கோவை - மருதமலை பாரதியார் பல்கலைக்கழகம் பின்புறம் உள்ள வீட்டின் அருகில் வந்த யானையிடமிருந்து நொடி நேரத்தில் உயிர் தப்பிய தம்பதியினர்...
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
கோவை - மருதமலை பாரதியார் பல்கலைக்கழகம் பின்புறம் உள்ள வீட்டின் அருகில் வந்த யானையிடமிருந்து நொடி நேரத்தில் உயிர் தப்பிய தம்பதியினர்...
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
அமைதியான மனம்...
மன அமைதி’ என்கிற இரண்டெழுத்து வசப்பட்டால் போதும். எதிலும், எங்கும் வெற்றியே, ஆனால்!, அனைவருக்கும் எளிதாக அது வாய்ப்பது இல்லை. பரபரப்பான மனம் கொண்ட ஒருவரை விட, மன அமைதி உள்ளவர் சிறப்பாகச் சிந்திப்பார்...
அவர் ஒரு விவசாயி!. அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் ஒரு சிறிய பண்ணை வீட்டில் இருந்த அவர், பல ஆண்டுகளாகத் தன் கையில் ஒரு கடிகாரம் கட்டியிருந்தார்...
அவரைப் பொறுத்தவரை அது வெறும் கைக்கடிகாரம் அல்ல. உணர்வுகள். பல நல்ல தருணங்கள், வெற்றிகள் அவருக்கு நிகழ்ந்ததற்கு அந்தக் கடிகாரம் தான் காரணம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது...
ஒருநாள் பண்ணை வேலை எல்லாம் முடிந்து வெளியே வந்த பிறகுதான் கவனித்தார். அவர் கையில் கட்டி இருந்த கடிகாரத்தை காணவில்லை...
உடனே பரபரப்பாகி, தன் விவசாயக் கிடங்குக்குள் போய்த் தேட ஆரம்பித்தார். எவ்வளவு நேரம் தேடியும் கடிகாரம் கிடைக்கவில்லை. கவலையோடு வெளியே வந்தார்...
அவருடைய கிடங்குக்கு வெளியே சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அவருக்கு உடனே ஒரு ஆலோசனை கிடைத்தது..“சிறுவர்களே...!!” என்று அழைத்தார். சிறுவர்கள் ஓடிவந்தார்கள்...
இந்தக் கிடங்குக்குள் என் கடிகாரம் காணாமல் போய்விட்டது. கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு அருமையான பரிசு ஒன்ற தருவேன்” என்றார்...
மாணவர்கள் துள்ளிக் குதித்தபடி, அவருடைய வேளாண் கிடங்குக்குள் ஓடினார்கள். அத்தனைபேரும் உள்ளே இருந்த வைக்கோற்போர், புல், பூண்டு, இண்டு, இடுக்கு விடாமல் தேடியும் கிடைக்கவில்லை...
சோர்ந்து போனவர்களாக வெளியே திரும்பி வந்தார்கள் விவசாயி வசம், “மன்னியுங்கள் அய்யா!, எங்களால கண்டு பிடிக்க இயலவில்லை’’ என்றார்கள்...
அந்த நேரத்தில், தயங்கித் தயங்கி ஒரு சிறுவன் அவரருகே வந்தான். அய்யா!, எனக்கு மட்டும் இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் அந்த கடிகாரம் கிடைக்கிறதா...? என்று முயற்சி செய்து பார்க்கிறேன்’’ என்றான்...
சிறுவன் கிடங்குக்குள் நுழைந்தான். கதவைச் சாத்திக் கொண்டான். அவன் உள்ளே நுழைந்து பதினைந்து நிமிடங்கள்தாம் ஆகியிருக்கும். கதவு திறக்கப் பட்டது. வெளியே வந்தான்.அவன் கையில் காணாமல் போயிருந்த அவரின் கடிகாரம் இருந்தது...
அவருக்கு ஒரே வியப்பு. தம்பி!, நீ மட்டும் எப்படி சரியாக கடிகாரத்தை கண்டுபிடித்தாயா...?’’ என்று கேட்டார்...
அய்யா!, நான் உள்ளே போய் ஒன்றுமே செய்யவில்லை. கிடங்கிற்கு நடுவில் கண்ணை மூடி அமர்ந்திருந்தேன். ஐந்து நிமிடங்கள் அப்படியே காத்திருந்தேன். அந்த அமைதியில் கடிகாரத்தின் `டிக்...டிக்... டிக்...’ ஒலியானது கேட்டது. ஒலித்த திசைக்கு சென்றேன், கடிகாரத்தை. கண்டு பிடித்தேன் என்றான்.
நாளும் சற்று நேரத்தை, மனதை அமைதிப்படுத்த செலவழித்துப் பாருங்கள்.
உங்களால் எவ்வளவு தெளிவாக, சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நீங்களே அறிவீர்கள்.
அரசு / ஊராட்சி ஒன்றிய /நகராட்சி/ மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் - ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பள்ளியில் பராமரிப்பு செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 22-06-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Career Guidance – Teacher Counsellor / Quiz Coordinator nomination for class 6 to 8 in Govt. Middle/ HS / HSS – Reg...
அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் வழங்குதல் பொருட்டு, இணைப்பில் காணும் காணொளியில் தெரிவித்துள்ளவாறு, 6 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரை (Quiz Coordinator) தெரிவு செய்து, School EMIS தளத்தில் பதிவு செய்திடுமாறு அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
>>> Career Guidance – Teacher Counsellor / Quiz Coordinator nomination செய்யும் முறை (காணொளி)...
துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தர மறுத்தது சரியே - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - நாளிதழ் செய்தி...
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...
🧿'' தோற்றத்தை வைத்து..''
முகத்தோற்றதை பார்த்து பழகுகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை. பெரும்பாலான அவமானங்களில் உருவம் சார்ந்தது ஒருவகை.
அவமானங்கள் எய்பவர்கள் சாதாரண மனிதர்கள். அதில் வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள்.
அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் தான் அழகில் வெற்றியாளர்கள்.
அழகு என்பது புறம் சார்ந்ததா? அகம் சார்ந்ததா? என்று நடத்திய ஆய்வில் தொண்ணூறு சதவீதம் மக்கள் ‘அழகு அகம் சார்ந்ததே’ என்று சொன்னார்கள்.*
நாம் நமது உடல் அழகுக்கு செலவிடும் நேரத்தில் கொஞ்சமாவது உள்ளத்தின் நல்ல பண்புகளை கடைப்பிடிக்க பயிற்சி செய்தால் நலமாக இருக்கும்.
ஒரு ஊர்ல ஒரு குருவி இருந்தது. அந்தக் குருவி பல வண்ணத்தில் ரொம்ப அழகாக இருந்தது.. தான் மட்டும் அழகு என எப்போதும் பெருமையாக சொல்லிக் கொண்டு இருக்கும்.
நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் கூட அழகைப் பார்த்தே முடிவு எடுக்கும் அந்தக் குருவி.
ஒரு நாள், ஒரு காகம் ஒன்று வந்து அந்த குருவி கிட்ட ‘நாம நண்பர்களாக இருக்கலாமா?’ எனக் கேட்டது.
அதற்கு அந்தக் குருவி, நான் எப்படி அழகாக இருக்கிறேன்.உன்னை நீயே கண்ணடியில் போய்ப் பாரு என்று அசிங்கமாகத் திட்டி அந்தக் காக்காவை விரட்டி விட்டது.
அந்தக் காக்கா மிகவும் வருத்தப்பட்டு அந்த இடத்தை விட்டுப் போனது.
சில மாதங்களுக்கு பிறகு அந்தக் குருவிக்கு உடம்பு சரியில்லாமல் போனது. அந்த குருவிக்கு இறகு எல்லாம் விழுந்து அழகு குலைந்து சாகும் தருவாயில் இருந்தது.
இதைக் கேள்விப்பட்ட காக்கா பதற்றம் அடைந்து மருந்து கொண்டு வந்து அந்த குருவிக்கு கொடுத்தது. அது மட்டும் அல்லாமல் அருகிலேயே இருந்து அந்தக் குருவியை நன்றாகப் பார்த்துக் கொண்டது.
சில நாட்களுக்கு பிறகு அந்த குருவி குணமடைந்தது. அந்தக் காக்காவை பார்த்து, ‘எனக்கு துன்பம் வந்த போது எனது நண்பர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை.
ஆனால் நீயோ என்னை காப்பாற்றி விட்டாய். உலகிலேயே நீ தான் அழகானவன் . இனிமேல் நீதான் என் உயிர் நண்பன்’ என்றது.
*😎ஆம்.,தோழர்களே..*
*யாரையும் அவர்களின் தோற்றத்தை வைத்து அசிங்கப்படுத்தக் கூடாது,
*⚽புறத்தோற்ற அழகு அழியக் கூடியது, ஆனால் அகத்தின் அழகோ அழியாதது, நிலையானது..*
*🏵️ஏனென்றால் அக அழகு என்பது அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நாணயம், நம்பிக்கை, தன்னடக்கம் என்று எல்லாவற்றையும் உள் அடங்கியது. அது தான் உண்மையான அழகு.*
*⚽அது எல்லோராலும் பாராட்டப்படும் அழகு. ஆதலால் தான் மற்ற எல்லா வார்த்தைகளை விடவும் அழகு என்ற வார்த்தை வாயில் இருந்து உச்சரிக்கும் போதே நல்ல உணர்வைக் கொடுக்கிறது.*
*🏵️வெளித்தோற்றம் சார்ந்த நிராகரிப்புகளை எண்ணிக் கரங்களை நறுக்கிக் கொள்ளாதீர்கள்.*
*⚽ஏழையின் விரலுக்கு எட்டும் வரை உங்கள் கரங்களை நீட்டுங்கள். அதுவே அழகின் அழகு..
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு - விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என தகவல்...
NEET-PG Entrance Examination, conducted by National Board of Examination postponed...
ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...