கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தவறு செய்தால் பணி நீக்கம் - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை...

 * தங்கள் துறைகளில் பதவி உயர்வு,  பணி மாறுதல் வெளிப்படையாக இருக்க வேண்டும். 



* 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். 




* புள்ளி விவரங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும். 




* தவறு செய்தால் பணி நீக்கம் செய்யப்படுவர் என முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை.







கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியீடு...

 சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியிடபட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்றால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஏற்கனவே இரவு ஊரடங்கு அறிவித்து அமலில் உள்ளது. இதனைத்தொடர்ந்து நாளுக்கு நாள் தொற்று வேகமாக பரவி வருவதால் இன்று முதல் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், ஊரடங்கு குறித்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள அவசர கால உதவி எண்கள் வெளியிட்டுள்ளன.


மேலும், 9498181236, 9498181239 ஆகிய இரண்டு எண்களை தொடர்பு கொண்டு பெருநகர காவல்துறையின் உதவியை நாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு - உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஒதுக்கீடு...

 முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு - உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஒதுக்கீடு...


முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. 


யார் யார்க்கு என்ன துறைகள்?



 * உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி,  உயர்கல்வி  , உள்துறை , தொழில்துறைஒதுக்கீடு.



* நிதி,  உணவு, மருத்துவம்,  போக்குவரத்து,  நெடுஞ்சாலை - உமாநாத்துக்கு ஒதுக்கீடு.



* வருவாய்,  சட்டம்,  முதல்வர் அலுவலக நிர்வாகம் , கூட்டுறவு - சண்முகத்துக்கு ஒதுக்கீடு.



* சமூகநலன்,  கால்நடை,  சுற்றுச்சூழல்,  சுற்றுலா,  MSME - அனுஜார்ஜ்க்கு ஒதுக்கீடு.


முதலமைச்சரின் 4 செயலாளர்களுக்கான முழுமையான துறைகள் ஒதுக்கீடு குறித்து அறிய...

>>> Click here to Download Chief Minister Office Order No.01, Dated: 10-05-2021...



முதல்வருக்கு நியமிக்கப்பட்டுள்ள 4 தனிச் செயலாளர்கள் கவனிக்க வேண்டிய துறைகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


உதயச்சந்திரன் ஐஏஎஸ் (முதல்வரின் முதன்மைச் செயலாளர் - 1)


1. பொது (ஐஏஎஸ் உள்ளிட்ட அனைத்தும்)

2. லஞ்ச ஒழிப்பு ஆணையம்

3. தகவல் தொழில்நுட்பம்

4. உள்துறை (ஐபிஎஸ் உள்ளிட்ட அனைத்தும்)

5. கலால் துறை

6. உயர் கல்வித்துறை

7. பள்ளிக் கல்வித்துறை

8. சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை

9. தொழில்துறை

10. திட்டம் மற்றும் வளர்ச்சி

11. அறநிலையத்துறை.


உமாநாத் ஐஏஎஸ் (தனிச் செயலாளர் - 2)


1. ஆற்றல்

2. உணவு

3. சிறப்பு முயற்சி

4. மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை

5. போக்குவரத்து

6. வணிகவரி மற்றும் பதிவுத்துறை

7. உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் நீர் விநியோகம்

8. பொதுப்பணி (கட்டிடம்)

9. நெடுஞ்சாலை மற்றும் துறைமுகம்

10. நீர் வளம்

11. நிதி


சண்முகம் ஐஏஎஸ் (தனிச் செயலாளர் - 3)


1. மனிதவளம்

2. கூட்டுறவு

3. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை

4. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி

5. சட்டப்பேரவை

6. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்

7. தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல்

8. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு

9. விவசாயம் - உழவர் நலத்துறை

10. சட்டம்

11. முதல்வர் அலுவலகம் சம்பந்தப்பட்ட நிர்வாகம்.


அனு ஜார்ஜ் ஐஏஎஸ் (தனிச் செயலாளர்- 4)


1. சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றம் மற்றும் காடுகள்

2. பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்

3. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்

4. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு

5. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

6. சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாடு

7. கால்நடைத்துறை, பால் வளத்துறை, மீன்வளத்துறை - மீனவர்கள் நலன்

8. கைத்தறி, கைவினைப் பொருட்கள், டெக்ஸ்டைல், காதி

9. சுற்றுலா - கலாச்சாரம்

10. சமூகச் சீர்திருத்தம்

11. மாற்றுத்திறனாளிகள் நலன்

12. முதல்வர் அலுவல்கள் (அரசியல் அல்லாத)/ சுற்றுப் பயணங்களை நிர்வகித்தல்/அரசு நெறிமுறைகளை நிர்வகித்தல்".


தொழில் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளுடனான கலந்தாய்வுக்குப் பின் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புகள்...



 தொழில் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளுடனான கலந்தாய்வுக்குப் பின் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புகள்...


>>> செய்தி வெளியீடு எண்: 036, நாள்: 11-05-2021...


பொது முடக்கத்திலிருந்து, அத்தியாவசியமான சில வணிகம் & துறைகளுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு...

 


கோவிட்-19 பொது முடக்கத்திலிருந்து, அத்தியாவசியமான சில வணிகம் மற்றும் துறைகளுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...






முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கலாம் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு...

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கலாம் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு... Press Release No.34, Dated: 11-05-2021...




தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடையளிக்க...


1. கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்து பணம் செலுத்தலாம். 

https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html


 2. வங்கி மூலமாக:

Bank : Indian Overseas Bank

Branch : Secretariat Branch, Chennai 600 009

S.B. A/c No. : 11720 10000 00070

IFS Code : IOBA0001172

CMPRF PAN : AAAGC0038F


3. UPI மூலம் அனுப்ப: tncmprf@iob


இந்த UPI முகவரியைக் கொண்டு BHIM, PhonePe, Amazon Pay, Google Pay, PayTM, Mobikwik உள்ளிட்ட சேவைகள் மூலம் எளிதாக பணம் அனுப்பலாம்.




வருமான வரி குறித்த சில கேள்வி - பதில்கள்...

 


1.தனியே சேமிப்பில் சீட்டு சேர்ந்து, அதன்மூலம் பெறும் தொகையை வங்கிக் கணக்கில் போட்டால், அதற்கு டி.டி.எஸ்.,(TDS) உண்டா? வங்கியில் அப்படி உண்டு என்றார்கள். மாத வருமானம், வரி கட்டிவிட்டு சேர்த்தது தானே?

வங்கியைப் பொறுத்தவரை, அந்தத் தொகை வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதிலும் வட்டித் தொகை ஆண்டுக்கு, 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் தான், டி.டி.எஸ்., பிடித்தம் செய்வர். வெறுமனே ஒரு தொகையை வங்கியில் போட்டாலே, அதற்கு டி.டி.எஸ்., பிடித்தம் செய்ய மாட்டார்கள். மேலும், மாத வருவாய்க்கு வருமான வரி செலுத்துவது வேறு, வைப்பு நிதி ஈட்டித் தரும் வட்டிக்கு வரி செலுத்துவது என்பது வேறு. இது இரட்டை வரி விதிப்பு ஆகாது.


2.ஒருவர் வங்கி கணக்கில் எவ்வளவு தொகைக்கு மேலே வைத்திருந்தால் வருமான வரி கட்டவேண்டும்? அதிகபட்சம் எவ்வளவு தொகை வைத்து கொள்ளலாம், வருமான வரி கணக்கு காட்டாமல் இருப்பதற்கு?


வங்கியின் சேமிப்புக் கணக்கில் இவ்வளவு தொகை தான் வைத்திருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒருவருடைய கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டாலோ, செலவு செய்யப்பட்டாலோ, அது வருமானத் துறையின் கவனத்துக்குப் போகும். அது எந்த வழியில் வந்தது, உரிய வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்று ஆராயப்படலாம்.


3.ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக என் கடன் மதிப்பீடு அறிக்கையை (சிபில் ஸ்கோர்) பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?


‘சிபில்’ (https://www.cibil.com/benefits-of-cibil-subscription) என்ற வலைத்தளத்திற்குச் சென்று, ‘No thanks. Show me my Free Annual CIBIL Report’ என்ற லிங்கைத் தட்டினால், உங்களைப் பற்றிய விபரங்களைப் பதிவு செய்து கொள்ளவும் அதை உறுதிப்படுத்தவும் கோரப்படுவீர்கள். இதன்மூலம், ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக, சிபில் ஸ்கோர் பெற்றுக்கொள்ள முடியும்.


4.எனக்கு வயது 46. நான் இதுவரை வருமான வரி எதுவும் தாக்கல் செய்யவில்லை. வீடு விற்பனை செய்த வகையில் வந்த பணம் மற்றும், என் மனைவியின் மாத சம்பளத்தை என் வங்கி கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்த வகையிலும் கிட்டத்தட்ட, 9 லட்சம் ரூபாய் இருப்பு வைத்திருக்கிறேன். நிறைய பேர், 2 லட்சத்திற்கு மேல் இருந்தாலே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று பயமுறுத்தி வருகிறார்கள். அவசியமா?

வங்கிக் கணக்கில், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருந்தாலே, வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டை விற்றேன் என்று தெரிவித்துள்ளீர்கள். அதில் நீண்டகால ஆதாய வரி அல்லது குறுகிய கால ஆதாய வரி செலுத்த வேண்டிய வாய்ப்பு வந்திருக்கலாம். அப்படி வரி செலுத்த வேண்டிய அளவுக்கு லாபம் இல்லை என்றால், அதையும் தெரிவித்து, வருமான வரி, ‘நில் ரிட்டர்ன்’ தாக்கல் செய்துவிடுவது நல்லது..


>>> இத்தகவலை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...