கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சைபர் கிரைம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சைபர் கிரைம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Cyber Crime: 'போலியான சுப்ரீம் கோர்ட், நீதிபதி, போலீஸ்' - தொழிலதிபரை மிரட்டி 7 கோடி பணம் பறித்த கும்பல்

 


Cyber Crime: 'போலியான சுப்ரீம் கோர்ட், நீதிபதி, போலீஸ்' - தொழிலதிபரை மிரட்டி 7 கோடி பணம் பறித்த கும்பல்


ஆன்லைன் மோசடி கும்பல்கள் புதிய புதிய வழிகளில் பொதுமக்களிடம் தங்களது வேலையைக் காட்டி வருகின்றன. சமீபகாலமாகப் பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களை யாரிடமும் பேசவிடாமல் தடுத்து, அவர்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை மொத்தமாகப் பிடுங்கும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன.


இம்மோசடி கும்பலிடம் நன்றாகப் படித்தவர்கள் கூட ஏமாந்து விடுகின்றனர். சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, போலீஸார் எனப் பயமுறுத்தி பணத்தைப் பறித்து விடுகின்றனர். டெல்லியைச் சேர்ந்த எஸ்.பி. ஓஸ்வால் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் வரதனுக்கு (82) நேற்று முன்தினம் ஒருவர் போன் செய்து பேசியிருக்கிறார். போனில் 9வது நம்பரை அழுத்தவில்லையெனில் உங்களது போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும் என்று அந்த நபர் மிரட்டியிருக்கிறார். இதனால் வர்தன் தனது போனில் 9வது நம்பரை அழுத்தியிருக்கிறார்.


உடனே ஒருவர் வர்தனிடம், தான் மும்பை கொலாபாவில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் ஒரு போன் இணைப்பு பெறப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதோடு உங்களது பெயரில் கனரா வங்கியில் ஒரு கணக்கு இருப்பதாகவும், அதனை பணமோசடிக்குப் பயன்படுத்தி இருப்பதாகவும் போனில் பேசிய நபர் தெரிவித்திருக்கிறார். ஆனால் வர்தன் தனக்கு கனரா வங்கியில் எந்த கணக்கும் கிடையாது என்று மறுக்க, உடனே போனில் பேசிய நபர் உங்களது பெயரில் திறக்கப்பட்ட வங்கிக் கணக்கானது ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தொடர்புடைய நிதிமோசடிக்குப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.


தொழிலதிபர் தனக்கு கனரா வங்கியில் கணக்கு இல்லை என்றும், நரேஷ் கோயலை தெரியாது என்றும், தான் இதற்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்து இருப்பதால் அப்போது கொடுக்கப்பட்ட ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் விளக்கமளித்திருக்கிறார்.


"வங்கிக் கணக்குத் திறக்க உங்களது ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளதால் உங்கள் மீது சந்தேகப்படுகிறோம். எனவே விசாரணை முடியும் வரை நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுகிறீர்கள். யாரையும் தொடர்பு கொள்ளக்கூடாது. இது தேசியப் பாதுகாப்போடு தொடர்புடைய விவகாரம் என்பதால் இது குறித்த தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது" என்று பயமுறுத்தியிருக்கின்றனர்.



வரதன்



அதோடு யாரிடமாவது பேசினால் 3 முதல் 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் மிரட்டியிருக்கிறார். அதனைத்தொடர்ந்து, ராகுல் குப்தா என்பவர் வீடியோ காலில் வந்து, தான் தலைமை விசாரணை அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு பேசியிருக்கிறார். அத்தொழிலதிபரிடம் அவரது இளமைக் காலம், சொத்து போன்ற விபரங்களைக் கேட்டிருக்கிறார். உடனே தனது மேலாளரிடம் கேட்டால்தான் சொத்து மதிப்பு தெரியும் என்று தொழிலதிபர் தெரிவித்திருக்கிறார். விசாரணை அதிகாரிகள் அனைவரும் சிவில் டிரஸில் இருந்தனர். ஆனால் கழுத்தில் அடையாள அட்டைகளைத் தொங்க விட்டிருந்தனர். அதில் மும்பை காவல்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அடையாள அட்டைகள் இருந்தன. அவர்கள் நீதிமன்றம் அறை ஒன்றைக் காட்டியிருக்கின்றனர்.


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் போன்ற ஒருவரைக் காட்டி விசாரணை என்ற ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியாக இருந்தவர் தொழிலதிபருக்குக் கைது வாரண்ட் பிறப்பித்திருக்கிறார். அதோடு 7 கோடியை உடனே செலுத்தும்படி கூறி கைது வாரண்ட் மற்றும் பணத்தைச் செலுத்துவதற்கான உத்தரவை வாட்ஸ் ஆப்பில் அனுப்பியிருக்கிறார். அவர்கள் அனுப்பிய ஆவணங்களில் உச்ச நீதிமன்றம் முத்திரை இருந்திருக்கிறது. இதையடுத்து வர்தன் அவர்கள் கேட்ட பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார்.


அதன் பிறகுதான் இது மோசடி என்று தெரிய வந்திருக்கிறது. உடனே இது குறித்து தொழிலதிபர் டெல்லி காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறை, உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்போடு ரூ.5.25 கோடியை முடக்கினர். இம்மோசடி தொடர்பாக செளதரி மற்றும் ஆனந்த் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்ஸாமைச் சேர்ந்த ஆனந்த் குமார் தனது வங்கிக் கணக்கை மோசடி கும்பல் பயன்படுத்தக் கொடுத்துள்ளார். இம்மோசடியில் தொடர்புடைய எஞ்சியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


செய்யக்கூடாத விசயங்கள் - சைபர் கிரைம் குறித்த எச்சரிக்கை (Don'ts - Cybercrime Warning)...



 மக்களே உஷார்.!! இவற்றை மட்டும் செய்துவிடாதீர்கள் - சைபர் கிரைம் குறித்த எச்சரிக்கை...


செய்யக்கூடாதவை - சைபர் கிரைம் குறித்த எச்சரிக்கை (Don'ts - Cybercrime Warning)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


EB பில் கட்டாததால், மின் இணைப்பு துண்டிக்கப்படும், என்று வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம் - மெசேஜில் வரும் லிங்க்-களை கிளிக் செய்யவோ, அல்லது அதில் குறிப்பிட்ட மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவோ வேண்டாம் - Cyber Crime Helpline Number 1930 (Don't believe the messages that you will be disconnected due to non-payment of EB bill - Do not click on the links in the message or contact the specified mobile number - Cyber ​​Crime Helpline Number 1930)...

 EB பில் கட்டாததால், மின் இணைப்பு துண்டிக்கப்படும், என்று வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம் - மெசேஜில் வரும் லிங்க்-களை கிளிக் செய்யவோ, அல்லது அதில் குறிப்பிட்ட மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவோ வேண்டாம் - Cyber Crime Helpline Number 1930 (Don't believe the messages that you will be disconnected due to non-payment of EB bill - Do not click on the links in the message or contact the specified mobile number - Cyber ​​Crime Helpline Number 1930)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


சைபர் கிரைம் குற்றத்திற்குள் வரும் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் - குழு நிர்வாகி காவல் நிலையத்தில் ஆஜராக மாவட்ட குற்றப்பிரிவு அறிவுறுத்தல் (Information shared in WhatsApp group falling under cybercrime - District Crime Branch instructs Group Administrator to appear at police station)...



>>> சைபர் கிரைம் குற்றத்திற்குள் வரும் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் - குழு நிர்வாகி காவல் நிலையத்தில் ஆஜராக மாவட்ட குற்றப்பிரிவு அறிவுறுத்தல் (Information shared in WhatsApp group falling under cybercrime - District Crime Branch instructs Group Administrator to appear at police station)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஆன்லைன் மற்றும் ஓ.டி.பி. கொடுப்பதன் மூலம் உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் பறிபோனால், உடனே 155260 என்ற எண்ணை அழையுங்கள். 24 மணி நேரத்திற்குள் போன் செய்தால் உங்கள் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு (If your bank account is debited by making a payment in Online and OTP, Call 155260 immediately. If you call within 24 hours you can get your money back)...



ஆன்லைன் மற்றும் ஓ.டி.பி. கொடுப்பதன் மூலம் உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம்   பறிபோனால், உடனே 155260 என்ற எண்ணை அழையுங்கள். 24 மணி நேரத்திற்குள் போன் செய்தால் உங்கள் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு (If your bank account is debited by making a payment in Online and OTP, Call 155260 immediately. If you call within 24 hours you can get your money back)...


வங்கிக் கணக்கில் மோசடி; வாடிக்கையாளர் பணத்தை மீட்க ‘155260’ ஹெல்ப் லைன் அறிமுகம்: சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை...



வங்கிக் கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை நூதன முறையில் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘‘வங்கியில் இருந்து மேலாளர் பேசுகிறேன். உங்களது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு காலாவதியாகப் போகிறது. உடனே புதுப்பிக்காவிட்டால், கார்டு செயலிழந்து விடும்’’ என்று கூறி, வாடிக்கையாளர்களின் கார்டு எண், ரகசிய எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்வார்கள்.


பிறகு, போலி கார்டு தயாரித்து,வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை சுருட்டி விடுவார்கள். இதுகுறித்துபாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் போலீஸாரிடம் புகார் அளித்தாலும், இழந்த பணத்தை திரும்ப பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது.


இதை தடுக்க சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, ‘155260’ என்ற உதவி எண் (ஹெல்ப்லைன்) சைபர் க்ரைம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து சைபர் க்ரைம்காவல் ஆய்வாளர் கார்த்திகேயன்கூறும்போது, "வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பறிபோகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணத்தை இழந்தவர்கள்ஹெல்ப் லைன் எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தால், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டு விடலாம்" என்றார்.





இணையதளங்களில் பதிவு செய்து வேலை தேடுவோர் கவனத்திற்கு(Attention to Job Seekers)...

 Naukri போன்ற வேலைவாய்ப்புக்கான இணையதளங்களில் வேலை வேண்டி பதிவு செய்வோரை குறிவைத்து மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது . வேலைவாய்ப்புக்காக www.naukri.com போன்ற இணைய தளங்களில் வேலை தேடுவோர் தங்களை பற்றிய முழு விபரங்களையும் அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வைக்கிறார்கள். அதனை பார்வையிடும் மோசடி நபர்கள் பிரபல நிறுவனங்களில் இருந்து தொடர்பு கொள்வதாக பொய்யாக கூறி வேலை தேடுவோரை தொடர்பு கொண்டு பிரபல நிறுவனங்களின் HR மேனேஜர் பேசுவதாகவும் கூறி நம்ப வைத்து Interview செய்வது போல் நடித்து ஏமாற்றி Registration fees , Processing fees , Verification fees என பல வகைகளில் பணம் பெற்று மோசடி செய்து விடுகிறார்கள். வேலை தரும் பெருநிறுவனங்கள் எக்காரணம் கூறியும் தாங்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கும் நபர்களிடம் பணம் வசூலிப்பதில்லை.


எனவே பிரபல நிறுவனங்களில் இருந்து வேலைவாய்ப்புக்காக உங்களை தொடர்புகொண்டு பேசுவதாக கூறினால் அந்த நிறுவனங்களை முடிந்தவரையில் அவர்களை நேரடியாக தொடர்புகொண்டோ , உங்களது நண்பர்கள் மூலமாக தொடர்புகொண்டோ அங்கு குறிப்பிட்ட பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை நடைபெறுகிறதா என்பது பற்றி முழுவிபரமும் சேகரித்து அந்நிறுவனத்தின் Official Website மூலமாக நிறுவனத்தை தொடர்பு கொண்டும் ஆட்சேர்க்கை பற்றி ஊர்ஜிதம் செய்து கொண்டு மோசடி நபர்களிடம் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


சைபர் கிரைம் காவல்நிலையம் 

கோவை மாநகர்




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...