கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருத்திய விடைத்தாட்களை ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழு அமைப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு...

 

காலாண்டுத் தேர்வு - திருத்திய விடைத்தாட்களை ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழு அமைப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


Quarterly Examination - Formation of Monitoring Committee to Scrutinize Revised Answer Sheets - District Collector Order - CEO Proceedings...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



காலாண்டுத் தேர்வு திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஆய்வு செய்யவேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்...


காலாண்டுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைத்தாள்களை கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான (காலாண்டுத் தேர்வுகள்) முதல் பருவத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 19ல் துவங்கி 27ம் தேதி வரை நடைபெற்றது. 


தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. 


இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 7ம் தேதி முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.


இந்நிலையில் காலாண்டுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைத் தாள்களை கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வாயிலாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் விவரம்;


 "காலாண்டுத் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தங்கள் மேற்கொண்டு பள்ளிகள் திறப்பின் போது மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.


 தற்போது காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.


இந்த குழுவினர் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கையை வழங்க வேண்டும். அதன் விவரங்களை மாவட்ட அளவில் தொகுத்து இயக்குநரகத்துக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வக உதவியாளர்களுக்கு கால அட்டவணை வழங்காத தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு...


ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக கால அட்டவணை வழங்காத தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் அவர்கள் உத்தரவு, நாள் : 07-10-2024...


Pudukottai District Chief Education Officer has asked for an explanation from the Headmasters who did not provide the laboratory time table to the laboratory assistants...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு ஊழியர்களின் பெற்றோர்களை NHIS திட்டத்தில் இணைக்க விருப்பம் தெரிவித்தல் - மாவட்டக் கருவூல அலுவலரின் கடிதம் மற்றும் படிவம்...

 

 புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2021 - அரசு பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை திட்டத்தில் சேர்த்தல் - சட்டமன்ற கூட்டத் தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது -  அரசு ஊழியர்களைச் சார்ந்துள்ள பெற்றோர்களை புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து கொள்வது தொடர்பான விருப்பம் தெரிவித்தல் -  நிபந்தனைகள் - தொடர்பாக - மாவட்டக் கருவூல அலுவலரின் கடிதம் மற்றும் படிவம்...


New Health Insurance Scheme 2021 - Inclusion of Family Members of Government Servants in the Scheme - Announced by Hon'ble Chief Minister in Assembly Session - Letter and Form from District Treasury Officer regarding - Expressing interest in inclusion of dependent parents of government employees in new health insurance scheme & Conditions...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-10-2024

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-10-2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம் :நட்பு ஆராய்தல்

குறள் எண்:798

உள்ளற்க உள்ளம் சிறுகுவ; கொள்ளற்க
அல்லல்கண் ஆற்றுஅறுப்பார் நட்பு .

பொருள்: ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும்; அதுபோல் துன்பம் வந்தபோது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.


பழமொழி :
வைகறைத் துயிலெழு.

Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise.


இரண்டொழுக்க பண்புகள் : 

*தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.                              

*தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.


பொன்மொழி :

செய்யும் வேலையை மகிழ்ச்சியாக செய்தால், வெற்றி மேல் வெற்றி உங்களை வந்து சேரும்.---சுந்தர் பிச்சை.


பொது அறிவு :

1. உலகிலேயே அதிகமாக வெயில் அடிக்கும் இடம் எது?

கிழக்கு சகாரா பாலைவனம்.

2. உலகில் அணுகுண்டை தயாரித்த முதல் நாடு எது?

ஜெர்மனி.


English words & meanings :

Establish - நிறுவு
Estate -பண்ணை
Evade - மழுப்பு


வேளாண்மையும் வாழ்வும் :

 பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது.


அக்டோபர் 09

சே குவேரா அவர்களின் நினைவுநாள்

சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.



உலக அஞ்சல் தினம்

உலக அஞ்சல் தினம் (World Post Day) அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது. அக்டோபர் 9, 1874இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.



நீதிக்கதை

நரியும் கரடியும்

ஒரு ஊரில் நரியும் கரடியும் நட்பாய் பழகி வந்தனர். இந்த நரி எப்போதுமே அடுத்தவர்களை ஏமாற்றி சம்பாதித்துக் கொண்டு இருந்தது. ஒரு நாள் கரடியிடம் அது சொன்னது,” நண்பா நாம் ஏதாவது விவசாயம் செய்து சம்பாதிக்கலாம்” என்று கேட்டது. அதற்கு அந்தக் கரடியும்,”சரி நண்பா நாம் ஏதாவது விவசாயம் செய்யலாம்” என்றது.

அப்போது இருவரும் சேர்ந்து ஒரு வயலை தேர்ந்தெடுத்தார்கள். அந்த வயலை நன்றாக சுத்தம் செய்து உழுதார்கள். விதைப்பதற்கு முன்பு நரி கரடியிடம் சொன்னது,” நண்பா இந்த முறை நிலத்திற்கு மேல் விளையும் அனைத்தையும் நான் எடுத்துக் கொள்கிறேன், நிலத்திற்கு கீழ் விளையும் அனைத்தையும் நீ எடுத்துக் கொள்” என்றது .அதற்கு அந்த கரடியும் சம்மதித்தது.

இந்த நரி மிகவும் தந்திரமானது. எனவே சோள விதையை விதைத்தது அறுவடை காலம் வந்த பிறகு இருவரின் ஒப்பந்தம்படி நிலத்திற்கு மேல் விளைந்த அனைத்து சோள வகைகளை நரி எடுத்துக்கொண்டது. ஆனால் கரடிக்கோ வெறும் வேர்கள் மட்டும்தான் மிஞ்சியது. எனவே கரடி  நரியிடம் சொன்னது ,”நண்பா போன முறை நீ நிலத்திற்கு மேல் உள்ள அனைத்து விளைச்சலையும் எடுத்து விட்டாய், எனவே இந்த முறை நிலத்திற்கு மேல் விளையும் அனைத்தையும் நான் எடுத்துக் கொள்கிறேன் நிலத்திற்கு கீழ் விளையும் அனைத்தையும் நீ எடுத்துக் கொள்” என்றது.

அதற்கு அந்த நரி சிரித்துக் கொண்டே சம்மதித்தது. இந்த முறை நரி தந்திரமாக நிலக்கடலையை விதைத்தது. இந்த முறையும் விளைச்சல் நன்றாக இருந்தது நிறைய நிலக்கடலைகள் கிடைத்தன. அந்த  கரடி சொன்னபடி நிலத்திற்கு மேல் உள்ள அனைத்தையும் கரடி எடுத்துக் கொண்டது நிலத்திற்கு கீழ் உள்ள அனைத்தையும் நரி எடுத்துக் கொண்டது. எனவே கிடைத்த நிலக்கடலைகள் அனைத்தையும் நரி எடுத்துக் கொண்டது.

இப்போது இந்த கரடிக்கு நரியின் தந்திரம் புரிந்து கொண்டது. எனவே அது நரியிடம் நட்பாக பழகுவதை நிறுத்திவிட்டு தானே தனியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தது.

நீதி: தீய எண்ணம் உடையவர்களிடம் நட்பாக பழகக் கூடாது.


இன்றைய செய்திகள்

09.10.2024

* ஜப்பான் நாட்டில் வருகின்ற 19 முதல் 25 வரை *உலக சுனாமி விழிப்புணர்வு நாள் 2024* உச்சிமாநாட்டு நடைபெற உள்ளது.   இதில் கலந்து கொள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த 5 மாணவர்களும், ஆசிரியர் திருமதி.பிருந்தா அவர்களும் தேர்வாகியுள்ளனர்.

* பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வருகிற அக்டோபர் 15-ம் தேதி, தமிழகத்தில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

* நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான முன்னோடி திட்டம்: சந்திரயான்-5 திட்டத்துக்கு தேசிய விண்வெளி ஆணையம் அனுமதி.

* ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய அணி தங்கம் வென்றது.

* ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ், சிட்சிபாஸ், ஜோகோவிச் ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines

*   "World Tsunami Awareness Day 2024"


  summit is going to be held in Japan from 19th to 25th.   5 students from Government High School, Melpatampakkam in Cuddalore district and the teacher Mrs.Brinda have been selected to participate in this.

* The High Court extended the interim ban on the appointment of BT teachers.

* In view of the northeast monsoon, on October 15, medical camps will be held at 1000 places in Tamil Nadu, the Minister of Health and Welfare of Tamil Nadu has said.

*National Space Commission approves Chandrayaan-5   to send humans to Moon as the pilot project

* Junior World Shooting Championship: Team India wins gold.

* Shanghai Masters Tennis: Taylor Pritz, Tsitsipas, Djokovic advance to 4th round.

Prepared by

Covai women ICT_போதிமரம்


நாளை (09.10.2024) TNSED செயலியில் SA மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள்...


எண்ணும் எழுத்தும் - நாளை (09.10.2024) TNSED செயலியில் Summative Assessment மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள்...




பிழை இல்லாமல் வாய்ப்பாடு சொல்லி அமைச்சரை அசத்திய மாணவர்கள் - ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...



சாக்லெட் கொடுத்த பிறந்தநாள் கொண்டாடிய மாணவிக்கு வாழ்த்து - பிழை இல்லாமல் வாய்ப்பாடு சொல்லி அசத்திய மாணவர்கள் - மதிய உணவு சாப்பிட்டு ஆய்வு - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...




முதலமைச்சர் கோப்பை 2024 விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றவர்களின் விவரங்கள்...

 தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2024 - மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இன்று (08.10.2024) பதக்கம் பெற்றவர்களின் விவரங்கள்...


Tamil Nadu Chief Minister's Cup 2024 - Details of medal winners in state level sports today (08.10.2024)...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...