கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் ஊதியம் பெறும் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கினை சம்பள கணக்காக (SGSP Account) ஆக மாற்றி கொள்ள தேவையான ஆவணங்கள்


ஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் ஊதியம் பெறும் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கினை சம்பள கணக்காக (SAVINGS BANK ACCOUNT TO STATE GOVERNMENT SALARY PACKAGE ACCOUNT) ஆக மாற்றி கொள்ள தேவையான ஆவணங்கள் 


தகவலுக்காக மட்டும்


ஆசிரியர்கள் / அரசுப் பணியாளர்கள் தங்களது சம்பளம் பெறும் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கினை சம்பள கணக்காக (SAVINGS BANK ACCOUNT TO SGSP ACCOUNT) ஆக மாற்றி கொள்ளவும்.


தேவையான ஆவணங்கள்


1. Aadhaar Card Xerox

2. PAN card Xerox

3. Bank Pass Book Xerox

4. Teachers / Employee ID Card xerox

5. Letter to change Salary Account         

 

இந்த ஆவணங்களுடன் வங்கி மேலாளரிடம் கடிதம் கொடுத்து மாற்றி கொள்ள முடியும்.  


நன்றி


🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥


தங்க நகைக்கடன் : Reserve Bank வெளியிட்டுள்ள புதிய விதிகள்



தங்க நகைக்கடன் : ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிகள்


Gold and jewellery loans: New rules issued by the Reserve Bank


தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. 


ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிகள்:-


 தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது


வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்:


தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும்.

தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும். எடுத்துக்காட்டாக நகையின் மதிப்பு 100 ரூபாய் என்றால் 75 ரூபாய் வரை மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும்

* 

அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும்.


வங்கிகள்(அ) வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும்.

தங்க நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெற வேண்டும்

*


*

தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும்.

குறிப்பிட்ட வகையிலான தங்கங்களுக்கு மட்டுமே நகைகடன் வழங்கப்படும். நகை 22 காரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்

*

வெள்ளி நகைகளுக்கும் நகைக்கடன் பெறலாம். வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி.


தனிநபர் ஒரு கிலோ தங்கம் வரையில் மட்டுமே அடமானம் வைக்க முடியும்.


அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப்படும்.


கடன் ஒப்பந்தத்தில் முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும்.


அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும். 


தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.


நகைக்கடன் வாங்கியவர் அந்த கடனை திரும்ப செலுத்திய 7 வேலை நாட்களில் நகையை திரும்பி ஒப்படைக்க வேண்டும். 7 வேலை நாட்களில் ஒப்படைக்கவில்லையென்றால் கடன் கொடுத்தவர் (வங்கிகள்) ஒரு நாளைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக கொடுக்க வேண்டும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது



* 

* 

தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கு - அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்யவும், ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு ஆணையம் உத்தரவு



 சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கு - அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்யவும், ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு


Human Rights Commission orders Tamil Nadu government to dismiss government doctor and pay Rs. 50 lakh as compensation for transferring patient to private hospital


கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி ஆதாயம் பெற்ற வழக்கில், மருத்துவர் பிரபாகரனை பணி நீக்கம் செய்து, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.


உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த ஜெயா என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு ஆணையம் உத்தரவு. 


இதில் ரூ.40 லட்சத்தை மருத்துவர் பிரபாகர் வழங்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கில் கோவில்பட்டி அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்யவும், உயிரிழந்த நோயாளிக்கு ரூ.40 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டு மனித உரிமை ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை தனது தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்த அரசு மருத்துவர் பிரபாகரன் மீது மனித உரிமைகள் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.


விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி. இவரது மனைவி ஜெயா 2018ஆம் ஆண்டு தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பணியாற்றிய அரசு டாக்டர் பிரபாகரன், ஜெயாவை தனது தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். பல நாட்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஜெயா உயிரிழந்தார்.


இதையடுத்து, அவரது கணவர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.

 

இதுகுறித்து இராணுவ வீரர் எஸ். கருப்பசாமி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது மனைவியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததற்காக மருத்துவர் பிரபாகரன் ரூ.2 லட்சம் கேட்டதாகவும், தான் ரூ.20 ஆயிரம் கொடுத்ததாகவும், மீதி பணம் கொடுக்காததால் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், தனது மனைவியை பார்க்கவும் அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். 


மேலும், தனது மனைவிக்கு ஆரம்பத்தில் 30% தீக்காயம் இருந்த நிலையில், மருத்துவரின் தவறான சிகிச்சையால்தான் 60% ஆகி உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.இந்த புகாரின் மீது மனித உரிமை ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் விசாரணை நடத்தினார்.


 விசாரணையில், மருத்துவர் பிரபாகரன் அரசு மருத்துவமனை விதிமுறைகளை மீறி செயல்பட்டது உறுதியானது. குறிப்பாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை தனது சொந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தது மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது என ஆணையம் கண்டறிந்தது.


இதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட ஆணையம், இன்று (மே 19) வெளியிட்ட உத்தரவில், பின்வரும் தீர்ப்பை அறிவித்துள்ளது:


ராணுவ வீரர் கருப்பசாமிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையில், டாக்டர் பிரபாகரன் ரூ.40 லட்சமும், டாக்டர் வெங்கடேஸ்வரன் ரூ.2 லட்சமும், ஊழியர்கள் குமரேஸ்வரி மற்றும் குரு லட்சுமி தலா ரூ.1 லட்சமும், தமிழக அரசு ரூ.6 லட்சமும் வழங்க வேண்டும்.


டாக்டர் பிரபாகரனை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்; அவரை மீண்டும் அரசு பணியில் நியமிக்கக் கூடாது. அவர்மீது குற்றவழக்கு பதிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவதை கண்காணிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புகார் பெட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என இந்த தீர்ப்பின் மூலம், அரசு மருத்துவர்களின் பொறுப்புணர்வையும், பொதுமக்கள் பாதுகாப்பையும் வலியுறுத்தியுள்ளது மனித உரிமை ஆணையம்.


சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது - பல்லடம் மூவர் கொலையிலும் 3 பேருக்கு தொடர்பு

 


சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது - பல்லடம் மூவர் கொலையிலும் 3 பேருக்கு தொடர்பு - மேற்கு மண்டல ஐஜி பேட்டி 


4 people arrested in Sivagiri couple murder case - 3 people involved in Palladam trio murder - Western Zone IG interview


சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் அருகே நடந்த மூவர் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி, மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி (வயது 72) - பாக்கியம் (63) ஆகியோர், பணம், நகைக்காக, கடந்த மாதம் 28-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து பத்தே முக்கால் பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.


இந்த கொலை வழக்கு குற்றவாளிகளைக் கைது செய்ய, மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில், ஈரோடு எஸ்பி சுஜாதா தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.


இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.


இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் திங்கள்கிழமை காலை ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

சிவகிரியை அடுத்த மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த ராமசாமி - பாக்கியம் தம்பதியினர் கொலை வழக்கு தொடர்பாக பழங்குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல், கண்காணிப்பு கேமரா பதிவுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.


இதில் அரச்சலூர் வீரப்பம்பாளையத்தைச் சேர்ந்த ஆச்சியப்பன் (48) அறச்சலூர் தெற்கு வீதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (52), வீரப்பம்பாளையம் புதுக்காலனியைச் சேர்ந்த ரமேஷ் (54) ஆகிய மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராமசாமி - பாக்கியம் தம்பதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.



கடந்த மாதம் 28ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல், இரு சக்கர வாகனத்தில் மூவரும் ராமசாமியின் தோட்டத்துக்கு வந்துள்ளனர். கரும்புக்காடு பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு, வீட்டின் அருகே மறைந்து இருந்துள்ளனர். அப்போது மின் தடை ஏற்படுத்தி, பாக்கியத்தை வீட்டில் இருந்து வெளியே வர வைத்துள்ளனர். வெளியே வந்த அவரை, மரக்கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர். சத்தம் கேட்டு வந்த ராமசாமியையும், மூவரும் கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர்.


பாக்கியம் அணிந்திருந்த பத்தே முக்கால் பவுன் நகையை பறித்துக் கொண்டு மூவரும் தப்பியுள்ளனர். திருடிய நகையை சென்னிமலை பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரிடம் கொடுத்து உருக்கியுள்ளனர். உருக்கப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 2ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கொலையாளிகளிடம் இருந்து அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம், கொலைக்கு பயன்படுத்திய மரக்கட்டை, கையுறை மற்றும் கொலையான ராமசாமியின் அலைபேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கொலை நடந்த வீட்டில் இருந்த கால்தடங்களுடன், குற்றவாளிகளின் கால் தடங்களை ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்ய தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றவாளி ஆச்சியப்பன் தேங்காய் உறிக்கும் பணி மற்றும் தோட்ட வேலை செய்வது போன்று தனியாக உள்ள தோட்டங்களுக்கு சென்று நோட்டமிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.


அவர் கொடுக்கும் தகவலின் படி, மற்ற இருவரும் இணைந்து, தனியாக வசிக்கும் வயதானவர்களைக் கொலை செய்து நகையைத் திருடியுள்ளனர். சிவகிரி கொலை சம்பவத்துக்கு முன்பாக 15 நாட்களுக்கு முன்பு இப்பகுதியை நோட்டமிட்டுள்ளனர். குற்றவாளிகள் மூவரின் மீதும், 2015 ஆம் ஆண்டு 5 வழக்குகள் இருந்துள்ளன. இந்த வழக்குகளில் இருந்து இவர்கள் விடுபட்டுள்ளனர்.


பல்லடம் கொலை

திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம், சேமலைக்கவுண்டன்பாளையத்தில் வசித்துவந்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமாத்தாள் (74) மற்றும் அவர்களது மகன் செந்தில்குமார் (44) ஆகியோர் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஐந்தரை பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கிலும் தற்போது பிடிபட்ட குற்றவாளிகள் மூவருக்கும் தொடர்புள்ளது.


இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருவதால், நீதிமன்றம் மூலம் இவர்களை காவலில் எடுத்து அந்த கொலை தொடர்பான விசாரணையை மேற்கொள்ள உள்ளனர். மேலும் ஈரோடு, திருப்பூர், கோவை பகுதியில் நடந்த குற்றச் சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் குற்றச் சம்பவத்தில் ஈடுபடும் போது போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை.


இதுபோன்ற குற்றச் சம்பவம் மேலும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தீவிர பகல் மற்றும் இரவு ரோந்துகள், 35 இருசக்கர வாகன ரோந்துகள், 3 நான்கு சக்கர வாகன ரோந்து மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் கரையோர பகுதிகளில் ஆயுதம் தாங்கிய 21 ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்


சிக்கியது எப்படி? 

கொலையாளிகளைப் பிடிக்க கண்காணிப்பு கேமரா பதிவுகள் உதவியாக இருந்துள்ளது. கொலை நடந்த பகுதியில் இருந்து இரவில் ஒரு இருசக்கர வாகனம் சென்றதைக் கண்டறிந்த போலீஸார், அந்த வாகனம் எதுவரை சென்றது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் பழங்குற்றவாளிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த போது, கொலை குற்றவாளிகள் சிக்கியதாக தனிப்படையினர் தெரிவித்துள்ளனர்.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழப்பு

 



காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த சோகம்


ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் கார் கதவுகள் ஆட்டோ லாக் ஆனதால் மூச்சுத் திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு.


வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சென்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது காரின் கதவுகள் தானாக மூடிய நிலையில் வெளியே வர முடியாததால் மூச்சுத் திணறி உயிரிழப்பு. 


பக்கத்து வீட்டில் திருமண விழா இருந்ததால், குழந்தைகள் அங்கு சென்றிருப்பார்கள் என நினைத்து நீண்ட நேரம் பெற்றோர் தேடவில்லை.


ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் துவாரபுடி கிராமத்தில் காருக்குள் சிக்கி மூச்சுத் திணறி 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் துவாரபுடியைச் சேர்ந்த பார்லி ஆனந்த் – உமா தம்பதியினரின் மகள்கள் சாருமதி (8), சாரிஷ்மா (6), அதேபகுதியை சேர்ந்த சுரேஷ் – அருணா தம்பதியின் மகள் மானஸ்வி (6) மற்றும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பவானியின் மகளான உதய் (8) ஆகிய 3 குடும்பமும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டின் அருகில் திருமண விழா நடைபெற்று வந்த நிலையில், அங்கு பாடல் ஒளிபரப்பப்பட்டு இருந்தது.


இந்நிலையில் குழந்தைகள் விளையாடுவதற்காக வீட்டின் அருகே தெருவில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சென்று குழந்தைகள் விளையாடியுள்ளனர். காருக்குள் அமர்ந்து விளையாடியபோது திடீரென்று காரின் கதவு தானாக மூடிக்கொண்டது. கார் கதவுகள் ஆட்டோ லாக் ஆன நிலையில் வெளியே வர முடியாத குழந்தைகள் கூச்சலிட்டனர். அவர்கள் கத்தியது பாட்டு சத்தத்தில் கேட்காததால் 4 பேரும் காருக்குள் மூச்சுத் திணறி மயக்கமடைந்தார். இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் திரும்பி வராததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களைத் தேடிப் பார்த்தபோது நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் அவர்கள் நான்கு பேரும் மயங்கி கிடப்பது தெரியவந்தது.


இதனையடுத்து கார் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து நான்கு பேரையும் மீட்ட பெற்றோர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நான்கு பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் துவாரபூடி கிராமத்தில் துக்கச் சூழல் நிலவியது. மரணமடைந்த சிறுவர், சிறுமிகளின் பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.



QR Code மூலம் மாணவர் சேர்க்கை - அரசுப் பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பாராட்டு



QR Code மூலம் மாணவர் சேர்க்கை - அரசுப் பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பாராட்டு



இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் - அரசாணை எண்: 107, நாள் : 19-05-2025 வெளியீடு

 

 பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை (வாலாயம்) எண்: 107, நாள் : 19-05-2025 வெளியீடு

 

Government Order No. 107, Date: 19-05-2025, Transfer of Joint Directors in the School Education Department



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்


தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் இணை இயக்குநர்கள் 6 பேருக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:


1. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநராக செயல்பட்டு வந்த ச.சுகன்யா, தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குநகராக மாற்றப்பட்டுள்ளார்.

2. பள்ளிக்கல்வி இயக்ககத்தில் மேல்நிலைக்கல்வி இணை இயக்குநராக செயல்பட்டு வந்த அ.ஞானகௌரி, இடைநிலை பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

3. பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இடைநிலை இணை இயக்குநர் ஆர்.பூபதி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (சிறப்பு திட்டங்கள்) இணை இயக்குநராக மாற்றம செய்யப்பட்டுள்ளார்.

4. தொடக்கக்கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநராக (நிர்வாகம்) செயல்பட்டு வந்த ச.கோபிதாஸ், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் (மேல்நிலைக் கல்வி) இணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

5. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் (சிறப்புத் திட்டங்கள்) ஆர்.சுவாமிநாதன், தொடக்கக்கல்வி இயக்ககத்தின் (நிர்வாகம்) இணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

6. தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குநர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (நிர்வாகம்) இணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கவர்னரின் ஆணைப்படி இந்த ஆணை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...