கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App -OOSC , ITK Center Support and Ennum Ezhuthum Module Updated - Problem sloved - Updated on 19-12-2022 - Version: Now 0.0.51 - Link...

 


🛑🛑🛑🛑🛑🛑

*_TNSED schools App


*_What's is new..?


*🎯🎯 OOSC , ITK Center Support and Ennum Ezhuthum Module Updated - Problem sloved.


*_UPDATED ON 19 DECEMBER- 2022


*_Version: Now 0.0.51


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இரண்டாம் பருவத் தேர்வு - 4 மற்றும் 5ஆம் வகுப்பு - தமிழ் - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 4th & 5th Standard - Tamil - Answer Key - EMIS Website)...


>>> இரண்டாம் பருவத் தேர்வு - 4ஆம் வகுப்பு - தமிழ் - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 4th Standard - Tamil - Answer Key - EMIS Website)...



>>> இரண்டாம் பருவத் தேர்வு - 5ஆம் வகுப்பு - தமிழ் - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 5th Standard - Tamil - Answer Key - EMIS Website)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



தொடக்கக் கல்வி - நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் / பதவி உயர்வில் வட்டாரக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்ளுக்கு தொகுதிக்கு 80பேர் வீதம் 9 தொகுதிகளாக மதுரை மற்றும் கோவையில் 6நாட்கள் நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி - Azem Premji University மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 6 நாட்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி வழங்குதல் - சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 016548/ கே2/ 2022, 16-12-2022 & பயிற்சி கால அட்டவணை, வட்டாரக் கல்வி அலுவலர்களின் பெயர் பட்டியல் (Elementary Education - 6 days Administrative Responsibilities and Administrative Skill Development Training for those appointed as Block Educational Officers on Transfer / Promotion from the post of Middle School Headmasters in 9 Batch of 80 per Batch in Madurai and Coimbatore - 6 days residential training in association with Azem Premji University and State Council of Educational Research and Training - Regarding - Director of Elementary Education Proceedings No: 016548/ K2/ 2022, 16-12-2022 & Training Schedule & BEOs Name List)...


>>> தொடக்கக் கல்வி - நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் / பதவி உயர்வில் வட்டாரக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்ளுக்கு தொகுதிக்கு 80பேர் வீதம் 9 தொகுதிகளாக மதுரை மற்றும் கோவையில் 6நாட்கள் நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி - Azem Premji University மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 6 நாட்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி வழங்குதல் - சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 016548/ கே2/ 2022, 16-12-2022 & பயிற்சி கால அட்டவணை, வட்டாரக் கல்வி அலுவலர்களின் பெயர் பட்டியல் (Elementary Education - 6 days Administrative Responsibilities and Administrative Skill Development Training for those appointed as Block Educational Officers on Transfer / Promotion from the post of Middle School Headmasters in 9 Batch of 80 per Batch in Madurai and Coimbatore - 6 days residential training in association with Azem Premji University and State Council of Educational Research and Training - Regarding - Director of Elementary Education Proceedings No: 016548/ K2/ 2022, 16-12-2022 & Training Schedule & BEOs Name List)...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.12.2022 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.12.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: விருந்தோம்பல்


குறள் : 90


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.


பொருள்:

அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.


பழமொழி :

Strength grows stronger by being tied.

ஒரு சேரக் கட்டினால் ஒன்பது யானை பலம். 


இரண்டொழுக்க பண்புகள் :


1."யாருக்கும் தீங்கு செய்யாது, எல்லோரின் நலன் குறித்தும் சிந்தித்தலே உண்மையான மனித தன்மையின் வெளிப்பாடு.


 2. நான் எப்போதும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயல்வேன் "


பொன்மொழி :


பிரச்சினைகள் இல்லாவிட்டால், நம்மில் பெரும்பாலானோர் வேலையற்றவர்களாக இருப்போம். --ஜிக் ஜிக்லர்



பொது அறிவு :


1. மிகவும் கனமான மூளை உள்ள விலங்கு எது ? 


 திமிங்கலம். 


 2. பாலில் காணப்படும் சர்க்கரையின் பெயர் என்ன ? 


 லாக்டோஸ்.


English words & meanings :


 eye - sight organ. noun. கண். பெயர்ச் சொல். I - first person. pronoun. நான். பிரதி பெயர்


ஆரோக்ய வாழ்வு :


இனிப்புச் சுவை அதிகம் கொண்ட கொய்யா பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஏ, ஆக்சிஜனேற்றங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. அதேபோல கொய்யாவின் இலைகளிலும் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக இருக்கின்றன. இவை கொலஸ்ட்ராலைக் குறைப்பது முதல் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பது வரை ஏராளமான பயன்களை கொண்டது.


NMMS Q


கொடுக்கப்பட்ட நான்கு வார்த்தைகளில் பொருத்தமற்றதாக அமையும் வார்த்தை:


 a) கன்னியாகுமரி b) கோயம்புத்தூர் c) திருநெல்வேலி d) தூத்துக்குடி.


 விடை : கோயம்புத்தூர் 


 விளக்கம்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கடல் உள்ளது. கோயம்புத்தூரில் கடல் இல்லை. எனவே இது பொருத்தமற்றதாக அமையும்.


நீதிக்கதை


அம்மா சொல் கேள்!


ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். 


புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது. 


வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது. 


ஓநாய் நண்பா!, இங்கே இளசாண புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி. 


சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்! என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புலை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது. 


உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது. 


நீதி :

அனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.


இன்றைய செய்திகள்


19.12.22


* பள்ளி மாணவர்களுக்காக 'நம்ம ஸ்கூல்'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.


* கோவையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் டிசம்பர் 

17 ல் கலைத் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் வட்டாரம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாற்று திறனாளி மாணவன் நடனம் அனைவரின் பாராட்டும் பெற்றது.


* மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.


* மும்பை: ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல்,இந்திய

கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்த கப்பலை,பாதுகாப்பு அமைச்சர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்!.. இந்த கப்பலில் பயன்படுத்தப்பட்டு உள்ள 75 சதவீத உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை


* சட்டோகிராமில் நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிாிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடாில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

   

  *புரோ கபடி 9வது லீக் இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர்- அணி வெற்றி பெற்றது.


*   உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி அபார வெற்றி பெற்றது. இது இவர்கள் பெறும் 3- வது உலகக்கோப்பை ஆகும். அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி சாம்பியன் பட்டம் பெற்றார். 


Today's Headlines


* Chief Minister M. K. Stalin will inaugurate 'Namma School' for school students today.


*  December on behalf of School Education Department in Coimbatore

 An art festival was held on 17  In this event, the dance of a differently-abled student studying in class 7 in Pudur Panchayat Union Middle School of Thondamuthur district won the appreciation of all.


* The facility of booking tickets through WhatsApp from home to travel in metro trains will soon be introduced.


 * Mumbai: Warship INS Marmagova, India

 Joined the Navy.  The Defense Minister dedicated this ship to the country!.. 75 percent of the equipment used in this ship is locally manufactured.


* India won the first Test cricket match against Bangladesh in Chattogram.  India have taken a 1-0 lead in the 2-match Test series.

   

 * Jaipur- team won the Pro Kabaddi 9th League final.


* Argentina won the FIFA World Cup in penalty shots.It was their 3rd FIFA title. Messi became the world Champion. 

 

இன்றைய (19-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

இன்றைய (19-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

டிசம்பர் 19, 2022



குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். தற்பெருமை பேசுவதை குறைத்து கொள்வது நல்லது. நண்பர்களின் வருகையால் புதிய அனுபவம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். காணாமல் போன சில பொருட்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கை துணைவரிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழப்பம் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : புரிதல் மேம்படும். 


பரணி : அனுபவம் உண்டாகும். 


கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும். 

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 19, 2022



எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இழுபறியான வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். எதிர்பாலின மக்களின் ஆதரவின் மூலம் ஆதாயம் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




கிருத்திகை : மாற்றமான நாள்.


ரோகிணி : ஒற்றுமை அதிகரிக்கும். 


மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 19, 2022



உயர்கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். போட்டி நிமிர்த்தமான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை குறைத்து கொள்ளவும். சமூகம் தொடர்பான பணிகளில் அலைச்சலும், ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




மிருகசீரிஷம் : தேடல் உண்டாகும்.


திருவாதிரை : பொறுமையுடன் செயல்படவும்.


புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------



கடகம்

டிசம்பர் 19, 2022



வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் உள்ள இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு புதிய கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூசம் : தெளிவு ஏற்படும்.


ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 19, 2022



மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உங்களின் மீதான வதந்திகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் மறைமுக ஆதரவு கிடைக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மகம் : தெளிவு பிறக்கும்.


பூரம் : வாய்ப்புகள் ஏற்படும்.


உத்திரம் : ஆர்வம் மேம்படும்.

---------------------------------------



கன்னி

டிசம்பர் 19, 2022



அரசு தொடர்பான பயணங்கள் கைகூடும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : முன்னேற்றமான நாள்.


அஸ்தம் : உதவி கிடைக்கும்.


சித்திரை : மேன்மையான நாள்.

---------------------------------------



துலாம்

டிசம்பர் 19, 2022



சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் பேச்சுக்களில் தடுமாற்றம் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பயணங்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




சித்திரை : அறிமுகம் கிடைக்கும். 


சுவாதி : இலக்குகள் பிறக்கும். 


விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 19, 2022



போட்டி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். அறம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதுமையான சூழல் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : சிந்தித்து செயல்படவும்.


அனுஷம் : அனுசரித்து செல்லவும்.


கேட்டை : புதுமையான நாள்.

---------------------------------------



தனுசு

டிசம்பர் 19, 2022



உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகளின் மூலம் உயர்வு உண்டாகும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வத்தால் விரயங்கள் உண்டாகும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குருமார்களின் ஆசிர்வாதம் மனதில் தெளிவினை ஏற்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்




மூலம் : உயர்வு உண்டாகும்.


பூராடம் : கவனம் வேண்டும்.


உத்திராடம் : தெளிவு ஏற்படும்.

---------------------------------------



மகரம்

டிசம்பர் 19, 2022



சமூக பணிகளில் ஆதரவு மேம்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மாற்றம் ஏற்படும். மருத்துவம் தொடர்பான சிகிச்சைகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.


திருவோணம் : அனுகூலமான நாள்.


அவிட்டம் : இன்னல்கள் குறையும். 

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 19, 2022



திறமைகளை வெளிப்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபார பணிகளில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். தந்தைவழி சொத்துக்கள் கிடைப்பதில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சதயம் : தன்னம்பிக்கை மேம்படும்.


பூரட்டாதி : காலதாமதம் நீங்கும்.

---------------------------------------



மீனம்

டிசம்பர் 19, 2022



மற்றவர்கள் கூறும் கருத்துக்களை பொறுமையுடன் கேட்டு முடிவெடுப்பது நல்லது. பொன், பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வெளியில் உணவு உண்பதை குறைத்து கொள்ளவும். அதிகார பொறுப்பில் இருப்பவர்கள் பேசும் பொழுது கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




பூரட்டாதி : பொறுமை வேண்டும்.


உத்திரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும். 


ரேவதி : கவனம் வேண்டும்.

---------------------------------------


முக்கிய கணிதக் கருத்துகள் தொகுப்பு (Key Mathematical Concepts Collection)...



>>> முக்கிய கணிதக் கருத்துகள் தொகுப்பு (Key Mathematical Concepts Collection)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



2021ஆம் ஆண்டிற்கான "தமிழ்ச் செம்மல்" விருது - 38 நபர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவிப்பு ("Tamil Chemmal" Award 2021 - Tamil Nadu Government Announced for 38 Persons)...



>>> 2021ஆம் ஆண்டிற்கான "தமிழ்ச் செம்மல்" - விருது - முனைவர் கடவூர் மணிமாறன் உட்பட 38 நபர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவிப்பு...


2021ஆம் ஆண்டிற்கான "தமிழ்ச் செம்மல்" - விருது முனைவர் கடவூர் மணிமாறனுக்கு  தமிழ்நாடு அரசு வழங்கி கௌரவப்படுத்த இருக்கிறது.


வரும் டிசம்பர் 21ம் தேதி மாண்புமிகு  தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தமிழ்ச் செம்மல் விருதினை வழங்க உள்ளார்.


குளித்தலை தமிழ்ப்பேரவைத் தலைவரும், ஆகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், பன்னூல் படைப்பாளருமான முனைவர் கடவூர் மணிமாறன் அவர்கள் பல ஆயிரக்கணக்கான  மாணவர்களையும், ஆசிரியர்களையும் செதுக்கியும், புதுக்கியும் நல்லதோர் தமிழ்சிந்தனையை(பற்றை) அவர்களிடத்தே விதைத்தும் அரும் தொண்டாற்றியவர். அவர் முதல்வரின் திருக்கரங்களால் தமிழ்ச் செம்மல் விருது  பெறுவது சாலச்சிறந்தது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Hon'ble Finance Minister's announcement regarding implementation of Unified Pension Scheme which has created disappointment and dissatisfaction among Teachers and Government Employees - Hon'ble Chief Minister should issue notification for immediate implementation of old pension scheme - TNTF insists

 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளத்தில் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தல் தொட...