கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pink Whatsapp வைரஸ் - Open அல்லது Download செய்யவேண்டாம் - தகவல்கள் திருடப்படும் அபாயம்...

முக்கிய அறிவிப்பு... Pink whatsapp என ஒரு வைரஸ் பரவி வருகிறது அதை யாரும் open அல்லது download செய்யவேண்டாம்...



 தமிழகத்தில் அனைத்து வாட்ஸ் ஆப் குழுக்களுக்கும் வேகமாக பரவிய‘பிங்க் வாட்ஸ்ஆப்’ என்ற வைரஸால் பயனாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் வாட்ஸ்ஆப் குழுக்களில்லிங்க் ஒன்று வேகமாக பரவியது.


அதில் குழு நண்பர்களின் கவனத்திற்கு, அதிகாரப்பூர்வமாக வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் பிங்க் வாட்ஸ்ஆப்பில், கூடுதல் புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது என வந்துள்ளது.


அந்த லிங்கை திறந்தவுடன் வாட்ஸ்ஆப் பயனாளர்கள் உள்ள அனைத்து குழுக்களுக்கும் வேகமாக பரவியது. அந்த வாட்ஸ்ஆப் குழுக்களில் உள்ள 200க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில், அந்த லிங்கை ஒருவர் தொட்டாலே மீண்டும் அனைத்து வாட்ஸ்ஆப் குழுக்களிலும் வேகமாக பரவியதால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


உடனடடியாக 10க்கும் மேற்பட்ட குழுக்களில் வேகமாக பரவிய பிங்க் வாட்ஸ்ஆப் லிங்கை அழித்தனர். லிங்க்கை அழித்தாலும் மீண்டும், மீண்டும் பரவியதால், அதிர்ச்சியடைந்த வாட்ஸ்ஆப் பயனாளர்கள் Pink watsup என ஒரு வைரஸ் பரவி வருகிறது அதை யாரும் திறக்கவோ, பதிவிறக்கம்செய்யவோ வேண்டாம் என்றும், வாட்ஸ்ஆப்பில் இது போன்று லிங் அனுப்பப்பட்டு வைரஸ் பரப்பபட்டு வருவதாகவும், இதுபோன்று வரும் லிங்கை யாரும் தொட்டு திறக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், மேலும் இந்த லிங்கை நீங்கள் யாருக்கும் அனுப்ப வேண்டாம் என வாட்ஸ்ஆப் குழுக்களில் பயனாளர்கள் சில எச்சரிக்கை விடுத்தனர்.


அதைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் குழுக்களில் உள்ள பயனாளர்கள் உஷாராகி வேகமாக பரவிய பிங்க் வாட்ஸ்ஆப் லிங்க் பரவாமல் தடுப்பது எப்படி என ஆலோசனைகளையும் வழங்கினர். இதன் காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வாட்ஸ்ஆப் பயனாளர்கள் குழுக்களில் வெள்ளிக்கிழமை மாலை பரவியது வைரஸா என பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுவதாவது,


இத்தகைய நம்பகத்தன்மையுடைய பெயரில் திருடப்படும் திருட்டின் பெயரை ‘ட்ரோஜன் அட்டாக்’ என தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுவார்கள்.


நமது செல்லிடப்பேசிகளில் உள்ள தரவுகளை திருடுவதற்காக, இணைய திருடர்களால் உருவாக்கப்படும் இதுபோன்ற செயலிகளைஆசை வார்த்தைகள் சேர்த்து சமூக ஊடகங்களில் பரப்புகிறார்கள். இதை அறியாமல் தரவிறக்கும் செய்யும் பட்சத்தில் நமது செல்லிடப்பேசிகளில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், தொலைப்பேசி எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகள் திருடு போக அதிக வாய்ப்புகள் உள்ளது.


ஒரு செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில், இணைய பாதுகாப்பு வல்லுநர்களை கொண்டு சோதித்த பின் பொதுமக்களின்சேவைக்கு கொண்டுவரும் கூகுள் பிளே ஸ்டோர் போன்ற வலைதளத்தில் உள்ள செயலிகளையே பயன்படுத்த வேண்டும்.

சமூகத் தொற்றாகப் பரவி அச்சுறுத்தும் கொரோனாவின் அசுர பிடியிலிருந்து மாணவர்களை காப்பாற்ற +2 தேர்வை தள்ளிவைக்க அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை...

 


>>> பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை கடிதம்...

அரசாணை எண்: 304 - ஒரு அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்பத்தினரோ, கோவிட்19 பாதித்து சிகிச்சையில் இருந்தாலோ, தனிமைபடுத்துதலில் இருந்தாலோ, அல்லது அவர்களின் குடியிருப்பு Containment zone பகுதியில் இருந்தாலோ இவர்கள் பணிக்கு வராத முழு நாட்களும் சிறப்பு தற்செயல் விடுப்பாக (Special Casual Leave) கருதப்படும்...



ஒரு அரசு ஊழியரோ அல்லது  அவரது குடும்பத்தினரோ, கோவிட் 19 பாதித்து சிகிச்சையில் இருந்தாலோ, தனிமைபடுத்துதலில் இருந்தாலோ, அல்லது அவர்களின் குடியிருப்பு Containment zone பகுதியில் இருந்தாலோ இவர்கள் பணிக்கு வராத முழு நாட்களும் சிறப்பு தற்செயல் விடுப்பாக (Special Casual Leave) கருதப்படும்.


See Government Order para, 5 (vi)


>>> Click here to Download G.O.Ms.No.: 304, Dated: 17-06-2020...


தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ளலாம் - அரசாணைகள்...

 


⭕அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.


⭕தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசின்  மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில், அதை ஏற்றுக்கொள்வதாக முதல்வர் அறிவித்திருந்தார்.


⭕இந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,  தமிழகத்தில்  அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் தனியார் மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.


⭕மேலும், கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


⭕இதற்காக  முதல் கட்டமாக 2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.


⭕தமிழக அரசின் இந்த அறிவிப்பால்,  பல லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.



>>> CLICK HERE TO DOWNLOAD - G.O.Ms.No_441_Dated: 03-12-2020...


>>> CLICK HERE TO DOWNLOAD - G.O.Ms.No_279_Dated: 24-06-2020...


>>> CLICK HERE TO DOWNLOAD - G.O.Ms.No_280_Dated: 24-06-2020...


>>> CLICK HERE TO DOWNLOAD - G.O.Ms.No_281_Dated: 24-06-2020...


துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தலைமையிலான குழு நிர்வகிக்கும்...



அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, உயர்கல்வி துறை முதன்மைச் செயலர் செல்வி அபூர்வா-வை, ஒருங்கிணைப்பாளராக கொண்ட குழு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...

>>> Click here to Download Press Release...



வரும் கல்வி ஆண்டுக்கான அரசுப்பள்ளி தரம் உயர்வு பட்டியல் அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு...

 பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது : 




ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் ஆண்டு வரைவுத் திட்டத்துக்காக ( 2021-22 ) , தரம் உயர்த்த வேண்டிய அரசுப் பள்ளிகளின் பட்டியல் தேவைப்படுகிறது. எனவே , தர உயர்வுக்குத் தகுதியான நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலைத் தயாரித்து , இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பிவைக்க வேண்டும். 



மேலும் , தேர்வான பள்ளிகளில் , நிர்ணயிக்கப்பட்ட நிலப் பரப்பு உள்ளிட்ட தகுதிகளைப் பரிசீலித்து , கருத்துரு அடங்கிய அறிக்கையையும் காலதாமதமின்றி அனுப்பிவைக்க வேண்டும் . இதில் , எவ்விதப் புகார்களுக்கும் இடம் அளிக்கக் கூடாது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை (Hall Ticket) வரும் 23.04.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - இராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர்...

 


மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை (Hall Ticket) வரும் 23.04.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - இராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 0687/ ஆ1/ 2021நாள்: 17-04-2021...

>>> இராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 0687/ ஆ1/ 2021நாள்: 17-04-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...