கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கு மேல் செலுத்தப்படும் PF பணத்தின் வட்டிக்கு வரி - நிர்மலா சீதாராமன்...

 


வருங்கால வைப்பு நிதி (Provident Fund) ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், அதன் மீது வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் அவசர காலத்திற்கு பயன்படும் ஒரு அற்புதமான சேமிப்பு என்று பார்க்கப்பட்டு வருகிறது. 1968ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு இந்த திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் வருங்கால வைப்பு நிதியில் பங்களிக்க முடியும். ஒரு நிதியாண்டுக்குள் இந்த அளவு தொகை கூட போடப்படவில்லை என்றால் அந்த கணக்கு நிறுத்தப்படும். வருங்கால வைப்பு நிதி ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை மற்றும் நிறுவனங்கள் அவர்கள் பங்குக்கு வழங்கும் தொகையை சேர்த்து வருங்கால வைப்பு நிதியாக சேமிக்கப்படுகிறது. முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும். ஆனால் மேற்கொண்டு 5 வருடங்கள் வரை நீட்டிக்கவும் வழி உள்ளது.


நல்ல வட்டித் தொகை

அதேநேரம், மருத்துவம், கல்வி அல்லது திருமணம் உள்ளிட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தேவைப்படும் அவசரகால செலவுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட தொகையை இதில் இருந்து முன்கூட்டியே எடுத்துக் கொள்ளலாம். மேலும் வருங்கால வைப்பு நிதி மீது தற்போது 8.5% வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி தொகையும் வைப்புநிதியில் வரவு வைத்துக் கொள்ளப்படும்.


தொழிலாளர்கள் அதிர்ச்சி

அதிக வட்டி தரக்கூடிய சேமிப்பு திட்டங்களில் இதுவும் ஒன்று என்பதால் தொழிலாளர்கள் சற்று நிம்மதியாக இருந்தனர். ஆனால் 2021-22ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த நிம்மதிக்கு வேட்டு வைக்கப்பட்டுவிட்டது. ஆண்டுக்கு இரண்டரை லட்சத்துக்கும் மேல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் வரவு வைக்கப்படும் தொகைக்கு வட்டியின் மீது வரி வசூலிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தானாக முன்வந்து சேமிப்பு

இப்போது ஈபிஎஃப் மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு, வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. சில ஊழியர்கள் பி.எப்.புக்கு அதிக நிதியை செலுத்தி வருகிறார்கள். அதாவது தானாக முன்வந்து வாலின்டரி அடிப்படையில் அதிக தொகையை பிஎப் நிதியத்திற்கு ஊழியர்களில் சிலர் செலுத்த முன் வருகிறார்கள். இதன் மூலம் வரிச் சலுகையை பெறுகிறார்கள். எனவே அவர்களின் இந்த முயற்சிக்கு முட்டுக் கட்டை போட்டு அதிலிருந்து வரி வருவாயை பெற மத்திய அரசு இந்த முடிவை எடுத்ததாக கூறுகிறது.


அதிக ஊதியம்

ஒரு வருடத்திற்கு 2.5 லட்சம் அளவுக்கு பிஎப் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றால், மாதத்திற்கு குறைந்தது, ரூ.20,000த்திற்கு மேல் பணம் செலுத்தப்பட வேண்டும். எனவே அதிக சம்பளம் பெறுவோர், கணிசமான ஐடி ஊழியர்கள், இந்த வரி விதிப்பால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் வருங்காலத்தில் பிற ஊதியதாரர்களின் பிஎப் கணக்கிற்கும் வட்டி வசூலிக்கப்படுமோ என்ற அச்சம் தொழிலாளர் சமூகத்தில் எழுந்துள்ளதை மறுக்க முடியாது.


சேமிப்புகளுக்கு ஊக்கம் தேவை

பிஎப் மட்டுமல்ல, யூனிட் லிங்க் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழும் (ULIP) ரூ.2.5 லட்சத்திற்கு மேற்பட்ட, முதலீடுகளுக்கு வட்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேமிப்புகளுக்கு வரி வசூலிப்பது மக்களுக்கு சேமிப்பு மீதான ஆர்வத்தை குறைத்துவிடும். இது அவசர காலத்தில் மக்களை கந்து வட்டிக்காரர்களிடம் கையேந்த வைத்ததுவிடும் என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் ‘பயோ மெட்ரிக்’ முறை – ஆள்மாறாட்டத்தை தடுக்க நடவடிக்கை...

 


தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் நடைபெறும் ஆள் மாறாட்டங்களை தவிர்க்க ஆதார் அட்டை அடிப்படையிலான ‘பயோ மெட்ரிக்’ சேவையை நடைமுறைப்படுத்த உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் அதிகம் ஆள் மாறாட்டம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை தடுக்க இந்த ஆண்டு நடத்தப்படும் தேர்வுகளில் அதிக மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் நடைபெற்ற இந்த தேர்வில் சில நேரங்களில் விதி மீறல்களும் நடைபெறுகின்றன.

இதனை தடுக்கும் விதத்தில் டிஎன்பிஎஸ்சி ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி போட்டித் தேர்வு நடத்தப்படும் தேர்வு மையங்களில் ஆதார் அடிப்படையிலான ‘பயோ மெட்ரிக்’ வருகைப்பதிவு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த திட்டத்திற்கான நிறுவனத்தை தேர்வு செய்து அதன்பின் மார்ச் மாதம் நடத்தப்படும் துறை தேர்வுகள், இன்ஜினியரிங் பணி தேர்வுகள், குரூப் 4, குரூப் 2, குரூப் 1 தேர்வுகளில் பயோ மெட்ரிக் முறை அமலுக்கு வரும் என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜூனில் பொதுத்தேர்வு - பள்ளி கல்வித்துறை முடிவு (நாளிதழ் செய்தி)...

 


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஜூனில் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அட்டவணை, முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும்.

தமிழகத்தில், கொரோனா தொற்றால், 2020 மார்ச்சில், பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தேர்வுகள் நடத்தாமல், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஏற்கனவே நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதையடுத்து, 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தப்படுகின்றன. அதனால், புதிய கல்வி ஆண்டில், சில மாதங்களாவது பள்ளிகளை திறந்து பாடம் நடத்த வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.அதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, ஜன., 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்பது மற்றும் பிளஸ் 1க்கு வரும், 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், பொதுத்தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணை குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட ஆலோசனையில், பொதுத்தேர்வை ஜூனில் நடத்த முடிவானது. மே கடைசி வாரத்தில் துவங்கி, ஜூன் வரை பொதுத்தேர்வை நடத்தலாம் என, கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.அட்டவணைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய செய்திகள் தொகுப்பு... 03.02.2021(புதன்)...

 


🌹கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவர்களை விட 

கஷ்டத்திலேயே வளர்ந்தவர்களுக்கு தான் தெரியும் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவும்.!

🌹🌹புரிதல்கள் இல்லா

வாழ்க்கையில் புதையலே கிடைத்தாலும் பயனில்லை.!!

🌹🌹🌹நீ பேசவில்லை அதனால் நானும் பேசவில்லை என கூறுபவர்களை விட,

நீ பேசாவிடினும் நான் பேசுவேன் என சொல்பவர்கள்  கிடைப்பதெல்லாம் உண்மையாகவே வரம் தான்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒GOVT LETTER-7000/2020-11 DATE-25.1.2021-மாற்றுத்திறன் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2021 தேர்தலில் பணிபுரிவதில் இருந்து விலக்கு அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவு வெளியிட்டுள்ளது.     

🍒🍒யுஜிசி நெட் தேர்வுத் தேதிகள் அறிவிப்பு:நேற்று முதல் விண்ணப்பிக்கலாம்

🍒🍒கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்; தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

🍒🍒உயர் படிப்புகள் பயில ஆசிரியர்களுக்கு அனுமதி - முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க இணை இயக்குநர் உத்தரவு.

🍒🍒பள்ளியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு என தனியாக ஊதியம் வழங்கப்படுவதில்லை - அமைச்சர் செங்கோட்டையன்.

🍒🍒G.O.(Ms.)No.24 - Dated 02.02.2021 - அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணத்தொகை ரூ.25 இலட்சத்திலிருந்து ரூ.40 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

🍒🍒கலைச் சொல்லாக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சொல்லின் தாய் விருது: தமிழக அரசு அறிவிப்பு

🍒🍒இரு எம்.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன்? - அண்ணா பல்கலை. பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

🍒🍒அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் 

அலுவலகப் பணியாளர்கள் வீடு கட்ட முன்பணம் கோரும் பொழுது இணைக்க வேண்டிய 

கருத்துருக்கள் குறித்த  பள்ளிக் கல்வி  இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு                           

🍒🍒DGE – +2 பொதுத்தேர்வு – மாற்றுத்திறன் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் சலுகைகள் கோருதல் – விண்ணப்பங்கள் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

🍒🍒மத்திய அரசு கூறிய உடன் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

🍒🍒CBSE - 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2021 - அட்டவணை வெளியீடு

🍒🍒மே மாதத்தில் NET தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

🍒🍒PG Economics - ஆசிரியர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு.

🍒🍒TNPSC Exam-ல் மாற்றம் ஆள் மாறாட்டத்தை தடுக்க புதிய முயற்சி

🍒🍒உதவி பேராசிரியர் பணியிடம் மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான NET தேர்வு தேதி அறிவிப்பு

🍒🍒BT to PG Promotion Panel Preparation – வணிகவியல், பொருளியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கு தகுதிவாய்ந்தோர் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு

🍒🍒‘தினமும் கிருமிநாசினி தெளித்து பள்ளியை சுத்தம் செய்யவில்லை என்றால் நடவடிக்கை..’ அமைச்சர் செங்கோட்டையன்

🍒🍒“UGC - நெட் தேர்வு மே மாதத்தில் 11 நாட்கள் நடத்தப்படும்” - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

🍒🍒ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்கள் ஒத்துழைத்தால் பிப்ரவரி 13ம் தேதிக்குள் பட்டியல் வெளியிடப்பட்டு காலியிடங்கள் நிரப்பப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

🍒🍒தமிழகத்தில் 9, 10, 11, 12ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு பிப்ரவரி மாதம் பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும். 

மற்ற மாநிலங்களில் 6-ஆம் வகுப்பு முதல்  திறக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் கவனித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் 

🍒🍒அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி எஸ்சி மாணவர்களுக்கு ரூ.35,219 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்

🍒🍒9, 11-ம் வகுப்புகளும் தொடங்க இருப்பதால் பள்ளிகளில் கரோனா தடுப்பு நெறிமுறைகளில்  கூடுதல் கவனம் அவசியம் : கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் 

🍒🍒அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள், 4,775 பேருக்கு, மூன்றாண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட உள்ளது.

🍒🍒ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை விண்ணப்பம் - 13.02.2021க்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்க உத்தரவு

🍒🍒சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. எந்தெந்த பாடத்தேர்வு எந்தெந்த தேதிகளில் நடக்கிறது என்ற தகவல் cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகிறது.

🍒🍒தற்பொது  நடைபெறும் சட்டமன்ற கூட்டதொடர் முழுவதும் புறக்கணிப்பதாக - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

🍒🍒சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய மேலும் 3 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்.

🍒🍒ஆளுநர் கூறியதிலேயே எனக்கு பிடித்த விஷயம் அவர் லாஸ்ட் பட்ஜெட் என்று கூறியதே, லாஸ்ட் பட்ஜெட் என்று ஆளுநர் கூறியதை வரவேற்கிறோம் 

- மு.க.ஸ்டாலின்

🍒🍒டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றியதால் காவிரி காப்பாளன் என்ற பட்டத்துக்கு பொருத்தமானவர் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

🍒🍒தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா  தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

🍒🍒தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் தமிழ்நாடு பிஜேபி செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி பதாகையுடன் சட்டசபை கூட்டத் தொடருக்கு வந்த தமிமுன் அன்சாரி

🍒🍒சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் 

நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல்.

🍒🍒தான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை

- தமிழருவி மணியன்

🍒🍒வடசென்னை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் 8 பேர் திமுகவில் இணைந்தனர்.

🍒🍒பிப். 15ஆம் தேதிக்குள் பள்ளிகள் திறக்காவிட்டால் தர்ணா போராட்டம்- தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவிப்பு.

🍒🍒நாட்டின் பண வீக்கம் 9.5 % ஆக உள்ளது; உலகின் எந்த நாட்டிலும் இதுபோன்ற பண வீக்கம் கிடையாது, வங்கிகளை தனியார் மயமாக்குவதால் மக்களுக்கு பயன் இல்லை. 

 - புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி

🍒🍒ஜனவரி மாதம் தமிழக தென் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய ஆறு பேர் கொண்ட மத்தியக்குழு தமிழகம் வரவுள்ளது.

🍒🍒தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 5ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.

🍒🍒நூற்றாண்டிலேயே சிறந்த பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது - அதானி புகழாரம்

🍒🍒சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை வெளியீடு 

பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும்.

🍒🍒அரசு அலுவலகங்கள் இனி பசு சிறுநீர் மூலம் செய்யப்பட்ட பினாயிலால் மட்டுமே சுத்தம் செய்யப்பட வேண்டும். 

- ம.பி. அரசு.

🍒🍒இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே சென்னையில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

அரசு விதிமுறைகள் படி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 50% பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

🍒🍒தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

🍒🍒கரோனா தொற்று காலத்தில் தங்களது நாட்டிற்கு உதவியதற்காக கியூபா மருத்துவக் குழுவை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க தென்னாப்பிரிக்கா முடிவு செய்துள்ளது.

🍒🍒இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால், ஜெயலலிதா நினைவிடம் மூடப்படுவதாக பொதுப்பணித்துறை அறிவிப்பு.

🍒🍒தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

எனவே 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

🍒🍒அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்துறை மேற்படிப்புக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தவேண்டும் என திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா ஐ.ஏ.எஸ்.-ஐ சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடிதம் கொடுத்துள்ளார்

🍒🍒கான்கிரீட் தடுப்புகள் மற்றும் இரும்பு ஆணி தடுப்புகளின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பதிவிட்டு, விவசாயிகளுடன் உறவை மேம்படுத்த பாலங்களை கட்டுங்கள், உறவை தவிர்க்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டாம் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

🍒🍒ஆண், பெண் திருமண வயதை ஒரே மாதிரி நிர்ணயிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

பெண்களுக்கு திருமண வயது 18 என்றும், ஆண்களுக்கு 21 என்றும் மாறுபடுவது பாலின பாகுபாட்டை ஊக்குவிப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

🍒🍒மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது என விக்கிரமராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் எந்த அடிப்படையில் நிதிநிலை அறிக்கையை வரவேற்றார் என தெரியவில்லை என்று விக்கிரமராஜா கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும். இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என விக்கிரமராஜா கூறியுள்ளார்

🍒🍒மாற்று திறனாளிகள் விரும்பினால் தபால் ஓட்டு அளிக்கலாம்

80 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் தபால் வாக்கு கோரி விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும்

மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் விரும்பினால் தபால் வாக்குக்கு அனுமதி வழங்கப்படும்

90 சதவீதம் வாக்கு பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.

இன்னும் 5 தினங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் முழுமையாக வந்தடையும்.

சத்ய பிரதா சாஹு

🍒🍒ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும் பட்ஜெட்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பாராட்டு.

🍒🍒மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு 4 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு; பாதுகாப்புத்துறை அமைச்சர்

ராஜ்நாத் சிங் வரவேற்பு.

🍒🍒ஜப்பானில் கரோனா தொற்றுக்கு எதிரான அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சா் பதவி நீக்கம் செய்யப்பட்டாா்.

🍒🍒இங்கிலாந்து அணியால் தற்போதுள்ள சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெல்ல முடியுமா என தெரியவில்லை என்றார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கெüதம் கம்பீர்.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹ஓராண்டில் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) கணக்கில் பணம் செலுத்தப்பட்டால், அதற்கான வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மாத வருவாய் ஈட்டும் பிரிவினருக்கு அதிா்ச்சியளிக்கும் அறிவிப்பாக அமைந்துள்ளது.

முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படும் என்பதால் பெரும்பாலான மக்கள் வருங்கால வைப்பு நிதியில் அதிக பணத்தை சேமித்து வருகின்றனா்.

இது தொடா்பாக நிதிநிலை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :-

 அதிக மாத வருவாய் ஈட்டும் பணியாளா்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையை நெறிமுறைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வருங்கால வைப்பு நிதியில் பணம் செலுத்தப்பட்டால், அதன் மூலம் கிடைக்கும் வட்டி மீது வரி விதிக்கப்படும்.

இதுவே மாதம் ரூ.20,000-க்கு மேல் வருங்கால வைப்புநிதியில் செலுத்தப்பட்டாலும் வட்டி மீது வரி உண்டு. 2021 ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

வருவாயை அதிகரிக்க மத்திய அரசு ஏற்கெனவே, பல்வேறு வரிச் சலுகைகளைக் குறைத்துவிட்டது. இறுதியாக வருங்கால வைப்பு நிதி மட்டுமே முழுமையாக வரிச் சலுகை அளிக்கும் சேமிப்பாக இருந்தது. இப்போது, அதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இன்றைய (03-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்


மேஷம்

பிப்ரவரி 03, 2021


தை 21 - புதன்

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். உறவினர்களால் சுபவிரயங்கள் ஏற்படும். பணி தொடர்பான புதிய வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



அஸ்வினி : வெற்றி உண்டாகும்.


பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 03, 2021


தை 21 - புதன்

எதிர்பார்த்த தனவரவுகளில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும்போது நிதானம் வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வை காண முயற்சிப்பீர்கள். மனதிற்கு விருப்பமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். புண்ணிய யாத்திரை மேற்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.


ரோகிணி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


மிருகசீரிஷம் : மனமகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 03, 2021


தை 21 - புதன்

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆலோசனைகளில் பொறுமை வேண்டும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.


திருவாதிரை : பொறுமை வேண்டும்.


புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும். 

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 03, 2021


தை 21 - புதன்

மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய நட்புகள் உண்டாகும். வர்த்தகங்களில் மத்திமமான தனலாபம் கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். தொழில் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.



 அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



புனர்பூசம் : நினைவாற்றல் அதிகரிக்கும்.


பூசம் : தனலாபம் கிடைக்கும்.


ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 03, 2021


தை 21 - புதன்

வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு மேன்மை அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். ஆகாய மார்க்க பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்கள் புகழப்படுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : இலாபகரமான நாள்.


பூரம் : புகழப்படுவீர்கள்.


உத்திரம் : ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 03, 2021


தை 21 - புதன்

எதிர்காலம் தொடர்பான பணிகளில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்க வேண்டும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.


அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.


சித்திரை : எண்ணங்கள் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 03, 2021


தை 21 - புதன்

நண்பர்களுடனான நட்பு நிலை மேலோங்கும். தந்தையின் ஆதரவால் சுபவிரயங்கள் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தொழில் முனைபவர்கள் வேலையாட்களிடம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமை வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



சித்திரை : ஆதரவு கிடைக்கும்.


சுவாதி : நிதானம் வேண்டும்.


விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 03, 2021


தை 21 - புதன்

மற்றவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். வெளியூர் தொழில் முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உடைமைகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



விசாகம் : சாதகமான நாள்.


அனுஷம் : கவனம் வேண்டும்.


கேட்டை : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 03, 2021


தை 21 - புதன்

அறச்செயல்களால் கீர்த்தி உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். தொழில் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : கீர்த்தி உண்டாகும்.


பூராடம் : அனுகூலமான நாள்.


உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 03, 2021


தை 21 - புதன்

விவசாயிகளுக்கும், தானியங்களை விற்பவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களால் சேமிப்புகள் அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் சாதகமான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். வெளிநாட்டு பணிகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.


அவிட்டம் : சாதகமான நாள்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 03, 2021


தை 21 - புதன்

அஞ்ஞான சிந்தனைகள் மேலோங்கும். எதிர்காலத்திற்கு தேவையான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற நட்பு நிலை உண்டாகும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



அவிட்டம் : சிந்தனைகள் மேலோங்கும்.


சதயம் : கவனம் தேவை.


பூரட்டாதி : எச்சரிக்கை வேண்டும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 03, 2021


தை 21 - புதன்

நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.


உத்திரட்டாதி : கவலைகள் குறையும்.


ரேவதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.

---------------------------------------

ADW - ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை விண்ணப்பம் - 13.02.2021க்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்க ஆதிதிராவிட நல ஆணையர் உத்தரவு...

 


ADW - ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை விண்ணப்பம் - 13.02.2021க்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்க ஆதிதிராவிட நல ஆணையர் உத்தரவு...

>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2021 தேர்தலில் பணிபுரிவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஓ.மு.7588/ 2020/பு.பி. நாள்: 11-01-2021...

 


மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2021 தேர்தலில் பணிபுரிவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஓ.மு.7588/ 2020/பு.பி. நாள்: 11-01-2021... & Tamilnadu Chief Electoral Officer Email/ Letter No./ 7000/ 2020-11, Dated: 25-01-2021...


>>> தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஓ.மு.7588/ 2020/பு.பி. நாள்: 11-01-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


>>> Click here to Download Tamilnadu Chief Electoral Officer Email/ Letter No./ 7000/ 2020-11, Dated: 25-01-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

There is no EE MIDLINE ASSESSMENT as NAS EXAM takes place - SCERT Director's Proceedings

  NAS EXAM நடைபெறுவதால் EE MIDLINE ASSESSMENT கிடையாது - SCERT இயக்குநரின் செயல்முறைகள் எண்ணும், எழுத்தும் 1,2,3 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்...