அரசாணை எண் 37, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை, நாள்: 10.03.2020 வெளியிடுவதற்கு முன்பே சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம் -1 தேர்ச்சி பெற்றுள்ளதால் முன் ஊதிய உயர்வு வழங்க சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளர் கடிதம் எண்: 12861/ ச.ந.1(2)/ 2020-2, நாள்: 09-03-2021...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தமிழகத்தில் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை - தலைமைத் தேர்தல் அதிகாரி...
கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு...
9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வை நடத்தி மதிப்பெண்கள் வழங்க உத்தரவு...
💥ஏற்கனவே 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது
💥11ஆம் வகுப்பு சேர்க்கை எப்படி நடத்துவது என்ற குழப்பம் இருந்த நிலையில், பள்ளி அளவில் பொதுத்தேர்வு நடத்த உத்தரவு
💥ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த அறிவுறுத்தல்
இன்றைய செய்திகள் தொகுப்பு... 17.03.2021 (புதன்)...
🌹நம்ம மனசுக்கு பிடிச்சவங்களால மட்டுமே தான் நம்மல சந்தோஷமாக பார்த்துக்க முடியும்.
அதே சமயம் அவங்களால மட்டுமே தான் நம்மல காயப்படுத்தவும் முடியும்.!
🌹🌹தவறே என்றாலும் நேர்பட கூறிவிடுவது நல்லது.
அதைவிடுத்து புறங்கூறுதல் நம்பிக்கை துரோகத்தின் முதற்கட்டம் ஆகும்.!!
🌹🌹🌹கண்களில் தென்பட்ட அனைத்துமே இதயத்தில் இடம் பிடிப்பதில்லை.
இதயத்தில் இடம்பெற்ற அனைத்துமே அருகில் இருப்பதில்லை அதுதான் வாழ்க்கை.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌈🌈24-01-2021 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வில் (TRUST - 2021) வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம் மாவட்ட வாரியாக வெளியீடு
🌈🌈சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் 1 -10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் (விடுபட்டவர்கள்) விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் கடிதம்.
🌈🌈புதிய பென்ஷன் திட்டம் - தனியார் துறை ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் அமல் மத்திய அரசு முடிவு.
🌈🌈பள்ளிக் கல்வி - சிறப்பு ஊக்கத்தொகை - 2011-12 முதல் 2020-21 ம் கல்வி ஆண்டு வரை பள்ளிப் படிப்பை தொடராத 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு
🌈🌈ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவர்கள் இடமாற்றம்: கோரிக்கையை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
🌈🌈பoழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 5000 கோடி நிதிச் சுமை ஏற்படும் .
இச் செலவினத்தை புதிய தொழில் முனையங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பெறப்படும் வருமானத்தைக் கொண்டும், கனிம வளத்துறை வாரியத்தின் மூலம் அரசு ஒழுங்குமுறை விற்பனையின் மூலம் பெறப்படும் நிதியில் இருந்தும் இச்செலவினம் ஈடு கட்டப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
🌈🌈கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு கடந்த திங்கட்கிழமையுடன் ஓராண்டு நிறைவுபெற்று விட்டது. இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட ஆன்லைன் வழிக்கல்வி, கல்வி தொலைக்காட்சி வழிக்கல்வி மாணவர்களுக்கு கைகொடுத்ததா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது - நாளிதழ் செய்தி
🌈🌈கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியா் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
🌈🌈தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 152 துறை தேர்வுகள், இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டன. அதற்கான விடைக்குறிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
🌈🌈12 ஆம் வகுப்பு ஆசிரியர்களை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை
🌈🌈மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் சுற்றறிக்கை!
👉கொரோனா அறிகுறியுள்ள மாணவர்கள் வீட்டிலேயே இருக்கலாம்.
👉தினமும் வகுப்பறையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
👉மாஸ்க் சமூக இடைவெளியை தவறாது பின்பற்ற வேண்டும் - என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை
🌈🌈சீனாவால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டால் மட்டுமே இந்தியர்களுக்கு விசா வழங்கப்படும்.
- சீன அரசு அதிரடி அறிவிப்பு.
🌈🌈இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
🌈🌈தமிழகத்தில் மீண்டும் கடுமையாக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்.
காய்ச்சல் முகாம்களை அதிகரித்து கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய சுகாதாரத்துறைக்கு தமிழக அரசு உத்தரவு.
முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க தலைமை செயலாளர் உத்தரவு.
கடந்த 10 நாட்களாக கொரோனாவின் தாக்கம் 1.2% உயர்ந்துள்ளது.
பிரசாரங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
சென்னை மற்றும் கோவையில் கொரோனாவின் தாக்கம் 2 சதவீதம் உயர்ந்துள்ளது.
சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
- தமிழக அரசு.
🌈🌈சென்னையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் போதிய பயணிகள் இல்லாமல் 16 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
🌈🌈முன்னாள் காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ, கட்சித் தலைவர் சரத் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னாள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
🌈🌈எங்கள் ஆட்சியின் முதல் வேலையே ஜெயலலிதா மரணத்தை கண்டுபிடிப்பதுதான்
ஸ்டாலின் பேச்சு.
🌈🌈மார்ச் 18 முதல் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் ஓபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் மவுனம் காத்து வந்தார்.
🌈🌈முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்த அதிமுகவை நிராகரித்து தோற்கடிக்க முக்குலத்தோர் புலிப்படை சபதமேற்றுள்ளது.
-கருணாஸ் சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடவில்லை என கட்சியின் தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.
234 தொகுதியிலும் அதிமுகவை தோற்கடிக்க கட்சியனர் பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
🌈🌈அதிமுகவின் தேர்தல் அறிக்கை வில்லன் கூட கிடையாது; அது காமெடி வில்லன்.
திமுகவின் தேர்தல் அறிக்கையை எல்லாரும் கதாநாயகன் என்று சொல்கிறார்கள்; கதாநாயகியும் அதுதான் - சேலத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
🌈🌈சாதிமறுப்பு திருமணம் செய்யும் மணமக்களில் ஒருவர் பட்டியலினத்தவராக இருந்தால், அவர்களைப் பாராட்டி ரூ. 3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
🌈🌈திமுக ஆட்சி அமைந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்த காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ளார்.
🌈🌈தமிழகத்தில் அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க உத்தரவிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
🌈🌈சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.33,824-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,228-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
🌈🌈பட்டுக்கோட்டை நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் எஸ்.எல்.எஸ். சிவக்குமார், அதிமுகவில் இருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவில் இணைந்தார்.
தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன், தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், பட்டுக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
🌈🌈பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் பாமகவில் இருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவில் இணைந்தார்.
புதுக்கோட்டை மாவட்ட பா.ம.க. செயலாளர் தரணி ரமேஷ், சிவகங்கை மாவட்ட பா.ம.க. செயலாளர் தை.ஆல்பர்ட் ராஜா மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பா.ம.க.வினர் 300-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.கவில் இணைந்தனர்.
🌈🌈மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கத் தொடங்கியிருக்கிறது: மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை.
🌈🌈தமிழகத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை – கனிமொழி எம்.பி
🌈🌈நானும் ஒரு விவசாயி என்று தினசரி மார்தட்டிக் கொண்டிருந்த எடப்பாடி யாருக்கு விவசாய நிலமே இல்லையாம்
அப்படியானால் இவர் யார் நிலத்தைப் பயிர் செய்தார்?
முதலமைச்சராக இருக்கின்ற வரை உண்மை பேசுவதில்லை என்று முதலமைச்சர் முடிவெடுத்து விட்டாரா? யாமறியோம் பராபரமே!
-பீட்டர் அல்போன்ஸ்
🌈🌈"அரசுத்துறை வங்கிகளை மோடிக்கு ஆதரவான முதலாளிகளுக்கு மத்திய அரசு விற்பனை செய்கிறது"
ராகுல் காந்தி.
🌈🌈வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் போடப்படும் என்றும், நெல் மற்றும் கரும்புக்கு கூடுதல் தொகை வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.
🌈🌈பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக மக்களவையில் விவாதிக்குமாறு தயாநிதிமாறன் எம்.பி கோரிக்கை நோட்டீஸ்.
🌈🌈வாரிசு அரசியல் செய்வதாக மக்கள் நினைத்தால் என்னை தோற்கடிக்கட்டும்
-உதயநிதி
🌈🌈புதுச்சேரி : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாராயணசாமிக்கு போட்டியிட இடம் ஒதுக்கவில்லை.
🌈🌈வெற்றிக் கூட்டணியான அதிமுக கூட்டணியை ஒருபோதும் அசைக்க முடியாது; தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.
🌈🌈திமுக ஆட்சிக்கு வந்த பின் மக்களிடம் பெற்ற மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை; திருவாரூர் பரப்புரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி.
🌈🌈66 வயது ஆகிவிட்ட தனக்கு வாய்ப்பு கொடுங்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை.
🌈🌈திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கவே தேர்தலில் களம் காண்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
🌈🌈சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 307 பதற்றமான வாக்குச்சாவடிகள்; மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்.
🌈🌈கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
🌈🌈நெதா்லாந்தில் பொதுமக்களுக்கு அஸ்டொஸெனகா தடுப்பூசி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தத் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும் அச்சம் காரணமா பல நாடுகள் அதன் பயன்பாட்டை நிறுத்திவைத்துள்ள நிலையில், அந்தப் பட்டியலில் தற்போது நெதா்லாந்தும் இணைந்துள்ளது.
🌈🌈 'க்வாட்' உள்ளிட்ட பிரத்யேக குழுக்கள் வாயிலாக பிராந்திய நாடுகளுக்கிடையே பிளவு ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
🌈🌈முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் பொய் சொல்கிறார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு கருணாநிதி & மு.க.ஸ்டாலின் காரணம் என்று அவர் கூறினார். அவரது மரணத்திற்கு நாங்கள் தான் காரணம் என்று நீங்கள் (முதல்வர்) கூறினால், என் மீது வழக்குத் தாக்கல் செய்யுங்கள் நான் அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன்.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
🌈🌈அதிமுக தேர்தல் அறிக்கை திமுக தேர்தல் அறிக்கையின் நகலாகும்.
அனைவருக்கும் ஒரு விமானம் மற்றும் ஹெலிகாப்டர் வழங்கப்படும் என்று கூட அவர்கள் அறிவிக்க முடியும். அவர்கள் தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால் அவர்கள் எதையும் சொல்ல முடியும்.
-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
🌈🌈பிரதமர் திறமையற்றவர், நாட்டை இயக்க முடியாதவர்.மத்தியில் ஒரு எதேச்சதிகார அரசாங்கம் நடத்தப்படுகிறது.
-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
🌈🌈ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என தகவல் தவறானது. பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.
- பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்
🌈🌈சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு பொதுச்சின்னம் ஒதுக்க முடியாது.
-தேர்தல் ஆணையம் தகவல்
🌈🌈அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
🌈🌈விழுப்புரத்தில் புதியதாக உதயமாகும் டாக்டர்.ஜெ.ஜெயலலிதா பல்கலைக் கழகத்திற்கு முதல் துணைவேந்தராக அன்பழகன் நியமனம் - அரசிதழில் வெளியீடு.
🌈🌈போபால் மற்றும் இந்தூரில் மார்ச் 17 முதல் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். அதேசமயம், ஜபல்பூர், குவாலியர், உஜ்ஜைன், ரத்லம், புர்ஹான்பூர், சிந்த்வாரா, பெத்துல், கார்கோன் ஆகிய 8 நகரங்களில் மார்ச் 17 முதல் இரவு 10 மணிக்கு மூடப்படும். இந்த நகரங்களில் ஊரடங்கு உத்தரவு இருக்காது.
-மத்திய பிரதேச அரசு
🌈🌈நகர்ப்புறங்களில் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் நிலத்திற்கு எந்தவொரு சொத்து வரியையும் விதிக்க வேண்டாம் என்று ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.
🌈🌈தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை அறிவிப்பு.
🌈🌈இன்று காலை 11மணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயம்பேடு அலுவலகத்தில் சந்திக்கிறார் டிடிவி தினகரன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
பள்ளிக் கல்வி - சிறப்பு ஊக்கத்தொகை - 2011-12 முதல் 2020-21 ம் கல்வி ஆண்டு வரை பள்ளிப் படிப்பை தொடராத 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு...
பள்ளிக்கல்வி சிறப்பு ஊக்கத்தொகை - 2011-12 முதல் 2020-21 ம் கல்வி ஆண்டு வரை பள்ளிப் படிப்பை தொடராத 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு...
பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின்(தொழிற்கல்வி) செயல்முறைகள், சென்னை-6.
ந.க.எண்.31944/கே/இ2/2020, நாள்: 14.03.2021.
பொருள் :
பள்ளிக்கல்வி சிறப்பு ஊக்கத்தொகைவழங்கும்திட்டம் அரசுமற்றும் அரசு உதவிபெறம்பள்ளிகள் 10,11 மற்றும் 12 ஆம்வகுப்புமாணவமாணவியர் - இடைநிற்றலைமுற்றிலும்தவிர்த்தல் - 2011-2012 ஆம்கல்வியாண்டு முதல் 2020-2021 ஆம் ஆண்டுவரை - பள்ளிப்படிப்பை தொடராத முதல் 12 ஆம்வகுப்புமாணவர் எண்ணிக்கைவிவரம் - கோருதல் - தொடர்பாக.
பார்வை
1. அரசாணை(நிலை) எண்.141 பள்ளிக்கல்வி (இ1)துறை நாள். 13.09.2011
2. சென்னை-6,பள்ளிக்கல்வி இயக்குநரின்கடிதம் ந.க.எண்.31944/கே/இ2/2020,நாள்.16.10.2020, 04.12.2020,17.02.2021.
3. சென்னை-18,மாநிலக்கணக்காயரின்(தணிக்கை-1)கடிதம் D.O.No.Repl/60-3/SPL/2020-21/DPA(AR2019-20)/81, நாள்.25.01.2021.
4. சென்னை-5, மாநில கொள்கை வளர்ச்சிக்குழு உறுப்பினர் செயலரின் கடிதம் எண்.2469/EE/SDPC/2020,நாள்.24.02.2021. :
பார்வை (1)ல்கண்டுள்ள அரசாணை (நிலை) எண்.141 பள்ளிக்கல்வித் (இ1)துறை, நாள்.13.09.2011-ன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2011-2012 ஆம் கல்வியாண்டு முதல் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து செயல்முறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்காண் பொருள் தொடர்பாக பார்வை(3)ல் கண்டுள்ள சென்னை-18, மாநிலக் கணக்காயரின்(தணிக்கை -I) கடிதத்தில் மேற்காண் திட்டத்தின்படி 2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை 6 முதல் 12ஆம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை தொடராத இடையில் நின்ற மாணவ, மாணவியர் எண்ணிக்கை விவரங்களை வருடவாரியாக வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. எனவே இக்கடித்துடன் இணைத்தனுப்பப்படும் படிவத்தில் இடையில் நின்ற (Dropout)மாணவ, மாணவியரின் எண்ணிக்கை விவரங்களை பூர்த்தி செய்து 19.03.2021- க்குள் இவ்வியக்கக 'கே'பிரிவு (Email) முகவரிக்கு(ksec.tndse@nic.in) அனுப்பி விட்டு அதன் நகலினை இவ்வியக்கத்திற்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
இணை இயக்குநர்
>>> பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 31944/கே/இ2/2020, நாள்: 14.03.2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்...
Presiding Officers (PrOs) Duty:
1-Pro dairy
2-Form 17 C.
3- 16 points observer report sheet.
4- visitor sheet.
5- pledge commencement of poll and after close the poll.
6- Mock poll certificate. மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக Pro பூர்த்தி செய்யவும்.
Polling Officer (PO) 1 duty .
1- elector identify is very important.
2.Marked copy of electoral roll . ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால் வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும்
3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்
Polling Officer (PO) 2 duty .
1- 17-A register. வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து
2-அடுத்த கட்டத்தில் Ep என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும்
3 வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்
4- Voter slip. வரிசை எண்ணை குறித்து.வாக்காளரின் இடது கை ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும். Voter slip யை வாக்காளரிடம் கொடுக்கவும்.
Polling Officer (PO) 3 duty .
வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit. உள்ள Ballot பட்டனை அழுத்தவும்.
GENERAL INSTRUCTIONS...
49 0 என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின் பெயருக்கு நேரில் உள்ள Remarks காலத்தில் 49 -0 என்று குறிப்பிடவேண்டும் refused the Vote என்று எழுத வேண்டும். *49-M என்றால் வாக்களருக்கு மை வைத்தபிறகு Before enterd the vote he declared the symbol or candidate name சொன்னால் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க Pro அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register ல் வாக்காளர் கையொப்பம் அடுத்து Remarks காலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.
49 MA என்றால் வாக்காளர்வாக்களித்தபின் அந்த வாக்காளர் நான் வாக்களித்த Symbol பதிலாக Vvpat ல் வேறு ஒரு Symbol பதிவாகிறது என்று தெரிவித்தாள் இந்நேர்வில் Pro அந்த வாக்காளரிடம் இதுவரை வாக்களித்தவர்கள் யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை நீங்கள் மட்டுமே தெரிவிக்கீரீர்கள் நான் உங்களுக்கு மறுபடியும் Testng vote வழங்குகிறேன் அதற்கு முன்பு நீங்க தெரிவித்த கருத்து தவறாக இருந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளே இருக்கும் Polling agent மற்றும் வெளியே இருக்கும் காவல்துறை சார்ந்தவரை உள்ளே அழைத்து அந்த நபரை மீண்டும் வாக்களிக்க செய்யவேண்டும் இந்நேர்வில் 17-A registerல் மீண்டும் அந்த நபரின் வரிசை எண் Epic எண் குறித்து கையொப்பம் பெறவேண்டு Remarks காலத்தில் Testing vote என்று குறிப்பிடவேண்டும் இதற்கு முன்பாக Pro 49 MA படிவத்தில் அவருடைய பெயர் த/பெ. மற்றும் Part no,serial no, serial no in 17 A register of voters.குறித்து அந்த வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்.மறு வாக்கு பதிவின் போது வாக்காளர் தெரிவித்தது நிருபனம் ஆகவில்லை எனில் அவரை உடனடியாக. காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்
1.Tendered votes ஆய்வுக்குரிய வாக்குகள்
2.Challenged votes எதிர்க்கப்பட்ட வாக்குகள்
3.Test votes
4.proxy votes
மேற்கண்ட நிகழ்வுகள் Maximum நடக்கவாய்ப்பில்லை இருந்த போதிலும் ELECTION RULES தெரிந்து வைத்திருப்பது நமக்கு மிகவும் அவசியம்.
குறிப்பு
தேர்தல் முடிந்தவுடன் CONTROL UNIT OFF செய்யவேண்டும். VVPAT ல் BATTERY ஐ கழற்றி விட வேண்டும். மறவாதீர்கள்
எவ்வித மனக்கசப்புக்கும் ஆளாகாமல் குழு ஒற்றுமையுடன் தேர்தல் பணி புரிவோம். தேர்தல் பணியை 100% எவ்வித இடையூறுமின்றி செய்வோம்
TN Assembly Election 2021: உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் விறுவிறுப்பாக வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். தங்களுடைய தொகுதியில் எந்தெந்த கட்சி எந்தெந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்ற தகவல் பரவலாக அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. பெரிய கட்சிகளைத் தவிர சிறிய கட்சிகள் எந்த வேட்பாளரை நிறுத்தியிருக்கின்றன, அவர்களைப் பற்றிய தகவல்கள்... இவை எதுவும் மக்கள் யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. உங்கள் தொகுதியில் இருக்கும் வேட்பாளர்கள், அவர்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமா?
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் வேட்பாளர்களின் தகவல்கள் பற்றிய இணையதளப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்...(Click Here)...)
இந்த இணையதளப் பக்கத்தில், உங்கள் மாநிலம் மற்றும் தொகுதி ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து அதன் கீழே இருக்கும் 'Filter' என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அதன் கீழே உங்கள் தொகுதியில் எந்தெந்தக் கட்சி சார்பில் யார் யார் போட்டியிடுகிறார்கள் மற்றும் சுயேட்சையாகவும் யார் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்ற விபரம் இருக்கும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வேட்பாளரது ப்ரொபைலில் கிளிக் செய்தால், அவர்களைப் பற்றிய விபரங்கள் அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும்.
அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் இருந்து, அவர்களைப் பற்றிய சொத்து விபரங்கள், அவர்கள் மேல் குற்ற வழக்குகள் பதியப்பட்டிருந்தால் அதனைப் பற்றிய விபரங்கள், மற்றும் அவர்களது குடும்பத்தின் மொத்தச் சொத்து விபரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...