பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.08.2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால்: பொருட்பால்
அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:448
இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.
பொருள்: கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
பழமொழி :
குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்
A kick from the wise is better than a kiss from a fool
இரண்டொழுக்க பண்புகள் :
*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.
*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.
பொன்மொழி :
"எனக்கு ஒரு மரத்தை வெட்ட எட்டு மணி நேரம் இருந்தால், அதில் ஆறு மணி நேரம் நான் கோடாரியை கூர்மை படுத்துவேன்.----ஆபிரகாம் லிங்கன்
பொது அறிவு :
1.ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் எது?
விடை: இரும்பு
2.நம் நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?
விடை: ஜாம்ஷெட்பூர் (Jamshedpur)
English words & meanings :
Alliance : கூட்டணி.
Alumni : முன்னாள் மாணவர்கள்
வேளாண்மையும் வாழ்வும் :
மண்ணின் ஈரப்பதத்தில் நுண்ணுயிர்கள், மண் புழு, நல்ல பாக்டீரியாக்கள் உருவாக தொடங்கும்.
மழைக் காலங்களில் முளைத்திருக்கும் சிறிய செடிகளை மேய்க்கும் ஆநிரையின் கழிவுகள், மண்ணுக்கு உரமாகி மண்ணுக்கு ஆற்றலைக் கொடுக்கும்.
ஆகஸ்ட் 09
பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஷ்டு 9ஆம் தேதி அனுசரிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் திசம்பர் 1994 முன்மொழியப்பட்டு , 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1] தொல்பழங்குடிகளான குறிஞ்சி நிலத்தின் குன்றகுறவர்களின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வானது அப்பழங்குடி குறவர் மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலக பிரச்சினைகளின் எடுக்கும் நல்லெண்ண முடிவுகளுக்கு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
நீதிக்கதை
முயற்சி செய்யாதவர்களுக்குக் கடவுள் உதவமாட்டார்
பூஞ்சோலை என்பது ஓர் அழகான கிராமத்தில் மணிவண்ணன் எனபவன் வாழ்ந்து வந்தான்.
அவன் நல்லவன்தான். எனினும், எந்த ஒரு பிரச்சினையிலும், முயற்சி செய்யாமல் கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்றே எண்ணுவான் .
தனக்குத்தானே எவன் ஒருவன் உதவி செய்து கொள்கிறானோ அவனுக்குத்தான் இறைவனும் உதவுவார் என்ற கருத்து அவனது நெஞ்சில் பதியாமல் போனது.
அவனுடைய நெருங்கிய உறவினர் திருமணம் பூஞ்சோலைக் கிராமத்திற்கு அடுத்ததாக இருந்த கிளியனூரில் நடைபெறுவதாக இருந்தது . மணிவண்ணனும் அந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகத் தனது மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்தான்.
கிளியனூரை அடைகின்ற வேளையில் ஒரு பெரிய பள்ளத்தில் வண்டிச் சக்கரங்கள் புதைந்து விட்டன. மாடுகளும் சேற்றில் சிக்கிய தமது கால்களை எடுக்க முடியாமல் தவித்தன.
மணிவண்ணன் மிகவும் பயந்து விட்டான். மாடுகளாவது சேற்றில் சிக்கிய தமது கால்களை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தன. ஆனால், மணிவண்ணனோ எவ்விதச் சிறு முயற்சியையும் செய்யாமல் விழித்துக்கொண்டிருந்தான் .
உடனே அவன் “கடவுளே என்னை இந்தத் துன்பத்திலிருந்து காப்பாற்று” என்று வேண்டினான்.
உடனே வானிலிருந்து ஒரு குரல் கேட்டது. “மனிதனே, நீ, சேற்றில் சிக்கிய உன் மாடுகளையும், வண்டியின் சக்கரங்களையும் மீட்பதற்கு சிறிதளவு கூட முயற்சியே செய்யவில்லை. வெறுமனே என்னை அழைப்பதில் எந்தப் பயனும் இல்லை. முதலில் தன்னால் ஆன முயற்சியைச் செய்பவர்களுக்குத்தான் நான் உதவுவேன்.முயற்சி செய்யாதவர்களுக்கு நான் நிச்சயம் உதவ மாட்டேன்” என்று கூறியது.
உடனே மணிவண்ணன் தனது தோள்பலத்தால் சக்கரத்தில் முட்டுக்கொடுத்து வண்டியை தூக்கி நிறுத்தி மாடுகளை அதட்டி ஓட்டினான். இப்பொழுது வண்டி சேற்றிலிருந்து மீண்டது. மணிவண்ணன் முயற்சியின் சிறப்பை அறிந்து கொண்டான்.
கடவுள் வானிலிருந்து அவனை ஆசிர்வதித்தார்.
நீதி : முயற்சி செய்யாதவர்களுக்குக் கடவுள் உதவ மாட்டார். எனவே, நாம் வெற்றி பெற, முயற்சியைச் செய்ய வேண்டும். இறைவன் அருள் நமக்குத் தானாகவே கிடைக்கும்.
இன்றைய செய்திகள்
09.08.2024
🦋தமிழகம் முழுவதும் 24 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
🦋ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த ஊரக வளர்ச்சி இயக்குநர் பா.பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.
🦋மனை, கட்டுமான பிரிவுகளுக்கான கட்டணங்கள் மாற்றியமைப்பு: ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை.
🦋42 கோடி டன் நிலக்கரி இருப்பு கொண்ட ஒடிசா சகிகோபால் சுரங்கத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
🦋வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடல்.
🦋'தாரங் சக்தி’ என்ற பெயரில் முதல்முறையாக 10 நாடுகளின் விமானப்படையுடன் இந்தியா கூட்டுப் பயிற்சி.
🦋ஜப்பானில் 7.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🦋ஐ.சி.சி. ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை: டாப் 5-ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்.
🦋ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் கிறிஸ் கெயிலின் மாபெரும் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா.
🦋ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
Today's Headlines
🦋The Tamil Nadu government has ordered the transfer of 24 IPS officers across Tamil Nadu.
🦋 Director of Rural Development
P. Ponniah instructed the Panchayat members to hold Gram Sabha meetings in all Panchayats in Tamil Nadu on August 15th Independence Day.
🦋 Revision of Fees for Land, Construction Sections: Action taken by Regulatory Authority.
🦋Odisha Sakigopal mine with 42 crore tonnes of coal reserves has been allotted to Tamil Nadu Electricity Board.
🦋All, Indian visa centers in Bangladesh remain closed indefinitely.
🦋 For the first time in the name of 'Tarang Shakti', India is conducting a joint exercise with the Air Forces of 10 countries.
🦋7.1-magnitude earthquake hits Japan: Tsunami warning issued
🦋ICC ODI Batsmen Rankings: Indian Players Dominating the Top 5 places
🦋 Rohit Sharma equaled Chris Gayle's record in ODI history
🦋Indian team won bronze medal in Olympic men's hockey.
Prepared by
Covai women ICT_போதிமரம்