பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-01-2025 - School Morning Prayer Activities
திருக்குறள்:
"பால் பொருட்பால்
அதிகாரம்: மருந்து
குறள் எண்:949
உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
பொருள்:
நோயாளிகள் நிலையையும், நோயின் நிலையையும் காலத்தையும் மருத்துவன் அறிந்து செய்க.
பழமொழி :
"சுறுசுறுப்பு வெற்றி தரும்.
Briskness will bring success."
இரண்டொழுக்க பண்புகள் :
* எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.
*பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.
பொன்மொழி :
எதிர்காலத்தைப் பற்றி பயம் கொள்ள வேண்டாம். அதை உருவாக்கத்தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் --பராக் ஓபாமா
பொது அறிவு :
1. அதிக வெப்பக் கதிர்வீச்சை உட்கவரக்கூடிய நிறம்__________
விடை : கறுப்பு.
2.இராக்கெட்டின் இயக்கம் செயல்படுவது நியூட்டனின் எந்த விதியின் படி_____________
விடை :மூன்றாம் விதி
English words & meanings :
Walking. - நடத்தல்
Wrestling. - மல்யுத்தம்
நீதிக்கதை
அறிவுரை கூறுவதற்கு தகுதி வேண்டும்
குரு ராமகிருஷ்ணர் ஒரு நாள் அன்பர்களின் மத்தியில் பேசிக்கொண்டிருந்தார். அவர் கூறும் கருத்துக்களை அனைவரும் உற்று கேட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு பெண்மணி தன் ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு அவர் முன் வந்து நின்றாள்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் அந்த பெண்மணியை பார்த்து, “தாயே உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். உடனே அந்த அம்மையார் சுவாமி என் மகன் அதிகமான அளவு இனிப்பு சாப்பிடுகிறான். அதனால், அதிக அளவில் இனிப்புகளை சாப்பிடக்கூடாது என்று இவனுக்கு அறிவுரை கூறுங்கள் என்றாள்.
அவள் மேலும் நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. அடித்து பார்த்தேன், பயனில்லை என்றாள். ஸ்ரீ ராமகிருஷ்ணர் அந்தப் பெண்மணியை பார்த்து, “தாயே! நீங்கள் உங்கள் மகனை ஒரு வாரம் கழித்து என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார்.
அந்த பெண்மணியும் பதில் ஏதும் பேசாமல் தன் ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு சுவாமியிடம் விடை பெற்று தன் வீட்டிற்கு சென்று விட்டாள். ஒரு வாரம் கடந்தது. அந்தப் பெண்மணி மீண்டும் தன் ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணரை பார்க்க சென்றாள்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் அந்தப் பெண்மணியை அன்புடன் வரவேற்றார். பிறகு ஐந்து வயது மகனை பார்த்து தம்பி இனிப்புகளை அதிகம் சாப்பிடாதே. அவ்வாறு அதிகம் சாப்பிட்டால் அது உன் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். உன் வயிற்றில் பூச்சிகள் உருவாகும், என அறிவுரை கூறினார்.
அந்தப் பெண்மணிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. அதை சுவாமியிடம் கேட்டு விடலாம் என்று எண்ணிய அவள் ஸ்ரீ ராமகிருஷ்ணரை பார்த்து
“சுவாமி, நான் முதல் நாள், என் மகனை உங்களிடம் அழைத்து வந்த போதே அதிகமாக இனிப்புகளை சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கும் என்று என் மகனுக்கு அறிவுரை கூறியிருக்கலாமே? ஏன் ஒரு வாரம் பொறுத்து வர சொல்லி அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று கேட்டாள்.
அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் புன்னகை புரிந்தபடியே, “தாயே! நீங்கள் உங்கள் மகனை முதல் முறையாக அழைத்து வந்த போது நானே அதிக அளவில் இனிப்பு சாப்பிடுபவனாக இருந்தேன். அந்நிலையில் நான் உங்கள் மகனுக்கு அறிவுரை கூறும் தகுதியை பெற்றிருக்கவில்லை. பிறகு ஒரு வாரம் கழித்து வர சொன்ன போது நான் இனிப்புகளை சாப்பிடுவதை நிறுத்தி இருந்தேன். அதனால்தான் உங்கள் மகனுக்கு அறிவுரை கூறினேன்” என்றார்.
அந்த தாய் ராமகிருஷ்ணரை புகழ்ந்த படியே சென்றாள். அந்த சிறுவனும் அன்று முதல் அதிகமான அளவில் இனிப்புகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டான்.
நீதி : எதற்குமே ஒரு தகுதி வேண்டும். பிறருக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பு நாம் நல்வழியில் நடக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்
13.01.2025
* முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 சதவீத உள்ஒதுக்கீடு 8 சதவீதமாக குறைக்கப்பட்டு, அமைச்சு பணியாளர்களுக்கு 2 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது: பள்ளிக் கல்வித்துறை தகவல்.
* போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.6.41 கோடி ஊக்கத் தொகை வழங்க அரசாணை.
* உடல் உறுப்பு தானம் வழங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாள் சிறப்பு விடுப்பு: மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு.
* தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பு ஆகிய பிரச்னைகளும், லாஸ்ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல்போனதற்கு காரணம் என தீயைணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: நார்வேயின் கேஸ்பர் ரூட் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.
* ஹாக்கி இந்தியா லீக் போட்டி: ஷூட் - அவுட்டில் சூர்மா கிளப் அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி.
Today's Headlines
* The 10 percent internal reservation given to secondary teachers in the appointment of postgraduate teachers has been reduced to 8 percent, and 2 percent internal reservation has been given to ministry employees: School Education Department information.
* Government order to provide an incentive of Rs. 6.41 crore to the employees of transport corporation .
* 42-day special leave for central government employees who donate organs: Union Health Ministry announcement.
* Firefighters have said that water shortage and power outages are also reasons for the inability to control the Los Angeles forest fire.
* Australian Open Tennis Series: Norway's Casper Root advances to the 2nd round.
* Hockey India League: Hyderabad defeats Surma Club in shoot-out.
Covai women ICT_போதிமரம்