கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

28 துணை ஆட்சியர்கள் மாறுதல் & பணி நியமனம் - அரசாணை வெளியீடு...



 தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிவந்த 28 துணை ஆட்சியர்கள் மாறுதல் & பணி நியமனம் - அரசாணை (2டி) எண்: 63, நாள்: 07-06-2021  வெளியீடு...


திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 28 மாவட்ட துணை ஆட்சியர்கள் பணியிடமாற்றம்...


>>> அரசாணை (2டி) எண்: 63, நாள்: 07-06-2021...


முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு...


*முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு


*ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் முன்கள பணியாளர்களுக்கு உதவித்தொகை


*மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசு நடவடிக்கை...



தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரு மாதங்களுக்கு கூடுதல் அரிசி வழங்க உத்தரவு...



 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே, ஜூன் மாதங்களில் கூடுதல் அரிசி வழங்க உத்தரவு.


கொரோனா 2வது அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கடையில் கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 


மே, ஜூன் மாதத்தில் ஏற்கனவே வழங்கப்படும் அளவுடன் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 


மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு கூடுதல் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு குறிப்பிட்ட பிரிவிற்கு அதிக மாணவர்கள் விண்ணப்பித்தால் நுழைவுத்தேர்வு...


 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு குறிப்பிட்ட பிரிவிற்கு அதிக மாணவர்கள் விண்ணப்பித்தால் 50 மதிப்பெண்களுக்கு நுழைவுத்தேர்வு...






>>> +1 மாணவர் சேர்க்கை - 2021-22 தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களின் வழிகாட்டுதல்...


+1 மாணவர் சேர்க்கை - 2021-22 தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களின் வழிகாட்டுதல்...


School Education Commissioner Instruction for the admission of Higher Secondary first year in the academic year 2021- 2022...

2021-22ஆம் கல்வியாண்டில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை - தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்: 34462/பிடி1/இ1/2020, நாள்: 07-06-2021...


11-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 11-,ம் வகுப்பு சேர்க்கைக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் 10-15% கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


>>> பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 34462/பிடி1/இ1/2020, நாள்: 07-06-2021...


பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆபத்துக்கள் குறித்து தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ்அப் எண் மற்றும் இணையம் வாயிலாக தகவல் பதிவு, புதிதாக அறிமுகம் குறித்து செய்தி வெளியீடு...

 




 பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆபத்துக்கள் குறித்து தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ்அப் எண் மற்றும் இணையம் வாயிலாக தகவல் பதிவு, புதிதாக அறிமுகம் குறித்து செய்தி வெளியீடு...


பேரிடர் காலங்களில் பொது மக்கள் ஆபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண் அறிமுகம்.


மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு 9445869848 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்...


பொதுமக்கள் 1070 என்ற கட்டணமில்லா தெலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம்.





கோவிட்19 பெருந்தொற்று - Hand Sanitizer, N95 & Surgical Mask, Gloves உள்ளிட்ட சில மருத்துவப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்து விலை நிர்ணயித்து அரசாணை வெளியீடு...



 கோவிட்19 பெருந்தொற்று - Hand Sanitizer, N95 & Surgical Mask, Gloves உள்ளிட்ட சில மருத்துவப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்து விலை நிர்ணயித்து அரசாணை ( G.O.(D) No.:695, Dated: 04-06-2021 ) வெளியீடு...


கிருமிநாசினி, சர்ஜிகல் மாஸ்க், பிபிஇ கிட், N95 மாஸ்க் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு அதிகபட்ச (MRP) விலை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. அதாவது N95 மாஸ்க் 22 ரூபாய், சர்ஜிக்கல் மாஸ்க் 4.50 ரூபாய் என அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும், அதற்கான உச்சவரம்பு விலையை நிர்ணயம் செய்துள்ளது.


விலை விவரங்கள்:

கிருமிநாசினி 200 மில்லி லிட்டர் ரூ.110

N95 முககவசம் 22 ரூபாய்

கையுறை 15 ரூபாய்

பிபிஇ கிட் 273 ரூபாய்

இரண்டு அடுக்கு முககவசம் 3 ரூபாய்

மூன்று அடுக்கு முககவசத்தின் விலை 4 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை பயன்படுத்தப்படும் ஏப்ரானின் அதிகபட்ச விலை ரூ.12

அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் கவுனின் அதிகபட்ச விலை ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சானிடைசர் 200 மி.லி. விலை அதிகபட்சம் 110 ரூபாயாக இருக்க வேண்டும்.

சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்று அதிகபட்சம் ரூ.4.50க்குள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.


>>> Click here to Download G.O.(D) No.:695, Dated: 04-06-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.Ed., admission application period Extended

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நீட்டிப்பு - செய்தி வெளியீடு எண்: 1560, நாள்...