கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசியின் செயல் திறன் எப்படி?- ஆய்வு செய்ய ஐசிஎம்ஆர் முடிவு

 


கரோனா வைரஸுக்கு எதிராக தற்போது நாட்டில் புழக்கத்தில் இருந்து வரும் அஸ்ட்ராஜென்காவின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து அடுத்த வாரத்திலிருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு செய்ய உள்ளது.


இந்த இரு தடுப்பூசிகளின் செயல்திறன், கரோனாவுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது, எந்த அளவுக்கு உடலில் பாதிப்பைத் தடுக்கிறது ஆகியவை குறித்து முதல்முறையாக ஐசிஎம்ஆர் அமைப்பு ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து சென்னையில் உள்ள ஐசிஎம்ஆர் அமைப்பின் தேசிய தொற்றுநோய்வியல் அமைப்பின் மூத்த விஞ்ஞானி மருத்துவர் தருண் பட்நாகர் கூறுகையில் “ 45 வயதுக்கு மேற்பட்ட 4ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ஐசிஎம்ஆர் அமைப்பு தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என இருதரப்பினரிடம் பிரித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது.


இந்த ஆய்வுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெறுவோர், அவரின் தடுப்பூசி நிலவரம் ஆகியவையும் கணக்கிடப்படும். இந்த ஆய்வின் நோக்கம் என்பது, கரோனா வைரஸை தீவிரம் அடையவிடாமல் தடுப்பூசி எந்த அளவு தடுக்கிறது, எந்த அளவுக்கு வீரியமாக தடுப்பூசி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளத்தான்.


நாட்டில் இரு தடுப்பூசிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் முதல்முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வு அடுத்த வாரத்திலிருந்து தொடங்கலாம்.


கரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்ட் எவ்வாறு செயல்படுகிறது, கோவாக்சின் எவ்வாறு செயல்படுகிறது என்ற ஒப்பீடும் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.


இதுவரை நாட்டில் 20 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாலும் தீவிரமாக தொற்று ஏற்படாமல், தடுக்கலாம், உயிரிழப்பைத் தடுக்கலாம் என்று கூறியுள்ளது. அதேசமயம் தொடர்ந்து முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக விலகலைக் கடைபிடித்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.


இன்றைய (28-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மே 28, 2021



உடனிருப்பவர்களை சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். எதிர்காலம் தொடர்பான கவலைகள் மனதில் உண்டாகும். சுரங்கம் தொடர்பான செயல்பாடுகளில் வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி சொத்துக்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். மனைவியுடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : கவலைகள் உண்டாகும். 


பரணி : வாய்ப்புகள் கிடைக்கும். 


கிருத்திகை : எண்ணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------




ரிஷபம்

மே 28, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தேவையில்லாமல் கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியுடன் செயல்படுவது நல்லது.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.


ரோகிணி : அனுசரித்து செல்லவும்.


மிருகசீரிஷம் : அமைதியுடன் செயல்படவும்.

---------------------------------------




மிதுனம்

மே 28, 2021



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகள் பற்றிய கவலைகள் நீங்கும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உத்தியோகம் தொடர்பான பணிகளை செய்து முடிப்பதில் திறமைகள் வெளிப்படும். போட்டித் தேர்வுகளில் புதுவிதமான ஆலோசனைகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.


திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.


புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




கடகம்

மே 28, 2021



இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வழக்கு தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். தேவையற்ற அலைச்சல்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபகமறதி ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : இழுபறிகள் அகலும்.


பூசம் : அலைச்சல்களை தவிர்க்கவும்.


ஆயில்யம் : பொறுப்புகள் மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

மே 28, 2021



கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பீர்கள். மனம் மகிழும் படியான செய்திகள் மற்றும் சூழ்நிலைகள் அமையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : சாதகமான நாள்.


பூரம் : வாய்ப்புகள் உண்டாகும்.


உத்திரம் : கவலைகள் குறையும்.

---------------------------------------




கன்னி

மே 28, 2021



உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் பாசன வசதிகள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



உத்திரம் : ஆதரவான நாள்.


அஸ்தம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


சித்திரை : வசதிகள் மேம்படும்.

---------------------------------------




துலாம்

மே 28, 2021



கிடைக்கும் சிறு வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்துவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். இளைய உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரித்தாலும் நற்பெயர் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : ஆரோக்கியம் மேம்படும்.


சுவாதி : நற்பெயர் கிடைக்கும்.


விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சகம்

மே 28, 2021



தன்னம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். சமயோகித பேச்சுக்களின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தனவரவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய செயல்களை செய்யும் பொழுது சிந்தித்து முடிவுகளை எடுப்பது நன்மையை அளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



விசாகம் : அனுகூலமான நாள்.


அனுஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.


கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------





தனுசு

மே 28, 2021



பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருக்கும் எண்ணங்களை செயல்படுத்த சில தடைகளை தாண்டி செயல்பட வேண்டும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் முதலீடுகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் நீங்கி சுதந்திரமாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடல் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மூலம் : முன்னேற்றமான நாள்.


பூராடம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

மே 28, 2021



தொலைதூர தகவல்கள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த தொழில் சார்ந்த தடைகள் குறையும். தேவையற்ற பேச்சுக்கள் பேசுவதை குறைத்து கொள்வது நல்லது. கண்பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.


அவிட்டம் : பிரச்சனைகள் நீங்கும்.

---------------------------------------




கும்பம்

மே 28, 2021



தெளிவான சிந்தனையுடனும், தீர்க்கமான முடிவுடனும் எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் அறிமுகத்தின் மூலம் லாபம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகளும், ஆலோசனைகளும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : வெற்றி உண்டாகும்.


சதயம் : அறிமுகம் ஏற்படும்.


பூரட்டாதி : மேன்மையான நாள்.

---------------------------------------




மீனம்

மே 28, 2021



வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் மதிப்புகளும், வாய்ப்புகளும் ஏற்படும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



பூரட்டாதி : தனவரவுகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.


ரேவதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------


ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்நாள் சான்றை (Life Certificate) சமர்ப்பிக்க (For the Year 2021) விலக்களித்து அரசாணை வெளியீடு...



 ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்நாள் சான்றை (Life Certificate) சமர்ப்பிக்க (For the Year 2021) விலக்களித்து அரசாணை வெளியீடு...


G.O.Ms.No.134, Dated 26thMay 2021.


PENSION/FAMILY PENSION – Furnishing of Life Certificate, Non-employment Certificate and Non-remarriage/Non-marriage Certificate by the Pensioners/Family Pensioners including Digital Life Certificate thro’ Jeevan Pramaan Portal – Exemption from Annual Mustering Process for the year 2021 as a special case due to Covid-19 - Orders – Issued...


>>> Click here to Download G.O.Ms.No.134, Dated: 26-05-2021...



5000 ஆசிரியரல்லா பணியிடங்களில் தற்போது பணிபுரியும் 1272 பணியிடங்களுக்கு (778 துப்புரவாளர் மற்றும் 494 இரவு காவலர்) மே -2021 மாதத்திற்கான ஊதிய நீட்டிப்பு ஆணை...



 5000 ஆசிரியரல்லா பணியிடங்களில் தற்போது பணிபுரியும் 1272 பணியிடங்களுக்கு (778 துப்புரவாளர் மற்றும்  494 இரவு காவலர்) மே -2021 மாதத்திற்கான  ஊதிய நீட்டிப்பு ஆணை...


>>>  பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளரின் கடிதம் ந.க.எண்: 8082/ ப.க.4(1)/2021-2, நாள்: 25-05-2021...



கொரோனா தடுப்பு மருத்துவ மையங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் கண்காணிப்பு அலுவலர்களாக ஆசிரியர்கள் நியமனம்...

 

ஈரோடு மாவட்டம் - கொரோனா தடுப்பு மருத்துவ மையங்களில் உணவு, குடிநீர், முக கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் கண்காணிப்பு அலுவலர்களாக ஆசிரியர்கள் நியமனம்...


>>> ஈரோடு மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள் ந.க.எண்: 8100/2020/பே.மே., நாள்: 26-05-2021...


முதலமைச்சர் நிவாரண நிதி - அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் / அதற்கு மேற்பட்ட நாட்கள் ஊதியம் பிடித்தம் செய்தல் - அரசாணை வெளியீடு...

 



முதலமைச்சர் நிவாரண நிதி - அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் / அதற்கு மேற்பட்ட நாட்கள் ஊதியம் பிடித்தம் செய்தல் - அரசாணை வெளியீடு...


முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு நாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களின் ஊதியம் பிடிக்க சம்பந்தப்பட்ட ஆசிரியர் அல்லது அரசு ஊழியர் எழுத்துப்பூர்வமாக தனது சம்மதத்தை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது...


>>> அரசாணை (நிலை) எண்: 52, நாள்; 27-05-2021...



வரும் கல்வியாண்டில் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களை கற்பிக்க AICTE அனுமதி...



 வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்பிக்க  அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன இதன் காரணமாக பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும். இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள்  பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப  கவுன்சில் AICTE தமிழ், இந்தி, தெலுங்கு, குஜாராத்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 7மொழிகளில் வரும் கல்வியாண்டு முதல்  பொறியியல் பயிலலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. 



இதன்காரணமாக ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பாடங்கள் தாய் மொழியிலும் இடம்பெறும். பொறியியல் பாடங்களை அந்தந்த பிராந்திய  மொழிகளில்  மொழி மாற்றவும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் திட்டமிட்டுள்ளது.  மேலும் 11 இந்திய  மொழிகளிலும்  பொறியியல் பாடங்களை கொண்டு வரவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள் அதிகம் பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு உள்ளது என  AICTE தகவல் தெரிவித்துள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...