>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
இன்றைய (31-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
இன்றைய (31-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜனவரி 31, 2023
சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கால்நடை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகனத்தில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : இழுபறிகள் குறையும்.
பரணி : முன்னேற்றம் ஏற்படும்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 31, 2023
பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். வியாபார மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில விஷயங்களின் மூலம் மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோக ரீதியான பணிகளில் உழைப்பு அதிகரிக்கும். அதிகார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
ரோகிணி : உழைப்பு அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : ஈடுபாடு ஏற்படும்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 31, 2023
எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபார ரீதியான தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் மாற்றம் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்களும், மன அமைதியின்மையும் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மிருகசீரிஷம் : சேமிப்பு குறையும்.
திருவாதிரை : நெருக்கம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : அமைதியின்மையான நாள்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 31, 2023
முதலீடு தொடர்பான விஷயங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். குத்தகை தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும்.
பூசம் : ஆதாயம் உண்டாகும்.
ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 31, 2023
தொழில் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். முன்யோசனையுடன் செயல்பட்டு சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்களும், விரயமும் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மகம் : அனுபவம் ஏற்படும்.
பூரம் : வாய்ப்பு கிடைக்கும்.
உத்திரம் : விரயம் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 31, 2023
வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். வேளாண்மை தொடர்பான விஷயங்களில் மேன்மையான சூழல் நிலவும். கௌரவப் பொறுப்புகளின் மூலம் பலதரப்பட்ட மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தெளிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
அஸ்தம் : தேடல் உண்டாகும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 31, 2023
பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வியாபாரம் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். செயல்பாடுகளில் திருப்தியற்ற மனநிலையினால் குழப்பம் உண்டாகும். மருந்து சார்ந்த விஷயங்களில் ஆலோசனை பெறவும். உலக நடைமுறைகளின் மூலம் மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
சுவாதி : குழப்பமான நாள்.
விசாகம் : மாற்றங்கள் ஏற்படும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 31, 2023
வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். மனதில் புதிய துறை சார்ந்த தேடல் மேம்படும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தவறிய சில பொருட்களை பற்றிய விவரங்களைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். வெளிப்படையான குணத்தின் மூலம் பலருடைய அறிமுகம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : தேடல் மேம்படும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 31, 2023
உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். நம்பிக்கையானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். மருத்துவத் துறைகளில் திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : மேன்மையான நாள்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : அறிவு வெளிப்படும்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 31, 2023
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபிட்சம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை
உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.
திருவோணம் : எண்ணங்கள் கைகூடும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 31, 2023
மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்பும், அலைச்சலும் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
சதயம் : லாபம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
---------------------------------------
மீனம்
ஜனவரி 31, 2023
பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான முடிவு உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கற்பனை சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : ஆர்வமின்மை குறையும்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: நடுவுநிலைமை
குறள் : 114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
பொருள்:
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்
பழமொழி :
Failures are stepping stones to success.
தோல்வியே வெற்றிக்கு முதல் படி.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம்.
2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.
பொன்மொழி :
உணர்ச்சியுள்ள மனிதன் பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவு செய்கிறான். ஆனால், அறிவுள்ள மனிதனோ தன்னைத் திருத்திக் கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான்.
பொது அறிவு :
1. புனுகு என்னும் நறுமணம் எந்த விலங்கில் இருந்து எடுக்கப்படுகிறது ?
புனுகுப் பூனை.
2. சங்கின் இரண்டு வகை தெரியுமா?
வலம்புரி , இடம்புரி.
English words & meanings :
weather - climate. noun. வானிலை. பெயர்ச் சொல். whether - if. expressing a doubt . conjunction. இரண்டில் ஒன்று. இணைப்புச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
சின்ன வெங்காயத்தில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து நம் செல்களை பாதுகாக்கிறது. உடலில் ஏற்படும் அழற்சி க்கு எதிராக செயல்படுகிறது.
இதில் குவர்செடின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது. இதனால் இதய நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது.
NMMS Q
பாக்டீரியாவில் புரதச்சேர்க்கை கீழ்கண்ட எந்த வகை ரிபோசோம்களால் நடைபெறும்?
a) 70s. b) 80s. c) 90s. d) 85s.
விடை: 70s
நீதிக்கதை
ஓநாயும் ஆடும்
ஒரு காட்டில் ஒரு ஓநாயும். ஒரு வெள்ளாடும் இருந்தது. கொழுத்த அந்த ஆட்டின் மீது ஓநாய்க்கு எப்போதும் ஒரு கண். அதை அடித்து சாப்பிடவேண்டும் என்று. அதற்காக பலமுறை ஓநாய் அந்த ஆட்டை சண்டைக்கு இழுத்தது. ஓநாயின் குணம் அறிந்த ஆடு ஓநாயிடம் இருந்து தன் புத்திசாலித்தனத்தால் தப்பிவந்தது.
ஒரு சமயம் ஒரு நதியின் நடுவில் குறுகலான ஒரு பாலத்தில் ஆடு சென்றது. அப்பாலம் ஒரு நபர் சென்றால் ஒருவர் எதிரே வர முடியாத அளவு குறுகலானது. பாலத்தில் ஆடு வருவதைக்கண்டு, பெரும்பகுதியை ஆடு கடந்ததும், ஓநாய் அந்த முனையிலிருந்து ஆட்டை நோக்கி வந்தது. இப்போது ஆடும், ஓநாயும் எதிரெதிரே வந்துவிட்டன.
ஆடு ஓநாயிடம் நான் கிட்டத்தட்ட பாலத்தைக் கடந்துவிட்டேன். சற்று நீங்கள் பின் சென்று எனக்கு இடம் கொடுத்தால் நான் சென்றுவிடுவேன் என்றது. இதுதான் சரியான தருணம் என எண்ணி ஓநாய் ஆட்டை வீண் சண்டைக்கு இழுத்தது. நான் முட்டாள்களுக்கு இடம் தர மாட்டேன். நீயே எனக்கு இடம் கொடுத்துப் பின்னால் போ என்றது.
ஓநாயின் நோக்கம் அறிந்த ஆடு, நான் முட்டாள்களுக்கு முதல் இடம் தருவேன் என தான் பின்னால் சென்று ஓநாய் பாலத்தை கடக்கச் செய்தது. ஓநாயும் தன் செயல் இம்முறையும் பலிக்கவில்லையே என சென்றுவிட்டது.
ஆடு தன் புத்திசாலித்தனத்தால் ஓநாயை முட்டாள் என மறைமுகமாக சொன்னதுடன், கெட்டவர்களுடன் வீண்வாதம் கூடாது என்று உணர்ந்ததால் உயிர் பிழைத்தது.
இன்றைய செய்திகள்
31.01.2023
* ஜி20 கல்வி செயற்குழு மாநாடு: சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை.
* இணையதளம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும்போது போலி ரசீது வழங்கப்படுவதைத் தடுக்கஒரே மாதிரியான ரசீது வழங்கும் முறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
* வானிலை முன்னறிவிப்பு: பிப்ரவரி 1-ல் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
* பனிப்பொழிவு காரணமாக சுவிட்சர்லாந்து போல் காட்சியளிக்கும் அருணாச்சலப் பிரதேசம்.
* சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையில் 135 கி.மீ.தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.
* ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
* உலக கோப்பை ஹாக்கி போட்டி: பெல்ஜியத்தை வீழ்த்தி 3-வது முறையாக ஜெர்மனி அணி கோப்பையை வென்றது.
Today's Headlines
* Due to G20 Executive committee Conference , Drones were banned for 3 days in Chennai
* The Electricity Board has introduced a uniform receipt system to prevent fake receipts from being issued while paying electricity bill online.
* Weather forecast: Heavy rain likely in 11 districts of Tamil Nadu on February 1.
* Arunachal Pradesh looks like Switzerland due to snowfall.
* To overcome the threat of China, construction of a New High Way of length 135 Km has been started in the Ladakh border
* A prize money of Rs 5 crore has been announced for the Indian women's team who won the title of champion in the Junior 20 Over Cricket World Cup.
* Hockey World Cup: Germany win the World Cup for the 3Rd time after defeating Belgium.
தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட இ.ஆ.ப. அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை (G.O.Rt.No.344, Dated: 30-01-2023 ) வெளியீடு...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.
தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு
நெல்லை ஆட்சியராக கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக ரவிச்சந்திரன், கன்னியாகுமரி ஆட்சியராக ஸ்ரீதர் நியமனம் - தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில்
*திருநெல்வேலி - *கார்த்திகேயன்*
*தென்காசி- *ரவிச்சந்திரன்*
*குமரி-ஸ்ரீதர்*
*விருதுநகர்-ஜெயசீலன்*
*கிருஷ்ணகிரி- தீபக் ஜேக்கப்*
*விழுப்புரம்-பழனி*
*பெரம்பலுார்-கற்பகம்*
*தேனி-சஜ்ஜீவனா*
*கோவை-கிராந்திகுமார்*
*திருவாரூர்-சாருஸ்ரீ*
*மயிலாடுதுறை- மகாபாரதி*
*ஆகிய 11 மாவட்ட ஆட்சியர்கள் பணியிடமாற்றம் மூலம் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.*
*மேலும் தொழிலாளர் நலத்துறை திறன் மேம்பாட்டுத்துறை மேலாளராக ஆகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.*
*ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக வேங்கடப்ரியா நியமிக்கப்பட்டுள்ளார்.*
*விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலராக மேகநாத ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.*
*இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.*
*கோவை வணிகவரித்துறை இணை ஆணையராக காயத்ரி கிருஷ்ணன்,*
*தொழில்நுட்ப கல்வி இயக்குனராக லலிதா,*
*பள்ளி கல்வித்துறை சிறப்பு செயலராக ஜெயந்தி,*
*சாலை மேம்பாட்டுத்திட்ட இயக்குனராக கதிரவன்,*
*கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக லெட்சுமி,*
*தொழில்த்துறை, முதலீடு மற்றும் வணிகத்துறை சிறப்பு செயலராக பூஜா குல்கர்னி,*
*திட்ட மேம்பாட்டுத்துறை சிறப்பு செயலராக ராஜசேகர்,*
*வருவாய் நிர்வாக இணை ஆணையராக சிவராசு,*
*ஊரக மேம்பாடு, மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையராக சகாய் மீனா,*
*ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல செயலராக லட்சுமிப்ரியா,*
*தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் துறை செயலராக குமரகுருபரன்,*
*நீர்பாசனம், விவசாயம் நவீனபடுத்துதல் திட்ட கூடுதல் செயலராக ஜவஹர்,*
*நில நிர்வாக ஆணையராக சுப்புலெட்சுமி,*
*ஊரக மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனராக பிரசாந்த்,*
*தகவல் மற்றும் பொதுமக்கள் தொடர்பு இயக்குனராக மோகன்,*
*தொழில்த்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி இயக்குனராக விஷ்ணு*
*உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.*
பள்ளிக் கல்வித் துறை சிறப்புச் செயலாளராக திருமதி.ச.ஜெயந்தி இ.ஆ.ப. & ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக திருமதி. P.ஸ்ரீ வெங்கடபிரியா இ.ஆ.ப. ஆகியோர் நியமனம் (Mrs. S.Jayanthi I.A.S. Appointed as Special Secretary, School Education Department & Mrs.P.Sree Venkatapriya I.A.S. as Controller of Examination of Teachers'Recruitment Board )...
பள்ளிக் கல்வித் துறை சிறப்புச் செயலாளராக திருமதி.ச.ஜெயந்தி இ.ஆ.ப. & ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக திருமதி. P.ஸ்ரீ வெங்கடபிரியா இ.ஆ.ப. ஆகியோர் நியமனம் (Mrs. S.Jayanthi I.A.S. Appointed as Special Secretary, School Education Department & Mrs.P.Sree Venkatapriya I.A.S. as Controller of Examination of Teachers'Recruitment Board )...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சனைக்கு இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் (Salary issue of Government Aided Schools Teachers will be resolved in two days - Minister Anbil Mahesh Poyyamozhi said)...
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சனைக்கு இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் (Salary issue of Government Aided Schools Teachers will be resolved in two days - Minister Anbil Mahesh Poyyamozhi said)...
2022-ஆம் ஆண்டு கல்வி நிலை குறித்த ‘ஏசா் (ASER)’ ஆய்வறிக்கை (Annual Status of Education Report (Rural) 2022 )...
(தமிழ்நாடு குறித்த அறிக்கை பக்க எண்: 217-222)
தினமணி தலையங்கம்...
தேசிய அளவில் 2005-ஆம் ஆண்டு முதல் கல்வி நிலை குறித்த ‘ஏசா்’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. 3 முதல் 16 வரையிலான குழந்தைகளின் பள்ளிச் சோ்க்கை, படிக்கும் திறன், கணிதத் திறன் உள்ளிட்டவை மாவட்ட, மாநில, தேசிய அளவில் இந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்படுகிறது. தொடா்ந்து பல மாதங்கள் மூடிக்கிடந்த பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பாதிப்பின் அளவைக் கணிக்கும் இந்த முதலாவது ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.
சமீபத்தில் 2022-ஆம் ஆண்டுக்கான கல்வி நிலை குறித்த ‘ஏசா்’ அறிக்கை வெளிவந்திருக்கிறது. கொள்ளை நோய்த்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகள் தடைபட்டிருந்த அந்த அறிக்கை, பல புதிய வெளிச்சங்களைத் தருகிறது. கற்கும் திறனில் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்த அறிக்கை பதிவு செய்கிறது. இந்தியாவிலுள்ள 616 மாவட்டங்களில் உள்ள 19,000 கிராமங்களில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களை ஆய்வு செய்து, கிராமப்புற கல்வி நிலை குறித்து 2022 ‘ஏசா்’ அறிக்கை பதிவு செய்திருக்கிறது. 2018-க்கும் 2022-க்கும் இடையிலான நான்கு ஆண்டுகளில் பரவலாக அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்திருக்கிறது. படிக்கும் திறனும், கணிதத் திறனும் பெரும்பாலான மாநிலங்களில் குறைந்திருக்கிறது.
மிஸோரம், ஜம்மு - காஷ்மீா் மாநிலங்களைத் தவிர, ஏனைய அனைத்து மாநிலங்களிலும் 6 முதல் 14 வரையிலான குழந்தைகளின் கிராமப்புற அரசுப் பள்ளி சோ்க்கை அதிகரித்திருக்கிறது. 2018 போலவே மிக அதிகமான அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கையில் மேற்கு வங்கம் முதலிடம் வகிக்கிறது. 2018-இல் ஏழு மாநிலங்களில் மாணவா் சோ்க்கை 50 %-க்கும் குறைவாக இருந்தது. 2022-இல் மேகாலயம், மணிப்பூா் இரண்டு மாநிலங்களில் மட்டுமே அந்த நிலைமை. கேரளத்திலும், உத்தர பிரதேசத்திலும் மாணவா் சோ்க்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றன. தேசிய அளவில் 65.6 % (2018) இருந்த மாணவா் சோ்க்கை, 2022-இல் 72.9 %-ஆக அதிகரித்திருக்கிறது.
2018 வரை தொடா்ந்து அதிகரித்து வந்த தனியாா் பள்ளிகள் மீதான மோகம் திடீரெனக் குறைந்திருப்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 2018-இல் 30.9 %-ஆக இருந்த கிராமப்புற தனியாா் பள்ளிகளுக்கான வரவேற்பு, 2022-இல் 25.1 %-ஆகக் குறைந்திருக்கிறது. மிஸோரம், ஜம்மு - காஷ்மீா், மத்திய பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூா் மாநிலங்களில் தொடா்ந்து தனியாா் பள்ளிகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதையும் குறிப்பிடுகிறது 2022 ‘ஏசா்’ அறிக்கை.
2014 முதல் 2018 வரை கற்கும் திறன் அதிகரித்து வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று ஒரு வீழ்ச்சி தெரிகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்தாலும்கூட, 3, 5, 8 வகுப்புகளில் படிக்கும் மாணவா்களின் வாசிக்கும் திறனும், கணிதத் திறனும் பரவலாகவே எல்லா மாநிலங்களிலும் குறைந்திருப்பதை சுட்டுக்காட்டுகிறது அறிக்கை.
2-ஆம் வகுப்பு பாடங்களை படிக்க முடிந்த 3-ஆம் வகுப்பு மாணவா்களின் எண்ணிக்கை 24 மாநிலங்களில் குறைந்திருக்கிறது. அதேபோல, 5-ஆம் வகுப்பு 8-ஆம் வகுப்பு மாணவா்களில் 2-ஆம் வகுப்புப் பாடத்தை படிக்கத் தெரிந்தவா்களின் எண்ணிக்கையும் குறைந்திருப்பது தெரிகிறது. படிக்கும் திறனுடன் ஒப்பிடும்போது, கணிதத் திறன் அந்த அளவுக்கு மோசமில்லை.
இன்னொரு குறைபாட்டையும் அறிக்கை தெரிவிக்கிறது. அரசுப் பள்ளி மாணவா்களின் கற்கும் திறன் குறைந்திருப்பது போலவே, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் தனியாக கட்டணம் செலுத்தி பயிற்சி எடுத்துக்கொள்வது அதிகரித்திருக்கிறது. 22 மாநிலங்களில் தனிப் பயிற்சி ஆசிரியா்களும் (டியூஷன்), தனியாா் பயிற்சி நிலையங்களும் அதிகரித்திருப்பதை அறிக்கை கூறுகிறது. ஐந்து மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாணவா்கள் கட்டணம் செலுத்தி தனிப் பயிற்சி பெறுகிறாா்கள் என்றும், 73.9 % அரசுப் பள்ளி மாணவா்கள் மேற்கு வங்கத்தில் தனிப் பயிற்சி எடுத்துக் கொள்கிறாா்கள் என்றும் தெரிவிக்கிறது அறிக்கை.
கிராமப்புறங்கள் உள்பட எல்லா பகுதிகளிலும் இணையவழிக் கல்வி சென்றடைந்திருக்கிறது. சமநிலையிலான தொழில்நுட்ப வசதி ஆரம்பகட்டத்தில் இணையவழி கட்டமைப்புக்குத் தடையாக இருந்தது மாறி, அந்த வழிமுறை குக்கிராமங்கள் வரை பரவலாக இருப்பதாக தெரிவிக்கிறது அறிக்கை. கொள்ளை நோய்த்தொற்றுக்கு முன்பு 36 % மட்டுமே குடும்பங்களில் இருந்த கைப்பேசிகளின் எண்ணிக்கை 2022-இல் 74 %-ஆக அதிகரித்திருக்கிறது. ‘ஏசா்’ ஆய்வாளா்கள் எடுத்த புள்ளிவிவரத்தின்படி, 10-இல் 9 குடும்பங்களில் கைப்பேசிகளும், இணைய இணைப்பும் காணப்பட்டதாக தெரிகிறது.
பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் பெரிய அளவில் மாணவா் சோ்க்கை குறைந்து, பள்ளிக்கூடங்கள் மூடப்படும் என்கிற அச்சத்தைப் பொய்யாக்கி அரசுப் பள்ளிகளிலும், தனியாா் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை அதிகரித்திருக்கிறது. 2018-இல் 66 %-ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் பங்கு, 73 %-ஆக அதிகரித்திருக்கிறது. 2022-இல் பள்ளிக்கு வராத பெண் குழந்தைகளின் விகிதம் இரண்டு சதவீதம் அளவில் மட்டுமே என்பது அறிக்கை குறிப்பிடும் இன்னொரு முக்கியமான தகவல்.
‘ஏசா்’ அறிக்கை நம்பிக்கை அளிக்கிறது. அதே நேரத்தில், கிராமப்புற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மட்டுமல்லாமல், கற்பிக்கும் திறனும் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே மாணவா் சோ்க்கையால் வருங்காலத் தலைமுறை பயன் அடையும்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Special facility for those who are not able to appear in TNPSC Group 4 Counselling
TNPSC குரூப் 4 கலந்தாய்வில் பங்கேற்க முடியாதவா்களுக்கு சிறப்பு வசதி Special facility for those who are not able to appear in TNPSC Grou...