கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Monthly salary of ₹2 lakh - Nurse (Male / Female) job in Germany - Free German language training - TN Govt Press Release



மாதச் சம்பளமாக ₹2 இலட்சம் - ஜெர்மனி நாட்டில் செவிலியர் (ஆண் / பெண்) பணி - இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


Monthly salary of ₹2 lakh - Nurse (Male / Female) job in Germany - Free German language training will be provided - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஜெர்மனியில் செவிலியர் பணிக்கு 2 லட்சம் ஊதியம் : தமிழ்நாடு அரசு


ஜெர்மனி நாட்டில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது


இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:


ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்க்கு ஆறு மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குள்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.


இவர்களுக்கு B1 , B2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாத சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும்.


எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.03.2025க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in மற்றும் 044- 22505886/ 63791 79200 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது

Presiding Officers கவனத்திற்கு... தற்போது ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி எண் உள்ளிட்ட விவரங்களை காட்டுகிறது. ஒரு சில ம...