கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.08.2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.08.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:443

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

பொருள்: பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.


பழமொழி :
அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்

Justice stays long, but strikes at last


இரண்டொழுக்க பண்புகள் :

*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.


பொன்மொழி :

தலை குனிந்து என்னை பார். தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கிறேன்.----புத்தகம்.


பொது அறிவு :

1. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்?


விடை: மாலிக்

2. பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை

விடை: வில்லுப்பாட்டு



English words & meanings :

review-விமர்சனம்,

analyse-பகுப்பாய்வு


வேளாண்மையும் வாழ்வும் :

இனி விதைக்க உகந்த மாதங்கள் குறித்து பார்ப்போம். பழமொழியே உண்டு. “ஆடி பட்டம் தேடி விதை!” என்பதே ஆகும் .



ஆகஸ்ட் 05

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்  அவர்களின் பிறந்தநாள்

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 – ஆகத்து 25, 2012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். போரின் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின் அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணி புரிந்தார். தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவே தற்பொழுது டிரைடன் விமான ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படுகின்றது.


 
நீதிக்கதை

சிங்கமும் தந்திரமான முயலும்

முன்னொரு காலத்தில், காட்டுக்குள்ளே எல்லா விலங்குகளும் ஒன்று கூடி சிங்கராஜா பத்தி பேசிட்டு இருந்தாங்க. அதில் கரடி சொல்லிச்சு, “நம்ம எல்லாரும் இங்கே எதுக்காக ஒன்று கூடி இருக்கோம்னா, சிங்கராஜாவை எப்படி  காட்டில் இருந்து விரட்டி அடிக்கலாம் என்று யோசிக்க தான்”. “அவர் நமக்கு நிறையவே பிரச்சனையை கொடுக்குறாரு, அவருக்கு பசி எடுக்கும் போதெல்லாம் நம் உறவினர்களையும் நண்பர்களையும் பிடித்து சாப்பிடுகிறார்”.

அதற்கு  முயல் சொல்லுச்சாம் நம்ம, “நம்மளோட நண்பர்களை அடிக்கடி இழந்திட்டே வரோம். அதனால எப்படியாச்சும் இந்த சிங்கத்தை காட்டை விட்டு விரட்டி ஆகணும், ஆனால் அது எப்படி நம்மளால முடியும்”.

முயல் ஒரு திட்டம் போட்டிச்சு, எல்லோர் கிட்டயும் தன் திட்டத்தை சொல்லிச்சு. தங்களோட திட்டப்படியே சிங்க ராஜாவை எல்லோரும் சந்திக்க போனாங்க. அந்த சிங்கமோ மகாராஜா அரியணையில் அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தது. மற்ற எல்லா விலங்குகளும் தலையைத் தாழ்த்தியபடி அந்த சிங்கத்துக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தாங்க.

“எதுக்காக எல்லாரும் சேர்ந்து இங்கே என்ன பார்க்க வந்திருக்கீங்க”  என்று சிங்கம் கேட்டது. அதற்கு கரடி சொன்னது “நாங்க எல்லாரும் ஒரு திட்டம் போட்டிருக்கிறோம் அதன்படி நீங்க எப்பவுமே இங்கு அமர்ந்து இருந்தா போதும், உங்களுக்கு தேவையான உணவை நாங்களே கொண்டு வருவோம்” என்று சொன்னது. சிங்கராஜா ரொம்பவே சந்தோஷமா அந்தத் திட்டத்தை ஏத்துகிட்டாரு.

மறுநாள் அவங்க திட்டப்படி முயல் அந்த சிங்கத்துக்கு உணவாக போச்சு. முயல் ரொம்பவே தாமதமாக  சென்றது. அந்த சிங்கம் முயலிடம் மிகவும் கடினமாக நடந்து கொண்டது, “ஏன் இவ்வளவு தாமதம், அதுமட்டுமல்ல உன்னை  மட்டும் உண்பதால் என்னுடைய பசி எப்படி தீரும்” என்று அந்த சிங்கம் மிகவும் கோபமாக கேட்டது.

அதற்கு முயல் சொன்னது, “என்னை மன்னித்துவிடுங்கள் சிங்கராஜா நானும் என் குடும்பத்தாரும் மொத்தம் பத்து பேர்தான் உங்களுக்கு உணவாக வந்து கொண்டிருந்தோம், ஆனால் வரும் வழியில் இன்னொரு பெரிய சிங்கம் என் குடும்பத்தார் அனைவரையும் கொன்று சாப்பிட்டது, நான் மட்டும் எப்படியோ தப்பித்து இங்கே உங்களுக்கு உணவாக வந்தேன்” என்றது.

அதைக் கேட்ட சிங்கம் மிகவும் கோபம் பட்டது, “என்ன! என்னை விட வலிமையான வேறு சிங்கம் இங்கே எப்படி இருக்கமுடியும், அவன் எங்கே?”என்று கேட்டது. அதற்கு முயல், “நான் உங்களுக்கு அவனை காட்டித் தருகிறேன்” என்று சிங்க ராஜாவை கூட்டிக்கொண்டு ஒரு கிணற்றுக்கு அருகே சென்றது.

“கிணற்றுக்குள்ளே அந்த வலிமையான சிங்கம் இருப்பதாக  முயல் சொன்னது”. அதைக்கேட்ட சிங்கராஜா கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது தன்னுடைய உருவம் அங்கே தெரிந்ததை பார்த்து ஏமாந்து போன சிங்கராஜா அந்த கிணற்றுக்குள்ளே இருக்கும் இன்னொரு சிங்கத்தை தாக்கப் போவதாக சொல்லி அந்த கிணற்றுக்குள்ளே குதித்தது. சிங்கராஜா கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் உள்ளே தண்ணீரில் மூழ்கி விட்டது.

முயல் சந்தோஷத்தில் மிகவும் சத்தமாக கத்த தொடங்கியது. மற்ற எல்லா விலங்குகளும் ஓடிவந்து சிங்கராஜா தண்ணிக்குள் மூழ்கியதைக் கண்டு மிகச் சந்தோஷம் அடைந்தனர்.

நீதி : உடல் வலிமையை விட அறிவுதான் வலிமையானது.



இன்றைய செய்திகள்

05.08.2024

⚡மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 58 தாழ்தள பேருந்துகள் உள்ளிட்ட 100 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

⚡தமிழகம் முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: நெல்லைக்கு புதிய காவல் ஆணையர் நியமனம்.

⚡தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்து.

⚡வயநாடு நிலச்சரிவு பலி 361 ஆக அதிகரிப்பு: சூரல்மலா, முண்டக்கை, அட்டமலாவில் இனியும் மக்கள் வாழ முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

⚡தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவை  ரூ.50,655 கோடி மதிப்பிலான 8 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

⚡அமெரிக்க போர் கப்பல்கள், விமானங்கள் விரைவதால் மத்திய கிழக்கு நாடுகளில் திடீர் போர் பதற்றம்.

⚡பாரீஸ் ஒலிம்பிக்: ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்.

⚡பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

⚡The Sports Minister inaugurated the operation of 100 new and refurbished buses including 58 low-floor buses for the benefit of disabled persons.

⚡Transfer of 17 IPS officers across Tamil Nadu: New Police Commissioner appointed for Nellai.

⚡The Chennai Meteorological Department has said that there is a possibility of heavy rain at a few places in Tamil Nadu today and tomorrow.

⚡Wayanad landslide death toll rises to 361: Sooralmala, Mundakai, Attamala are in a state of survival.

⚡The Union Cabinet has approved 8 projects worth Rs.50,655 crore to improve the national highway infrastructure.

⚡Sudden war tension in Middle East countries as US warships and planes rush.

⚡Paris Olympics: Indian team advances to the Hockey semi-finals

⚡Paris Olympics Badminton: India's Lakshya Sen  looses to victor  axelson.

Prepared by

Covai women ICT_போதிமரம்


TETOJAC சார்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.07.2024, 30.07.2024 மற்றும் 31.07.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்ற DPI தொடர் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கை...

 

டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.07.2024, 30.07.2024 மற்றும் 31.07.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்ற டி.பி.ஐ தொடர் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து TETOJAC மாநில உயர்மட்டக்குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்)


04.08.2024


*மூன்று நாட்கள் பேரெழுச்சியுடன் நடந்த டி.பி.ஐ. முற்றுகைப் போராட்டம்!*


*பள்ளிக்கல்வித்துறைச் செயலருடன் சுமூகமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள்!*


*டிட்டோஜாக்கின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு!*


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.07.2024, 30.07.2024, 31.07.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் பள்ளிக்கல்வித்துறையின் தலைமை அலுவலகமான டி.பி.ஐ வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதென 14.07.2024 அன்று திருச்சியில் நடைபெற்ற டிட்டோஜாக் மாநில ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், டிட்டோஜாக்கில் இணைந்துள்ள 12 ஆசிரியர் சங்கங்களின் மாநில நிர்வாகிகள், டிடோஜாக்கின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், 12 இணைப்புச் சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.


இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மூன்று நாட்கள் முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக 12 இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகளும் கண்துஞ்சாது களப்பணியாற்றினர். மூன்று நாட்கள் டி.பி.ஐ முற்றுகைப் போராட்டம் என்ற கடுமையான களப்போராட்ட முடிவிற்கு டிட்டோஜாக் பேரமைப்பு ஏன் வந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே இப்படியொரு களப்போராட்டத்தை நடத்த டிட்டோஜாக் முடிவெடுக்கவில்லை என்பதை இந்த இடத்தில் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.


30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் பேரமைப்பு வட்டார அளவில், மாவட்ட அளவில் பல போராட்டங்களை எழுச்சியுடன் நடத்தியது. கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் 13.10.2023 அன்று சென்னையில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் தீர்மானித்தது. மாநிலம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்னை புறப்படத் தயாரான நிலையில், கோரிக்கைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த 12.10.2023 அன்று மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்தார். 


அமைச்சரது அழைப்பின் பேரில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் போராட்டத் தேதிக்கு முதல் நாள் மாலை பேச்சுவார்த்தைக்குச் சென்றனர். இப்பேச்சுவார்த்தையில் மதிப்புமிகு.பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களும், மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் பங்கேற்றார்கள். 1 மணி 45 நிமிடங்கள் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் டிட்டோஜாக் முன்வைத்த 30 கோரிக்கைகள் தொடர்பாகவும் ஒவ்வொன்றாக விரிவாக விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில் டிட்டோஜாக் முன்வைத்த 30 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆணைகள் வெளியிடப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.


இதனடிப்படையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டு டிட்டோஜாக் பேரமைப்பு 13.10.2024 அன்று சென்னையில் நடத்தவிருந்த மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தை ஒரு நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டமாக நடத்த முடிவெடுத்தது. அதன்படி 13.10.2023 காலை 10 மணிக்கு டிட்டோஜாக் சார்பில் சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டத்தில் ஆசிரியர் இயக்க வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரும், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநரும் அக்கூட்டத்தில் பங்கேற்று முதல் நாள் பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக பொதுமேடையிலேயே அறிவித்தனர். இதனால் மாநிலம் முழுவதும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் நியாயமான 30 கோரிக்கைகளில் முதற்கட்டமாக கோரிக்கைகளாவது நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.


ஆனால், இந்நிகழ்விற்குப் பின்பு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக எவ்வித ஆணைகளும் தொடக்கக்கல்வித்துறையால் பிறப்பிக்கப்படவில்லை. டிட்டோஜாக்கின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இது தொடர்பாக பலமுறை முயன்றும் ஆணைகளைப் பெற இயலவில்லை.


இந்தச் சூழலில் தான் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களின் முன்னுரிமையைப் பாதிக்கும் வகையிலும், பதவி உயர்வைப் பாதிக்கும் வகையில் ஊட்டுப் பதவிகளில் மாற்றம் செய்தும், குறிப்பாகத் தொடக்கக்கல்வித் துறையில் மிகப்பெரும்பான்மையாகப் பணியாற்றும் 80 சதவீதப் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வைப் பறிக்கும் வகையிலும் அரசாணை: 243 நாள்: 21.12.2023 தமிழக அரசால் வெளியிடப்பட்டது. 12.10.2023 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக ஆணைகள் வெளிவரும் என்று எதிர்பார்த்த தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு எதிர்பாராத விதமாக அரசாணை: 243 வெளியிடப்பட்டது தலையில் இடிதாக்கியதைப் போன்று இருந்தது. இதனால் மாநிலம் முழுவதும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பும், அதிருப்தியும் ஏற்பட்டது.


இதனைத் தொடர்ந்து டிட்டோஜாக் பேரமைப்பு அரசாணை 243 ஐ ரத்து செய்தல் உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி 19.02.2024 அன்று சென்னையில் மாபெரும் உண்ணவிரதப் போராட்டத்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக அரசாணை 243 தொடர்பாக டிட்டோஜாக் பேரமைப்பை அன்றைய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி 20.02.2024 அன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளரும், தொடக்கக்கல்வி இயக்குநரும் கலந்து கொண்டார்கள். 1 மணி 30 நிமிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்பு மீண்டும் ஒருமுறை டிட்டோஜாக் அமைப்பை அழைத்துப் பேசுவதாகவும் கூறினார். ஆனால், இறுதிவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கமலேயே அரசாணை 243ன் படி பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த ஆணை பிறப்பித்தார்.


பொதுவாக ஒரு துறையில் வெளியிடப்படும் அரசாணை என்பது அந்தத் துறையின் வளர்ச்சிக்கும், அதில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கும், அந்தத் துறையின் பயனாளிகளுக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு அதற்கு நேர் மாறாக அரசாணை 243 வெளியிடப்பட்டது. தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் 5 சதவீத ஆசிரியர்களுக்குக் கூட பயன்தராத ஒரு அரசாணையை, 95 சதவீத ஆசிரியர்களுக்குக் கேடு விளைவிக்கும் அரசாணையை, மாணவர்களின் நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் அரசாணை 243 ஐ வெளியிட்டு விட்டு, இந்த அரசாணை ஆசிரியர்களுக்குப் பயன் தரக்கூடியது என்று தொடக்கக்கல்வித்துறைக்குச் சம்பந்தமில்லாத சில ஆசிரியர் சங்கங்கள் கூறுவதைச் சரி என்று ஏற்றுக் கொண்டதால் அது தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம் என டிட்டோஜாக் பேரமைப்பு கருதுகிறது.


எனவேதான் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் என்பது தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் மீது திணிக்கப்பட்ட போராட்டம் என்று டிட்டோஜாக் பேரமைப்பு கூறுகிறது.


எனவேதான் மூன்று நாள் முற்றுகைப் போராட்டம் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு ஆசிரியர்கள் ஆவேசத்தின் வார்ப்படங்களாய், குறிப்பாகப் பெண்ணாசிரியர்கள் உணர்ச்சிப் பிழம்பாய் களத்தில் நின்று போராடினர்.


முற்றுகைப் போராட்டத்தை ஒடுக்க தமிழ்நாடு அரசு காவல்துறையை ஏவிவிட்டது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு டெஸ்மா, எஸ்மா காலத்தில் கூட இல்லாத அளவிற்கு ஆசிரியர்களை பணியாற்றும் பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் கற்பித்தல் பணி செய்து கொண்டிருந்தபோதே காவல்துறை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிகழ்வு என்பது வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக விழுந்துவிட்டது. சங்கப் பொறுப்பாளர்களை கொடுங்குற்றவாளிகளைப் போல நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து காவல் நிலையங்களுக்கு கொண்டு சென்ற நிகழ்வு என்பது எந்த சட்டப்பிரிவின் கீழ் சரியானது என்பதை தமிழக அரசுதான் கூற வேண்டும். அதேபோன்று முற்றுகைப் போராட்டத்திற்கு வாகனங்களில் வந்த பெண்ணாசிரியர்களை கண்ட இடத்தில் நிறுத்தி மண்டபங்களில் இரவு முழுவதும் சிறை வைத்த நிகழ்வும் சட்டவிரோத நிகழ்வுகளாகும். அதேபோன்று கல்வித்துறை அலுவலர்கள் மூலம் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தால் "ஊதியத்தைப் பிடிப்போம்" என்றும் "கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் மிரட்டிய செயல் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும். இத்தனை இடர்களையும் தாண்டி, தடைகளைத் தகர்த்து சென்னைக்கு வருகை தந்த ஆசிரியர்களை ரயில் நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும், கண்ட இடங்களிலும் கைது செய்தது காவல்துறை. இத்தனை இடர்பாடுகளையும் தாண்டி டி.பி.ஐ முற்றுகைப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றார்கள் என்றால் ஆசிரியர்களின் கோபத்தையும், நியாயத்தையும், போராட்ட வலிமையையும் தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி முதல் நாள் முற்றுகைப் போராட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், இரண்டாம் நாள் முற்றுகைப் போராட்டத்தில் 4500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், மூன்றாம் நாள் முற்றுகைப் போராட்டத்தில் 5500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பங்கேற்றார்கள் என்பதுதான் போராட்டத்தின் வெற்றி, டிட்டோஜாக் பேரமைப்பின் வலிமை.


அதுமட்டுமல்ல டி.பி.ஐ. முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தற்செயல் விடுப்பெடுத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று போராட்டம் தொடங்குவதற்கு முதல் நாள் தான் டிட்டோஜாக் அறிவித்தது. அதனை ஏற்று மாநிலம் முழுவதும் மூன்று நாட்களில் கல்வித்துறை அலுவலர்களின் அச்சுறுத்தலையும் மீறி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தார்கள் என்பது டிட்டோஜாக் பேரமைப்பின் 31 அம்சக் கோரிக்கைகளின் மீது தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு உள்ள ஆதரவு நிலையை வெளிப்படுத்துகிறது. பல மாவட்டங்களில் பெரும்பாலான ஒன்றியங்களில் மிகப் பெரும்பாலான ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்த நிலையில் அன்றையதினம் பள்ளிகளை நடத்த இயலாத நிலை தான் ஏற்பட்டது. எனவே, தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக டிட்டோஜாக் மட்டுமே உள்ளது என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும்.


மூன்று நாள் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட பின்பு புதிதாகப் பொறுப்பேற்ற மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்கள் இரண்டு முறை டிட்டோஜாக் அமைப்பை அழைத்துப் பேசினார். 22.07.2024 அன்று முற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்கள் புதிதாகப் பொறுப்பேற்ற நிலையிலும் அனைத்துக் கோரிக்கைகளையும் விரிவாகக் கேட்டறிந்து நமது கோரிக்கைகளின் நியாயத்தைப் புரிந்து கொண்டு சாதகமான முறையில் கோரிக்கைகளின் மீது நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறியது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இருப்பினும் கோரிக்கைகள் தொடர்பாக உத்திரவாதமான அறிவிப்புக்கள் இல்லாததால் கடந்த கால அனுபவங்களைக் கணக்கில் கொண்டு முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என டிட்டோஜாக் அறிவித்தது.


அதன்பின்பு முதல் இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் 30.07.2024


அன்று இரண்டாவது முறையாக டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதனடிப்படையில் 30.07.2024 அன்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களும், புதிதாகப் பொறுப்பேற்ற தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் பங்கேற்றனர். அரசாணை 243 தொடர்பாக விரிவாக டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய செயலாளர் அவர்கள், டிட்டோஜாக் அமைப்பின் மற்ற கோரிக்கைகள் தொடர்பாகவும், குறிப்பாக 12.10.2023 அன்று டிட்டோஜாக் அமைப்புடன் மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆலோசனை நடத்தினார்.


பேச்சுவார்த்தையின் முடிவில் தான் புதிதாக பொறுப்பேற்றுள்ளதால் டிட்டோஜாக்கின் கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து பொருத்தமான ஆணைகள் வெளியிட ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் வேண்டும் எனவும், கோரிக்கைகள் தொடர்பாக தன்னை மீண்டும் வந்து சந்திக்குமாறும் தெரிவித்தார். இருப்பினும் கோரிக்கைகள் தொடர்பாக உத்தரவாதமான அறிவிப்பேதும் இல்லாத சூழலில் மூன்றாம் நாள் முற்றுகைப் போராட்டம் தொடரும் என மாநில டிட்டோஜாக் உயர்மட்டக்குழு அறிவித்தது.


மூன்றாம் நாள் முற்றுகைப் போராட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்று முடிந்த நிலையில் 31.07.2024 அன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்ற டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில் மூன்று நாள் முற்றுகைப் போராட்ட நிகழ்வுகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அடக்குமுறைகளை எதிர்கொண்டு நெஞ்சுறுதியோடு போராட்டக் களத்திற்கு வருகை தந்து களப்போராளிகளாகக் களத்திலே நின்று போராட்டத்தை வெற்றியடையச் செய்த ஆசிரியர்களுக்கும், போராட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக இமைப்பொழுதும் சோராமல் களப்பணியாற்றிய டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகளுக்கும் மாநில டிட்டோஜாக் உயர்மட்டக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களின் சிறப்பான அணுகுமுறை மற்றும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சூழல் ஆகியவற்றை விரிவாக விவாதித்த மாநில உயர்மட்டக்குழு எதிர்வரும் ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் திருச்சியில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி டிட்டோஜாக்கின் அடுத்த கட்ட செயல்பாடுகளைத் தீர்மானிப்பதென முடிவு செய்துள்ளது. டிட்டோஜாக் பேரமைப்பைப் பொறுத்துவரை முன்வைத்துள்ள 31

கோரிக்கைகளும் நியாயமானவை. எனவே, 31 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என டிட்டோஜாக் வலியுறுத்துகிறது.


 குறிப்பாக அரசாணை 243 முற்றிலுமாக ரத்து செய்வதையே டிட்டோஜாக் ஏற்றுக்கொள்ளும் என்பதையும் இங்கு வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகிறோம். மேலும், 12.10.2023 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகளுக்கான ஆணைகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும். இதுவே டிட்டோஜாக் பேரமைப்பின் உறுதியான நிலைப்பாடு. நம் கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு உரிய காலத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் டிட்டோஜாக் பேரமைப்பு இறுதி வரை உறுதியாகக் களத்தில் நின்று போராடும்.


*டிட்டோஜாக் மாநில அமைப்பு அதிகாரப்பூர்வ அறிக்கை.*

ஏதும் தெரியாத முதல் தலைமுறை - இயக்கங்களை போராடாமல் பார்த்துக் கொள்வதிலும் முதல் தலைமுறை - AIFETO அறிக்கை...



ஏதும் தெரியாத முதல் தலைமுறை -  இயக்கங்களை போராடாமல் பார்த்துக் கொள்வதிலும் முதல் தலைமுறை - AIFETO அறிக்கை...



*AIFETO..04.08.2024..*



*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:- 36/2001.*



*பல தலைமுறை அனுபவங்களை பெற்றுள்ள நாம்... முதல் தலைமுறை இவருக்கு முன்னவர்களும் இல்லை!.. ஆலோசனை சொல்ல பின்னவர்களும் இல்லை!..  இவருக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. இருப்பினும் பொதுவானவர்களுக்காக நமது கருத்தினை பதிவு செய்கிறோம்.*


 *(எப்படி தினுசு தினுசாக யோசிக்கிறார்களோ?.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ?..) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.*



 *அந்தப் பழக்கத்தில் ஊறித் திளைத்தவர்களுக்கு  அந்தப் பழக்கம் தான் வரும். அதில் ஒன்றும் வியப்பேதும் இல்லை.*


 *அரசாணை 243, நாள் 21.12.2023 அன்று வெளிவந்த போதே பாதகமான அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது  தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் உறுதியான கோரிக்கையாகும்.*



 *டிட்டோஜாக்கின் கொள்கை முடிவும் அதுதான். தமிழக ஆசிரியர் கூட்டணியின் கொள்கை முடிவும் அதுதான். ஆனால் தொடர்ந்து வெளிவரும் ஐபெட்டோவின் புலனப் பதிவுகள் அனைத்தும் அரசாணை 243 ரத்து செய்யப்பட வேண்டும். இல்லையேல் தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். என்றுதான் எழுதி வந்திருக்கிறோம். காரணம் நீதிமன்றத் தீர்ப்பினால் வெளிவந்த அரசாணையாகும். அதை ரத்து செய்வதற்கு பல சங்கடங்கள் இருக்கிறது. ஆனால் தேவையான திருத்தங்களை வெளியிட வேண்டும்.*



 *ஆனால் இவர்கள் நினைக்கிற திருத்தங்கள் அல்ல; ஒன்றிய அளவில்தான் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு நேரடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். முன்னுரிமைப்படி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க வேண்டும்.  பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்பட வேண்டும். தலைமையாசிரியர்கள் மாறுதலைப் பொறுத்தவரையில் முற்றிலும் நிபந்தனைக்கு உட்பட்டு கல்வி மாவட்டத்திற்குள்ளாக மாறுதல் இருக்கலாம். பதவி உயர்வு ஒன்றிய முன்னுரிமை அடிப்படையில்தான் இருக்க வேண்டும்.*



 *இவர்கள் நினைக்கும் திருத்தங்களை ஒருகாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!. அரசாணை 243 பாதுகாப்பு இயக்கம் ஆசிரியர்களின் பாதுகாப்பு இயக்கம் அல்ல;  உண்மை நிலைமையினை அந்த  பாதுகாப்பு இயக்கத்தில் இருக்கின்ற ஆசிரியர்கள் ஒருநாள் உணரத்தான் போகிறார்கள்.*



 *1985 ஜாக்டீ போராட்டத்தை முன்நின்று நடத்தி சிறைக்குச் சென்றவன். 1988 ஜாக்டீ ஜியோ போராட்டத்தில்  மேடையில் பேசியில் கொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டவன். 2003 ஜாக்டோ ஜியோ போராட்டத்தை முன்னின்று நடத்தியதால் நடு இரவில் கைது செய்யப்பட்டு புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவன். எட்டு மாத காலம் நிரந்தர பணி நீக்கத்தில் இருந்தவன்.*


 *பள்ளிப் பருவம் தொடங்கிய போதே திராவிட முன்னேற்றக் கழக உணர்வில் இரண்டறக் கலந்தவன். பல சட்டமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்குவதில் என்னுடைய சிறு பங்களிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. பொது நன்மைகளை தலைவர் கலைஞர் அவர்களிடமும், இனமான பேராசிரியர் அவர்களிடமும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடமும் சாதித்து இருப்பேனே தவிர; எனக்காக என் சொந்த நலனுக்காக யாரிடமும் எதையும் கேட்காதவன். 51 ஆண்டுகால எனது பொது வாழ்க்கையில் முற்றிலும் ஆசிரியர்களின் நலனை முன்னிறுத்திதான் வாழ்ந்து வருகிறேன்.*


 *சங்க  வித்தியாசம் பார்ப்பதில்லை. பொதுவாக ஆசிரியர்களுக்கு ஒரு அநீதி இழைக்கப்படுகிறது  என்றால் நான் உணர்வு பூர்வமாக நேசித்து வரும் அரசியல் கட்சிக்கும், ஆளுங்கட்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல்.. நாம் சார்ந்த ஆசிரியர் சமுதாயத்திற்கு மட்டும் தான் இன்றுவரை முழு நேரமாக அர்ப்பணித்து தொண்டாற்றி வருகிறேன். தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் அகவிலைப்படியை  நிறுத்தியபோது  சென்னையில் நடத்திய போராட்டத்தில்  சிறைக்குச் சென்று வந்தவன்.*



 *பள்ளிக்கல்வித்துறையைப்  தவிர வேறு துறைகளைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எல்லா துறைகளிலும் சென்று பழக்கத்தை வைத்துக்கொண்டு ஏதாவது நன்மையை அடைய வேண்டிய எண்ணம் அன்று தொட்டு  இன்றுவரை நமக்கு இருந்ததில்லை.*


 *கொள்கை வழி நிற்பவர்கள் கொள்கை சீமான்கள்!..*


 *வணிக நோக்கத்தோடு செயல்படுபவர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறலாம்!..*


 *கொள்கையில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது!.*



 *கடைசி மூச்சு இருக்கும் வரை ஆசிரியர் சமுதாயத்திற்கு ஒரு பாதிப்பு என்றால் என்னால் திணையளவேனும் நன்மை கிடைக்குமென்றால் இந்த  தேகம் இருந்ததொரு லாபமுண்டோ?.. என்ற பாரதிதாசன்  பாடல்வரிகளை கொள்கையாக ஏற்றுக் கொண்டவன். விமர்சனங்களை பற்றி கவலை இல்லை.*



*ஆட்சி வித்தியாசம் பார்க்காமல் நிர்வாகம் மாறுதல்களை பெறுவதில் முனைப்பு காட்டுகிற இயக்கமும் எங்கள் இயக்கமல்ல;*


 *எந்த ஆட்சிக் காலத்திலும் நிர்வாக மாறுதல் கேட்டு படிக்கட்டு ஏறாத இயக்கமும் எங்கள் சங்கம்தான் !.*


*நிர்வாக மாறுதல்களை அவ்வப்போது கண்டித்து அறிக்கை வெளியிடுகிற இயக்கம் ஐபெட்டோ இயக்கம் தான்!..*



 *38 ஆண்டுகால என்னுடைய ஆசிரியர் பணி  சைக்கிளில் தொடங்கி... சைக்கிளில் தான் நிறைவு பெற்றது. இன்று வரை எனக்கு Two Wheeler  ஓட்டவும் தெரியது. சொந்தமாக Two wheelerம் இல்லை.. என்ற வாழ்க்கைக்கு உரியவன்... இந்த புலனப்பதிவு பதிவிடுகிற வரையில் இருப்பிடத்திற்கு நகரப் பேருந்திலும், அரசுப் பேருந்திலும் தான் சென்றுவரும் வாழ்க்கையை  வாழ்ந்து வருகிறேன்.*




*வீதிக்கு வந்த டிட்டோஜாக் போராட்டம் கோரிக்கைகளை வென்றெடுக்கும்வரை தொடர்ந்து களத்தில் நிற்பார்கள்!..*



*பொதுத்தேர்தல் வரையில் களத்தில் நின்று போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாலும் போர்க்குணத்தோடு நின்று வெற்றி பெறுவார்கள்!.. இது டிட்டோஜாக் எடுத்துக் கொண்ட உறுதிமொழியாகும்!..*



*எஞ்சிய என் வாழ்நாளையும் ஆசிரியர் சமுதாய நலனுக்காக அர்ப்பணித்துக் கொள்வேன்!...*


*வசவாளர் வாழ்க!...*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) தமிழக ஆசிரியர் கூட்டணி, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*


SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை...



SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை...


SBI வாடிக்கையாளர்களிடம் ரிவார்ட் பாயிண்ட் என்ற பெயரில் சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடி செய்து வருகின்றனர்.


அக்கவுண்ட்டில் ரிவார்டு பாயிண்டுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றைப் பெற SBI Rewards ஆஃபை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் பயனர்களுக்கு ஒரு APK ஃபைல் அனுப்பப்படுகிறது.


ஆனால், இது பொய் செய்தி என்றும், அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பணத்தை இழக்க வேண்டாம் என்றும் PIB Fact Check எச்சரித்துள்ளது.


Beware ‼️

Did you also receive a message asking you to download & install an APK file to redeem SBI rewards❓

#PIBFactCheck

❌@TheOfficialSBI NEVER sends links or APK files over SMS/WhatsApp

✔️Never download unknown files or click on such links


பாலியல் குற்றச்சட்டம் POCSO Act 2012 - தொடர்பான விதிகளை தெளிவுபடுத்தும் காணொளிகள் youtube Video Links...


போக்சோ சட்டம் 2012 - பாலியல் குற்றச்சட்டம் POCSO Act 2012 - தொடர்பான விதிகளை தெளிவுபடுத்தும் காணொளிகள் youtube Video Links...


POCSO Act 2012

Video Links


Act, 2012 Section 23

https://youtu.be/oCLvqIWmbN4


Act, 2012 Section 22

https://youtu.be/nVcVPywmtPQ


Act, 2012 Section 19 or 21

https://youtu.be/w9uJAM-kFhQ


Act, 2012 Section 13 or

https://youtu.be/5YwOroiU97Q


14 Act, 2012 Section 11 or 12

https://youtu.be/NEVy4db19mE


Act, 2012 Section 5 or 9

https://youtu.be/WminwkMS_EYY


Act,2012 Section 7 or 8

https://youtu.be/cnuwEl2d8Xc


Act,2012 Section 3 or 4

https://youtu.be/jhPMDngnVxY


Act 2012

https://youtu.be/f1Wxk6cyOeQ


Act, 2012 Section 15

https://youtu.be/330xUd9ZE5Y 

https://youtu.be/CoaegrZnkU


Act, 2012 Rule 11

https://youtu.be/1fRyjetTVm4


Act, 2012 Rule 9

Act, 2012 Rule 8

https://youtu.be/MU8wIraGyD4 

https://youtu.be/-lovmochQlw


Act, 2012 Rule 7

https://youtu.be/a6TON8V/ZTA


Act, 2012 Rule 4

https://youtu.be/sElomK-X9WM


Act, 2012 Section 27

https://youtu.be/NK-12cLVEDA


Act, 2012 Section 38

Act 2012 Section 34

https://youtu.be/Mcd10Fh5dw



>>> போக்சோ சட்டம் 2012 தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை மாணவர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...


போக்சோ சட்டம் 2012 தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை மாணவர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...


போக்சோ சட்டம் 2012 தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை மாணவர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



From

Dr. S. Kannappan,

Director of School Education,

Directorate of School Education,

Perasiriyar Anbazhagan Kalvi Valagam,

Chennai-06.


To

All Chief Educational Officers,

All Districts.


Sub:

Ref: R.C.No 047338/M2/S1/2024, Dated .07.2024

School Education - Dissemination of Awareness Videos on the Protection of Children from Sexual Offences ( POCSO ) Act, 2012- Reg

1. From the Chairperson, National Commission for Protection of Child Rights F.No. 19424/2024/NCPCR/PCMA/NCPCR dated 08.07.2024

2. Deputy secretary to Government, Letter No. efile 6885/GL1(2)/2024-1, dated 19.07.2024


NCPCR has develop certain videos elucidating various critical provisions of protection of children from Sexual Offenses Act, 2012 and these videos are accessible on You Tube via links. A copy of the letter cited in references is enclosed herewith.


It is instructed the All Chief Educational Officers shall direct all Head Masters of the schools to use the videos in all schools during the Movie Screening time and in Club Activities during 29.07.2024 to 10.08.2024 the progress report shall be updated through the below google link


https://docs.google.com/spreadsheets/d/1aDyqsiXqYsBR3vDaeAIk7IHwLoEjkzxBJJfZnSf2ttedit?usp=sharing


Director

Copy to

1. Chairperson,

Nation Commission for Protection of Child Rights

2. Deputy Secretary to government,

School Education Department,

Secretariat, Chennai-9.



>>> போக்சோ சட்டம் 2012 - தொடர்பான விதிகளை தெளிவுபடுத்தும் காணொளிகள் youtube Links...


05-08-2024 அன்று ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்...

 

 

 05-08-2024 அன்று ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்...


05.08.2024 அன்று இடைநிலை ஆசிரியர்கள் முன்னுரிமை வரிசை எண் 3900 முடிய காலை 9-00 மணிக்கு மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் - மாவட்டம் விட்டு  மாவட்டம்...


நாளை (05.08.2024) திங்கள்கிழமை இடைநிலை ஆசிரியர்கள் முன்னுரிமை வரிசை எண் 3401 முதல் 3900 முடிய காலை 9.00 மணிக்கு மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் (மாவட்டம் விட்டு  மாவட்டம்)



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...