கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SpO2 அளவு 96க்கு மேல் உள்ளவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கக் கூடாது - கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு...

 


COVID 19 Pandemic - Treatment Protocol for Patients with Corona Virus infection - Approved - Orders issued...

SpO2 அளவு 96க்கு மேல் உள்ளவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கக் கூடாது - கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நெறிமுறைகள் - அரசாணை (G.O.Ms.No.:233, Dated: 10-05-2021) வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No.:233, Dated: 10-05-2021...

மே 2021 துறை தேர்வுகளுக்கு ஜூன் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - TNPSC அறிவிப்பு....



 டிசம்பர் 2020 ல் நடைபெற்ற துறை தேர்வு முடிவுகள் - மீதமுள்ள 14 தேர்வுகளுக்கு ஜுன் 8 ஆம் தேதி வெளியீடு...

டிசம்பர் 2020 ல் நடைபெற்ற துறைத் தேர்வுகளில் இதுவரை தேர்வு முடிவு வெளியிடப்படாத தேர்வுகளுக்கு  08.06.2021 அன்று முடிவுகள் வெளியீடு - இதன் காரணமாக மே - 2021 துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 15.06.2021 வரை கால அவகாசம் நீட்டிப்பு - TNPSC அறிவிப்பு.

மே 2021 துறை தேர்வுகளுக்கு ஜூன் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - TNPSC அறிவிப்பு....


>>> TNPSC அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா தொற்று குறைந்த பிறகு நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் 


*மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்


*கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் - மகேஷ் பொய்யாமொழி



திறக்க முடியாத பூட்டே கிடையாது, தகுந்த சாவியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும் (இன்று ஒரு சிறு கதை)...

 



எல்லாமே நம்மால் முடியும்; சிந்தனையில் தெளிவும், கூர்மையும் இருந்தால்...

திறக்க முடியாத பூட்டே கிடையாது, தகுந்த சாவியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்...

ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் நீர் பாய்ச்சும்  வேளையில் தொலைத்து விட்டார்.

அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு பரிசளித்த கைகடிகாரம்.

அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்து விட்டார், அவருக்கு அந்த கைகடிகாரம் கிடைக்கவில்லை.

நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்து தன் கைகடிகாரம் தொலைந்துவிட்டது ,

அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன் என்றார்.

சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர் .

சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.

ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் நான் தேடி தருகிறேன் என்றான். விவசாயியும் சரி போய் தேடிப்பார் என்றார்.

மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.

அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன் எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது என்று கேட்டார்.

நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன்.,

எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று . பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன் என்றான்.

பதட்டப்படாமல், அமைதியாக சிந்தித்தால், எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு உண்டு.

திறக்கப்படாத பூட்டே கிடையாது. தகுந்த சாவியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.


கொரோனா பரவலைத் தடுக்க 3 நாட்கள் சிறப்பு பயிற்சி - தமிழ்நாடு அறிவியல் இயக்கம்...

 


ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு ரூபாய் ஊக்கத்தொகை - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மருத்துவர்களுக்கு ரூபாய் 30,000, செவிலியர்களுக்கு ரூபாய் 20,000, இதர பணியாளர்களுக்கு ரூபாய் 15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். -முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு...





செய்தி வெளியீடு எண்: 041, நாள்: 12-05-2021...




தனி தேர்வர்களுக்கு ஆல் பாஸ் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை...




 கொரோனா தொற்று காரணமாக, தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், ஒன்று முதல், பிளஸ் 1 வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு, ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், 10ம் வகுப்பை பள்ளிகளில் படிக்காத தனி தேர்வர்கள் மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்கள், தங்களுக்கு, ஆல் பாஸ் உண்டா என்ற, குழப்பத்தில் உள்ளனர். 


இதுகுறித்து பள்ளி கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தனி தேர்வர்களுக்கு ஆல் பாஸ் வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே, அவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும்' என்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அயப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மகிழ் முற்றம் நிகழ்வுகள்

 அயப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மகிழ் முற்றம் நிகழ்வுகள்