State Council of Educational Research and Training) ந.க.எண்: 2411/ ஈ2/ 2022, நாள்: 14-12-2022...


>>> 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் (Conduct of Second Term Summative Assessment Test for Class 4 and 5 students for the academic year 2022-2023 - Proceedings of the Director of State Council of Educational Research and Training) ந.க.எண்: 2411/ ஈ2/ 2022, நாள்: 14-12-2022...


நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு தேவை என்றால் வலைதளத்தில் இருந்து வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து ஜெராக்ஸ் எடுத்து கொள்ளலாம் அல்லது ஆசிரியர்களோ அல்லது பள்ளியோ தாங்களாகவே கேள்வித்தாள் தயாரித்துக் கொள்ளலாம் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்கை நோக்கி செல்கிறதா? - மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் கல்வி அலுவலர்களின் கருத்துகள் (Is the Ennum Ezhuthum program on target? - Feedback from students, parents, teachers, educators, Teacher Federations and Educational Official's)...

 


எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்கை நோக்கி செல்கிறதா? - மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் கல்வி அலுவலர்களின் கருத்துகள் (Is the Ennum Ezhuthum program on target? - Feedback from students, parents, teachers, educators, Teacher Federations and Educational Official's)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கொரோனா நோய் தொற்று குறைந்தபோதிலும், அதனால் விளைந்த பாதிப்புகள் ஒவ்வொரு துறையிலும் மறைந்தே இருக்கத்தான் செய்கின்றன.


கற்றல் இடைவெளி


தொழில், கல்வி, சுகாதாரத்தில் அதன் தாக்கம் பெரிய அளவில் இருந்து வருவதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். அதில் இருந்து மீள மத்திய, மாநில அரசுகளும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.


கல்வியைப் பொறுத்த அளவில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


அதிலும் ஆரம்பக்கல்வியை தொடங்கும் மாணவர்களின் கல்வித் திறனே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை பல்வேறு தரப்பிலான ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.


பல குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களில் அடிப்படை கூட தெரியாத நிலை இருப்பது வேதனை அளிப்பதாக அவைகள் சுட்டிக்காட்டுகின்றன.


இதற்கு முக்கிய காரணம், கொரோனா காலத்தில் 19 மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் போனதுதான். அதனால் 1-ம் வகுப்பு பாடங்கள் பற்றி முழுமையாக தெரியாமலேயே 2-ம் வகுப்பிற்கும், அதுபோல் 2-ம் வகுப்பைப் படிக்காமலே 3-ம் வகுப்புக்கும் குழந்தைகள் தாவி வந்திருக்கிறார்கள்.



இதனால் ஏற்பட கற்றல் இடைவெளியால் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியின் பலன்களை குழந்தைகள் முழுமையாகப் பெறவில்லை.


எண்ணும் எழுத்தும் திட்டம்


இவ்வாறு கல்வியில் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைச் சீர்செய்வது, கல்வித்துறையின் மிக முக்கிய கடமையாக இருக்கிறது.


அதற்காக உருவானதுதான், எண்ணும் எழுத்தும் திட்டம். 2022-23-ம் கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை அரசு முன்னெடுக்க இருக்கிறது.


எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.6.2022 அன்று திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு அந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்தது.


அதை செயல்படுத்த, தனியாக ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் கையேடுகளும், பயிற்சி நூல்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.) மூலம் வழங்கப்பட்டு இருக்கிறது.



அரும்பு, மொட்டு, மலர்...


குழந்தைகளின் கற்றல் இடைவெளியை அடையாளம் கண்டு அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி கற்பிக்கும் வகையில் அவர்கள், "அரும்பு, மொட்டு, மலர்" என்று 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள்.


அரும்பு என்பது படிக்கத்தெரியாத குழந்தைகளையும், மொட்டு என்பது கொஞ்சம் படிக்கத் தெரிந்த குழந்தைகளையும், மலர் என்பது நன்கு படிக்கத் தெரிந்த குழந்தைகளையும் குறிக்கிறது.


இதில் அரும்பு, மொட்டு வகையில் இருக்கும் குழந்தைகளை மலராக பூக்க வைக்க வேண்டும் என்பதே திட்டத்தின் ஒரே நோக்கம் ஆகும்.


ஆடல், பாடல், கதை சொல்லல்...


தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களை கற்றுக் கொடுக்கும் போது, குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும், எழுத்தும் வகுப்பறையில் ஆடல், பாடல், கதை சொல்லல், வாசித்தல், செயல்பாடு, படைப்பு, பொம்மலாட்ட களங்கள் போன்ற நிகழ்வுகள் மூலம் அவர்களின் ஆர்வமும், ஈடுபாடும் ஊக்கப்படுத்தப்படுகின்றன.



இப்படியாக கடந்த 5 மாதங்களுக்கு மேல் கற்பிக்கப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டம் குழந்தைகளின் கற்றல் இடைவெளியை சீர்செய்து இருக்கிறதா?. 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறவேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தின் இலக்கு நிறைவேறி வருகிறதா? என்பது பற்றி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-


மாணவர்கள் ஆர்வம்


பிரேமா (ஆசிரியை திண்டுக்கல்):- எண்ணும், எழுத்தும் திட்டம் சிறந்த கற்பித்தல் முறை ஆகும். கொரோனா காலத்துக்கு பின்னர் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருவதற்கு இந்த திட்டமே காரணம். ஒவ்வொரு பாடத்தையும் துணை கருவிகள் கொண்டே நடத்துகிறோம். அதேபோல் பாடங்களுடன் தொடர்புடைய பொருட்களை செய்வதற்கு மாணவ-மாணவிகளை ஈடுபடுத்துகிறோம். இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் கற்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



மேகி (ஆசிரியை, திண்டுக்கல்):- மாணவ-மாணவிகளுக்கு எளிதில் புரியும் வகையில் ஆடல், பாடலுடன் பாடங்களை நடத்துகிறோம். வகுப்பறை முழுவதும் உற்சாகம் பரவி விடுவதால் மாணவ-மாணவிகளும் பாடங்களில் கவனம் செலுத்துகின்றனர். எந்தவித சலிப்பும் இல்லாமல் பாடங்களை கற்கின்றனர். புத்தகத்தில் இருக்கும் பாடங்களை தவிர புதிய செயல்பாடுகளில் ஈடுபட வைக்கிறோம். நன்றாக செயல்படும் மாணவர்களுக்கு கிரீடம், பதக்க அட்டை அணிவித்து பாராட்டுகிறோம். இதனால் மாணவர்களின் ஆர்வமும் அதிகமாக உள்ளது. செயல்முறையில் பாடங்களை கற்பதால், எளிதில் மறப்பதில்லை. எண்ணும் எழுத்தும் திட்டத்தால் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட்டு இருக்கிறது.


வாசிப்பு திறன்


லட்சுமிநாராயணன் (பழனி) :- எனது மகன் நகராட்சி பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறான். தாய்மொழி தமிழில் வாசிப்பு என்பது முக்கியமானது. ஆனால் எனது மகன் தமிழ், ஆங்கிலத்தை வாசிக்க தடுமாறினான். அதை பள்ளி ஆசிரியர் கண்டறிந்து கூடுதல் கவனத்துடன் கற்பிக்கின்றனர். இதனால் தற்போது தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு திறன் மேம்பட்டு இருக்கிறது. அதோடு படிப்பிலும் ஆர்வமாக இருக்கிறான். குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் இதுபோன்ற திட்டங்களை மேலும் செயல்படுத்த வேண்டும்.


சுகன்யா (ஆயக்குடி):- கொரோனா காலத்தில் பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களின் வாசிப்பு திறன் மிகவும் குறைந்து போனது. அதனால் பள்ளிகள் திறக்கப்பட்டபோது மாணவர்களிடம் கற்றல் திறன் போதிய அளவில் இல்லை. எண்ணும், எழுத்தும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவதால் மாணவ-மாணவிகளின் வாசிப்பு திறன் நன்றாக இருக்கிறது. மேலும் படிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.


கடந்த 5 மாதங்களுக்கு மேல் கற்பிக்கப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டம் குழந்தைகளின் கற்றல் இடைவெளியை சீர்செய்து இருக்கிறதா?.


2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறவேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தின் இலக்கு நிறைவேறி வருகிறதா? என்பது பற்றி ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-


நடன அசைவு


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் பேச்சிமுத்து: எங்கள் பள்ளியில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் 24 மாணவ, மாணவிகள் இந்த திட்டம் மூலம் பயன்பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்தின் படி பாடல்களை கற்பிக்கும் போது உரிய நடன அசைவுடன் கற்பிக்க அரசு வலியுறுத்தி உள்ள நிலையில் மாணவர்களும் தங்களது உடல் அசைவுகள் மூலம், நடனங்கள் மூலம் அந்த பாடல்களை நினைவுப்படுத்தி சரியான முறையில் ஒப்புவிக்கிறார்கள்.


இந்த திட்டத்தால் மாணவர்கள் 4-ம் வகுப்பு கல்வி கற்கும் போது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



திருத்தங்கல் மைக்கேல்: எண்ணும், எழுத்தும் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களில் பல பயனுள்ள தகவல் இருக்கிறது. இதை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளனர். ஆனால் பாடங்கள் அதிக அளவில் இருப்பதாக மாணவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.


ஆசிரியர்களுக்கு பயிற்சி


மாநில கருத்தாளர் ஷர்மிளா:-


எண்ணும் எழுத்தும் திட்டம் விருதுநகர் மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் தொடக்கநிலை குழந்தைகள் எழுதுவதில் தான் சற்று சிரமப்படும் நிலை உள்ளது. அதற்கு ஆசிரியர்கள் உரிய பயிற்சி அளித்து வருகின்றனர். எனவே 3-ம் நிலை தொடங்குவதற்கு முன்பு அனைத்து பள்ளிகளிலும் தொடக்கநிலை வகுப்பு குழந்தைகள் எழுதுவதிலும் சிறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


தற்போதைய நிலையில் நான் மாநில கருத்தாளர்களாக உள்ளேன். அடுத்து மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களிலும் தலா 2 கருத்தாளர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக ஒரு மாநில கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஓ.கோவில்பட்டி யூனியன் நடுநிலைப்பள்ளி ஆசிரியை சாந்தி:-


எங்கள் பள்ளியில் 2 மற்றும் 3-ம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகிறேன். அதிலும் ஆங்கில வழிக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. கருத்தாளர்கள் எங்களுக்கு அறிவுறுத்தியதின் அடிப்படையில் பள்ளி குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறோம். நல்ல முன்னேற்றம் தெரிகிறது. தர நிலைகள் மூலம் மாணவர்களை கணித்து அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கிறோம். தற்போது 2-ம் நிலை தேர்வு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 3-ம் நிலை பயிற்சி அளிக்கப்படும்.


சுலபமான முறை


ராஜபாளையத்தை சேர்ந்த மாணவியின் தாயார் சைலஜா:- எண்ணும், எழுத்தும் திட்டத்தின் மூலம் குழந்தைகள் மிகவும் திறமையாக செயல்படுகின்றனர். படிக்கும் போது மிகவும் ஆர்வமாக படிக்கின்றனர். எழுத்துக்கள் தெரியாத குழந்தைகளுக்கு சிறப்பு திட்டமாக படங்களாகவும், ஓவியங்களாகவும், பாடல்களாகவும் மிக சுலபமான முறையில் எடுத்துக் கூறி பாடம் நடத்துகிறார்கள்.


எளிய முறையில் சிறந்த எழுத்து பயிற்சி அளிக்கின்றனர். அனைத்து பாடங்களையும் இந்த எண்ணும், எழுத்தும் பயிற்சி மூலம் குழந்தைகளுக்கு மிக எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.


வரப்பிரசாதம்


வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை நளினா:-


எண்ணும், எழுத்தும் திட்டம் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இசை, நடனம் மூலமாக எழுத்துக்களை கற்பித்துக் கொடுக்கும் போது அவர்களுக்கு அந்த எழுத்து எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை உருவாகிறது, மேலும் படத்தை வைத்து மாணவர்களுக்கு கதையாக சொல்லிக் கொடுக்கும் பொழுது அந்த படத்தில் உள்ள எழுத்துக்களை மாணவர்கள் தாங்களாகவே கூறி எழுத்துக்களை கற்றுக் கொள்கின்றனர். விளையாட்டின் மூலமாக எழுத்துக்களை மீண்டும் அவர்களுக்கு நினைவூட்டப்படும் பொழுது ஞாபக சக்தி வளர்கிறது.


மண்குண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை மல்லிகா:-


மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு மற்றும் பாட்டு, நடனத்துடன் சொல்லி கொடுப்பதால் எளிய முறையில் புரிகிறது. இதனால் படிப்பில் சோர்வு ஏற்படாமல் படிக்கின்றனர். பாட்டு மற்றும் நடனத்துக்காக துணைக்கருவிகள் தயார் செய்து பாடம் நடத்தப்படுகிறது.


இவ்வாறு அவர்கள் கூறினர்.



அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000 ஊதியத்தில் தமிழாசிரியர் பணி - விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 20 (Tamil Teacher Job in Anna University at Rs.25,000 per month - Last date to apply: December 20)...

 அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000 ஊதியத்தில் தமிழாசிரியர் பணி - விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 20 (Tamil Teacher Job in Anna University at Rs.25,000 per month - Last date to apply: December 20)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய (14-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

டிசம்பர் 14, 2022



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். இழந்த பொருட்களை மீட்பதற்கான எதிர்பாராத உதவி கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அஸ்வினி : கலகலப்பான நாள்.


பரணி : ஆர்வம் அதிகரிக்கும்.


கிருத்திகை : இழுபறிகள் குறையும்.

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 14, 2022



வீண் சந்தேகங்களை குறைத்து கொள்ளவும். ஒரே நேரத்தில் பல பணிகளை மேற்கொள்வீர்கள். அவ்வப்போது ஞாபக மறதி உண்டாகும். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : சந்தேகங்களை தவிர்க்கவும்.


ரோகிணி : புத்துணர்ச்சியான நாள்.


மிருகசீரிஷம் : இழுபறிகள் அகலும்.

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 14, 2022



செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் அடைவீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகள் விலகும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவி சாதகமாக அமையும். தன்னம்பிக்கையான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மிருகசீரிஷம் : வேகம் அதிகரிக்கும்.


திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.


புனர்பூசம் : உதவி சாதகமாகும்.

---------------------------------------



கடகம்

டிசம்பர் 14, 2022



வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பால் ஆதாயம் ஏற்படும். உறவினர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் அமையும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுகமான இன்னல்கள் நீங்கும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விவாதம் ஏற்பட்டு நீங்கும். உற்சாகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




புனர்பூசம் : ஆதாயம் ஏற்படும்.


பூசம் : லாபகரமான நாள்.


ஆயில்யம் : விவாதம் நீங்கும்.  

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 14, 2022



உத்தியோக பணிகளால் உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை மேம்பட்டாலும் பணிவுடன் செயல்படவும். புதிய பொருட்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் கவனம் வேண்டும். தகவல் தொடர்பு பொருட்களால் விரயம் உண்டாகும். சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 




மகம் : சோர்வு ஏற்படும்.


பூரம் : எண்ணங்கள் ஈடேறும். 


உத்திரம் : விரயம் உண்டாகும்.

---------------------------------------



கன்னி

டிசம்பர் 14, 2022



வியாபாரத்தில் தள்ளிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். கனிவான பேச்சுக்களின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




உத்திரம் : இழுபறிகள் அகலும்.


அஸ்தம் : கவனம் வேண்டும்.


சித்திரை : தனவரவு கிடைக்கும்.

---------------------------------------



துலாம்

டிசம்பர் 14, 2022



சிந்தனையின் போக்கில் மாற்றமும், உத்வேகமும் உண்டாகும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். உறுதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




சித்திரை : உத்வேகமான நாள். 


சுவாதி : செல்வாக்கு மேம்படும்.


விசாகம் : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 14, 2022



செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். தனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




விசாகம் : சோர்வு குறையும்.


அனுஷம் : அனுகூலமான நாள்.


கேட்டை : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------



தனுசு

டிசம்பர் 14, 2022



உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் தடைபட்ட தனவரவு வசூலாகும். சமூக பணிகளில் உழைப்பிற்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான தெளிவு உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மூலம் : பொறுமையுடன் செயல்படவும்.


பூராடம் : தனவரவு வசூலாகும். 


உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------



மகரம்

டிசம்பர் 14, 2022



மனதில் அமைதியற்ற சூழல் ஏற்படும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். முக்கியமான சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்தவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மந்தத்தன்மை ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : காலதாமதம் உண்டாகும். 


திருவோணம் : நிதானத்துடன் செயல்படவும். 


அவிட்டம் : மந்தத்தன்மை ஏற்படும்.

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 14, 2022



உத்தியோக பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி பணிகளில் புத்துணர்ச்சியான சூழல் அமையும். விருந்தினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


சதயம் : மகிழ்ச்சியான நாள்.


பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும். 

---------------------------------------



மீனம்

டிசம்பர் 14, 2022



வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தடைபட்ட செயல்பாடுகள் கைகூடும். நெருக்கமானவர்களின் மூலம் உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபார பணிகளில் புதிய முயற்சிகளின் மூலம் அனுபவம் கிடைக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும். 


உத்திரட்டாதி : அனுபவம் கிடைக்கும். 


ரேவதி : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.12.2022 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.12.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: விருந்தோம்பல்


குறள் : 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.


பொருள்:

விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தக் கூடியவனாக இருப்பான்.


பழமொழி :

When all men speak, no man hears.

அனைவரும் பேசினால், கேட்பது யார்?


இரண்டொழுக்க பண்புகள் :


1. "எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பவன், முழு முட்டாள். எனவே முட்டாள் ஆக இருக்க மாட்டேன்.


 2. எனக்கு ஒன்றும் தெரியாது என்பவன்,கற்றுக் கொண்டே இருப்பான். எனவே அமைதியாக இருந்து என் வாழ்வு மேம்பட இன்னும் கற்றுக் கொள்வேன்"


பொன்மொழி :


"பிரச்சனையை நாம் பார்க்கும் விதமே பிரச்சனையாகும். --ஸ்டீபன் கோவி"


பொது அறிவு :


1.கஜிரங்கா விலங்குகள் சரணாலயம் எங்கு உள்ளது?


 அஸ்ஸாம். 


 2. கண்தானத்திற்கான வங்கி எப்போது தொடங்கப்பட்டது ?


 1944 ல்.


English words & meanings :


daze -stunned, making others feel like stunned. noun and verb.பிரமிக்க வைத்தல். பெயர்ச் சொல் ஆகவும் வினைச் சொல் ஆகவும் இருக்கும். days - plural of day. நாட்கள். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


வேர்க்கடலையில் அமினோ - அமிலங்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக வேர்க்கடலையில் உள்ள டிரைபோட்டஃபன் என்னும் ரசாயனத்தை மூளையில் உற்பத்தி செய்ய உதவி, மனஅழுத்தம், மனச் சோர்வு ஆகியவற்றைக் குறைக்கச் செய்கிறது.


தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை சாப்பிடுவதன் மூலம் மனநிலை மேம்படும்.


NMMS Q


TROPHY' என்பது 'SPORTS' எனில் 'DEGREE' என்பது ___________. 


 விடை: EDUCATION.

 

நீதிக்கதை


சாகாத வரம்


வையாபுரி பட்டினம் என்ற நகரத்தில் முத்து வியாபாரி மாணிக்கம் என்பவர் வாழ்ந்து வந்தார். மாணிக்கத்தின் வீடு அரண்மனையைப் போல் இருக்கும். 


மாணிக்கத்திற்கு முத்து, ரத்தினம், வைரம் என்று மூன்று மகன்கள். இவர்களில் பெரியவன் முத்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து வந்தான். அவன் தம்பி ரத்தினமும், வைரமும் உள்ள்ளூர் வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டனர். 


மாணிக்கத்திற்கு ஒரு நாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் இறந்து விடுவோம் என்று நினைத்து, சொத்துக்கள் அனைத்தையும் உள்ளூரில் இருக்கும் தனது மகன்களிடம் ஒப்படைத்தார். பிறகு அவர் இறந்துவிட்டார். 


ரத்தினமும், வைரமும் அப்பாவின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக்கொண்டு அண்ணன் முத்துவை கொல்ல நினைத்தனர். ஒரு நாள் முத்து வெளிநாட்டிலிருந்து வந்தான். அவனிடம் சொத்துக்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். 


முத்து சரி என்றான். ஆனால் அன்று இரவே முத்துத் தூங்கும் போது தம்பிகள் அவனை அடித்து ஒரு குளத்தில் வீசி எறிந்தனர். அடுத்த நாள் அந்த குளக்கரையில் இருந்த கோவிலின் எதிரில் படுத்துகிடந்த முத்து தனக்கு முன்னால் கடவுள் தோன்றியிருப்பதைக் கண்டு வணங்கினான். 


என்ன நடந்தது? என்றார் கடவுள். நடந்ததைச் சொன்னான் முத்து. இனி உனக்கு எந்த ஆபத்தும் வராது. 400 ஆண்டுகள் வரை நீ வாழ்வாங்கு வாழ்வாய் என்று வரமளித்தார் கடவுள். 


முத்து வீட்டிற்கு வந்தான். ரத்தினமும் வைரமும் அதிர்ச்சியடைந்தனர். காலையில் உங்களைக் காணாமல் துடித்துப் போனோம். என்ன நடந்தது என்று கேட்டனர். எதையும் மறைத்துப் பேசத் தெரியாத முத்து 400 ஆண்டுகள் சாகாமல் வாழ பெற்ற வரத்தைப் பற்றி கூறினான். 


தாங்களும் இதே போல் அதிக ஆண்டு வாழவேண்டும் என்று திட்டமிட்டு ரத்தினமும், வைரமும் தங்கள் இருவரையும் அடித்து அந்த குளத்தில் வீசி எறியும்படி ஏற்பாடு செய்தனர். 


அடுத்த நாள் அவர்கள் இருவரும் கோவிலின் எதிரில் தூங்கியபடி கிடந்தனர். தூங்கி எழுந்தபோது, அவர்கள் எதிரில் கடவுள் தோன்றினார். உங்களுக்கு என்ன நடந்தது? என்றார் கடவுள். தங்களை விரோதிகள் அடித்துப்போட்டதாக கூறினர். 


கடவுளே நான் 1000 ஆண்டு சாகாமல் வாழவேண்டும் என்றான் ரத்தினம். நான் 2000 ஆண்டு சாகாமல் வாழ வேண்டும் என்றான் வைரம். ரத்தினம் 3000 ஆண்டு என்றான். வைரம் 4000 ஆண்டு என்றான். இப்படி ஆண்டுகளை ஏற்றிக்கொண்டே போனார்கள். 


கடவுள் பார்த்து நான் சொல்வது போல் செய்தால் உங்கள் திறமைக்குத் தகுந்தவாறு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சாகாமல் வாழலாம் என்றார் கடவுள். சொல்லுங்கள் என்ன செய்ய வேண்டும் என்றனர் இருவரும். 


கோயிலில் எதிரில் இருக்கு இந்த குளத்தில் நீங்கள் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் 100 ஆண்டுகள் சாகாமல் வாழும் வரம் கிடைக்கும் என்று கடவுள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் குளத்தில் குதித்தனர். 


இருவரும் ஒருவரை ஒருவர் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று போட்டிப் போட்டுக்கொண்டு நீரில் மூழ்கி இருந்தனர். கடவுள் இவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அச்சமையம் ரத்தினமும், வைரமும் பிணமாக நீரில் மிதந்தனர். 


நீதி :

பேராசை உள்ளவர்கள் பெரும் நஷ்டத்தை அடைவார்கள்.


இன்றைய செய்திகள்


14.12.22


* மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 21,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


* நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய காலவரம்பு இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு.


* எலி மருந்துக்கு நிரந்தர தடை; 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை: தமிழக அரசு உத்தரவு.


* டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய அளவிலான நதிநீர் இணைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார்.


* அனைவருக்கும் வீடு திட்டம்: தமிழகத்திற்கு இதுவரை ரூ.11,260 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு தகவல்.


* கருடா கமாண்டோ படையில் பெண் அதிகாரிகளை சேர்க்க இந்திய விமானப் படை முடிவு.


* இந்திய - சீன எல்லையில் தற்போது நிலைமை சீராக இருப்பதாக சீனா தெரிவித்திருக்கிறது.


Today's Headlines


* The release of water from Mettur dam for delta irrigation has been increased to 21,000 cubic feet per second.


*  No time limit for registration of court judgments in sub-registrar's offices: High Court orders.


 * Permanent Ban on Rat Medicine;  60 days ban on 6 pesticides: Tamil Nadu government order.


 * Minister Duraimurugan participated on behalf of Tamil Nadu in the national level consultation meeting on river connectivity held in Delhi yesterday.


* Housing for all scheme: Rs 11,260 crore allocated to Tamil Nadu so far: Central Govt.


 * Indian Air Force decides to induct women officers into Garuda Commando Force.


 * China has said that the situation on the India-China border is now stable.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய சிறுகதை - நிதானம் பிரதானம் (Today's short story - Temperance is key)...


இன்றைய சிறுகதை - நிதானம் பிரதானம் (Today's short story - Temperance is key)...


ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்ற னர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர். 


வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.


அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான்.அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.


 அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.


 மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். 


அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்

போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.


 அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.


 அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.


அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.


இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.பலராமர் காவல் இருந்தார்.


அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்.


அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. 


பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.


மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.


 அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். 


உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.


கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். 


கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது.


கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.


 ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.

பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். 


இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர்.


 அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். 


நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. 


நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது. 


வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.


 கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



TNSED Schools App -Ennum Ezhuthum Module Added - Updated on 12-12-2022 - Version: Now 0.0.49 - Link...

   



TNSED schools App...


What's is new..?


🎯🎯Ennum Ezhuthum Module Added...


UPDATED ON 12-December- 2022


Version: Now 0.0.49


LINK.
👇👇👇👇👇👇👇👇👇👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...