கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பான் எண் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - வருமானவரித்துறையின் அறிவிப்பு (Kind Attention PAN Holders - Income Tax Department Announcement)...



பான் எண் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - வருமானவரித்துறையின் அறிவிப்பு (Kind Attention PAN Holders - Income Tax Department Announcement)...


 பான் எண் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! 


ஆதார்-பான் இணைப்புக்கான கட்டணத்தைச் செலுத்திய பிறகு, பான் வைத்திருப்பவர்கள் சலானைப் பதிவிறக்குவதில் சிரமத்தை எதிர்கொண்ட நிகழ்வுகள் கவனிக்கப்பட்டுள்ளன. 


இது சம்பந்தமாக, உள்நுழைந்த பிறகு, போர்ட்டலின் ‘இ-பே டாக்ஸ்’ பொத்தானில் சலான் செலுத்துதலின் நிலையை சரிபார்க்கலாம். பணம் செலுத்துவது வெற்றிகரமாக இருந்தால், பான் வைத்திருப்பவர் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க தொடரலாம். 


பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான சலான் ரசீதை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும், PAN வைத்திருப்பவர் வெற்றிகரமாகப் பணம் செலுத்தியவுடன், சலான் இணைக்கப்பட்ட நகலுடன் கூடிய மின்னஞ்சல் ஏற்கனவே PAN வைத்திருப்பவருக்கு அனுப்பப்படுகிறது. 


30.06.2023 வரை கட்டணம் செலுத்தி, இணைப்புக்கான ஒப்புதல் பெறப்பட்டாலும், இணைக்கப்படாத சந்தர்ப்பங்களில், அத்தகைய வழக்குகள் துறையால் முறையாகப் பரிசீலிக்கப்படும்.



Kind Attention PAN holders!


Instances have come to notice where PAN holders have faced difficulty in downloading the challan after payment of fee for Aadhaar-PAN linking. 


In this regard, it is to be informed that status of challan payment may be checked in ‘e-pay tax’ tab of portal after login. If a payment is successful, then PAN holder can proceed to link PAN with Aadhaar. 


There is no need of downloading of the challan receipt for linking PAN with Aadhaar. Further, as soon as the PAN holder completes the payment successfully, an email with an attached copy of the challan is already being sent to the PAN holder.


In cases where fee payment & consent for linking have been received, but linking has not been done till 30.06.2023, such cases will be duly considered by the Department.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் மகளிர் உரிமை தொகை திட்ட சிறப்புப் பணி அலுவலர்கள், மருத்துவ பணிகள் தேர்வு வாரிய தலைவர் போன்ற பணியிடங்களுக்கு முழு கூடுதல் பொறுப்புடன் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் நியமனம் அரசாணை (G.O.Rt.No.2734, Dated: 01-07-2023) வெளியீடு (Appointment of I.A.S. Officers with full additional charge for the posts of Principal Secretary to Higher Education Department, Special Duty Officers for Kalaignar Centenary Function and Magalir Urimai Thogai Scheme & Chairman of Medical Services Recruitment Board etc.)...

 

>>> உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் மகளிர் உரிமை தொகை திட்ட சிறப்புப் பணி அலுவலர்கள், மருத்துவ பணிகள் தேர்வு வாரிய தலைவர் போன்ற பணியிடங்களுக்கு முழு கூடுதல் பொறுப்புடன் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் நியமனம் அரசாணை (G.O.Rt.No.2734, Dated: 01-07-2023) வெளியீடு (Appointment of I.A.S. Officers with full additional charge for the posts of Principal Secretary to Higher Education Department, Special Duty Officers for Kalaignar Centenary Function and Magalir Urimai Thogai Scheme & Chairman of Medical Services Recruitment Board etc.)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக கார்த்திகேயன் நியமனம்.


உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் நியமனம்.


மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம்.


பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீட்டா ஹரிஷ் தாக்கர் நியமனம். 


மின்சார வாரியத்தின் இணை ஆணையராக விஷு மகாஜன் நியமனம்.


உணவு வழங்கல் துறை இயக்குனராக அண்ணாதுரை நியமனம்.


மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் நியமனம் - தமிழ்நாடு அரசு...

2023-2024ஆம் கல்வி ஆண்டு - 2023 ஜூலை மாதம் - ஆசிரியர் நாட்காட்டி (July 2023 Diary)...


2023-2024ஆம் கல்வி ஆண்டு - 2023 ஜூலை மாதம் - ஆசிரியர் நாட்காட்டி (July 2023 Diary)...



2023-2024ஆம் கல்வி ஆண்டு -


*2023 ஜூலை மாதம்


*ஆசிரியர் டைரி


_*01.07.2023- சனிக்கிழமை*_

*BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்*


_*03.07.2023- திங்கள் கிழமை*_

(03.07.2023-30.07.2023)

*பள்ளி மேலாண்மை குழு பயிற்சி*

*03.07.2023-08.07.2023 தொல்லியல் பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்*


_*08.07.2023- சனிக்கிழமை*_

*CRC-எண்ணும் எழுத்தும்- தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி*

(1-3வகுப்பு ஆசிரியர்கள்)

&

*DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்*



_*15.07.2023- சனிக்கிழமை*_

_*காமராஜர் பிறந்த நாள்*_

*கல்வி வளர்ச்சி நாள்*

&

*CRC-எண்ணும் எழுத்தும்- தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி*

(4-5 வகுப்பு ஆசிரியர்கள்)

&

*CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்*


_*17.07.2023 to 22.07.2023 -திங்கள் முதல் சனி வரை*_

*தொல்லியல் பயிற்சி*

(தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)


_*19.07.2023 to 20.07.2023 - புதன் மற்றும் வியாழன் வரை*_

*சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர்கள்*


_*20.07.2023- வியாழக்கிழமை*_

*இஸ்லாமியர்(ஹிஜிரி) புத்தாண்டு* -(RL)


_*24.07.2023-31.07.2023 திங்கள் முதல் திங்கள் வரை*_

*ஆங்கில ஒலிப்பு பயிற்சி*

ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்கள்


_*25.07.2023-27.07.2023*_

_*மதிப்பீட்டுப் பயிலரங்கம்*_

25.07.2023 : 6-8 வகுப்பு ஆங்கில ஆசிரியர்கள்


26.07.2023 : 6-8 வகுப்பு கணக்கு ஆசிரியர்கள்


26.07.2023 : 6-8 வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்கள்


_*29.07.2023- சனிக்கிழமை*_

*மொகரம்-அரசு விடுமுறை.*






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.06.2023 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.06.2023 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :



பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்


குறள் :204


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.


விளக்கம்:


மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் அறக்கடவுளே எண்ணியவர்க்கு தீமையைத் தர எண்ணும்.



பழமொழி :

  A little stream will run a light mill


சிறு துரும்பும் பல் குத்த உதவும்.



இரண்டொழுக்க பண்புகள் :


1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.



2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்


பொன்மொழி :


மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.. தந்தை பெரியார்


பொது அறிவு :


1. மிகப் பெரிய மலர் எது? 


விடை: ரஃப்லேசியா அர்னால்டி 


2. மின் விளக்கின் உலோக இழை எதனால் ஆனது? 


விடை: டங்ஸ்டன்


English words & meanings :


 highway - a public road நெடுஞ்சாலை; impress - fix deeply in the mind மனத்தில் பதிய வை


ஆரோக்ய வாழ்வு :


பேரிச்சை பழத்தில் இருக்கும் மெக்னீசியம் கை, கால் பகுதிகளில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கும் தன்மை உடையது


ஜூன் 30


மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ்  அவர்களின் பிறந்த நாள்


மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.


நீதிக்கதை


நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு இருந்தது..!!"


காற்றை கண்டதும்...


'அமைதி' என்ற முதல் மெழுகுவர்த்தி ஐயோ காற்று வீசுகின்றது. நான் அணைந்து விடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.


 "அன்பு '' என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது' என்று அணைந்துவிட்டது. 


''அறிவு '' என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது.


நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சிலநொடிகள் போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான். "அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே' என்று கவலையுடன் சொன்னான்.


அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது, 'வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துகொள்' என்றது.


சிறுவன் உடனே  நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்.. 'நம்பிக்கை' என்றது அந்த மெழுகுவர்த்தி.



நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது...!


இன்றைய செய்திகள்


30.06. 2023


*தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ் தாஸ் மீனா நியமனம். தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஓய்வு பெறுவதை அடுத்து அறிவிப்பு.


*தமிழக டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமனம்.


*சென்னையில் ட்ரோன்கள் மூலம் முக்கிய இடங்களை கண்காணிக்கும் காவல்துறையின் டிரோன் யூனிட் பிரிவை துவங்கி வைத்தார் டி.ஜி.பி சைலேந்திரபாபு.  


*கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் சாலையில் அரை நூற்றாண்டை கடந்த நூலகம் மூடப்படுவதையொட்டி சலுகை விலையில் விற்கப்படும் புத்தகங்கள்.


*குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்துத் தர தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு கடிதம் எழுதிய ஆறாம் வகுப்பு மாணவன். இறையன்பு, மாணவனை நேரில் அழைத்து திருக்குறள் புத்தகம் மற்றும் பேனா பரிசளித்து வாழ்த்தினார்.


*ஸ்டீவ் ஸ்மித் சதம்: 

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவிப்பு.


Today's Headlines


* Shiv Das Meena was appointed as the new Chief Secretary of Tamil Nadu.  The announcement follows the retirement of Iraiyanbu, Chief Secretary.


 * Shankar Jiwal was appointed as Tamilnadu DGP.


 *DGP Shailendrababu started the drone unit of the police to monitor important places through drones in Chennai.


 *Books sold at concessional prices due to the closure of the half-century-old library on Thadakam Road next to RS Puram, Coimbatore.


 *Sixth standard student who wrote a letter to the Chief Secretary Iraiyanbu to repair the damaged road.  He called the student in person and congratulated him by gifting him a Thirukural book and a pen.


 *Steve Smith's century:

 Australia scored 416 runs in the first innings.

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 வகையான உடல்நலப் பரிசோதனைகள் (3 Types of Health Checkups for Government School Students)...

 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 வகையான உடல்நலப் பரிசோதனைகள் (3 Types of Health Checkups for Government School Students)...









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக திரு.சிவதாஸ் மீனா இ.ஆ.ப. நியமனம் - அரசாணை (G.O.Rt.No.2715, Dated: 29-06-2023) வெளியீடு (Mr.Shivdas Meena I.A.S. has been appointed as the New Chief Secretary of the Government of Tamil Nadu)...




>>> தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக திரு.சிவதாஸ் மீனா இ.ஆ.ப. நியமனம் - அரசாணை (G.O.Rt.No.2715, Dated: 29-06-2023) வெளியீடு (Mr.Shivdas Meena I.A.S. has been appointed as the New Chief Secretary of the Government of Tamil Nadu)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் பள்ளிக் கல்வித் துறை மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது (If students studying in Government Schools do not come to school, SMS is sent by the School Education Department)...

 அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் பள்ளிக் கல்வித் துறை மூலம் உங்கள் மகன் இன்று பள்ளிக்கு வரவில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...