பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.03.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: அழுக்காறாமை
குறள் எண் : 162
விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
பொருள்:
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை
பழமொழி :
He that asks faintly begs a denial
உரத்துக் கேட்காவிட்டால் ஊர் எதுவும் தராது.
இரண்டொழுக்க பண்புகள் :
1. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.
2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்
பொன்மொழி :
திருப்தியான மனம் ஒன்றே மனிதர்களுக்குகிடைக்கும் மிகப்பெரிய கொடை.
பொது அறிவு :
1. நீரில் வாழும் உயிரினங்களில் ஆறு மாதம் வரை உணவின்றி வாழும் உயிரினம் எது?
நீலத்திமிங்கலம்.
2. கண்களை மூடிக்கொண்டே பறக்கும் ஆற்றல் கொண்ட உயிரினம் எது?
வௌவால்.
English words & meanings :
Jockey –a person who rides horses professionally in races. noun. He is a farmer champion Jockey. குதிரைப் பந்தயத்தில் குதிரை ஓட்டுபவர். பெயர்ச் சொல்
கணினி யுகம்
F6
Cycle through screen elements in a window or on the desktop.
F10
Activate the Menu bar in the active app.
மார்ச் 24
உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day)
உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்.
நீதிக்கதை
கதிர் செய்த செயல்
கதை :
பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர் தெய்வசிகாமணி அந்தப் பக்கமாக வந்தார். அவர் ஒரு மாற்றுத் திறனாளி.
அவர் தூரமாக வரும்போதே, மாணவன் கதிர், டேய் அங்க பாருங்கடா யார் வர்றதுன்னு என்று கூறிவிட்டு காலில் ஊனம் இருப்பதுபோல நடந்து காட்டினான். மற்ற மாணவர்கள் எல்லாம் சிரித்தனர். ஆசிரியரோ கண்டும் காணாமல் சென்று விட்டார். இது வழக்கமாக நடந்து வந்தது.
வீட்டில் ஒரே பையன் என்பதால் கதிருக்கு செல்லம் அதிகம். அதனால் அதிகமாக குறும்புகள் செய்வான். பெற்றோரும் அவனைக் கண்டிப்பதில்லை. விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும், கதிர் நன்றாகப் படிப்பான். பள்ளி முடித்து கல்லூரிக்குச் சென்ற பின்னும் அவனது கலாட்டா குறையவில்லை.
ஒரு நாள் கல்லூரிக்குச் சென்று திரும்பிய கதிர், படுக்கைக்குப் போனான். அசதியில் தூங்கியவன் மறுநாள் எழுந்திருக்கவில்லை. உடலில் ஜூரம் கொதித்தது. உடனே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
பக்கவாதம் தாக்கியிருப்பதாக டாக்டர்கள் கூறினர். இறுதியில் ஒரு கால் நடக்க முடியாமல் போய்விட்டது. அதனால் கதிர் கல்லூரிக்குச் செல்ல வெட்கப்பட்டுக் கொண்டு வீட்டிலேயே முடங்கிவிட்டான்.
ஆசிரியரை நாம் எப்படியெல்லாம் கேலி செய்தோம். அதற்குச் சரியான தண்டனைதான் கிடைத்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டான்.
நீதி :
நாம் மற்றவர்களுக்கு துன்பம் செய்தால் அந்த துன்பம் நமக்கே வந்தடையும்.
இன்றைய செய்திகள்
24.03. 2023
* கல்விச் சுற்றுலா மற்றும் பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சிறு, குறு வியாபாரிகளுக்கு அஞ்சல்துறை சார்பாக க்யூஆர் கோடு அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
* தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் அரசம்பட்டி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, விளாத்திகுளம் முண்டு வத்தல் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு இந்த ஆண்டில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
* நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் 5 அடுக்குத் திட்டங்களைப் பின்பற்ற மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
* உக்ரைன் - ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
* உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 21 வயது இந்திய வீரர் சரப்ஜோத் சிங் தங்கம் வென்றார்.
* சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி - முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஶ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி.
* இந்திய வீராங்கனை நீத்து காங்காஸ் உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
Today's Headlines
* The Madras High Court has directed educational institutions organizing educational tours and other programs to take all necessary precautions for the safety of students.
* QR code cards have been introduced by the Department of Posts for small and micro traders to encourage digital payment transactions.
* In the agriculture budget of the Tamil Nadu government, it has been announced that steps will be taken to get geographical codes for 10 products including Arasambati coconut, Mulanur short drumstick, Vlathikulam mundu wathal this year. Tamilnadu farmers have welcomed this.
* As the number of people affected by corona infection in the country has started increasing again, the central health department has advised all the states and union territories to follow 5 tier plans.
* Ukrainian President Zelensky has said that he has invited China to negotiate for peace in the Ukraine-Russia war.
* Shooting World Cup: 21-year-old Indian player Sarabjot Singh wins gold.
* Swiss Open International Badminton Tournament - India's PV Sindhu and Srikanth win in the first round.
* India's Neethu Kangas has advanced to the finals of the World Boxing Championship.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...