கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது

 சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது


சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, தேனி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கினார் முதலமைச்சர்



Age Relaxation Format



 மாணவர்களுக்கு வயது தளர்வாணை கோரும் படிவம்



Application form for requesting age relaxation for students



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


உலக சுற்றுச்சூழல் தினம் 05-06-2025 அன்று கொண்டாடுதல் - DSE Proceedings



உலக சுற்றுச்சூழல் தினம் 05-06-2025 அன்று அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடுதல் - மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின்  செயல்முறைகள், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கக தலைமைத் திட்ட இயக்குநரின் கடிதம் & பசுமை உறுதிமொழி



World Environment Day to be celebrated in all schools on 05.06.2025 - Activities to be undertaken - Proceedings of the Director of School Education, Letter from the Chief Project Director of Tamil Nadu Climate Change Directorate & Eco Pledge



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



உறுதிமொழி

நான்,

மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பேன்.

காடுகள் மற்றும் பல்லுயிர்த்தன்மையை பாதுகாப்பேன்

நீர், நிலம், காற்று மாசுபடுவதை தடுப்பேன்

பிளாஸ்டிக் பையை பயன்படுத்த மாட்டேன்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களுக்கு முன்னுரிமையளிப்பேன்

குப்பைகளை பொது இடங்களில் போட மாட்டேன்

மின்சாரத்தை சேமிப்பேன்

எரிபொருள் வாகன பயன்பாட்டை குறைப்பேன்

தண்ணீரை வீணாக்க மாட்டேன்

சுற்றுச்சூழல் மீது அக்கறையுடன் இருப்பேன்

என இந்நாளில் நான் உறுதி எடுக்கிறேன்.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-06-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-06-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 398:

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

விளக்கம்: ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.


பழமொழி :
Measure thrice before you cut once.

ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.

2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.


பொன்மொழி :

தீம் பழக்கங்களை நீக்குவதற்கு ஒரே வழி நல்ல பழக்கங்களை இடைவிடாது பழகி வருவதே ஆகும். - விவேகானந்தர்.


பொது அறிவு :

01.இந்தியாவில் பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி யார்?

திருமதி. இந்திரா காந்தி - Mrs. Indira Gandhi

02.தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட ரயில் நிலையம் எது?

ராயபுரம் - ROYAPURAM  (1856, சென்னை)



English words & Tips :

skill      -      திறமை

path      -      பாதை


TIPS

Changing a Singular Noun to a Plural Noun

* Adding ‘s’ - Tree - Trees

* Adding ‘es’ to the noun ends in S, SH, CH, X or Z  -   box - boxes, wish - wishes, match - matches

* Adding ‘ves’ for nouns ending with an ‘f’ or ‘fe’ - Leaf  -  Leaves



அறிவியல் களஞ்சியம் :

அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலை. மேற்கொண்ட ஆய்வில், நம் உடல் செல்கள் ஆரோக்கியமாக இயங்க, மெதில் அடாப்டோஜென் எனும் சேர்மம் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மஞ்சள், பூண்டு, பெர்ரி, ரோஸ்மேரி கிரீன் டீ ஆகிய உணவுகளில் அதிகமாக உள்ளது.


ஜூன் 05

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED)

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில இருபதாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.



நீதிக்கதை

வாழ்க்கைப் பயணம்

அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!'' என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.

உடனே ராக்ஃபெல்லர், ''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா? எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?'' என்று கேட்டார்.

''பெரும் விபத்து நேருமே!''- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ''வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' என்று விளக்கம் அளித்தார்.


இன்றைய செய்திகள்

05.06.2025

இன்றைய செய்திகள்

⭐போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு-போதை எதிர்ப்பு மன்றச் செயல்பாடுகள் 2025-26 மாணவர்களுக்கான (9 முதல் 12ஆம் வகுப்பு) புத்தாக்க பயிற்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் .  கல்வித்துறை அறிவிப்பு .

⭐கடுமையான மழைப்பொழிவு காரணமாக வடக்கு சிக்கிமில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நிலச்சரிவுகள், பாலங்கள் சேதம் & டீஸ்டா நதியில் அதிக அளவு வெள்ளநீர் செல்வதால் 1,200 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.

⭐இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க அமைச்சர் லுட்னிக் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்

⭐ 18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி .

⭐இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் பி.வி.சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார்.


Today's Headlines

✏ To form Drug-Free Tamil Nadu and Anti-Drug Forum Activities 2025-26 an Innovative Training was introduced for Students (Class 9 to 12) Taking Appropriate Action. Education Department Announcement.

✏ Heavy rainfall has disrupted normal life in North Sikkim. Over 1,200 tourists are stranded due to landslides, damaged bridges & high water levels in the Teesta River.

✏ US Secretary of State Ludnick has said that a trade agreement between India and the US will be signed soon.


SPORTS NEWS

🏀 Royal Challengers Bangalore won the trophy for the first time in the 18-year history of IPL series

🏀 Indonesian Open Badminton  PV Sindhu advances to the next round PV Sindhu faced Japan's Naomi Okuhara.


Covai women ICT_போதிமரம்


Festive Advance payment hike




பண்டிகைக் கால முன்பணம் உயர்வு


Festive Advance payment hike


தமிழ்நாட்டில் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்வு.


C, D பிரிவு ஓய்வூதியதாரர்கள், தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை உயர்வு.


முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியீடு.


RCB கிரிக்கெட் அணி வீரர்களை பார்ப்பதற்காக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு



 RCB கிரிக்கெட் அணி வீரர்களை பார்ப்பதற்காக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு


RCB வெற்றி விழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு


உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு


பெங்களூரு: IPL போட்டியில் கோப்பையை வென்ற Royal Challengers Bangaluru அணி வீரர்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு



 மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - டி.கே.சிவக்குமார்.


ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.


பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


கூட்ட நெரிசல் ஏற்படும் என்றுதான் திறந்தவெளி வாகன உலாவை ரத்து செய்தோம் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்.




ஆர்சிபி கொண்டாட்டத்தில் துயரம்: பெங்களூரு மைதான கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்


ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதைக் கொண்டாட இன்று (ஜூன் 4) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


18 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே சிறுவர்கள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


ஆர்சிபி அணியை பாராட்ட கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) நடத்தும் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே கூட்டம் கூடியதைத் தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், காயமடைந்தவர்கள் மற்றும் மயக்கமடைந்தவர்களை சிவாஜி நகரில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். முன்னதாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டது.


இந்தச் சம்பவம் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், “இன்று கூடிய கூட்டம் கட்டுப்படுத்த முடியாதது. அதிக கூட்டத்துக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இது ஓர் இளம் துடிப்பான கூட்டம், அவர்கள் மீது நாங்கள் லத்தியைப் பயன்படுத்த முடியாது” என்று கூறினார்.


நேற்று இரவு முதல் ஆர்சிபி வெற்றியை கொண்டாடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இரவு முழுவதும், காவல் துறையினர் கூட்டத்தை நிர்வகிப்பதிலும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் பார்த்துக் கொள்வதிலும் முழுமையாக ஈடுபட்டுள்ளனர் என்று அரசு தெரிவித்துள்ளது.


புதன்கிழமை பெங்களூருவில் தரையிறங்கிய ஆர்சிபி அணியினரை கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்றார். அவர் ஒவ்வொரு வீரருக்கும் பூங்கொத்துகளை வழங்கினார். குறிப்பாக விராட் கோலியை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவருக்கு ஆர்சிபி அணியின் கொடி மற்றும் கன்னட கொடி இரண்டையும் அவர் வழங்கினார். இதனையடுத்து, ஆர்சிபி அணியினரை கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் விதான் சவுதாவில் அவர்களைப் பாராட்டினர். தற்போது ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டம் பெருந்துயரமாக மாறியுள்ளது.


Caste-wise Population Census 2027 - Union Government Ministry of Home Affairs Official Announcement



 2027ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என ஒன்றிய அரசு உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


Caste-wise Population Census 2027 - Union Government Ministry of Home Affairs Official Announcement



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



உள்துறை அமைச்சகம்

azadi ka amrit mahotsav

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUN 2025 5:30PM by PIB Chennai

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 01, 00:00 மணியாக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 01, 00:00 மணியாக இருக்கும். மேற்குறிப்பிட்ட தேதிகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் பற்றிய அறிவிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 3-ன்படி, 16.06.2025 (தோராயமாக) அன்று அரசிதழில் வெளியிடப்படும்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990-ன் படி இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசியாக 2011-ல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.  முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியலிடுதல் (2010 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை), இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2011 பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28 வரை), இதற்கான வரம்பு தேதி 2011 மார்ச் 01, 00:00 மணியாக இருந்தது. ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான வரம்பு தேதி 2010 அக்டோபர் 01, 00:00 மணியாக இருந்தது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-க்கான முதல்கட்ட தயாரிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், களப்பணி சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கவிருந்தது. இருப்பினும் நாடு முழுவதும் கொவிட் 19 பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது.


***


(Release ID: 2133845)


AD/SM/SMB/AG/DL



உள்துறை அமைச்சகம் 

மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027 சாதிகளின் கணக்கெடுப்புடன் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்  

மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027க்கான குறிப்பு தேதி மார்ச், 2027 முதல் நாள் 00:00 மணியாக இருக்கும் 

லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஒத்திசைவற்ற பனிப்பொழிவு பகுதிகள் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு, குறிப்பு தேதி அக்டோபர், 2026 முதல் நாள் 00.00 மணியாக இருக்கும் 

பதிவிடப்பட்டது: 04 ஜூன் 2025 மாலை 5:30 மணி PIB டெல்லி 

சாதிகளின் கணக்கெடுப்புடன் மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027ஐ இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027க்கான குறிப்பு தேதி மார்ச் 2027 முதல் நாள் காலை 00:00 மணியாக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் ஒத்திசைவற்ற பனிப்பொழிவு பகுதிகளுக்கு, குறிப்பு தேதி அக்டோபர் 2026 முதல் நாள் காலை 00.00 மணியாக இருக்கும். மேற்கண்ட குறிப்பு தேதிகளுடன் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான நோக்கத்திற்கான அறிவிப்பு, 1948 மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 இன் விதியின்படி, 16.06.2025 அன்று அதிகாரப்பூர்வ அரசிதழில் தற்காலிகமாக வெளியிடப்படும்.


இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1948 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் மற்றும் 1990 மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளின் கீழ் நடத்தப்படுகிறது. இந்தியாவின் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது, அதாவது 

i) கட்டம் I- வீட்டுப் பட்டியல் (HLO) (ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30, 2010 வரை) மற்றும் 

(ii) கட்டம் II - மக்கள் தொகை கணக்கெடுப்பு (PE) (பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28, 2011 வரை) குறிப்பு தேதியுடன் - மார்ச் 2011 முதல் நாள் 00:00 மணி வரை, ஜம்மு காஷ்மீர், உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பனிப்பொழிவு இல்லாத பகுதிகளைத் தவிர, 2010 செப்டம்பர் 11 முதல் 30, 2010 வரை நடத்தப்பட்டன, குறிப்பு தேதி அக்டோபர் 2010 முதல் நாள் 00.00 மணி ஆகும். 


2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக இதேபோன்ற முறையில் நடத்த முன்மொழியப்பட்டது, கட்டம் I ஏப்ரல்-செப்டம்பர் 2020 மற்றும் இரண்டாம் கட்டம் பிப்ரவரியில் 2021. 2021 ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன, மேலும் ஏப்ரல் 1, 2020 முதல் சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் களப்பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றுநோய் பரவியதால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது. 

RK/VV/RR/PS (வெளியீட்டு ஐடி:2133845) 



Ministry of Home Affairs

Azadi Ke Amrit Mahotsav

Population Census-2027 to be conducted in two phases along with enumeration of castes

The reference date for Population Census - 2027 will be 00:00 hours of the first day of March, 2027

For the Union Territory of Ladakh and the non-synchronous snow-bound areas of the UT of Jammu and

Kashmir and States of Himachal Pradesh and Uttarakhand, the reference date will be 00.00 hours of the first day of October, 2026

Posted On: 04 JUN 2025 5:30PM by PIB Delhi

It has been decided to conduct Population Census-2027 in two phases along with enumeration of castes. The reference date for Population Census - 2027 will be 00:00 hours of the first day of March, 2027. For the Union Territory of Ladakh and the non-synchronous snow-bound areas of the UT of Jammu and Kashmir and States of Himachal Pradesh and Uttarakhand, the reference date will be 00.00 hours of the first day of October, 2026. The notification for intent of conducting Population Census with the above reference dates will be published in the official gazette tentatively on 16.06.2025, as per provision of section 3 of Census Act 1948.

The Census of India is conducted under the provisions of the Census Act, 1948 and the Census Rules, 1990. The last Census of India was conducted in 2011 in two phases,namely i) Phase I- House Listing (HLO) (1 April to 30 September 2010) and (i) Phase ⅡI - Population Enumeration (PE) (09 February to 28 February 2011) with reference date - 00:00 hours of the first day of March 2011, except for snow-bound non-synchronous areas of Jammu and Kashmir, Uttarakhand and Himachal Pradesh for which it was conducted during 11 to 30 September 2010 with reference date as 00.00 hours of the first day of October 2010.

Census 2021 was also proposed to be conducted in two phases in a similar manner with phase I during April-September 2020 and second phase in February 2021. All the preparations for the first phase of the Census to be conducted in 2021 were completed and field work was scheduled to begin in some States/UTs from April 1, 2020.However, due to the outbreak of COVID-19 pandemic across the country, the census work was postponed.

RK/VV/RR/PS

(Release ID:2133845)

Read this release in: Hindi


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...