கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி - அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகளும், கடைசி தேதிகளும்



உயர்கல்வி - அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகளும், கடைசி தேதிகளும் Last Dates 


Higher Education - Official Website Addresses and Deadlines



1. TNEA – Engineering Admission


துறை: அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள்


கடைசி தேதி: 06.06.2025


இணையதளம்: https://www.tneaonline.org




2. TNGASA – Arts & Science Colleges Admission


துறை: அரசு கலை & அறிவியல் கல்லூரிகள்


கடைசி தேதி: 27.05.2025


இணையதளம்: https://www.tngasa.in




3. TNAU – Agriculture, Horticulture, Forestry, Fisheries


துறை: வேளாண்மை மற்றும் தொடர்புடைய படிப்புகள் (அரசு + தனியார்)


கடைசி தேதி: 31.05.2025


இணையதளம்: https://tnau.ac.in



4. Government Polytechnic Colleges Admission


துறை: டிப்ளமோ படிப்புகள் – அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்


கடைசி தேதி: 06.06.2025


இணையதளம்: https://tnpoly.in/



5. TNDALU – Law Colleges Admission


துறை: அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள்


கடைசி தேதி: 31.05.2025


https://www.tndalu.ac.in



6, அரசு கவின்கலைக் கல்லூரிகள்:


கடைசி தேதி: 31.05.2025


https://artandculture.tn.gov.in


🐟 மெடிக்கல் கவுன்சிலிங் 

Pharm/ Paramedical/ Nursing... போன்ற படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வேண்டிய இணைய தளங்கள்.

www.tnhealth.tn.gov.in

www.tnmedicalselection.net

(இன்னும் தேதி அறிவிக்கவில்லை)


🐟வேளாண், மீன்வளப் படிப்புக்கு ஒரே விண்ணப்பம்

www.tnagfi.ucanapply.com


🐟மாணவர்கள் சேர்க்கைக்கான வழிமுறைகள் உள்ளிட்ட விபரங்களை மேலும் அறிய..


அ) வேளாண்மைப் பல்கலைக்கழகம்

www.tnau.ac.in 

Last Date : 08/06/2025


ஆ)மீன்வளப் பல்கலைக்கழகம்

www.tnjfu.ac.in


I.T.I படிப்புகளுக்கு விண்ணப்பிக்க..

www.skilltraining.tn.gov.in


Aadhaar Correction - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள்


ஆதார் திருத்தம் - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள்


Aadhaar Correction - Required Documents, Terms and Limitations


UIDAI (Unique Identification Authority of India) வழிகாட்டி சட்டங்களின் கீழ், ஆதார் விவரங்களைத் திருத்துவது கட்டுப்பாடுகளுடன் நிர்ணயிக்கப்பட்டது. கீழே முக்கியமான விவரங்கள்:


---


*1. பெயர் திருத்தம் (Name Update)*


🔴மொத்தம் 2 முறை மட்டுமே பெயரை மாற்ற அனுமதி.


🔴சிறிய மாற்றங்கள் (எ.கா: spelling திருத்தம்) மற்றும் பெரிய மாற்றங்கள் (marriage after name change) இரண்டும் சேர்த்தே 2 முறை.


🔴ஆதாரமான ஆவணம் தேவை:


🔹Passport,


🔹PAN Card,


🔹SSLC Certificate,


🔹Marriage Certificate,


🔹Gazette Notification போன்றவை.


---


*2. பிறந்த தேதி திருத்தம் (Date of Birth - DoB)*


🔴மொத்தம் 1 முறை மட்டுமே பிறந்த தேதியை மாற்ற முடியும்.


🔴DoB திருத்தம் செய்ய வயது நிரூபிக்கும் ஆவணம் கட்டாயம்:


🔹Birth Certificate,


🔹SSC Marksheet,


🔹Passport,


🔹Government issued document with DoB.


🔴மாற்றம் 3 வருடத்திற்குள் இருக்க வேண்டும் (உதாரணம்: 1985-01-01 ஐ 1982-01-01 ஆக மாற்ற முடியாது).


---


*3. முகவரி திருத்தம் (Address Update)*


🔴எத்தனை முறை வேண்டுமானாலும் முகவரி மாற்றம் செய்யலாம் (வசதி பொருந்தும் வரை).


🔴ஆதாரமாக:


🔹Electricity bill, Water bill, Telephone bill,


🔹Ration Card,


🔹Bank Statement with address,


🔹Rent Agreement (தகுந்த Supporting Document)


🔴Address Validation Letter மூலமாக, Proof இல்லாமல் வேறு நபரின் address பயன்படுத்த முடியும் (பரிந்துரைக்கப்படும் நபரிடமிருந்து ஒப்புதல் அவசியம்).


---


*4. பாலினம் (Gender Update)*


🔴1 முறை மட்டுமே மாற்ற முடியும்.


🔴ஆவணங்கள் பொதுவாக தேவையில்லை, ஆனால் கூடுதல் சரிபார்ப்புகள் இருக்கலாம்.


---


*5. மொபைல் எண் மற்றும் இமெயில் (Mobile Number / Email Update)*


🔴எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்ற முடியும்.


🔴OTP மூலமாக சுய சரிபார்ப்பு தேவை.


🔴நேரடி Aadhaar Seva Kendra அல்லது Online via myAadhaar மூலம் செய்யலாம்.


---


*முக்கியக் குறிப்புகள்:*


🔴திருத்தங்கள் Online (https://myaadhaar.uidai.gov.in) மூலமாகவும், Aadhaar Seva Kendra மூலமாகவும் செய்யலாம்.


🔴முக்கியமான திருத்தங்களுக்கு, Biometric Authentication மற்றும் Face Authentication தேவைப்படும்.


🔴UPD Request Number (URN) மூலம் update நிலையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்.


Kalanjiyam Mobile App New Version Update - Version 1.22.2 - Updated on 13-05-2025

  

 

 KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.22.2


IFHRMS Kalanjiyam Mobile App New App New Update 


Version 1.22.2


Updated on 13-05-2025


*Whats New?


• Pensioner can do the mustering for Others


• Paydrawn reports are updated for Current financial year


• Minor Bug fixes


🧶Update Link👇👇👇


👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾


https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam





About this App

Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls


Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.


Airtel mobile சேவை பாதிப்பு


ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு


Airtel mobile service affected


மாநிலம் முழுவதும் ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு என வாடிக்கையாளர்கள் புகார்




ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.


சென்னையில் ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக என்று வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


சென்னை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் ஏர்டெல் எங்களை தொடர்பு கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.


ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு தொடர்பாக ஏர்டெல் இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.


இன்று தமிழகம் மட்டுமின்றி பெங்களூரிலும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கடுமையான நெட்வொர்க் கால் சேவையில் சிக்கலை சந்தித்துள்ளனர். இந்த மொபைல் சேவை பாதிப்பு சுமார் 2 மணிநேரமாக நீடித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் பார்தி ஏர்டெல் சமூக வலைத்தள பக்கங்களில் புகார்களை பதிவு செய்து வருகின்றன. இந்த சிக்கலுக்கான காரணம் குறித்து பார்தி ஏர்டெல் தரப்பில் இன்னும் சரியான அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மே 13, 2025 இன்று அதன் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் நிகர லாபம் PAT பின்பு 77% உயர்ந்து ரூ.5,223 கோடியாக பதிவு செய்துள்ளது. மேலும் நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 16 ரூபாய் டிவிடெண்ட் கொடுப்பதாக அறிவித்துள்ளது.


லாபத்தில் இயங்குவதாக கணக்கு காட்டியுள்ள ஏர்டெல் சேவையின் தற்போதய நெட்வொர்க் முடக்கம் தமிழ்நாட்டில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.


NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

 தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்


Supreme Court dismisses petition seeking direction to state governments to implement National Education Policy in Tamil Nadu


தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


மாநில அரசு, தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல எனவும் கருத்து.



தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 


தேசிய கல்விக் கொள்கைப்படி தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனுவில் கோரியிருந்தார். இந்த நிலையில், தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது . மாநில அரசு, தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல எனவும் கருத்து தெரிவித்துள்ளது. 



தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளராகப் பதவி உயர்வு வழங்குவது - 15.03.2025 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் - தேர்ந்தோர் பெயர்பட்டியல் (Drawl of Panel to the post of Assistant) வெளியீடு

 

 

தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளராகப் பதவி உயர்வு வழங்குவது - 15.03.2025 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் - தேர்ந்தோர் பெயர்பட்டியல் (Drawl of Panel to the post of Assistant) வெளியிடுதல் - தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்


Tamil Nadu Ministerial Services - Promotion to the post of Assistant - Eligible candidates as on 15.03.2025 - Publication of the list of selected candidates (Drawl of Panel to the post of Assistant) - Regarding - Tamil Nadu Joint Director of School Education (Staff Group) Proceedings 



தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்,

ந.க.எண். 012828/ அ4/ இ3/ 2025-5, நாள். 02.05.2025

பொருள்: தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / - சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III ஆகியோர்களுக்கு உதவியாளராகப் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது - 15.03.2025 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள்- தேர்ந்தோர் பெயர்பட்டியல் (Drawl of Panel to the post of Assistant) வெளியிடுதல் - தொடர்பாக.


பார்வை:

1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், ந.க.எண்.012828/94/3/2025-1, நாள். 05.03.2025


2. பள்ளிக்கல்வி துறை இயக்ககம்/ வாரியம் அலுவலக தலைவர்களிடமிருந்தும், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துருக்கள்.


3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், ந.க.எண். 012828/14/3/2025-4, நாள். 22.04.2025


பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்களுக்கு தமிழ்நாடு அமைச்சுப்பணி சிறப்பு விதிகள், விதி 5(b) ன் படி உதவியாளர் பதவி உயர்வு மற்றும் விதி 9 ன் படி சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை-III லிருந்து உதவியாளர்களாகப் பணி மாறுதல் வழங்குதல் சார்ந்து 15.03.2025 நிலவரப்படி தகுதிவாய்ந்த நபர்கள் விவரங்களை அனைத்து அலுவலர்களிடமிருந்து பார்வை 2ல் காணும் கருத்துருக்கள் மூலம் வரப்பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணிநிபந்தனைகள்) சட்டம் 2016-ன் கீழ் பிரிவு 40(2)-ன்படி பார்வை 3ல் காணும் செயல்முறையின்படி முன்னுரிமைப் பட்டியல் (SENIORITY LIST) வெளியிடப்பட்டது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு விண்ணப்பிக்கும் நேரடி மறுகூட்டல் முறையினை (Retotal I) இரத்து செய்து அரசாணை வெளியீடு

 

G.O. (Ms) No. 103, Dated: 07-05-2025


மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு விண்ணப்பிக்கும் நேரடி மறுகூட்டல் முறையினை (Retotal I) இரத்து செய்து அரசாணை (நிலை) எண்: 103, நாள் : 07-05-2025 வெளியீடு



Government Order (Ms) No. 103, Dated: 07-05-2025, Cancelling the Direct Retotaling System (Retotal I) for applying after the results of the Higher Secondary Examination.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளிக்கல்வி - அரசு பொதுத் தேர்வுகள் - இனிவரும் கல்வியாண்டு முதல் மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் விண்ணப்பிக்கும் நேரடி மறுகூட்டல் (மறுகூட்டல் I) முறையினை இரத்து செய்தல் மற்றும் மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற்ற பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி ( D.A.) உயர்வு - விரைவில் அறிவிப்பு

  மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி ( Dearness Allowance) உயர்வு - விரைவில் அறிவிப்பு ஜூலை 2025 இல் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊ...