கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வி - சிறப்பு ஊக்கத்தொகை - 2011-12 முதல் 2020-21 ம் கல்வி ஆண்டு வரை பள்ளிப் படிப்பை தொடராத 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு...

 பள்ளிக்கல்வி சிறப்பு ஊக்கத்தொகை - 2011-12 முதல் 2020-21 ம் கல்வி ஆண்டு வரை பள்ளிப் படிப்பை தொடராத 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு...



பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின்(தொழிற்கல்வி) செயல்முறைகள், சென்னை-6. 


ந.க.எண்.31944/கே/இ2/2020, நாள்: 14.03.2021. 


பொருள் : 


பள்ளிக்கல்வி சிறப்பு ஊக்கத்தொகைவழங்கும்திட்டம் அரசுமற்றும் அரசு உதவிபெறம்பள்ளிகள் 10,11 மற்றும் 12 ஆம்வகுப்புமாணவமாணவியர் - இடைநிற்றலைமுற்றிலும்தவிர்த்தல் - 2011-2012 ஆம்கல்வியாண்டு முதல் 2020-2021 ஆம் ஆண்டுவரை - பள்ளிப்படிப்பை தொடராத முதல் 12 ஆம்வகுப்புமாணவர் எண்ணிக்கைவிவரம் - கோருதல் - தொடர்பாக. 


பார்வை 


1. அரசாணை(நிலை) எண்.141 பள்ளிக்கல்வி (இ1)துறை நாள். 13.09.2011 


2. சென்னை-6,பள்ளிக்கல்வி இயக்குநரின்கடிதம் ந.க.எண்.31944/கே/இ2/2020,நாள்.16.10.2020, 04.12.2020,17.02.2021. 


3. சென்னை-18,மாநிலக்கணக்காயரின்(தணிக்கை-1)கடிதம் D.O.No.Repl/60-3/SPL/2020-21/DPA(AR2019-20)/81, நாள்.25.01.2021. 


4. சென்னை-5, மாநில கொள்கை வளர்ச்சிக்குழு உறுப்பினர் செயலரின் கடிதம் எண்.2469/EE/SDPC/2020,நாள்.24.02.2021. :


 பார்வை (1)ல்கண்டுள்ள அரசாணை (நிலை) எண்.141 பள்ளிக்கல்வித் (இ1)துறை, நாள்.13.09.2011-ன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2011-2012 ஆம் கல்வியாண்டு முதல் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து செயல்முறைப்படுத்தப்பட்டு வருகிறது. 


மேற்காண் பொருள் தொடர்பாக பார்வை(3)ல் கண்டுள்ள சென்னை-18, மாநிலக் கணக்காயரின்(தணிக்கை -I) கடிதத்தில் மேற்காண் திட்டத்தின்படி 2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை 6 முதல் 12ஆம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை தொடராத இடையில் நின்ற மாணவ, மாணவியர் எண்ணிக்கை விவரங்களை வருடவாரியாக வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. எனவே இக்கடித்துடன் இணைத்தனுப்பப்படும் படிவத்தில் இடையில் நின்ற (Dropout)மாணவ, மாணவியரின் எண்ணிக்கை விவரங்களை பூர்த்தி செய்து 19.03.2021- க்குள் இவ்வியக்கக 'கே'பிரிவு (Email) முகவரிக்கு(ksec.tndse@nic.in) அனுப்பி விட்டு அதன் நகலினை இவ்வியக்கத்திற்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. 


இணை இயக்குநர்


>>> பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின் (தொழிற்கல்வி)  செயல்முறைகள் ந.க.எண்: 31944/கே/இ2/2020, நாள்: 14.03.2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்...

Presiding Officers (PrOs) Duty:


1-Pro dairy


2-Form 17 C.


3- 16 points observer report  sheet.


4- visitor sheet.


5- pledge commencement of poll and after close the poll.


 6- Mock poll certificate.  மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக Pro பூர்த்தி செய்யவும்.




Polling Officer (PO) 1 duty . 


 1- elector identify is very important.


2.Marked copy of electoral roll . ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால்  வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும் 

3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்              



Polling Officer (PO) 2 duty . 


1- 17-A register. வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து 

2-அடுத்த கட்டத்தில் Ep என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும்


3 வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்


4- Voter slip. வரிசை எண்ணை குறித்து.வாக்காளரின் இடது கை  ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும். Voter slip யை வாக்காளரிடம் கொடுக்கவும்.       


Polling Officer (PO) 3 duty . 


 வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit. உள்ள Ballot பட்டனை அழுத்தவும்.


GENERAL INSTRUCTIONS...


    49 0 என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின்  பெயருக்கு  நேரில் உள்ள Remarks காலத்தில் 49 -0 என்று குறிப்பிடவேண்டும்   refused the Vote என்று எழுத வேண்டும்.              *49-M என்றால் வாக்களருக்கு மை வைத்தபிறகு Before  enterd the vote he declared the symbol or candidate name சொன்னால் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க Pro அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register ல் வாக்காளர் கையொப்பம் அடுத்து Remarks காலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.


 49 MA என்றால் வாக்காளர்வாக்களித்தபின் அந்த வாக்காளர் நான் வாக்களித்த Symbol பதிலாக Vvpat ல் வேறு ஒரு Symbol பதிவாகிறது என்று  தெரிவித்தாள் இந்நேர்வில் Pro அந்த வாக்காளரிடம் இதுவரை வாக்களித்தவர்கள் யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை நீங்கள் மட்டுமே  தெரிவிக்கீரீர்கள் நான் உங்களுக்கு மறுபடியும் Testng vote வழங்குகிறேன் அதற்கு முன்பு நீங்க தெரிவித்த கருத்து தவறாக இருந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளே இருக்கும் Polling agent மற்றும்  வெளியே இருக்கும் காவல்துறை சார்ந்தவரை உள்ளே அழைத்து அந்த நபரை மீண்டும் வாக்களிக்க செய்யவேண்டும் இந்நேர்வில் 17-A registerல் மீண்டும் அந்த நபரின் வரிசை எண் Epic எண் குறித்து கையொப்பம் பெறவேண்டு Remarks காலத்தில் Testing vote என்று குறிப்பிடவேண்டும் இதற்கு முன்பாக Pro 49 MA படிவத்தில் அவருடைய பெயர் த/பெ. மற்றும் Part no,serial no, serial no in 17 A register of voters.குறித்து அந்த வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்.மறு வாக்கு பதிவின் போது வாக்காளர் தெரிவித்தது நிருபனம் ஆகவில்லை எனில் அவரை உடனடியாக. காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்


1.Tendered votes ஆய்வுக்குரிய வாக்குகள்


2.Challenged votes எதிர்க்கப்பட்ட வாக்குகள்


3.Test votes


4.proxy votes


மேற்கண்ட நிகழ்வுகள் Maximum நடக்கவாய்ப்பில்லை இருந்த போதிலும் ELECTION RULES தெரிந்து  வைத்திருப்பது நமக்கு மிகவும் அவசியம். 

 

குறிப்பு


தேர்தல் முடிந்தவுடன் CONTROL UNIT OFF செய்யவேண்டும். VVPAT ல் BATTERY ஐ கழற்றி விட வேண்டும். மறவாதீர்கள்


எவ்வித மனக்கசப்புக்கும் ஆளாகாமல் குழு ஒற்றுமையுடன் தேர்தல் பணி புரிவோம். தேர்தல் பணியை 100% எவ்வித இடையூறுமின்றி செய்வோம்

TN Assembly Election 2021: உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.


தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் விறுவிறுப்பாக வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். தங்களுடைய தொகுதியில் எந்தெந்த கட்சி எந்தெந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்ற தகவல் பரவலாக அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. பெரிய கட்சிகளைத் தவிர சிறிய கட்சிகள் எந்த வேட்பாளரை நிறுத்தியிருக்கின்றன, அவர்களைப் பற்றிய தகவல்கள்... இவை எதுவும் மக்கள் யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. உங்கள் தொகுதியில் இருக்கும் வேட்பாளர்கள், அவர்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமா?



இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.


தேர்தல் ஆணையத்தின் வேட்பாளர்களின் தகவல்கள் பற்றிய இணையதளப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்...(Click Here)...)


இந்த இணையதளப் பக்கத்தில், உங்கள் மாநிலம் மற்றும் தொகுதி ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து அதன் கீழே இருக்கும் 'Filter' என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.


அதன் கீழே உங்கள் தொகுதியில் எந்தெந்தக் கட்சி சார்பில் யார் யார் போட்டியிடுகிறார்கள் மற்றும் சுயேட்சையாகவும் யார் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்ற விபரம் இருக்கும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வேட்பாளரது ப்ரொபைலில் கிளிக் செய்தால், அவர்களைப் பற்றிய விபரங்கள் அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும். 


அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் இருந்து, அவர்களைப் பற்றிய சொத்து விபரங்கள், அவர்கள் மேல் குற்ற வழக்குகள் பதியப்பட்டிருந்தால் அதனைப் பற்றிய விபரங்கள், மற்றும் அவர்களது குடும்பத்தின் மொத்தச் சொத்து விபரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.


அரசாணை எண்: 160, நாள்: 16-03-2021 - ஏப்ரல் 6ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...

 G.O.Ms.No: 160, Dated: 16-03-2021 - ஏப்ரல் 6ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...



இன்றைய (17-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

மார்ச் 17, 2021


பங்குனி 04 - புதன்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கேளிக்கைகளில் நாட்டம் அதிகரிக்கும். புதிய அறிமுகங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : மனக்கசப்புகள் நீங்கும்.


கிருத்திகை : மாற்றமான நாள்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 17, 2021


பங்குனி 04 - புதன்

வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழிலில் பழைய பாக்கிகள் வசூலாகும். பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களுக்கு கருத்துக்களை தெரிவிக்கும்போது சிந்தித்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : சாதகமான நாள்.


ரோகிணி : பொறுப்புகள் குறையும்.


மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 17, 2021


பங்குனி 04 - புதன்

கூட்டு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நுண்கலை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் மேன்மை உண்டாகும். விலகி நின்ற உறவினர்களின் மூலம் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : லாபம் கிடைக்கும்.


திருவாதிரை : மேன்மை உண்டாகும்.


புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

மார்ச் 17, 2021


பங்குனி 04 - புதன்

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



புனர்பூசம் : நாட்டம் அதிகரிக்கும்.


பூசம் : நன்மை உண்டாகும்.


ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




சிம்மம்

மார்ச் 17, 2021


பங்குனி 04 - புதன்

திட்டமிட்டபடி செயல்பட்டு வெற்றியை பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். பணியாட்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எதிர்பார்த்த பணத்தேவைகள் பூர்த்தியாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : வெற்றிகரமான நாள்.


பூரம் : போட்டிகள் குறையும்.


உத்திரம் : தேவைகள் பூர்த்தியாகும்.

---------------------------------------




கன்னி

மார்ச் 17, 2021


பங்குனி 04 - புதன்

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் பேச்சுக்களை நம்ப வேண்டாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். உணவு சார்ந்த விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.


சித்திரை : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 17, 2021


பங்குனி 04 - புதன்

உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். போட்டிகளில் ஈடுபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். நெருங்கிய சிலருக்காக மற்றவர்களின் உதவிகளை நாடுவீர்கள். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பது நன்மையளிக்கும். மனதில் புதிய ஆசைகள் தோன்றும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



சித்திரை : திறமைகள் வெளிப்படும்.


சுவாதி : சாதகமான நாள்.


விசாகம் : ஆசைகள் தோன்றும்.

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 17, 2021


பங்குனி 04 - புதன்

அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் தீரும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.


அனுஷம் : இழுபறிகள் அகலும்.


கேட்டை : பிரச்சனைகள் தீரும்.

---------------------------------------




தனுசு

மார்ச் 17, 2021


பங்குனி 04 - புதன்

நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் மதிப்புகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கலைப்பொருட்களை வாங்குவீர்கள். இறைவழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மூலம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.


பூராடம் : சுபகாரியங்கள் கைகூடும்.


உத்திராடம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

---------------------------------------




மகரம்

மார்ச் 17, 2021


பங்குனி 04 - புதன்

உறவினர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை அளிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பாதியில் நின்ற செயல்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.


திருவோணம் : முயற்சிகள் மேம்படும்.


அவிட்டம் : தெளிவு பிறக்கும்.

---------------------------------------




கும்பம்

மார்ச் 17, 2021


பங்குனி 04 - புதன்

சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம் : பிரச்சனைகள் நீங்கும்.


சதயம் : லாபம் கிடைக்கும்.


பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------


 


மீனம்

மார்ச் 17, 2021


பங்குனி 04 - புதன்

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.


உத்திரட்டாதி : மகிழ்ச்சி அதிகரிக்கும்.


ரேவதி : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------

TET தேர்ச்சியை ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு வலைத்தளத்தில் பதிவு செய்வது எப்படி?

 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் டெட் (TNTET) தேர்வு நடத்தப்படுகிறது.


TNTET தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் டெட்(TET) தேர்ச்சி விவரங்களை எளிதாக தமிழ்நாடு வேலைவாய்ப்பு வலைத்தளத்தில் பதிவு செய்வதை பற்றி இங்கே காண்போம்...


முதலில் tnvelaivaaippu.gov.in என்ற வலைதளத்தில் உங்கள் வேலைவாய்ப்பு பதிவு எண் மற்றும் ரகசிய குறியீட்டை உள்ளிட்டு உள் நுழைந்து கொள்ளுங்கள்.


> பின்னர்  "ADD QUALIFICATION"- ல் விவரங்களை பதிவு செய்யவேண்டும்


> டெட் தேர்ச்சி பெற்ற வருடம், டெட் தகுதி (TET PASSED) மற்றும் டெட் சான்றிதழ் எண்ணை சரியாக உள்ளீடு செய்து கொள்ளவும்.



 > மேலும் " * "  குறியீடு கொண்ட பிரிவுகளை கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும்  ( உள்ளீடு தேவை இல்லையெனில் NOT SPECIFIED என்று காண்பித்து கொள்ளுங்கள்)


> அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்த பின்பு " ADD " ஐ கொடுத்து சேமித்துக்  கொள்ளவும். தேவைப்படின் " PRINT " கொடுத்து "PDF " ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..,



> இரண்டு டெட் தாள்களும் தேர்ச்சி பெற்றிருந்தால் மேலே குறிப்பிட்ட படி முதலில் பதிவு செய்துவிட்டு மீண்டும் ADD கொடுத்து " MAJOR SUBJECT " ஐ தேர்வு செய்யாமல் " ancillary2 " மட்டும் கொடுத்து இரண்டாம் டெட் தேர்ச்சியையும் பதிவு செய்து கொள்ளலாம்...

அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 23-03-2021...

 


அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 23-03-2021...

>>> அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...