கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருகைப் பதிவேட்டை திருத்தி, மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தி காண்பித்து தலைமை ஆசிரியர் செய்த மோசடியை தொடர்ந்து அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்து தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.பூ.அ.நரேஷ் அவர்கள் உத்தரவு - Proceedings of The Director of Elementary Education, R.C.No.019790/12/2024, Dated: 06.09.2024...

 

திருவள்ளூர் மாவட்டத்தில் வருகை பதிவேட்டை திருத்தி,  மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தி காண்பித்து தலைமை ஆசிரியர் செய்த  மோசடியை தொடர்ந்து  அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட்  செய்து தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.பூ.அ.நரேஷ் அவர்கள் அதிரடி உத்தரவு  பிறப்பித்துள்ளார்...



வருகைப் பதிவேட்டை திருத்தி,  மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தி காண்பித்து தலைமை ஆசிரியர் செய்த  மோசடியை தொடர்ந்து  அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம்  செய்து தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.பூ.அ.நரேஷ் அவர்கள் செயல்முறைகள் Proceedings of The Director of Elementary Education, R.C.No.019790/12/2024, Dated: 06.09.2024...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Proceedings of The Director of Elementary Education, Chennai -06.

Present: Dr.P.A.Naresh

R.C.No.019790/12/2024, Dated: 06.09.2024.

Sub:

Tamil Nadu Elementary Education Subordinate Service.Tmt.J.Mary Josephine, Block Educational Officer, Villivakkam Block,Ponneri Educational District, Thiruvallur District - Placed under suspension-Orders issued-Reg.

Ref

Thiruvallur Chief Educational Officer letter R.C.No.4327/2024,

Dated.20.08.2024

WHEREAS Tmt.J.Mary Josephine, Block Educational Officer, Villivakkam Block, Ponneri Educational District, Thiruvallur District, was not properly monitoring and inspecting the Panchayat Union Primary School, Pammadhukulam which involved in fabrication of students enrollment and wrong fixation of student teachers ratio, which causes huge monetary losses to the government.

WHEREAS an inquiry into grave charges against Tmt.J.Mary Josephine, Block Educational Officer, Villivakkam Block, Ponneri Educational District, Thiruvallur District is contemplated.

AND WHEREAS in the circumstances of the case, it is necessary in the public interest to place the said Tmt.J.Mary Josephine, Block Educational Officer, Villivakkam Block, Ponneri Educational District, Thiruvallur District under suspension from service.

NOW, THEREFORE, under sub-rule (e) of rule 17 of the Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules, the said Tmt.J.Mary Josephine, Block Educational Officer, Villivakkam Block,Ponneri Educational District, Thiruvallur District is with immediate effect placed under suspension from service, until further orders.

2. During the period of suspension, the said Tmt.J.Mary Josephine, Block Educational Officer,Villivakkam Block, Ponneri Educational District, Thiruvallur District will be paid subsistence allowance as admissible under rule 53(1) of Fundamental Rules.

3. The headquarters of the said Tmt.J.Mary Josephine, Block Educational Officer, Villivakkam Block, Ponneri Educational District, Thiruvallur District during the period of suspension shall be Villivakkam Block and the said Tmt.J.Mary Josephine shall not leave the headquarters without obtaining prior permission of the authority concerned.

Director of Elementary Education

Tmt.J.Mary Josephine,

Block Educational Officer,

Villivakkam Block, Thiruvallur District

(Through District Educational Officer (Elementary), Ponneri)

Copy to:

 The District Educational officer, (Elementary), Ponneri.

2 The Block Educational Officer, Villivakkam Block, Thiruvallur District.

3. Concerned Treasury Officer/Sub Treasury Officer.

4. The Accountant General, Chennai -18.


மிலாடி நபி விடுமுறை மாற்றம் - அரசாணை G.O.Ms.No.617, Dated: 09-09-2024 வெளியீடு...


 மிலாடி நபி - 17.09.2024 அன்று விடுமுறை - அரசாணை G.O.Ms.No.617, Dated: 09-09-2024 வெளியீடு...



 >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிக்‌ கல்வி - 2024-2025 ஆம்‌ கல்வியாண்டு - 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத்‌ தேர்வு கால அட்டவணை அனுப்புதல்‌ - சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.048688/எம்‌1/இ1/2024, நாள்‌. 09-09-2024...

 

 

பள்ளிக்‌ கல்வி - 2024-2025 ஆம்‌ கல்வியாண்டு - 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத்‌ தேர்வு கால அட்டவணை அனுப்புதல்‌ - சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.048688/எம்‌1/இ1/2024, நாள்‌. 09-09-2024...


School Education - Academic Year 2024-2025 - Quarterly Examination Time Table for Class 6 to 12 Students - Proceedings of Director of School Education, Tamil Nadu, RC.No.048688/M1/E1/2024, dt. 09-09-2024...



தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌, சென்னை-6

ந.க.எண்‌.048688/எம்‌1/இ1/2024, நாள்‌. 09-09-2024

பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - 2024-2025 ஆம்‌ கல்வியாண்டு - 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத்‌ தேர்வு கால அட்டவணை அனுப்புதல்‌ - சார்ந்து

அரசு / அரசு உதவி பெறும்‌/ தனியார்‌ பள்ளிகளுக்கு 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத்‌ தேர்வு கால அட்டவணை இத்துடன்‌ இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை உயர்நிலை/ மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ மற்றும்‌ முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

இணைப்பு: காலாண்டுத்‌ தேர்வுகால அட்டவணை 

பெறுநர்‌:

1. இயக்குநர்‌, தனியார்‌ பள்ளிகள்‌

2. அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌

3. அனைத்து மாவட்ட கல்விக்‌ அலுவலர்கள்‌ (இடைநிலை மற்றும்‌ தனியார்‌ )

நகல்‌:

1. தொடக்கக்‌ கல்வி இயக்குநர்‌ தகவலுக்காகக்‌ அனுப்பப்படுகிறது

2. இயக்குநர்‌, அரசு தேர்வுகள்‌ இயக்ககம்‌ தகவலுக்காகக்‌ அனுப்பப்படுகிறது



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பதவி உயர்வுக்கு TET கட்டாயம் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் தேதி குறித்த தகவல்...

 

 பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற வழக்கு 13.09.2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது...



 Teacher Elegibility Test mandatory for promotion Case is coming up for hearing in the Supreme Court on 13.09.2024...







 

இந்தியா, பாகிஸ்தானை அச்சுறுத்தும் கோனோகார்பஸ் Conocorpus மரங்கள் - தீர்வு என்ன?


இந்தியா, பாகிஸ்தானை அச்சுறுத்தும் கோனோகார்பஸ் மரங்கள் - தீர்வு என்ன?


நாடுகளையும், அரசாங்கங்களையும் கலங்கடித்து, தொடர்ந்து வளர்ந்து வரும் ஒரு செடியின் கதை இது. அதன் பெயர் கோனோகார்பஸ்.


கூம்பு வடிவ பச்சை, அழகான மற்றும் கவர்ச்சிகரமான 'கோனோகார்பஸ்' செடிகள் அல்லது மரங்கள் பெரும்பாலும் சாலைகளில் உள்ள டிவைடர்களில் காணப்படுகின்றன. நகரங்களில் பசுமையை அதிகரிக்க முட்புதர்களில் வளரும் இந்த மரங்களை பல்வேறு நாடுகள் வளர்க்கின்றன.



இந்தியா, பாகிஸ்தான், அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், இந்த தாவரங்கள் சாலைகள், தோட்டம், சமூகம் மற்றும் பூங்காக்களின் ஒரு பகுதியாக பரவலாக வளர்க்கப்படுகின்றன. ஆனால், இந்த அரசுகள் அதிக நாட்களுக்கு இந்த மரங்களை இப்படி வளர்க்கவில்லை. அவை தத்தமது முடிவில் இருந்து பின்வாங்குவதாகத் தெரிகிறது.


கோனோகார்பஸ் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்துவதாக தாவர மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் கோனோகார்பஸ் மரங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது.




தெலங்கானா அரசு சமீபத்தில் கிராம பஞ்சாயத்துகளால் நடத்தப்படும் 'ஹரிதா வனம்' நர்சரிகளில் கோனோகார்பஸை வளர்க்கக் கூடாது என எழுத்துபூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த காலங்களில், நகரை அழகுபடுத்தும் பணியின் ஒரு பகுதியாக, ஹைதராபாத் நகர நிர்வாகக் குழுவான 'ஜிஎச்எம்சி' இந்த வகை செடிகளை அதிக அளவில் வளர்த்தது. இப்போது அந்த முடிவு தலைகீழாகி விட்டது.




கோனோகார்பஸ் எங்கிருந்து வந்தது?

கோனோகார்பஸ் என்பது அமெரிக்காவின் கடலோர பகுதிகளைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது வட அமெரிக்காவின் ஃபுளோரிடாவின் கடலோர பகுதியில் வளரும் ஒரு சதுப்புநில தாவரமாகும். வேகமாகவும், உயரமாகவும், பச்சையாகவும் இது வளரும்.


ஆரம்பத்தில், பாலைவனத்தில் இருந்து வரும் தூசி, மணல் புயல்கள், வேகமாக வீசும் அனல் காற்று போன்றவற்றுக்கு தடையை ஏற்படுத்தும் விதமாக அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த செடிகள் பரவலாக நடப்பட்டன.


"இந்த செடி கூம்பு வடிவில் வளர்வதால், தோட்ட நிபுணர் ஒருவர் இதைப் இந்தியாவுக்கு கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு இது பல்வேறு நகராட்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வளர்க்கப்பட்டது. இது எங்கள் பகுதியை பூர்விகமாக கொண்டதல்ல, சுற்றுச்சூழல் பக்க விளைவுகளை இது ஏற்படுத்துகிறது. இது தவிர, சுவாச நோய்களுக்கும், பல்வேறு அலர்ஜிகளுக்கும் கோனோகார்பஸ் காரணமாக உள்ளது," என்று பிபிசியிடம் கூறினார் கரீம்நகர் சாதவாகனா பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறை பேராசிரியர் இ நரசிம்ம மூர்த்தி.



தெலங்கானாவை போலவே, மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் கோனோகார்பஸ் பற்றிய விரிவான விவாதம் நடந்தது.


மகாராஷ்டிராவில், புணே நகர மாநகராட்சியால் நடத்தப்படும் பொதுப் பூங்காக்களில் கோனோகார்பஸ் செடிகளை நட வேண்டாம் என்று உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.


தெலங்கானாவில் களத்தை பார்வையிட்டபோது, ​​கிராம பஞ்சாயத்துகளின் நர்சரிகளில் வளர்க்கப்படும் கோனோகார்பஸ் செடிகள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் ஒரு பகுதியாக அதிகளவில் பயிரிடப்படுவதை அறிய முடிந்தது.


இந்த நிலையில், வெளிநாட்டுத் தாவரங்களால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு தகவல் கொண்டு வரப்பட்டது.


தெலங்கானா பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி துறை ஆணையர், சமீபத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர்களிடம், அவற்றின் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டாம் என எழுத்துபூர்வமாக அறிவுறுத்தினார்.


இருப்பினும், பருவமழையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் தெலங்கானாவின் பசுமை திட்டத்துக்காக, அந்தந்த கிராம பஞ்சாயத்துகளின் நர்சரிகளில் இந்த செடிகள் ஏற்கெனவே வளர்க்கபடத் தொடங்கின.


வேகமாக வளர்ந்து அதிக பசுமையுடன் வளரும் இந்த செடிகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்கும் விதமாக காலனிகள், சாலைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளின் முன்புறம் அழகுக்காக பரவலாக இவை வளர்க்கப்பட்டன.


இந்த நிலையில், அரசின் சமீபத்திய உத்தரவால் தங்களுடைய முடிவை கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தற்போது மறுபரிசீலனை செய்து வருகின்றனர்.


"கடந்த காலங்களில், எங்கள் கிராமத்தில் அதிக அளவில் கோனோகார்பஸ் செடிகள் நடப்பட்டன. தற்போது, ​​300க்கும் மேற்பட்ட செடிகள் எங்கள் கிராம நர்சரியில் நடவு செய்ய தயாராக உள்ளன. ஆனால் சமீபத்திய அரசின் உத்தரவால் நாங்கள் குழப்பமடைந்துள்ளோம். இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என காத்திருக்கிறோம்," என்று பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.


இது தொடர்பாக சர்பாஞ்ச் ஆஷ் மல்லேஷ்  விவரித்தார்.


அரபு நாடுகள், இராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அனுபவங்கள்


அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கோனோகார்பஸ், 'டாமன்' என்று அழைக்கப்படுகிறது. அந்த நாடுகளில் பசுமையுடன் கூடிய சீதோஷ்ண நிலையில் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி, பாலைவனச் சூழலில் தூசி, அழுக்கு மற்றும் காற்று வீசும் மணலைத் தடுப்பதால், கோனோகார்பஸ் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது.


இருப்பினும், இப்போது குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள், நர்சரிகளில் அதன் இனப்பெருக்கம் மற்றும் இறக்குமதியைக் கட்டுப்படுத்தியுள்ளன.


கான்க்ரீட் காடுகளுக்கு இடையே பசுமையான சூழலை விரைவாக கொண்டு வர இந்த இடம் உதவுகிறது, இதுவே இந்த மரம் நடும் திட்டத்தை பிற நாடுகள் ஆதரிக்க முக்கிய காரணம் என்கிறார் தாவரவியல் பேராசிரியர் ஈ.நரசிம்ம மூர்த்தி நம்புகிறார்.


சதுப்புநில தாவரங்கள் இயற்கையாகவே வலுவான வேர்களைக் கொண்டவை. இதன் விளைவாக, அவை நிலத்தடியில் ஊடுருவி, நிலத்தடியில் போடப்பட்ட தகவல் தொடர்பு, குடிநீர் மற்றும் வடிகால் குழாய்களை சேதப்படுத்துகின்றன.



சுவர்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் அவற்றின் வேர்களால் சேதமடைந்துள்ளன. அதே வழக்கில், இந்த தாவரத்தின் பழங்கள் மற்றும் பூக்கள் சாப்பிட ஏற்றது அல்ல. குறைந்த பட்சம் இந்த மரம் பறவைகள் கூடு கட்டுவதற்கு ஏற்றதல்ல. அழகும் வசீகரமும் தவிர வேறு பயன்கள் இல்லை. இது நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்துகிறது.


அதனால்தான், தாவரவியலாளர்களாகிய நாங்கள், சிந்தா, வேம்பு, ஆலமரம், போகடா, ஆகாசமல்லே போன்ற நாட்டுச் செடிகளை நடவு செய்ய அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்,'' என்கிறார் பேராசிரியர் நரசிம்மமூர்த்தி.



இராக்கின் மிசான் மாகாணத்தில் கோனோகார்பஸ் எதிர்கொள்ளும் நிலைமைகள் மற்றும் சேதங்கள் குறித்த 2020 ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் ஒரு ஆய்வுக் கட்டுரையை மிசான் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.


இங்குள்ள மரங்களால் உள்ளூர் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் குழாய் மற்றும் வடிகால் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இருப்பினும், இந்த மரங்கள் பசுமைக்கு பங்களிக்கும் என்பதால், வேர்களுக்கு தினசரி நீர்ப்பாசனம் செய்ய வேண்டும், இதனால் அவற்றின் வேர்கள் நிலத்தடியில் ஆழமாக ஊடுருவி கட்டமைப்புகளை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று இந்த ஆய்வு கட்டுரையில் பரிந்துரைக்கப்படுகிறது.



கராச்சியில் 'காற்றின் தரம்' பாதிப்பு


கடந்த காலங்களில், பாகிஸ்தானில் உள்ள கராச்சி மற்றும் இஸ்லாமாபாத்தின் மூலதன மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இந்த தாவரங்களை அதிக எண்ணிக்கையில் வளர்ப்பது குறித்து உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசாங்கத்திடம் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.


கராச்சி பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையின் கீழ் சுற்றுச்சூழலில் 32 வகையான தாவரங்களுடன் கோனோகார்பஸின் தாக்கம், குறிப்பாக 'காற்றின் தரம்' குறித்து ஏரோபயாலஜிஸ்டுகள் ஆராய்ச்சி நடத்தினர்.


கராச்சியில் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அதற்கு இந்த செடிகள் தான் காரணம் என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. அங்குள்ள தாவரவியலாளர்கள் நாட்டு மரங்களை மட்டுமே வளர்க்க பரிந்துரைத்தனர்.


ஹரிதஹார் போன்ற பெரிய அளவிலான நடவுத் திட்டங்களில் நாட்டுச் செடிகளை நட வேண்டும் என்று தாவரவியலாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.



தாவரங்கள் மனித ஆரோக்கியத்தை பாதிக்குமா?

கரீம்நகரைச் சேர்ந்த சுவாச நோய் நிபுணரான டாக்டர் உடுதா சந்திரசேகர், தாவரவியலாளர்கள் கூறுவது போல் தாவரங்கள் மனித ஆரோக்கியத்தை பாதிக்குமா என்பது குறித்து பிபிசியிடம் பேசினார்.


"அனைத்து வகையான தாவரங்களுக்கும் ஒரே மாதிரியான அனுபவம் இருக்காது. சில வகையான தாவரங்கள் மனிதர்களின் தோல் மற்றும் சுவாச அமைப்புகளை சில வகையான ஆராய்ச்சிகளில் பாதிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, சிலர் மகரந்தத் துகள்களுடன் தொடர்பு கொள்வதால் தோல் ஒவ்வாமை ஏற்படுகிறது. பார்த்தீனியம், சூரியகாந்தி, உம்மெட்டா, சாமந்தி, செம்பருத்தி மற்றும் ரோஜா செடிகளும் இந்த வரிசையில் அடங்கும்.


அவற்றின் வாசனையை அறியாமல் சுவாசித்தாலும், சுவாசக் குழாய் மற்றும் நுரையீரலில் சில ரசாயனங்கள் வெளியேறி, சளி அதிகரித்து, சளி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மருத்துவ மொழியில் இது 'ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி', மூச்சுக்குழாய் உயர் வினைத்திறன் என்று அழைக்கப்படுகிறது.


சில வகையான தாவரங்கள் சிலரை பாதிக்கின்றன. ஏற்கெனவே ஆஸ்துமா அல்லது தோல் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வகை ஒவ்வாமைக்கு சிகிச்சை உள்ளது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது" என்று அவர் விளக்கினார்.


புற்றுநோய், ஆஸ்துமாவை ஏற்படுத்தும் கோனாகார்பஸ் மரங்களை அரசே வளர்ப்பதா? கேடு தரும் மரங்களை அகற்றி விட்டு நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும்! - மருத்துவர் இராமதாசு அவர்கள் வலியுறுத்தல்...

 


புற்றுநோய், ஆஸ்துமாவை ஏற்படுத்தும் கோனாகார்பஸ் மரங்களை அரசே வளர்ப்பதா? கேடு தரும்  மரங்களை அகற்றி விட்டு நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும்! - மருத்துவர் இராமதாசு அவர்கள் வலியுறுத்தல்...

தமிழ்நாட்டில் பசுமைப்போர்வையை அதிகரிக்கும் நடவடிக்கை என்ற போர்வையில் கோனாகார்பஸ் (Conocarpus)  என்ற வகை மரங்களை தமிழக அரசு அதிக அளவில் வளர்த்து வருகிறது. சென்னை நீலாங்கரை கடற்கரைப் பகுதியிலும்,  தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் சாலையோரங்கள், சாலைகளின் நடுப்பகுதிகள், பூங்காக்கள்,  கல்விநிறுவன வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவன  வளாகங்களில் இந்த வகை மரங்கள் மிக அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்த வகை மரங்களை அரசே நடுவது கண்டிக்கத்தக்கது.


தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் கோனாகார்பஸ் வகை மரங்களின் மலர்கள் ஆண்டுக்கு இரு முறை மகரந்த சேர்க்கை நடத்தும் திறன் கொண்டவை. அப்போது அந்த மலர்களில் இருந்து வெளிவரும் மகரந்த தூள்கள் மனிதர்களின்  சுவாச மண்டலத்திற்குள் நுழைந்து சளி, இருமல், மூச்சடைப்பு  உள்ளிட்ட சுவாசக் குறைபாடுகளை ஏற்படுத்தும்;   இந்த மரங்களின் அருகில் நீண்ட காலம் வசிப்பவர்களுக்கு ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் என்றும்,  புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் அதிகம் என்றும் சுற்றுச்சூழல்  வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.


கோனாகார்பஸ் வகை மரங்கள் அடர்த்தியாகவும்,  வேகமாகவும் வளரும் என்பதைத் தவிர்த்து இந்த மரங்களால் எந்த பயனும் இல்லை. பார்ப்பதற்கு பசுமையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும் இந்த வகை மரங்களின் இலைகளை எந்தக் கால்நடைகளும் உண்ணாது. இந்த மரத்தில் குருவிகள் கூடு கட்டாது. தேனீக்கள் கூட இந்த மரத்தை அண்டாது. அதுமட்டுமின்றி, நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சக் கூடியவை. ஆனால், இது குறித்த உண்மைகள் எதுவும் தெரியாமல் இந்த வகை மரங்கள் தமிழகத்தில் அதிக அளவில் நடப்பட்டு வருவது கவலையளிக்கிறது.


கோனாகார்பஸ் வகை மரங்களின் சிறப்புகளில் ஒன்று அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியவை. இந்த ஒற்றைக் காரணத்திற்காக அரபு நாடுகளில்  கோனாகார்பஸ் மரங்கள் மிக அதிக எண்ணிக்கையில்  வளர்க்கப்பட்டன. ஆனால், வெப்பத்தைத் தாங்கும் தன்மையால் கிடைக்கும் நன்மையை விட, தீமைகள் அதிகம் என்பதால் அரபு நாடுகளில் இந்த வகை மரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. உலகில் மேலும் பல நாடுகளிலும் கோனாகார்பஸ் மரங்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் குஜராத் மாநிலம் இந்த வகை மரங்களை அதிக அளவில் வளர்த்ததன் விளைவை அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. வதோதரா நகரில் கடந்த 2017-18 ஆம் ஆண்டுகளில் 24 ஆயிரம் கோனாகார்பஸ் மரங்கள் நடப்பட்டன.  அந்த மரங்கள் தினமும் ஒரு லட்சம் லிட்டர் வீதம் ஆண்டுக்கு மூன்றரை கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி அப்பகுதியை பாலைவனமாக மாற்றி வருகிறது. இதைத் தொடர்ந்து குஜராத், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் கோனாகார்பஸ் மரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

கோனாகார்பஸ் மரங்களின் தீமைகள் குறித்தும் தமிழக அரசிடம்  சுற்றுச்சூழல் வல்லுனர்கள் புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்களிடம் பல மாதங்களுக்கு முன்பே இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள போதிலும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் சுற்றுச்சூழலுக்கும், மனித நலத்துக்கும் பெரும் ஆபத்தை விளைவித்து விடும். 


எனவே தமிழ்நாட்டில் கோனாகார்பஸ்  மரங்களை அரசு தடை செய்வது மட்டுமின்றி,  மக்கள் வாழும் பகுதிகளில் வளர்க்கப்பட்டுள்ள இந்த வகை மரங்களை அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வகை மரங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாலையோரங்கள், பூங்காக்கள், தோட்டங்கள் போன்றவற்றில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய மா, வேம்பு, பூவரசு, அரசு போன்ற நாட்டு மரங்களை நடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

@CMOTamilnadu

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09-09-2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09-09-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

குறள் எண்:630

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.

பொருள் :ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாக் கருதி்க் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.


பழமொழி :
அரைகுறை படிப்பு ஆபத்தானது.

A little learning is a dangerous thing.


இரண்டொழுக்க பண்புகள் : 

1. வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :

முயற்சி செய்யத் துணிபவர்களுக்கு மட்டுமே வெற்றி கிடைக்கும்." – மல்லிகா திரிபாதி


பொது அறிவு :

1.“ரேபிஸ்” நோய் உண்டாவதற்குக் காரணம்?

விடை: நாய்க்கடி

2. கடற்கரை கோவிலும், குகை கோவிலும் காணப்படும் இடம் எது?

விடை: மாமல்லபுரம்


English words & meanings :

gluttony-பெருந்தீனி,

  slander-அவதூறு


வேளாண்மையும் வாழ்வும் :

மழையைப் பற்றித் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "மாறாநீர்" என குறிப்பிட்டிருக்கிறார்.


செப்டம்பர் 09

மா சே துங்  அவர்களின் நினைவுநாள்

மா சே துங் (About this soundMao Zedong (உதவி·தகவல்), Mao Zedong, டிசம்பர் 26, 1893 – செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் ஆறு மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றார். இவர், பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின், இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவோமின்டாங்கை எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது. இதன் பின், அக்டோபர் 1, 1949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்.



நீதிக்கதை

எருமை மற்றும் குறும்புக்கார குரங்கு

ஒரு காட்டிற்குள் நிறைய விலங்குகள் ஒன்றாக வசித்து வந்தன. அதில் எருமை ஒன்றும் இருந்தது, அது பார்க்க மிகவும் பெரிதாக இருக்கும். எனவே, அந்த எருமையை பார்த்து மற்ற எல்லா விலங்குகளும் பயப்படும். ஆனால் இந்த எருமை மிகவும் சாதுவானது யாரையும் அது கஷ்டப்படுத்தியதில்லை.

அந்தக் காட்டில் ஒரு குரங்கு மரத்தில் வசித்து வந்தது. அந்தக் குரங்கு இந்த எருமையை எப்போதும் கேலி செய்து கொண்டும், தொந்தரவு செய்து கொண்டும் இருக்கும். இதை ஒரு சிட்டுக்குருவி பார்த்துக்கொண்டு எருமையிடம் கேட்டது,” அது உன்னை இவ்வளவு தொந்தரவு செய்கிறதே நீ அதை பதிலுக்கு எதுவும் செய்யாமல் இப்படி அமைதியாக இருந்தால் மீண்டும் மீண்டும் குரங்கு தன் வேலையை காட்டிக் கொண்டுதான் இருக்கும், எனவே ஏதாவது செய்” என்றது.

ஆனால் அந்த எருமை சொன்னது,”என்னால் யாரையும் கஷ்டப்படுத்த முடியாது அது செய்யும் தவறுக்கு அதுவே ஒரு நாள் வருத்தப்படும்” என்றது. சில நாட்களுக்குப் பிறகு இந்த எருமை மாடு ஒரு இடத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அதனுடைய சகோதரன் வருவதை கண்டு மிகவும் சந்தோஷமடைந்தது. அந்த இரண்டு சகோதரர்களும் பார்க்க ஒரே மாதிரி தான் இருப்பார்கள்.

அப்போது இந்த எருமை மாடு சொன்னது,” அண்ணா நீ இங்கேயே ஓய்வெடு நான் உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டு சென்றது. அப்போது இந்த குரங்கு அங்கே வந்து  ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த அண்ணன் எருமை மாடை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.அண்ணன் எருமைகாரனோ ரொம்பவே கோவக்காரன் தம்பியை போல் சாது ஆனவன் இல்லை.

அந்த குரங்கிற்கோ இது வேற எருமை மாடு என்று தெரியாது. அதன் மேலே ஏறி குதித்து அதன் வாலை பிடித்து இழுத்துக்கொண்டு "நீ ஒரு முட்டாள் உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது" என்று சொல்லி சிரித்துக் கொண்டே இருந்தது. அப்போது அந்த எருமைக்கு மிகவும் கோபம் வந்தது.

எனவே கோவத்தில் அந்த குரங்கிடம் "உனக்கு என்ன தைரியம் இருந்தால் என்னை முட்டாள் என்று கூறுவாய்", என்று கூறிக்கொண்டு தன் வாலை வைத்து அந்த குரங்கை அடித்து, தன் கொம்பால் முட்டியது. அந்தக் குரங்கும் வலியில் துடித்துக் கொண்டே ஓடியது. அப்போதுதான் அது தன் தவறை புரிந்து கொண்டது.

அதன் பிறகு அந்தக் குரங்கு மற்ற விலங்குகளிடம் குறும்பு செய்வதை நிறுத்தியது. அனைவரிடம் அன்பாக பழக ஆரம்பித்தது.


இன்றைய செய்திகள்

09.09.2024

* டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம் - அரசு அறிவிப்பு.

* தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தலை நடத்தும் வகையில், வாக்குப்பெட்டிகளை பழுது நீக்கி தயார் நிலையில் வைக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

* வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.

* குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த ஒருவருக்கு அந்த நோய்க்கான அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* அமெரிக்காவில் 21-ம் தேதி குவாட் அமைப்பு மாநாடு: பிரதமர் மோடி  பங்கேற்பு.

* பாராஒலிம்பிக்ஸ்போட்டி : 29 பதக்கங்களுடன் தொடரை நிறைவு செய்தது இந்தியா.

* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி: சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியைத் தொடங்கிய இந்தியா.

* அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெலாரசின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டத்தை வென்றார்.


Today's Headlines

* Application Distribution for Free Coaching Courses for TNPSC, SSC Competitive Exams - Government Notification.

* The State Election Commission has ordered the repair and preparation of the ballot boxes for holding local body elections in Tamil Nadu.

* Depression over the Bay of Bengal - Chance of moderate rain in Tamil Nadu for 2 days.

From a country where monkey measles is endemic A person who recently arrived in India is suspected of having disease symptoms, the central health department said.

* 21st Quad Conference in the USA: PM Modi will attend.

* Paralympics: India finished the series with 29 medals.

* Asian Champions Cup Hockey Tournament: India starts the tournament with a win against China.

* US OpenTennis: Arina Sabalenka of Belarus won the title.


Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...