கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அதீத நம்பிக்கை ஆபத்தானது - இன்று ஒரு சிறு கதை...


அதீத நம்பிக்கை ஆபத்தானது - இன்றைய சிறுகதை...


ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.


ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலைசெய்கிறேன். ஆனால் நான் செய்யும்வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது.


மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான். 


பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது.


இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி, “மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்” என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்துக் கொண்டது.


புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, “மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிகக் குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்யக் கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றான்.


கோபமடைந்த மாடு, “எஜமான்! இந்தப் புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை” என்றது. 


அதற்கு வியாபாரி, “மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்றுத் தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு, “வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்” என்று கூறியது.


மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்கத் தொடங்கியது. ஆனால் மிகக் கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லைக் கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் கழித்து வியாபாரி, “மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றான். 


“எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?” என்றது.


வியாபாரி அதற்கு “அவர்கள் உன்னை வேலை செய்யச் சொல்ல வாங்கவில்லை. உன்னைக் கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றான்.


வியாபாரி சொன்ன பதிலைக் கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வரத் தொடங்கியது. “எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்” என்றது.


அதைக் கேட்ட வியாபாரி, “நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்” என்றான். மாடு தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டது.


சிந்தைக்கு இனியோர்க்குச் சிறக்கட்டும் இந்நாள் .. 🙏



தமிழ்நாட்டில் காங்கிரஸ் & ம.தி.மு.க. கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்...


 தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்...


✦ திருவள்ளூர் (தனி)

✦ கடலூர்

✦ மயிலாடுதுறை

✦ சிவகங்கை

✦ திருநெல்வேலி

✦ கிருஷ்ணகிரி

✦ கரூர் 

✦ விருதுநகர்

✦ கன்னியாகுமரி



தமிழ்நாட்டில் ம.தி.மு.க. கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19-03-2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19-03-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல்.


குறள் 88:


பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.


விளக்கம்:


செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.






பழமொழி : 


Art is long and life is short


 கல்வி கரையில் கற்பவர் நாள் சில



பொன்மொழி:


அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல.

உழைக்கும் நேரம்...



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்

உழவனின் நண்பன் - மண்புழு

சிதைப்பவை - காளான்

உயிர்க்காரணி - பாக்டீரியா

முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்

பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - துருவப் பிரதேசம்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Last - கடைசி

Later - பிறகு 

Laugh - சிரி 

Lead - நடத்து 

Learn - கற்று கொள் 

Leaf - இலை 


ஆரோக்கியம்


  உங்கள் மதிய உணவில் 50 சதவீத காய்கறிகள் இருக்க வேண்டும். நீங்கள் அரிசியுடன் காய்கறிகளை சாப்பிடுகிறீர்கள் என்றால், உங்கள் தட்டில் பாதி காய்கறிகளால் மட்டுமே நிரம்ப வேண்டும்.

.


இன்றைய சிறப்புகள்


மார்ச் 19


1895 – லூமியேர் சகோதரர்கள் தாம் புதிதாக உருவாக்கிய திரைப்படக் கருவியின் மூலம் முதற்தடவையாக திரைப்படத் துண்டைப் பதிவு செய்தனர்.

1915 – புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.



பிறந்த நாள் 

-



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


-


நீதிக்கதை


இயல்வது கரவேல் 


மயிலாடி என்ற ஊரில் தினசரி சந்தை ஒன்றிருந்தது. சந்தையில் எல்லாப் பொருட்களுமே மக்களுக்கு தரமான விலையில் கிடைத்ததால், மக்கள் கூட்டம் தினமும் சந்தையில் அலை மோதியது. 


அந்தச் சந்தையில் சோலையப்பன் என்பவன் காய்கறிக் கடை வைத்திருந்தான். சோலையப்பன் கடையில் தினமும் நல்ல விதமாக வியாபாரம் நடைபெறத் தொடங்கியது. 


ஒருசில நாட்களில் மயிலாடி ஊரைச் சுற்றிலும் கடும் மழை பெய்யத் தொடங்கியது. கடும் மழை தொடர் மழையானது. ஒருவாரம் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. 


இந்தத் தொடர் மழையால் சந்தையில் நடத்தி வந்த சோலையப்பனின் காய்கறி வியாபாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. சோலையப்பன் மிகவும் கஷ்டப்படலானான். 



அவனுக்கு தினமும் காய்கறி கொடுத்து வந்தவர்கள் சோலையப்பன் ஒரு வாரமாக பணம் கொடுக்காத காரணத்தால் காய்கறி கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். 


சோலையப்பன் “மழையினால்தானே தொழில் பாதிப்படைந்தது. மற்றபடி நான் உங்களுக்கு பணம் தவறாமல் கட்டி வந்திருக்கின்றேனே ! வழக்கம் போல் எனக்கு காய்கறிகள் கடனாக கொடுங்கள்” என்று எவ்வளவோ கெஞ்சிக் கேட்டான். 


சோலையப்பனின் அழுகுரலை மொத்த காய்கறி வியாபாரிகள் நிராகரித்துவிட்டனர். சோலையப்பன் கவலையில் ஆழ்ந்தான். இனிமேல் இவர்களை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. 


நாம் யாரிடமாவது பணம் கடனாக வாங்கிதான் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். உடனே தன் நண்பன் ஆறுமுகத்தின் உதவியை நாடி, அவனிடம் சிறிது பணம் கடனாகக் கேட்டான். 



ஆறுமுகம் சோலையப்பனை நன்கு உபசரித்து அனுப்பினான். பணம் மட்டும் கொடுக்காமல் கையை விரித்துவிட்டான். ஆறுமுகத்திற்கு சோலையப்பன் ஒரு காலத்தில் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கின்றான். 


ஆனால் இப்போது தனக்கு உதவி செய்யாத ஆறுமுகத்தை நினைத்து மனம் வெம்பினான் சோலையப்பன். இரவு நேரம் ஆறுமுகம் தன் வீட்டில் குறட்டை விட்டபடி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.


 அப்போது நான்கைந்து திருடர்கள் ஆறுமுகத்தின் வீட்டின் உள்ளே நுழைந்தார்கள். ஆறுமுகத்தை அடித்து உதைத்து அவன் வீட்டில் இருந்த பணத்தை எல்லாம் திருடிச் சென்று விட்டார்கள். 


சோலையப்பனுக்கு உதவி செய்யாத ஆறுமுகத்தின் பணம் அநியாயமாக திருடர்களின், வசம் சென்றுவிட்டது. 

இயன்றவரையிலும் பிறருக்கு, மறைக்காமல் பொருள் உதவி செய்ய வேண்டும்.




இன்றைய முக்கிய செய்திகள் 


19-03-2024 


மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்; சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.40 லட்சம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு...


தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ செயல்பாடு நேர்மையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி : ரகசிய எண்களை வெளியிடாதது ஏன் என கேள்வி...


தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்...


ரஷ்ய அதிபர் தேர்தலில் 5-வது முறையாக வெற்றி பெற்றுள்ள புதினுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து...


ஹைதராபாத்தில் உள்ள நேரு பூங்காவில் 125 வயதான ராட்சத ஆமை உயிரிழப்பு...


Today's Headlines:

19-03-2024


Lok Sabha election candidates can spend up to Rs 95 lakh; Rs 40 lakh for Assembly Constituency: Chief Electoral Officer Sathyapratha Sahu...


 Supreme Court displeased that SBI's operation was not honest in the election bond case: Question why secret numbers were not disclosed... 


In Tamil Nadu, 5 lakh people have applied for inclusion in the voter list: Election Commission informs...


 Indian Prime Minister Modi congratulates Putin who has won the Russian presidential election for the 5th time...


125-year-old giant tortoise dies in Hyderabad's Nehru Park...


எண்ணும் எழுத்தும் - 1-5 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு நடத்துவதற்கு வினாத்தாள் நகல் எடுக்க ரூ.2,43,60,453 நிதி விடுவித்தல் - BEO Loginல் வினாத்தாள் பதிவிறக்கம் செய்து பிரதி எடுத்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 30657/ கே2/ 2024, நாள்: 15-03-2024...

 

எண்ணும் எழுத்தும் - 1-5 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு நடத்துவதற்கு வினாத்தாள் நகல் எடுக்க ரூ.2,43,60,453 நிதி விடுவித்தல் - BEO Loginல் வினாத்தாள் பதிவிறக்கம் செய்து பிரதி எடுத்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 30657/ கே2/ 2024, நாள்: 15-03-2024...


Ennum Ezhuthum - Release of Rs.2,43,60,453 for print of question paper for conduct of third term examination for classes 1-5 - Download and Print of question paper in BEO Login - Proceedings of Director of Elementary Education Rc.No: 30657/ K2/ 2024, Date : 15-03-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ரூ.5,00,000க்கு மேல் பிடித்தம் செய்யப்படும் பணியாளரின் GPF Subscription தொகை Suspense Accountல் வரவு வைக்கப்படும் - மாவட்டக் கருவூல அலுவலர் கடிதம்...


 GPF சந்தா தொகையில் அதிகபட்சமாக எவ்வளவு பிடிக்கலாம்...


IFHRMS - மாதம் ரூ.41500க்கு மேலும், ஆண்டுக்கு ரூ.5,00,000க்கு மேல் பிடித்தம் செய்யப்படும் பொது வருங்கால வைப்பு நிதி சந்தா GPF Subscription தொகை பணியாளரின் GPF Account Slipல் வரவு வைக்கப்படுவதற்குப் பதிலாக Suspense Accountல் வரவு வைக்கப்படும் - காஞ்சிபுரம் மாவட்டக் கருவூல அலுவலர் கடிதம், நாள்: 15-03-2024...



>>> காஞ்சிபுரம் மாவட்டக் கருவூல அலுவலர் கடிதம் ந.க.எண்: 81/ 2024/ ஆ , நாள்: 15-03-2024...


வேலை - நாம் பெற்ற வரம் - வேலைப்பளு அதிகம் என்று புலம்பாதீர்கள்...



வேலை - நாம் பெற்ற வரம் - வேலைப்பளு அதிகம் என்று புலம்பாதீர்கள்...

💐💐💐💐💐💐💐


வேலைப்பளு அதிகமென்றோ..

வேலை பார்க்கும் இடத்தில் மன உளைச்சல் என்றோ  புலம்பாதீர்கள்..!! 


💐 இந்த வேலை தான்  சமூக அந்தஸ்தையும், மரியாதையையும். தனித்த அடையாளத்தையும்இதையெல்லாவற்றை விடவும் நாம் தலை நிமிர்ந்து வாழத் தேவையான சம்பளம் எனும் வாழ்வாதாரத்தையும்  வழங்கியது என்பதை மறந்து விட வேண்டாம்..!! 


💐வேலை கிடைக்காத வேலையில்லா பட்டதாரிகள் நிறைந்த தேசமிது..!! 


💐வேலை கிடைத்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நம் வேலை சார்ந்த மன உளைச்சலை விடவும்.. வேலை கிடைக்காத வேலையில்லாதவனின் மனப் போராட்டம்..

வலி.. 

வேதனை.. 

ரணம்..

அவமானம்..

துயரம்..

துக்கம்..

மிக மிகப் பெரியது..!! 


💐 தனக்கென்று ஒரு நிரந்தர வருமானம் தரும் வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவனின் மனநிலையை..

அதன் வீரியத்தை வெறும் வெற்று வார்த்தைகளால் சொல்லி விட முடியாது..!! 

இங்கு எல்லோருக்கும்  வேலை கிடைத்து விடுவதில்லை..!! 


💐உண்மையில் வேலைப் பளுவென்பதும் சலிப்பு என்பதும் வேலையில் ஈடுபாடு இல்லாததால் வருவது 


💐நீங்கள் சலித்து கொண்டு பார்க்கும் இவ்வேலையை விட்டால் அதனை பெறுவதற்கு இலட்சக்கணக்கான  பேர் போட்டியிடுவர். அப்படிபட்ட வேலையை பெற்றிருக்கிறோம் என்று கடவுளுக்கு நன்றி சொல்லி பெருமையுடன் வேலை பாருங்கள்.  


💐வேலை பார்க்கும் ஒவ்வொரு நொடிக்கும் ஊதியம் பெறுகிறோம்  


💐ஒரு நொடி கண் மூடி யோசித்துப் பாருங்கள்... 

இந்த வேலையில்லாமல் இருந்தால் நாம் ஒரு செல்லாக்காசு என்பது புலப்படும்.

 

💐உடல் வலிமையோடு உள்ளவர்கள் ஓய்வு பெற்றவுடன்  மன வேதனையில் ஒடிந்து உடல் வலிமை குன்றி போவதைக் காணலாம் 


💐படிப்பு முடிந்து தீராத வேட்கையோடு வேலையொன்றை எட்டிப் பிடிக்கப் போராடும் நம்பிக்கை நிறைந்த மனிதர்களின் போராட்டத்திற்கு முன்பு நம் வேலைப் பளுவெல்லாம் தூசுக்குச் சமம்..!!  


💐கொஞ்சம் கூடுதல் வேலை என்பதை ரசித்து இன்முகத்தோடு எதிர் கொண்டால் மனம் சலிப்படையாது மாறாக உற்சாகம் அடையும்   


💐வேலையென்பது  நம் வாழ்க்கையின் ஆதாரம் அஸ்திவாரம்..!! 

உண்மையில் கிடைத்த வேலையை சரியாக பார்க்கவில்லை என்றால் எத்தனை பேருக்கு பாதிப்பு என்பதை சிந்தித்து பாருங்கள். பிறர் சரியாக வேலை பார்க்காததால் நாம் பட்ட கஷ்டத்தை எண்ணி பாருங்கள்...


💐எதற்காகவும்  உத்தியோகத்தைச் சலித்துக் கொள்ளாதீர்கள்....

வேலையென்பது சாபமல்ல.. உழைப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு..

வசதி இறைவன் கொடுத்த

வரம்.

ஓய்வு பெறுவதற்குள் ஒவ்வொரு நாளும் இன்முகத்துடன் வேலைக்கு செல்வோம்...

இயன்ற அளவு நேர்மையாகவும்,

அறத்துடனும் பணியாற்றுவோம்.

வேலை செய்வோம் வாழ்வில் உயர்வோம்...


எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 3 - அலகு 8 - மார்ச் மூன்றாவது வாரம் - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 3 - Unit 8 - March 3rd Week - Tamil & English Medium Lesson Plan)...

 


>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 3 - அலகு 8 - மார்ச் மூன்றாவது வாரம் - தமிழ் வழி பாடக்குறிப்பு  (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 3 - Unit 8 -  March 3rd Week - Tamil  Medium Lesson Plan)...




>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 3 - அலகு 8 - மார்ச் மூன்றாவது வாரம் - ஆங்கில வழி பாடக்குறிப்பு  (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 3 - Unit 8 -  March 3rd Week - English  Medium Lesson Plan)...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School Education Minister Anbil Mahes paid tribute to murdered teacher Ramani and condoled with her family.

  தஞ்சாவூர்: மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது க...