கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.08.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.08.2023 - School Morning Prayer Activities...

   

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம்:அருளுடைமை


குறள் :246


பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்தொழுகு வார்.


விளக்கம்:


அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.


பழமொழி :

Better to bend the neck than bruise the forehead.


தாழ்ந்தது நின்றால் வாழ்ந்து நிற்பாய்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.


2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்



பொன்மொழி :


ஒரு போதும் மனம் தளர வேண்டாம் ஏனெனில், சரியான இடம் மற்றும் காலத்தில் எல்லாம் மாறிவிடும்”- ஹரியட் பீச்சர் ஸ்டோ


பொது அறிவு :


1. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் எது?



விடை: சுதேச மித்திரன்


2. தென்னிந்தியாவின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படுவது எது?


விடை: சென்னை


English words & meanings :


 yar·mul·ke - A skullcap worn by Jewish men and boys. Also called kippah. பெயர்ச் சொல். யூத ஆண்களும் சிறுவர்களும் தலையில் அணியும் தொப்பி 


ஆரோக்ய வாழ்வு : 


கடுகு - 

கடுகு செடியை சிறுதுண்டுகளாக வெட்டவும். இதில் போதுமான அளவு நீர்விட்டு கொதிக்க வைத்து நீராவி பிடித்தால் ஒற்றை தலைவலி,  தலைபாரம், இருமல், நெஞ்சக சளி, மூக்கடைப்பு சரியாகும்


ஆகஸ்ட்25


நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நினைவுநாள்


நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 – ஆகத்து 25, 2012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். 


1969, சூலை 20 இல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார். இவர் சந்திரனில் காலடி எடுத்துவைக்கும் போது முதலில் இடது காலையே வைத்தார்.


ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.


நீதிக்கதை


புத்தியை தீட்டு


=============


ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள். மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார்,


மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்!


நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடை விடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..


சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி என்று கேட்டான்!..


நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்! மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை,


மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான், மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான், ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்!... நாமும் ஓய்வு நேரங்களில் வெற்றி பெறுவதற்கு ஏற்ற செயல்களை சிந்திக்க வேண்டும்.


இன்றைய செய்திகள்


25.08.2023


*நிலவில் வலம் வரும் ரோவரின் அடுத்த கட்டப் பணி துவங்கியது...


*கடைசி விவசாயி படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிப்பு.


*காலை உணவுத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம்: முதலமைச்சர் நாளை திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.


*இரண்டு நாட்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை. பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்.


*நெல்லூர் அருகே 450-க்கும் மேற்பட்ட விஜயநகர தங்க காசுகள் கண்டெடுப்பு.


*உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டி கார்ல்சன் சாம்பியன்!


Today's Headlines


* The next phase of the rover's work on the moon has started...


 *Two National Awards are announced for the film "Last Farmer".


 *The Morning Breakfast Scheme is expanded all throughout the state: The Chief Minister will launch it in Thirukkuvalai school tomorrow.


 *High-temperature warning for two days.  The public is advised to be cautious.


 *Over 450 Vijayanagara period gold coins were found near Nellore.


 * World Cup Chess Finals Carlson clinches Championship.

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (CMBFS) - நிலையான வழிகாட்டி செயல்முறை (Chief Minister's BreakFast Scheme - Standard Guidelines Proceedings)...



>>> முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (CMBFS) - நிலையான வழிகாட்டி செயல்முறை (Chief Minister's BreakFast Scheme - Standard Guidelines Proceedings)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் - மாணவர்களுக்கான பேச்சு & கட்டுரைப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 045441/ எம்/ இ1/ 2023, நாள்: 23-08-2023 (Centenary Celebrations of Ex-Chief Minister Muthamilarignar Kalaignar M.Karunanidhi - Conduct of Speech & Essay Competitions for Students - Proceedings of Director of School Education RC.No: 045441/ M/ E1/ 2023, Dated: 23-08-2023)...


>>> முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் - மாணவர்களுக்கான பேச்சு & கட்டுரைப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 045441/ எம்/ இ1/ 2023, நாள்: 23-08-2023 (Centenary Celebrations of Ex-Chief Minister Muthamilarignar Kalaignar M.Karunanidhi - Conduct of Speech & Essay Competitions for Students - Proceedings of Director of School Education RC.No: 045441/ M/ E1/ 2023, Dated: 23-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

30 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் 2023-2024ஆம் கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1741, நாள்: 24-08-2023 (After 30 Years, Government of Tamil Nadu Order to Increase Education Advance for Higher Education of Children of Government Employees from Academic Year 2023-2024 - Press Release No: 1741, Date: 24-08-2023)...



>>> 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் 2023-2024ஆம்  கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1741, நாள்: 24-08-2023 (After 30 Years, Government of Tamil Nadu Order to Increase Education Advance for Higher Education of Children of Government Employees from Academic Year 2023-2024 - Press Release No: 1741, Date: 24-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட விவரங்களை TNSED Schools App- ல் உடனடியாக பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள், நாள்: 14-08-2023 (Joint Director of School Education Proceedings for immediate uploading of welfare scheme details provided to students in TNSED Schools App, dated: 14-08-2023)...

 

>>> மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட விவரங்களை  TNSED Schools App- ல் உடனடியாக பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள், நாள்: 14-08-2023 (Joint Director of School Education Proceedings for immediate uploading of welfare scheme details provided to students in TNSED Schools App, dated: 14-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாவட்டம் தோறும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SPD & SCERT) இயக்குநரின் இணைச் செயல்முறைகள் & வழிகாட்டு நெறிமுறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 24-08-2023 (Conduct of District wise Learning Outcome / Competency Based Assessment Test for 6th to 9th Standard - Joint Proceedings of State Program Director of Integrated School Education and Council (SPD & SCERT) Rc.NO: 6519/ G3/ 2023, Dated: 24-08-2023 & Guidelines)...


>>> மாவட்டம் தோறும் 6 முதல் 9ஆம்  வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SPD & SCERT) இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 24-08-2023 (Conduct of District wise Learning Outcome / Competency Based Assessment Test for 6th to 9th Standard - Joint Proceedings of State Program Director of Integrated School Education and Council (SPD & SCERT) NO: 6519/ G3/ 2023, Dated: 24-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

INSPIRE AWARDக்கு விண்ணப்பிக்க தேவையானவை (Requirements to apply for INSPIRE AWARD)...


 INSPIRE AWARDக்கு விண்ணப்பிக்க தேவையானவை (Requirements to apply for INSPIRE AWARD)...


1.முதலில் பள்ளியின் U- DISE NUMBER யை update செய்யவும்.                   


2. 6 முதல் 10 வகுப்பு வரை அதிகபட்சமாக 5 மாணவர்களை தேர்வு செய்யவும். 

தேர்வு செய்யும் போது ஒரே வகுப்பிலிருந்து 5 மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

(5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்)                


3. மாணவர்கள் விவரங்கள்.

🔸பெயர்

🔸பெற்றோர் பெயர்

🔸வகுப்பு

🔸ஆதார் எண்(not mandatory)

🔸கைபேசி எண்

🔸இனம்

🔸புகைப்படம்

(JPG,PNG FORMAT FILE SIZE 2MB)

🔸வங்கி கணக்கு புத்தகம். 


4.PROJECT விவரங்கள்.


Project topic (ஒவ்வொரு மாணவர்களுக்கும்)


JPG,PNG ,WORD ,PDF FORMAT FILE SIZE 2MB 

A4 SHEET கையால் எழுதியும் upload செய்து கொள்ளலாம்.


தமிழ் மொழி உட்பல பல மொழிகளில் project upload செய்து கொள்ளலாம்.


project photo copy upload additional(not mandatory.)


project audio, video upload FILE SIZE 5MB (not mandatory)


5.Guide teacher name and phone number   


6.HM name and phone number


7. இந்த 5 மாணவர்களை தேர்வு செய்ய காரணம் இதுபோன்ற தகவல்களை தயார்  நிலையில் வைத்துக்கொண்டு விண்ணப்பிக்கவும்.


8.Acknowledgement download செய்தபின் மாணவர்களின்  விவரங்களை திருத்தம் & மாற்றம் செய்ய இயலாது.ஆனால் உங்களது application rejected என நீங்கள் பதிவு செய்த பள்ளியின் e-mail முகவரிக்கு தகவல் வந்தால் அதன்பின் திருத்தம் & மாற்றம் & கூடுதலாக மாணவர்களை add செய்து கொள்ளலாம்.

அதன் பின் district forward செய்து மீண்டும் acknowledgement download செய்து கொள்ளலாம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...