கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CPS Updation - கருவூலத்துறை ஆணையர் & நிதித்துறை துணை செயலாளர் ஆய்வுக் கூட்ட கருத்துகள்



CPS Updation தொடர்பாக கருவூலத்துறை ஆணையர் மற்றும் நிதித்துறை துணை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட கருத்துகள்


1. CPS Final settlement Updation 

2. CPS Number available in GDC but not available in IFHRMS

3. Data Cleansing work pending in IFHRMS.


முழுமையான தகவல் அறிய



>>> இங்கே சொடுக்கவும்...


பணி நிரவல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரகச் செய்தி


பணி நிரவல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குனரகச் செய்தி (வாட்ஸ் அப் தகவல்)


இன்று மற்றும் நாளை (03 & 04/07 / 2025/ இடைநிலை ஆசிரியர்க்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற உள்ளது, பணி நிரவல் கலந்தாய்வில் பணி நிரவலுக்குட்பட்ட ஆசிரியர்களை விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி  ஆணை பெறுமாறு வற்புறுத்தக்கூடாது. அது போல் வற்புறுத்தி பணிநிரவல் ஆணை ஏதேனும் வழங்கப்பட்டதாக புகார் பெறப்படின் சார்ந்த DEO மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது. நேற்றைய முன்தினம் மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் இது சார்ந்து குறிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டதை கவனத்தில் கொள்ளுமாறும் DEO's கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் declaration form எதுவும் பெற வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குனர்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-07-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-07-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 82:

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று    
   
விளக்கம்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.


பழமொழி :

Silence is the loudest tool of a thinking mind.

யோசிக்கும் மனதின் அதிபெரிய கருவி அமைதி தான்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

அதிக அதிகாரம் உள்ளவர் அதை மிக மென்மையாக பயன்படுத்த வேண்டும் - செனீக்கா


பொது அறிவு :

01. உலக தடகளப் போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?

           அஞ்சு பாபி ஜார்ஜ்-

             நீளம் தாண்டுதல்

   Anju  Bobby George-  Long jump

02. தென்னிந்தியாவின் எல்லோரா  என்று அழைக்கப்படும் இடம் எது?

             கழுகுமலை-தமிழ்நாடு

             Kalugumalai - Tamilnadu


English words & Tips :

Trustee – தர்மகர்த்தா, பொறுப்பாளி.

  Trust –நம்பிக்கை


Grammar Tips:

Phrase
Under lock and key

Usage
She keeps her jewellery under lock and key

I keep all my secrets under lock and key


அறிவியல் களஞ்சியம் :

பசுபிக் மகா சமுத்திரம் 35.25 சதவீதத்தையும், அட்லாண்டிக் மகா சமுத்திரம் 20.09 சதவீதத்தையும், இந்து மகா சமுத்திரம் 14.65 சதவீதத்தையும் ஆக்ரமித்துள்ளன. கடல் 1.3 X 1018 டன் அளவுள்ள நீரைத் தன்வசம் கொண்டதாக இருக்கிறது.


ஜூலை 03

சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்

2008 ஆம் ஆண்டில், இத்தாலியில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் குழு, ரெஸெரோவின் தலைமையில், பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கவும் முடிவு செய்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான வலுவான வழக்கறிஞரான, புகழ்பெற்ற பாதுகாவலர் சர் டேவிட் அட்டன்பரோவின் பிறந்தநாளை ஒட்டி, ஜூலை 3-ஆம் தேதி, முதல் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வு வெற்றிகரமாக இருந்தது, முதன்மையாக இத்தாலியில் பிளாஸ்டிக் பைகள் இல்லாத மாற்றுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது.


நீதிக்கதை

எதிர்கால வாழ்க்கை

ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார்.

அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜவவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.

அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு.

வீட்டுக்குள் தாயும் மகனும் ஏதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.

” இங்கே என்ன நடக்கிறது?” என்று முல்லா வினவினார்.

” முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன் ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் ” என்றாள் தாய் வேதனையோடு.

” குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன்3 எதிர்காலத்துக்கு நல்லதில்லையா?” என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை.

” நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை” என்று அடம்பிடித்தான்.

முல்லா சுற்றும்முற்றும் பார்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது.

அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.

” அம்மா முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே?” என்று திகைப்போடு கேட்டான் பையன்.

” பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா” என்றார் முல்லா.

இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான்.

அவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.


இன்றைய செய்திகள்

03.07.2025

⭐3 ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தும் பணி துவங்கி உள்ளது.

  ⭐அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு.

⭐இந்தியாவுடன் குறைந்த வரியில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.

⭐தெற்காசிய நாடுகள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த சார்க் அமைப்பு செயலிழந்துள்ள நிலையில் தற்போது புதிய அமைப்பை உருவாக்க சீனா முயற்சி எடுத்து வருகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀2வது டி20 போட்டி: ஜெமிமா ரோட்ரிக்ஸ், அமன்ஜோத் கவுர் அதிரடியால் இந்தியா வெற்றி.

🏀விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய 23 முன்னணி வீரர், வீராங்கனைகள்.


Today's Headlines

✏️The work of upgrading the Chennai Port Ship Terminal to handle 3,000 passengers has begun at a cost of Rs. 19.25 crore.

✏️New restrictions for foreign students studying in the US.

✏️US President Trump announces a trade deal with India at a low tariff soon.

✏️With the SAARC organization to promote integration among South Asian countries in a dysfunctional state, China is currently trying to create a new organization.

*SPORTS NEWS*

🏀 2nd T20 - Jemimah Rodrigues, Amanjot Kaur,who leads to india's victory.

🏀 Wimbledon Tennis: 23 top players who crashed out in the first round.


Covai women ICT_போதிமரம்


மன்ற செயல்பாடுகள் தொடக்கம் - CEO தகவல்

 

 மன்ற செயல்பாடுகள் தொடக்கம் - முதன்மைக் கல்வி அலுவலரின் தகவல்


அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் நடுநிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,


     இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்பட மன்றம்  வானவில் மன்றம், கலை மற்றும்  பண்பாடு மன்றம் (கலைத்திருவிழா)  மற்றும் சுற்றுச் சூழல் மன்ற செயல்பாடுகள் அனைத்து நிகழ்ச்சிகளும்  இன்று *03.07.2025* அன்று அனைத்து அரசு உயர்நிலை மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் துவங்கப்படவேண்டும்.  துவக்க  நிகழ்ச்சியினை புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து ஆவணப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


அனைத்து மன்றங்களும் முறையாக அமைக்கப்பட்டு வாரந்தோறும் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாட வேலைகளில் மன்ற செயல்பாடுகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறுவதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரும் , மன்றப்  பொறுப்பாசிரியரும் உறுதி செய்தல் வேண்டும். குறிப்பாக அனைவரும் மன்ற செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாட வேளையில் வேறு எவ்வித செயல்பாடுகளும் இடம் அளிக்காமல் மன்ற செயல்பாடுகள் மட்டுமே நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும். இச்செயல்பாடுகள் அனைத்தும் மகிழ் முற்றம்  மாணவர் குழுக்கள் வாயிலாக நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும். அதில் மாணவர்களின் பங்கேற்பையும் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் கண்காணிக்கவும் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மன்ற செயல்பாடுகளுக்கும் தனித்தனியாக ஒரு பொறுப்பு ஆசிரியரை நியமித்தல் வேண்டும் மாதந்தோறும் பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பின் கீழ் போட்டிகளை நடத்தி   வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்து EMIS  வலைதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.                            

                       - முதன்மைக்கல்வி அலுவலர், கரூர் மாவட்டம்


Higher Secondary School HeadMaster Promotion Rotation list - DSE Proceedings

 

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான சுழற்சிப் பட்டியல் வெளியீடு - பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்


Rotation list for promotion to the post of Higher Secondary School HeadMaster - DSE Proceedings 


01.01.2025 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் முன்னுரிமை அடிப்படையில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான சுழற்சி பட்டியல் (தமிழ்நாடு ப,க,இ.செ, ந,க, எண்,14360/டபிள்யு1/இ1/2025 நாள் 02.07.2025)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Training on Microsoft Teams app for HeadMasters



தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் செயலியில் பயிற்சி


Training on Microsoft Teams app for primary, middle, high and Higher secondary school HeadMasters



>>> Microsoft Teams செயலி தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 *Primary & Middle School HM's Training - Batch 1*


*03-07-2025 (11.00am-11.30am)*

ARIYALUR

CHENGALPATTU

CHENNAI (EXT. GCC)

COIMBATORE

CUDDALORE

DHARMAPURI

DINDIGUL

ERODE

KALLAKURICHI

KANCHEEPURAM

KANNIYAKUMARI

KARUR

KRISHNAGIRI

MADURAI

MAYILADUTHURAI

NAGAPATTINAM

NAMAKKAL

PERAMBALUR

PUDUKKOTTAI

https://teams.microsoft.com/l/meetup-join/19%3ameeting_NGQxZDM3MjctMjAwMi00YjRiLTk2ZGQtMTYyODhiZGExNzQy%40thread.v2/0?context=%7b%22Tid%22%3a%223f0a4594-9ed7-4725-bc35-c7398874e1c7%22%2c%22Oid%22%3a%2279f93776-ddc6-4960-8269-0638cc815f80%22%7d


Meeting ID: 4226408833413

Passcode: wM9DU95A






*Primary & Middle School HM's Training - Batch 2*

*03-07-2025 (11.45am-12.15pm)*

RAMANATHAPURAM

RANIPET

SALEM

SIVAGANGAI

TENKASI

THANJAVUR

THE NILGIRIS

THENI

THOOTHUKKUDI

TIRUCHIRAPPALLI

TIRUNELVELI

TIRUPATHUR

TIRUPPUR

TIRUVALLUR

TIRUVANNAMALAI

TIRUVARUR

VELLORE

VILLUPURAM

VIRUDHUNAGAR


https://teams.microsoft.com/l/meetup-join/19%3ameeting_YjZlZWZhNWUtZmQ2Ny00YzAwLWEyMWUtYTZkNDIyNTE5NmYw%40thread.v2/0?context=%7b%22Tid%22%3a%223f0a4594-9ed7-4725-bc35-c7398874e1c7%22%2c%22Oid%22%3a%2279f93776-ddc6-4960-8269-0638cc815f80%22%7d



Meeting ID: 4226408833413

Passcode: wM9DU95A







*High & Higher Secondary School HM's Training - Single batch*

*03-07-2025 (02.00pm-02.30pm)*

ARIYALUR

CHENGALPATTU

CHENNAI (EXT. GCC)

COIMBATORE

CUDDALORE

DHARMAPURI

DINDIGUL

ERODE

KALLAKURICHI

KANCHEEPURAM

KANNIYAKUMARI

KARUR

KRISHNAGIRI

MADURAI

MAYILADUTHURAI

NAGAPATTINAM

NAMAKKAL

PERAMBALUR

PUDUKKOTTAI

RAMANATHAPURAM

RANIPET

SALEM

SIVAGANGAI

TENKASI

THANJAVUR

THE NILGIRIS

THENI

THOOTHUKKUDI

TIRUCHIRAPPALLI

TIRUNELVELI

TIRUPATHUR

TIRUPPUR

TIRUVALLUR

TIRUVANNAMALAI

TIRUVARUR

VELLORE

VILLUPURAM

VIRUDHUNAGAR


https://teams.microsoft.com/l/meetup-join/19%3ameeting_MzNhYWU5ZmYtNzg0MC00ZmQzLWE3YzEtNmU0NTljZmRhMGI0%40thread.v2/0?context=%7b%22Tid%22%3a%223f0a4594-9ed7-4725-bc35-c7398874e1c7%22%2c%22Oid%22%3a%2279f93776-ddc6-4960-8269-0638cc815f80%22%7d



Meeting ID:4205403923444

Passcode: uG6od7zJ

*Note: All HM Please use UDISE Number as your Name to Login*


TNPSC Group 4 தேர்வு : Hall Ticket வெளியீடு

 

குரூப் 4 தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு


ஜூலை 12-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு


ஜூலை 12-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு tnpsc.gov.in மற்றும் tnpscexams.in இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஜூலை 12 ம் தேதி ஒ.எம்.ஆர். முறையில் தேர்வு நடைபெறுகிறது. ஜூலை 12 காலை 9.30 முதல் 12.30 வரை டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 4 தேர்வு மூலம் 25 வகையான 3,935 பணியிடங்களை நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு

 கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வ...