கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிரீமியம் செலுத்தும் அரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவை தருவது அரசின் கடமை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு (நாளிதழ் செய்தி)...


 பிரீமியம் செலுத்தும் அரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவை தருவது அரசின் கடமை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு (நாளிதழ் செய்தி)...


Duty of Government to provide medical expenses to Premium Paying Government Servants, Pensioners – Order of High Court Madurai Bench...


May 29, 2019


மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவுகளை நொண்டிச் சாக்கு கூறி மறுக்காமல் கண்டிப்பாக திருப்பி வழங்க வேண்டியது அரசின் கடமை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சுகாதார நிதித் திட்டத்தின்கீழ் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான கட்டாய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான மருத்துவச் செலவுகளை தமிழக அரசும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனமும் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில், இதை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அதில், அரசு ஊழியர்கள் மற்றும்அவர்களின் குடும்பத்தினரின் நலனுக்காகவும்ஓய்வூதியதாரர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டுமே மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன்படி, ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடம் கட்டாய பிரிமீயம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளும்போது செலவு செய்த மருத்துவ செலவுகளை திருப்பிக்கேட்டால், பட்டியலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை. நோய் பாதிப்பு இவ்வளவு சதவீதம் இருந்தால் செலவுத் தொகையை திருப்பிக் கோரமுடியாது. பட்டியலில் இல்லாத இந்த நோய் பாதிப்புக்கு காப்பீடு கிடையாது. சரியான நேரத்தில் இழப்பீடு கோரவில்லை என நொண்டிச்சாக்குகளைக் கூறி மாவட்ட அளவில் உள்ள மருத்துவ காப்பீட்டுக் குழு செலவு செய்துள்ள தொகையை வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே நாங்கள் மருத்துவத்துக்காக செலவு செய்து உள்ள தொகையை திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவுகளை வழங்க வேண்டியது அரசின் கடமை. அதை நொண்டிச்சாக்கு கூறி மறுக்கக்கூடாது. எனவே, தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின்கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மருத்துவத்துக்காக செலவு செய்துள்ள தொகையை வழங்க முடியாது என பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய செலவுத் தொகையை 6 % வட்டியுடன் வழங்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசுமருத்துவமனைகளையும் தரம் உயர்த்தியிருந்தால் அனைத்து தரப்பினரும் அரசு மருத்துவமனைகளிலேயே இலவச சிகிச்சை பெற்றிருப்பர்.

ஆனால் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை தற்போது தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலை உள்ளது.எனவே, அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தும் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் சட்டப்படி வழங்க வேண்டிய நிதியுதவிகளை அரசும் காப்பீட்டு நிறுவனங்களும் கண்டிப்பாக வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.




ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுப்பது என ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சார்பில் ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் முடிவு...

  ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுப்பது என ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சார்பில் ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் முடிவு...


15  லட்சம் ஆசிரியர்கள்  அரசு ஊழியர்கள் உறுப்பினராக உள்ள ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில்  நடைபெற்றது.

       இன்றைய கூட்ட முடிவில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.


>>> Click Here to Download JACTTO GEO Letter...


(1) ஜாக்டோ-ஜியோ சார்பில் 5 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிகைகைகளை  நிறைவேற்ற  28.12.2023  வியாழக்கிழமை திட்டமிட்டபடி சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை நடத்துதல்.


(2)சென்னையில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பில் ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.


எண்ணும் எழுத்தும் - மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலையை அறிய - Student Level EE Report - Direct Link...

 

 எண்ணும் எழுத்தும் (Ennum Ezhuthum) - மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலையை அறிய  - Student Level EE Report - Direct Link👇





மேற்கண்ட Link ஐ  Click செய்து தங்கள் பள்ளியின் UDISE Code & Password கொடுத்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்...

தமிழ்நாட்டில் 3093 மாணவர்களுக்கு இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் (National Scholarship Portal) 31.12.2023 -க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்...



தமிழ்நாட்டில் 3093 மாணவர்களுக்கு இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை  தளத்தில் (National Scholarship Portal) 31.12.2023 -க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தகவல்...



>>> செய்தி வெளியீடு எண்: 42, நாள்: 14-12-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


"மக்களுடன் முதல்வர்" திட்டத்தில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்...

 தருமபுரி மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்...



அரசுப் பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து விபத்து - மரத்தடியில் அமர்ந்திருந்த 17 மாணவர்கள் காயம்...

அரசு பள்ளியில் மரத்தடியில் அமர்ந்து கல்வி பயின்ற 17 மாணவர்கள் காயம் - மரம் வேரோடு சாய்ந்து விபத்து...


மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குத்தெரு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 9 ஆம் வகுப்பு மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மரம் வேரோடு சாய்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவ மாணவியர் 17 பேருக்கு காயம்...


தெற்குத்தெரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மாணவ மாணவிகள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 



விபத்து குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்...


இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் & பணி நியமனம்...

இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் & பணி நியமனம் (Police Note No.  SC/ 25 & 26/ 2023, Dated: 14-12-2023)...


11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஐ.ஜியாக தமிழ்சந்திரன் நியமனம்


சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மகேஸ்வர் தயால் நியமனம்


சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம்.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Things to keep in mind before registering FA(a) Marks in TNSED Schools app

    இன்று (18-11-2024) முதல் வளரறி மதிப்பீடு-அ விற்கான மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம்.  வளரறி மதிப்பீடு-அ FA(a) மதிப்ப...