பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி கிடைக்கும் - சொல்கிறார் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க நிர்வாகி...
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி கிடைக்கும் - சொல்கிறார் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க நிர்வாகி...
2020-ல் வகுக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையின்படி அரசு பள்ளிகளில் 6 வயது நிரம்பினால் மட்டுமே 1ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டும்...
>>> Click Here to Download - Letter of Joint Secretary of Ministry of Education...
குழந்தைகளை 6 வயதில்தான் 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்...
குழந்தைகளுக்கு 6 வயது ஆன பிறகே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தேசிய கல்வி கொள்கை - 2020 அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், பிற மாநிலங்களில் இந்த கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையின்படி, 5+3+3+4 என்ற அடிப்படையில் கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, அங்கன்வாடி முதல் 2-ம் வகுப்பு வரை (3-8 வயது) 5 ஆண்டுகள், 3 முதல் 5-ம் வகுப்பு வரை (8-11 வயது) 3 ஆண்டுகள், 6 முதல் 8-ம் வகுப்பு வரை (11-14 வயது) 3 ஆண்டுகள், 9 முதல் 12-ம் வகுப்பு வரை (14-18 வயது) 4 ஆண்டுகள் என 4 நிலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை 6 வயதில் தொடங்கினால்தான், அடுத்தடுத்த படிநிலைகள் சரியாக இருக்கும் என்ற அடிப்படையில், அனைத்து பள்ளிகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிப் படிப்பை தொடங்குவதற்கு முன்பு குழந்தைகளின் வளர்ச்சிக்கான தயார்நிலையை கருத்தில் கொண்டு இந்த வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6 வயதில்தான் குழந்தைகள் அறிவாற்றல் மற்றும் சமூக வளர்ச்சியின் புதிய, முக்கியமான கட்டத்தில் இருப்பார்கள். அந்த வயதில் பள்ளிப் படிப்பை தொடங்கினால், கற்றல் நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு போல, டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் 5 வயதில்தான் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கர்நாடகா, கோவாவில் 5 வயது 10 மாதங்களில் சேர்க்கை நடைபெறுகிறது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் தற்போது 6 வயதில்தான் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
நடப்பு கல்வி ஆண்டில் தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் 3, 4, 5-ம் வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குகளுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேட்டி...
வாக்குகளுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேட்டி அளித்துள்ளார். சி-விஜில் செயலியில் பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்காமல் புகார் அளிக்க முடியும். ஒவ்வொரு புகாரின் மீதும் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நடைபெறும் நாள் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் போலியானது.
தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பின் மூலம் வெளியிடும்.
- இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு...
24-02-2024 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை...
*ஜாக்டோ - ஜியோ* ( *JACTTO-GEO* )
*(தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு)*
*நாள்:24.02.2024*
*இன்னும் கொஞ்சம் பொறுத்திருப்போம்!*
*பட்ஜெட் மான்ய கூட்டத்தொடர் வரை போராட்டத்தை நிறுத்தி வைப்போம்!*
*நமக்கான அறிவிப்புகள் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்!*
*பதுங்கிப் பாயும் வேங்கையின் பொறுமையுடன் பசித்திருப்போம்!*
*விழித்திருப்போம்!*
*ஒற்றுமையுடன் இருப்போம்!*
*அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே, அரசு ஊழியர்களே, அரசுப்பணியாளர்களே*
*நாமெல்லாம் ஒன்று சேர்ந்து நம்முடைய உரிமைகளுக்காக மாநில அரசிடம் தொடர்ந்து நம்முடைய கோரிக்கைகளை வைத்து வருகிறோம். அரசின் கவனத்தை ஈர்க்க பலகட்ட போராட்டங்களை வடிவமைத்து அவற்றை செவ்வனே செயல்படுத்தி அரசுக்கு அழுத்தத்தை தந்து கொண்டிருக்கிறோம். நமக்கான முதல்வர் நம்மிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையிலும் அதே சமயம் அரசின் நிதி ஆதாரங்கள் மேம்படும் வரை நம்மை முதல்வர் காத்திருக்கச் சொன்னதை கருத்தில் கொண்டும் நாம் கடந்த இரண்டரையாண்டுகளாக வாழ்வாதார கோரிக்கைகளுக்கான காலஅவகாசத்தை பொறுத்துக்கொண்டு வந்திருக்கிறோம். இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் நாம் முதல்வரை மூன்று முறைகள் நேரில் சந்தித்து நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முறையிட்டிருக்கிறோம். நம்முடைய நெடுநாள் பொறுமைகளை அவரிடம் எடுத்துரைத்திருக்கிறோம். மாநாடு நடத்தியும் நம்முடைய கோரிக்கைகளில் பால் உள்ள நியாயங்களை அவசியங்களை, அவசரங்களை அவரிடம் எடுத்துரைத்திருக்கிறோம்.*
*தமிழக முதலமைச்சர் அவர்களும், அவர் ஆட்சியேற்ற பிறகு நம்மை சந்தித்த எல்லா தருணங்களிலும் மற்றும் மாநாட்டிலும் அவர்கொடுத்த வாக்குறுதிகளை புறந்தள்ளாமல் தான் கொடுத்த வாக்குறுதிகளை மறக்கவில்லை மறுக்கவில்லை மறைக்கவில்லை என்றும் அவை அனைத்தும் தன்னுடைய நினைவில் உள்ளதாகவும் அவை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையையும் உறுதிபடுத்தி வந்திருக்கிறார். தமிழக முதல்வர் அவர்கள் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் நமக்கான வாக்குறுதிகள் ஒன்றைக்கூட நிறைவேற்றாதது நம்முடைய வேதனைகளையும், கோபங்களையும் கொழுந்துவிட்டு எரியச் செய்த நிலையில் நாம் இதுவரை இரண்டுமுறை போராட்ட களங்களுக்கு தயாரான போது அமைச்சர்களை அனுப்பி தன்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி "சிலகாலம் காத்திருங்கள் நிச்சயம் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் " என்று மீண்டும் மீண்டும் உறுதியளித்து வந்திருக்கிறார்.*
*அதன்பிறகும் சிலகாலம் முதல்வரின் உறுதிமொழியில் இருந்த நம்பிக்கைகளின் பேரில் பொறுமையுடன் காத்திருந்துவிட்டு அரசுத்தரப்பில் எந்த சலனமும் இல்லாத நிலையில் நாம் நம்முடைய கோரிக்கைளில் அதிமுக்கியத்துவமும். அவசியமும் வாய்ந்த பத்து கோரிக்கைகளை முன் வைத்து இப்போது போராட்டகளத்திற்கு தயாராகி வந்தோம். இந்த நிலையில் அரசாங்கத்தின் துாதுவர்களாக மாண்புமிகு அமைச்சர்கள் திரு.எ.வ.வேலு, திரு.முத்துசாமி மற்றும் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை தமிழக முதல்வர் பேச்சு வார்த்தைக்காக நியமித்து அவர்களுடனான பேச்சுவார்த்தை ஜாக்டோ ஜியோவின் முக்கியத் தலைவர்களுடன் நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாகவே இருந்தது. தமிழக முதல்வர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் கோரிக்கைகளை ஒருபோதும் ஒதுக்கித் தள்ள விரும்பியதில்லை என்றும். தற்போதுள்ள நிதி பற்றாக்குறை சூழ்நிலை காரணமாக கோரிக்கைகள் அறிவிக்கப்படாமல் உள்ளதாகவும், நம்முடைய போராட்டங்கள் நியாயமானவையே என்றாலும் அரசாங்கத்தினால் அவற்றை உடனடியாக நிறைவேற்ற இயலாத நிலைமை உள்ளதால் போராட்டங்களை விலக்கிக் கொண்டு இன்னும் சிலகாலம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.*
*ஆனால் நாம் நம்முடைய கோரிக்கைகளில் ஒரு சிலவற்றையேனும் முதல்வர் பரிசீலித்து ஆணையிடுவாரேயானால் நாங்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பது குறித்தோ அல்லது சிலகாலம் காத்திருப்பது குறித்தோ முடிவெடுக்க இயலும் என்று தெரிவித்தோம். அனைத்து ஊழியர்களும் ஆசிரியர்களும் பணியாளர்களும் அரசின் தற்போதைய நிலைப்பாட்டை வெகுகாலம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்றும் நாங்கள் ஒற்றுமையுடனும், பொறுமையுடனும் பொறுப்புடனும் முதல்வரின் வார்த்தைகளை மதித்து இதுகாலம்வரை காத்திருக்கிறோம் என்பதையும் அவர்களுக்கு புரிய வைத்தோம். நம்முடைய பொறுமைகளை புரிந்து கொண்ட மாண்புமிகு அமைச்சர்கள் மாண்புமிகு முதலமைச்சரிடம் இதுகுறித்து தெரிவிப்பதாகவும் சொல்லிச் சென்றனர்.*
*ஆனால் நம்முடன் சுமூகமாக பேசிச்சென்றதற்கு மாறாக மாண்புமிகு அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் பெயரில் வெளியான அறிக்கை ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்தை கொச்சை படுத்துவது போன்றும், அரசாங்கம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வருவதான தோற்றத்தையும், தமிழ்நாடு மிக இக்கட்டான பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் ஜியோ அதிகப்படியான பணப்பலன்களைக் கேட்டு போராடுவது சரியானதல்ல என்று பொதுமக்களை திசை திருப்பும் வகையிலும் இருந்ததால் அந்த அறிக்கையை நாம் முற்றிலும் நிராகரிப்பதாக தெரிவித்து போராட்டம் தொடரும் என்று அறிவித்தோம்.*
*நம்முடைய போராட்டம் தொடரும் என்ற அறிவிப்பால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மீண்டும் மாண்புமிகு அமைச்சர்கள் நம்முடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். நாம். "முதல்வர் எங்களுடன் பேச வேண்டும். இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே கோரிக்கைகளில் ஏதாவது ஒன்றிரண்டை செயல்படுத்திடும் அறிவிப்பை வெளியிட வேண்டும். மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எத்தனை நாட்கள்/மாதங்கள் கால அவகாசம் தேவைப்படும் என்பதை தெரிவிப்பதன் அடிப்படையிலேயே எங்களுடைய போராட்டத்தை நாங்கள் திரும்பப் பெறுவது குறித்து முடிவு செய்ய இயலும். அதனால் முதல்வருடன் நேரடியாக பேசாமல் நாங்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதற்கான அறிவிப்பை வெளியிடமுடியாது" என்று தெரிவித்தோம்.*
*மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்தமுறையும் நம்முடைய கோரிக்கைகளை அவற்றில் உள்ள நியாயங்களை. அவற்றை நிறைவேற்றுவதில் அரசுக்கு ஏற்பட்டுள்ள காலதாமதங்களை மறுக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால் அதே சமயம் இன்னும் எத்தனை காலம் பொறுமையுடன் காத்திருப்பது என்பதுதான் நமக்குள்ள பெரிய கேள்வியாக உள்ளது. அமைச்சர் பெருமக்கள் அனைவரிடமும் ஏதாவது காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். நாங்கள் உங்களுடைய கோரிக்கைகளில் நிறைவேற்றுவதில் மனம் உள்ளவர்களாக இருப்பதால்தான் பேச்சு வாரத்தைக்கு உங்களை அழைத்திருக்கிறோம் என்றும் அரசாங்கம் தற்போது பல்வேறு வகையான நிதிச்சுமையில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மாதந்தோறும் அரசு ஊழியர்களுக்கு. ஆசிரியர்களுக்கு, பணியாளர்களுக்கு சம்பளம் அளிக்கவே நிதிப்பற்றாக்குறை உள்ள நிலையில், மத்திய அரசும் பல வகைகளில் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதிகளை தராமல் நிறுத்தி வைத்திருக்கும் சூழலில், நீங்கள் உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற கேட்டுப் போராடுவதால் எந்தப்பலனும் ஏற்படப்போவதில்லை. தமிழக முதல்வருக்கு கொடுக்க மனமிருந்தும் கஜானாவில் பணமில்லை என்று தெரிவித்தனர். இருப்பினும் முதல்வருடன் நாம் பேச ஏற்பாடு செய்வதாகக் கூறி ஏற்பாடு செய்து கொடுத்தனர்.*
*மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரில் நம்மை சந்திக்க அழைக்க, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருடனும் அவர் பேசினார். நிதிநிலைமை மிகக்கூடிய விரைவில் சரியாகிவிடும் என்று சொன்ன முதல்வர் உங்கள் கோரிக்கைகளை நான் நிறைவேற்றாமல் யார் நிறைவேற்றப் போகிறார்கள்? என்று கேட்டு மீண்டும் ஒருமுறை அவர் தேர்தல் அறிக்கையிலும், நமது மாநாட்டிலும் தெரிவித்த உறுதிமொழியை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். நாமும் இந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவதற்குள் சில அறிவிப்புகளையேனும் வெளியிட வேண்டும். வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் எங்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்கிறோம் என்று தெரிவித்தோம். மாண்புமிகு முதல்வர் அவர்களும் "பரிசீலிக்கிறேன்." என்று சொல்லிச் சென்றார். அவருடனான பேச்சு வார்த்தை மிகவும் நம்பிக்கைத் தரும் விதத்தில் அமைந்திருந்ததால் 15.02.2024ல் நடத்தவிருந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை ஒருமனதாக முடிவு செய்து திரும்பப் பெறுவதாக அறிவித்தோம். சட்டமன்றக் கூட்டத்தொடரில் வெளியாகும் வரும் அறிவிப்பு அதன்பிறகான தமிழக அரசின் நிலைப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போராட்டத்தை தொடர்வதென முடிவு செய்திருந்தோம்.*
*ஒரு போராட்டத்தை அறிவித்து விட்டு முன்று அமைச்சர்களுடன் பேசிவிட்டு அவர்கள் கொடுத்த அறிக்கை நமக்கு திருப்தி அளிக்காத நிலையில் நாம் அந்த அறிக்கையை முற்றிலும் நிராகரித்துவிட்டு போராட்டத்தை தொடர்வதாக அறிவித்ததும் அதன்பிறகு மாண்புமிகு அமைச்சர்கள் நம்மை முதல்வருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து முதல்வரின் வாய்மூலம் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்ததும் நம்பிக்கையை விதைப்பதாக இருந்தன. பொதுவாக அரசுக்கெதிரான போராட்டங்களை யார் செய்தாலும், அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் போது போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் முதன்முறையாக நாம் நிதியமைச்சரின் அறிக்கைக்குப் பின்னரும் போராட்டம் தொடரும் என அறிவித்து அது நிலுவையில் இருக்கும்போதே போராட்ட அறிவிப்பை திரும்பப் பெறாமல் முதல்வரை சந்தித்து அவரின் உறுதிமொழிக்குப் பின்னர் ஒருநாள் தற்றகாலிக வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளதோடு காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது இந்த இயக்கத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும். நம்முடைய ஒற்றுமை, விடாமுயற்சி. கொண்ட லட்சியத்தில் உறுதிப்பாடு போன்றவைதான் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று நம்முடைய உரிமைகளை மீளப்பெற வழிசெய்யும்.*
*அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் நம்மை உதாசீனப்படுத்திவரும் நிலையில் வேறு எந்த கட்சியும் ஆட்சியும் நம்முடைய கோரிக்ககைள நிறைவேற்ற முன்வராத சூழ்நிலையில் நமக்கான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று அன்று சொன்ன வார்த்தைகளை இன்றுவரை சொல்லிவரும் திராவிட முன்னேற்றக் கழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மட்டும்தான் நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றித்தரமுடியும் என்ற நம்பிக்கை மீண்டும் மலர்ந்துள்ளது.*
*நாம் நடத்தும் போராட்டங்கள் அனைத்தும் நம்முடைய உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டங்களே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் காத்திருங்கள் கொடுக்கிறோம் என்று தெரிவிக்கும் இடத்தில், 'முடியாது நாங்கள் போராடியே தீருவோம் என்று எதிர்ப்பாடான நிலை எடுத்து போராட்டத்தை தொடர்வது முறையானதாக இருக்காது என்கிற யதார்த்தத்தை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். தமிழக அரசியல்கட்சிகளில் திமுகவைத் தவிர வேறு எந்த கட்சியும் நமக்கான உரிமைகளை நிறைவேற்றித்தருவோம் என்று ஒரு பேச்சுக்குக் கூட கூறாத நிலையில் "காத்திருங்கள் நான் செய்யாமல் உங்களுக்கு யார் செய்யப் போகிறார்கள்." என்று கூறும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பினை எதிர்த்து நாம் போராட்டகளம் செல்வதானது நமக்காக திறந்திருக்கும் வாய்ப்பு வாசல்களை நாமே அடைத்துவிட்டதாக ஆகிவிடும். மிகுந்த யோசனைகளுக்குப் பிறகே அரசின். தமிழக முதலமைச்சரின் நம்பிக்கை வார்த்தைகளை ஏற்று சில கோரிக்கைகளாவது கூடியவிரையில் நிறைவேறும் என்ற நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக நிறுததி வைத்திருந்தோம். ஆனால் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரும் முடிந்திருக்கிறது.*
*கனத்த இதயத்தோடு நிற்கிறோம். முதலமைச்சரின் வார்த்தைகளிலும், உடல்மொழியிலும் நம்மை ஏமாற்றும் போக்கோ. வஞ்சிக்கும் எண்ணமோ இருப்பதாக தெரியவில்லை. ஒரு பாராளுமன்றத் தேர்தலை எதிரில் வைத்துக்கொண்டு முதல்வர் தன்னுடைய உறுதிமொழிகளை தள்ளிப்போடுவதோ. இல்லையென்று கைவிரிப்பதோ அவர் வகிக்கும் பதவிக்கும் அவருக்கு இருக்கும் பெயருக்கும் புகழுக்கும் அழகாக இருக்காது என்பதை அவர் உணராதவர் இல்லை. இதுவரை அவர் கொடுத்த வாக்குறுதிகளுக்கும் இப்போது கொடுத்திருக்கும் உறுதிமொழிக்கும் வித்தியாசங்கள் பெரிதாக இல்லாத நிலையில் அவரின் வாக்குறுதிகளின் பேரில் பெரிய அளவில் சந்தேகம் எழவில்லை. கூடிய விரைவில் பட்ஜெட்உரை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் எதுவும் தரவில்லை என்பதற்காக நாம் உடனடியாக ஒரு போராட்டத்தை அறிவிப்பது உளமாற நலமாக இருக்காது. கூடிய விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரக்கூடிய நிலையில் கடைசியாக ஒருமுறை நாம் நம்முடைய போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைப்போம். இப்படி நாம் முடிவெடுப்பதால் நம்முடைய போராட்டங்கள் முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை. சேமித்து வைத்த சக்திகளை வீணடிக்காமல் பாதுகாத்து வைப்போம்.கொடுத்த வாக்குறுதிகள் நீர்த்துப்போனால் மீண்டும் போராட்டத்தை தொடரும் நிலைப்பாட்டில் ஒற்றுமையாக உறுதியாக இருப்போம். புறச்சூழல்களை கவனத்துடன் கண்காணிப்போம். எப்போது போராட்டம் என்றாலும் அதற்கான தயாரிப்புகளோடு தயாராக இருப்போம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாக ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள் பணியாளர்கள் குறித்தான தேர்தல் கால வாக்குறுதிகள் குறித்து கொள்கை முடிவினை அறிவிக்க வேண்டுமென ஜாக்டோ-ஜியோ கேட்டுக்கொள்கிறது.*
*தங்கள் நம்பிக்கையுள்ள*
*மாநில ஒருங்கிணைப்பாளர்கள்*
JACTTO-GEOவின் மூடநம்பிக்கையால் முழுமையாக உருப்பெற்ற தமிழ்நாட்டு அரசு ஊழியர் & ஆசிரியர் இயக்கங்களின் இருண்ட காலம்...
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
மூட நம்பிக்கை. . . . இருண்ட காலம். . . . என்ற இந்த இரு சொல்லாடல்களையும் விளங்கிக்கொள்ள வேண்டுமானால், நாம் கடந்து வந்த காலத்தைச் சற்றே நினைவுகூற வேண்டியுள்ளதால் முதலில் அதைத் தொகுத்தளித்துள்ளேன். நமக்கான தேவைகருதி நிதானமாக வாசிக்க வேண்டுகிறேன். வேதனையின் உச்சத்தோடே இப்பதிவைத் தொகுத்துள்ளேன் என்பதால் கால வரிசைப்படியான நிகழ்வுகளில் ஒன்றிரண்டு விடுபட்டிருக்கலாம். ஏனெனில், இப்படியொரு பதிவை எனது விரல்கள் தொட்டுத்தொடுக்குமென நான் கனவிலும் கண்டதில்லை.
*2017 செப்டம்பர் 4:*
JACTTO-GEO செப். 7 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து, 3 அமைச்சர்கள் (திரு.செங்கோட்டையன், திரு.ஜெயக்குமார், திரு.ஆர்.பி.உதயகுமார்) முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உடன்பாடு எட்டப்படவில்லை.
*2017 செப்டம்பர் 6:*
ஈரோட்டில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களைச் சந்தித்து JACTTO-GEO பேசுகிறது. முதல்வர் 4 மாதகால அவகாசம் (நவம்பர் 2017 வரை) கோருகிறார். இதனை ஏற்று சிலர் காத்திருக்க இசைவு தெரிவிக்கின்றனர். ஆனால், அவர்களது முடிவைப் புறந்தள்ளிவிட்டு JACTTO-GEO திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம் நடக்கும் என்று அறிவித்து அதன்படி நடத்தியும் காட்டியது. நீதிமன்ற கண்டனங்களையும் மீறி நடத்தப்பட்ட வீரியமிக்கப் போராட்டத்தால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தலைமைச்செயலாளரை நேரில் பதிலளிக்கப் பணித்து VII PAY COMMISSION பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த காலக்கெடு விதித்தது. போராட்ட காலமும் பணிக்காலமாக ஈடுசெய்யப்பட்டது.
*2019 ஜனவரி 22:*
ஜாக்டோ-ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்ற நிலையில், சென்னையில் கைதான மாநிலப் பொறுப்பாளர்கள் நிபந்தனையின் பேரில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர். +2 செய்முறைத் தேர்வுகளைக் காரணம் காட்டி சிலரும், ஆட்சியாளரின் கைப்பாவையாகி சிலரும், தமது தலைமைகளின் உறுதியான வாக்குறுதியில்லாததால் பலரும் 7ஆம் நாளோடே பணிக்குத் திரும்ப அரசுடனான எந்தவித உடன்பாடுமின்றி 31.01.2019ம் தேதியுடன் போராட்டம் முடிவிற்கு வருகிறது. தினமும் மாவட்டந்தோறும் மாநிலப் பொறுப்பாளர்கள் தவிர்த்த 17,686 போராளிகள் கைதாகி சிறை சென்றனர். 2,338 போராளிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இறுதிநாள் வரை களத்தில் நின்ற 7,898 போராளிகளுக்கு 17B அளித்து பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். பதவி உயர்வு வாய்ப்பு பறிக்கப்பட்டது.
*2020 ஏப்ரல் 28:*
அஇஅதிமுக அரசு பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக 30.06.2021 வரை அகவிலைப்படி உயர்வு வழங்குவதையும் & நிலுவைத் தொகையையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது
*2020 அக்டோபர் 03:*
25.04.1963 முதல் 58 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் அஇஅதிமுக அரசின் கொள்கை முடிவின் படி இரத்து செய்யப்படுகிறது.
*2021 பிப்ரவரி 02:*
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று 2019 ஜனவரியில் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், தண்டனைகளை அனைத்தையும் ரத்து செய்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
*2021 மார்ச் 13:*
திமுக தனது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், அண்ணா வழங்கியது போல மீண்டும் உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் வழங்கப்படும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை வெளியிடுகிறது.
*2021 செப்டம்பர் 07:*
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழான அறிவிப்பில் 2016, 2017 & 2019 ஆண்டுகளில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோவின் போராட்ட நாள்களைப் பணிக்காலமாக முறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். (இன்றளவும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜாக்டோ-ஜியோவிற்கு அளித்த வாக்குறுதிகளில் தான் முதலமைச்சரான பின்னர் இந்த ஒன்றை மட்டுமே நிறைவேற்றியுள்ளார்.)
மேலும் இதே நாளில்தான் அண்ணா பெயரில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் தான் அளித்த வாக்குறுதிக்கு நேர்மாறாக, ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உயர்கல்வித் தகுதிக்கு ஊக்கத்தொகை மட்டுமே (Incentiveற்கு பதிலாக ஒருமுறை மட்டும் Lumpsum Amount) வழங்கப்படுமென அறிவிக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்.
*2021 டிசம்பர் 19:*
மேற்படி முதல் வாக்குறுதி மீறலைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற TNGEAவின் 14வது மாநில மாநாட்டில் அனைத்து தரப்பிற்கும் மத்திய அரசுக்கிணையான ஊதியத்தை வழங்கியது கழக ஆட்சிதான் என்றும் அரசு ஊழியர் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். (இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கிணையான ஊதியத்தைப் பறித்தது 2009ல் ஆட்சியிலிருந்த திமுக தான். இவ்வாறாக இது 15 ஆண்டுகால கோரிக்கையாக இன்றும் உள்ளது)
*2022 ஆகஸ்ட் 01:*
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதில் அவர் செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் 05.08.2022ல் அறிவித்திருந்த மாவட்டத் தலைநகர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இரத்து செய்யப்படுகிறது.
*2022 ஏப்ரல் 11:*
01.11.1980 முதல் வழங்கப்பட்டு வந்த. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் பெருந்தொற்று காரணமாக 27.04.2020ல் ஓராண்டிற்கு மட்டும் அஇஅதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், திமுக ஆட்சியில் மறு உத்தரவு வரும் வரை தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைத்து 11.04.2022ல் ஆணையிடப்பட்டது.
*2022 செப்டம்பர் 10:*
JACTTO-GEOவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில், "திமுக ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களுமான நீங்கள்தான் காரணம். இந்த அரசு, உங்களது நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தரும் என்று இப்போதும் நான் உறுதி அளிக்கிறேன்." என்று மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். (Incentive & EL Surrenderஐ இரத்து செய்துவிட்டுத்தான் இவ்வாறு உரையாற்றுகிறார்)
*2022 டிசம்பர் 31:*
30.06.2021 வரை ஓராண்டிற்கு அஇஅதிமுக அரசால் DA நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்த களத்திற்கு வந்து குரல் கொடுத்த நிலையில் மே 2021ல் பொறுப்பேற்ற திமுக அரசோ 31.12.2022 (கூடுதலாக ஒன்றரை ஆண்டுகள்) வரையிலான அகவிலைப்படி நிலுவையான 17%ஐ முழுமையாகக் கபளீகரம் செய்கிறது. (ஒன்றிய அரசு தான் நிறுத்தி வைத்ததைப் பின்னர் நிலுவைத் தொகையுடன் முழுமையாக வழங்கியது)
*2023 ஏப்ரல் 8:*
JACTTO-GEO ஏப். 11ல் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து, 3 அமைச்சர்கள் (திரு.எ.வ.வேலு, திரு.தங்கம் தென்னரசு, திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி) முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் குழு தெரிவித்ததை அடுத்து போராட்டம் இரத்து செய்யப்படுகிறது.
*2023 அக்டோபர் 30:*
03.10.2020க்குப் பின்பு உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் இரத்து செய்வதாக அஇஅதிமுக கொள்கை முடிவு எடுத்த நிலையில், அவர்களுக்கு ஒருபடி மேலே சென்று 03.10.2020க்கு முன்பு முடித்து அன்றைய தேதி வரை ஊக்க ஊதியத்திற்குக் காத்திருந்தோரின் விண்ணப்பங்களையும் 3 ஆண்டுகள் காக்க வைத்து இரத்து செய்தது திமுக அரசு.
*2024 பிப்ரவரி 13:*
பிப்ரவரி 15ல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் அறிவித்திருந்த நிலையில், திரு.எ.வ.வேலு, திரு.முத்துசாமி & திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்களுடன் போராட்டம் அறிவித்த JACTTO-GEOவும் அரசு அலுவலர் ஆசிரியர் & உள்ளாட்சிப் பணியாளர் கூட்டமைப்பும் அரசு அழைப்பின்பேரில் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
*அரசு அலுவலர் ஆசிரியர் & உள்ளாட்சிப் பணியாளர் கூட்டமைப்பு மட்டும் முதல்வர் ஏதும் அறிவிக்காவிடில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கிறது...*👍
JACTTO-GEO சலனமின்றி இருக்கிறது.
நிதி நிலைமை சரியில்லை என்றும், சரியாக சரியாக படிப்படியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களும் அதிகம் செய்கிறோம் என்றும் எனவே வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மாண்புமிகு அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அறிக்கைவிடுகிறார்.
அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து JACTTO-GEO பதில் அறிக்கை வெளியிடுகிறது.
*2024 பிப்ரவரி 14:*
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் NO WORK NO PAY என்று தலைமைச் செயலாளர் ஆணை பிறப்பிக்கிறார்.
இவ்வளவு நடந்து முடிந்த பின்னரும், JACTTO-GEO மட்டும் முதல்வரைச் சந்தித்துப் பேசுகிறது. அவர் புன்முறுவலோடே வரவேற்று நாஞ்செய்யலேனா வேற யாரு செய்வா எனக் கேட்டதாகவும் முதல்வர் மீது நம்பிக்கை வைத்து பிப்ரவரி 15 ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை இரத்து செய்கிறது.
*2024 பிப்ரவரி 15:*
*அரசு அலுவலர் ஆசிரியர் & உள்ளாட்சிப் பணியாளர் கூட்டமைப்பு மட்டும் அறிவித்தபடி பிப்ரவரி 15 ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்துகிறது...*
*2024 பிப்ரவரி 19:*
சட்டமன்ற கூட்டத்தொடரை எதிர்பார்த்து போராட்டத்தை இரத்து செய்த JACTTO-GEOவிற்கும் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகக் கொடிதான ஏமாற்றமே மிஞ்சுகிறது.
*2024 பிப்ரவரி 24:*
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கூடிய JACTTO-GEO மாநில உயர் மட்டக்குழு கூட்டத்தில், பிப்ரவரி 26 முதல் அறிவித்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தையும் இரத்து செய்துவிட்டு பொறுத்திருப்போம்! நிறுத்திவைப்போம்! காத்திருப்போம்! பதுங்கி பசித்திருப்போம்! விழித்திருப்போம்! ஒற்றுமையுடன் இருப்போம்! என்று நீண்ட நெடிய மூடநம்பிக்கைக் கதையை அறிக்கையாக வெளியிட்டுத் தனது ஆகச்சிறந்த அறப்பணியைத் தேதி குறிப்பிடாமல் இனிதே மூட்டைகட்டி வைத்துவிட்டது.
*** *** *** ****
மேற்கண்ட காலக்கிரமமான செயல்பாடுகளின் வழியே இந்த மூன்றாண்டு காலத்தில் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கான நம்பிக்கையைத் தக்கவைக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் இந்த ஆட்சியாளர்கள் ஈடுபடாததோடே, அஇஅதிமுக ஆட்சியில் இருந்ததைவிடக் கூடுதலாக JACTTO-GEO, DSE JACTTO, TETOJAC என்ற பதாகைகளில் 40க்கும் மேற்பட்ட கோரிக்கைகளுக்காகப் போராடும் சூழலை உருவாக்கியுள்ள நிலையில், JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அந்த மூடநம்பிக்கைக் கதையில், 'திராவிட முன்னேற்றக் கழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மட்டும்தான் நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றித்தரமுடியும் என்ற நம்பிக்கை மீண்டும் மலர்ந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளதில் இருந்து ஒன்றுமட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது, ஒட்டுமொத்த ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களும் போராடி எதையும் பெற்றுத்தரும் தொழிற்சங்க இலக்கணத்தைப் பின்பற்றத் தயாராக இல்லாது ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை வைத்து காலம் கடத்தினாலே போதும் அனைத்தும் கிடைத்துவிடும் என்ற மூட நம்பிக்கையில்தான் உள்ளனர்.
இவர்கள் குறிப்பிடுவது போல, திராவிட முன்னேற்றக் கழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே தானாக முன்வந்து அனைத்து கோரிக்கைகளையும் செய்து கொடுத்துவிடுவாரென்றால், குறைகளைக்கூற அவர்கள் கொண்டுவந்த ஆசிரியர் மனசு, ஊழியர் உள்ளம்னு ஏதேதோ இருக்கே!
ஜாக்டோ-ஜியோ இனி எதற்கு?
தனித்தனியே சங்கங்கள்தான் எதற்கு?
போராடாமல் எதுவும் கிடைக்காது என்ற தொழிற்சங்க இலக்கணம் குறித்து மற்றவர்களுக்குப் பாடமெடுக்கும் இடதுசாரி ஆசிரிய & அரசு ஊழியர் சங்கப் பொறுப்பாளர்கள் தத்தமது சங்கத்தில் இருந்து வெளியேறி ஒரு நல்ல சுப முகூர்த்தநாளில் திமுகவிலும் திமுக சங்கங்களிலும் தங்களை இணைத்துக் கொள்ளலாமே!?
தியாகிகளுக்கு வீரவணக்கம் என்று பொருந்தா புகழொலியை இனி முழங்க வேண்டிய அவசியமென்ன? நீங்கள் இன்று பொறுப்பு வகிக்கும் சங்கங்களை உருவாக்கிக் கட்டிக் காத்து உறுப்பினர்களுக்கு அரணாக நின்று தன் இந்நுயிர் ஈந்த தியாகிகளெல்லாம் முட்டாள்களோ? அவர்கள் ஏன் ஆட்சியாளர்களை நம்பாது போராட்டக் களத்தை நம்பி இந்நுயிர் துறந்து உரிமைகளை ஈன்றளித்தனர்?
நீங்கள் இதுவரை காத்துக்கிடந்த காலத்தில் CPSல் இறந்தோரின் குடும்பங்களும் ஓய்வுற்றோரின் குடும்பங்களும் ஓய்வூதியமின்றி நாதியத்துக் கிடக்கிறதே! அவர்களுக்கு உங்களது பதிலென்ன?
இனியும் நீங்கள் நம்பிக்கையை மட்டுமே வைத்து காத்திருக்கத் தயாராகிவிட்டதால் இனி இறக்கப்போவோரின் குடும்பங்களுக்கும் ஓய்வுறப்போவோரின் குடும்பங்களுக்கும் உங்களது பதிலென்ன?
15 ஆண்டுகளாக ஊதியத்தை இழந்து கடைநிலையில் தள்ளப்பட்டுள்ளதோடே, ஓய்வூதியம், ஊக்க ஊதியம், BT பதவி உயர்வு, EL Surrender என அனைத்தையும் இழந்தும் உங்களது கரங்களை வலுப்படுத்திக் கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு உங்களது பதிலென்ன?
பொறுத்திருப்போம்! நிறுத்திவைப்போம்! காத்திருப்போம்! பதுங்கி பசித்திருப்போம்! விழித்திருப்போம்! ஒற்றுமையுடன் இருப்போம்! இது தானோ?
சரி. இது தான் பதில் என்றால், பின்னர் அந்த மூட நம்பிக்கைக் கதையில், 'திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மட்டும்தான் நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றித்தரமுடியும் என்ற நம்பிக்கை மீண்டும் மலர்ந்துள்ளது' என்ற காட்டாற்று உருட்டு எதற்கு?
மொத்தத்துல தென்னமரத்துல ஒரு குத்து. பனமரத்துல ஒரு குத்து.
ஆட்சியாளர்களுக்காக உறுப்பினர்களின் உரிமைகளைக் காலவரையறையின்றி ஒருபுறம் அடகு வைத்துவிட்டு, மறுபுறம் அடுக்கு மொழியில் உறுப்பினர்களை உணர்வோடே வைக்கிறோம் என்னும் பொறுப்புமிக்கோர் முழுமையாக உள்ள இக்காலம் மெய்யாகவே தமிழ்நாட்டு ஆசிரியர் அரசு ஊழியர் இயக்க வரலாற்றின் இருண்ட காலமே! இதைச் சாத்தியப்படுத்திய பெருமை JACTTO-GEOவில் அங்கம் வகிக்கும் அனைத்துச் சங்கங்களின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கும் உரியதே!
நானெல்லாம் அப்படியில்லை என்று சொல்ல முன்வரும் எவரும் நாளையே உரிமை மீட்பிற்கான களப்போராட்டத்தைத் தாராளமாக அறிவிக்கலாமே! ஆயிரம் அணிகளுடன் கூட்டு சேர்ந்து வாழ்வோரைவிட ஒற்றை அணியாகப் போராடித் தோற்று வீழ்ந்தாலும் அவர்களை மட்டுமே வரலாறு போற்றும்!
*பின்குறிப்பு :*
JACTTO-GEOவின் அறிக்கையை மூடநம்பிக்கைக் கதையென எப்படி சொல்லலாமென பொங்கும் எந்தவொரு உயிரினமும் மேலிருந்து கொடுக்கப்பட்டுள்ள தேதிவாரியான கால நிகழ்வுகளைப் பொறுமையுடன் நிதானமாகப் படித்துப் பார்த்தால் மெய்யாகவே மனிதனாகலாம்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் - சபாநாயகர் அப்பாவு பேச்சு...
பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார் - சபாநாயகர் அப்பாவு பேச்சு...
நாகர்கோவில் கோட்டாறு நாராயண குரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:
முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மிகப்பெரிய நிதி நெருக்கடி அரசுக்கு உள்ளது.
இந்த சுமையை தாண்டி மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1000 ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசு நிதியாக நாம் செலுத்துகின்ற வரிக்கு அவர்கள் திருப்பித் தருவது ஒரு ரூபாய்க்கு 29 காசு தான். நமக்கு சரியான நிதி பகிர்வு இருந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் அறிவித்து விடுவார்.
முதல்வர் நிச்சயமாக சொன்னதை செய்து விடுவார். ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் சந்தித்து அவர்களை அழைத்துப் பேசி ஒரு ஒரு உறுதியை கொடுத்துள்ளார். எனவே அளித்த வாக்குறுதியை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும். இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...