Group - IV தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 08.11.2026 வரை நீட்டிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீட்டு எண். 127 / 2026
நாள்: 04.11.2026
செய்திக்குறிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -IV (தொகுதி-IV பணிகள்)-2026
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்), 2026-இற்கான அறிவிக்கை எண் 11/2026, நாள் 06.10.2026 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரசாணை (நிலை) எண் 68, மனித வள மேலாண்மை (எஸ்) துறை, நாள் 30.10.2026-இல் அனைத்து பிரிவினருக்கும் வயது உச்ச வரம்பு ஐந்து ஆண்டு காலம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இத்தெரிவிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 08.11.2026 11.59 பி.ப. வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திரு. பானோத் ம்ருகேந்தர் லால், இ.ஆ.ப.,
செயலாளர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.