கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Online Patta Transfer Service - Stopped till 31.12.2024 - TN Government Press Release


 இணையவழி பட்டா மாறுதல் சேவை - 31.12.2024 வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பு - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு



Online Patta Exchange Service - Temporarily Suspended till 31.12.2024 - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


6-8 Standard Students - State Level Kalai Thiruvizha Competitions - CEO Proceedings


 

6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 


State Level Kalai Thiruvizha Competitions for Class 6-8 Students - Proceedings of the Chief Education Officer



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


1-5 Standard Students - State Level Kalai Thiruvizha Competitions - CEO Proceedings

 

1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 


State Level Kalai Thiruvizha Competitions for Class 1-5 Students - Proceedings of the Chief Education Officer



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


DEO Promotion Priority Panel List for 2025-2026 - DSE Proceedings

 

 

2025-2026ஆம் ஆண்டிற்கான மாவட்டக் கல்வி அலுவலர் DEO பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 27-12-2024



DEO Promotion Priority Panel List for 2025-2026 - Director of School Education DSE Proceedings, Dated : 27-12-2024



01.01.2025 அன்று உள்ளவாறு, 2025-26ஆம் ஆண்டிற்கு மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க கருதப்படும் அரசு உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல்...


👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻






Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

 

2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ மாணவிகளுக்கு முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான உத்தேசத்‌ தேவைப்‌ பட்டியல்‌ 27.12.2024 அன்றைய  நிலவரப்படி  EMIS-லிருந்து பெற்று வழங்குதல்‌ - தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (உதவிபெறும்‌ பள்ளிகள்‌) செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 028459 /கே1/2024, நாள்‌  24. 12.2024.


2025-26 - Free Note Books Requirement List Issued from EMIS as on 27.12.2024 - Proceedings of Tamil Nadu Joint Director of Elementary Education (Aided Schools)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (உதவிபெறும்‌ பள்ளிகள்‌) செயல்முறைகள்‌, சென்னை -6.

ந.க.எண்‌. 028459 /கே1/2024, நாள்‌  24. 12.2024.

பொருள்‌:         தொடக்கக்‌ கல்வி - விலையில்லா நலத்திட்டங்கள்‌ - 2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ மாணவிகளுக்கு முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான உத்தேசத்‌ தேவைப்‌ பட்டியல்‌ EMIS-லிருந்து பெற்று வழங்குதல்‌ - தொடர்பாக.


பார்வை: 1. அரசாணை (நிலை) எண்‌.116, பள்ளிக்‌ கல்வித்‌ (க்யு)த்‌ துறை, நாள்‌.14.05.2012.

2. அரசு கடிதம்‌ எண்‌.5987;தொக3(1)2018, பள்ளிக்‌ கல்வித்‌ துறை நாள்‌.09.07.2018.


பார்வை (1)-ல்‌ காணும்‌ அரசாணையின்படி, 2012 - 2013 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ தொடக்கக்‌ கல்வி இயக்கக கட்டுப்பாட்டில்‌ உள்ள அரசு: அரசு உதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌  வகுப்பு வரை பயிலும்‌ மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்கப்பட்டு வருகிறது.


2025-2026 - ஆம்‌ கல்வியாண்டிற்கு  தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ உள்ள அரசு மற்றும்‌ அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌  பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌  மாணவமாணவியர்களுக்கு முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான   உத்தேசத்‌ தேவைப்பட்டியல்‌, அனைத்து மாவட்டக்கல்வி அலுவலகங்களுக்கும்‌ (தொடக்கக்கல்வி) கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌     மையத்தின்‌  (EMIS) மூலம்‌     27.12.2024 அன்றைய  நிலவரப்படி    மாணவ மாணவியர்களின்‌ எண்ணிக்கை பெறப்பட்டு. சென்னை-32, தமிழ்நாடு செய்தித்தாள்‌ மற்றும்‌ காகித நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.


எனவே, 2024-25 ஆம்‌ கல்வியாண்டில்‌ தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ உள்ள அரசு மற்றும்‌ அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌   பள்ளிகளில்‌ 1முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அனைத்து  மாணவமாணவியர்களின்‌ எண்ணிக்கை, கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ மையத்தின்‌ (EMIS-ல்‌) மூலம்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளதா என்பதை சார்ந்த வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ மூலம்‌ உறுதி செய்து கொள்ள வேண்டும்‌ என      அனைத்து  மாவட்டக்கல்வி  அலுவலர்களுக்கும்‌   (தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.


பெறுநர்‌                                            ்‌

அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்‌ 

(மின்னஞ்சல்‌ மூலமாக)


Teachers suffer as online training links are not available - Daily News


 இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி 


Teachers suffer as online training links are not available - Daily News


தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளி மாணவர்களையும் மற்ற மாணவர்களைப் போல் வழி நடத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு உள்ளடக்கிய கல்வி பயிற்சி இணைய வழியில் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கான இணைப்பு கிடைக்காததால் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.


மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்கும் முறை தான் உள்ளடக்கிய கல்வி முறையாகும். மாற்றுத்திறனாளி மாணவர்களையும் மற்ற மாணவர்களைப்போல் வழி நடத்த ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் உள்ளடக்கிய கல்விக்கு இணைய வழியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.


இந்த பயிற்சி டிச.14 முதல் ஜன.10 வரை ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கட்டங்கள் முடித்த பின் அடுத்த கட்டங்களுக்கு ஆசிரியர்கள் செல்லலாம்.


பயிற்சி நிறைவு செய்த பின் ஆசிரியர்கள் எல்.எம்.எஸ்., என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தால் பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ்களை டவுன் லோடு செய்து கொள்ளலாம்.


இதற்காக எமிஸ் தளத்தில் உள் உழைந்து ஆசிரியர்கள் தங்கள் பயனர் கணக்கு மூலம் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஆசிரியர்கள் இந்த பயிற்சிக்காக நுழைவதால் இணையதள இணைப்பு கிடைக்கமால் தவிக்கின்றனர்.


தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த இணையதள பிரச்னையை சரி செய்து ஆசிரியர்கள் ஆன் லைன் மூலம் பயிற்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

 

01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநரின் DSE செயல்முறைகள்


From 01.01.2025 applications for pension schemes and all types of leave through Kalanjiyam App only – Director of School Education Proceedings



பள்ளிக்கல்வி துறை அனைத்து அலுவலகங்கள் மற்றும் அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் களஞ்சியம் செயலி மூலம் விடுப்பு / ஓய்வூதிய திட்டம் / பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் / கடன் / Pay Slip போன்றவற்றிற்கு களஞ்சியம் செயலியை இனி வரும் காலங்களில் முழுமையாக பயன்படுத்த வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Manarkeni App Download - DEE Proceedings - Key Considerations

  மணற்கேணி செயலி பதிறக்கம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள் - முக்கியக் கருததுகள் Manarkeni App Download - DEE Proceedings - Important Thi...