EMIS Website - Students Promotion Steps...
>>> EMIS இணையதளத்தில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதற்கான வழிமுறைகள்...
EMIS Website - Students Promotion Steps...
>>> EMIS இணையதளத்தில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதற்கான வழிமுறைகள்...
EMIS இணையதளத்திலிருந்து மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழை (Transfer Certificate) தயார் செய்து வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்...
தற்போது Emis இணையதளத்தில் மூலம் TC வழங்கும் வசதி மற்றும் Promotion செய்யும் வசதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
*குறிப்பு : இப் பணிகளை செய்வதற்கு முன் தங்கள் பள்ளியின் 2020-21 ஆண்டிற்கான அனைத்து விவரங்களையும் Emis இணையதளத்தில் இருந்து Download செய்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Dear All,
Kindly communicate to all Government, Government Aided & Unaided School HM's to do the transfer & promotion activity in EMIS Portal.
Thank you.
State EMIS Wing.
EMIS TC Generate செய்வதற்கும் மாணவர்களுக்கு promotion செய்வதற்கும், EMIS state team மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
EMIS STUDENTS TC - எமிஸ் இணைய தளத்திலிருந்து மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழை தயார் செய்து வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
1. LKG 12 வகுப்பு மாணவர்களில் மாற்றுச் சான்றிதழ் வழங்க கோரும் மாணவர்களுக்கு தற்போது எமிஸ் இணையதளம் வாயிலாக மாற்றுச் சான்றிதழை தயார் செய்து வழங்குதல் வேண்டும்.
2. முதலில் students - students list வாயிலாக மாணவர்களின் சுயவிவரப் படிவத்தில் (students profile) ஏற்கனவே தங்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவனின் விவரங்கள் அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து, திருத்தங்கள் இருப்பின் அவற்றை சரிசெய்து save செய்திடல் வேண்டும்.
3. அதனைத்தொடர்ந்து students students TC Details வாயிலாக மாற்றுச் சான்றிதழுக்கு தேவையான விவரங்களை மாணவனின் பெயருக்கு எதிரே
இடம்பெற்றுள்ள edit optionயை தேர்வு செய்து. பூர்த்தி செய்தல் வேண்டும்.
*இப்படிவத்தில் அனைத்து விவரங்களையும் ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்தல் வேண்டும். *Personal mark of identification_ சார்ந்த மாணவனின் இரு அங்க அடையாளங்களில்
ஒவ்வொன்றை 50 எழுத்துக்களுக்குள் பிழையின்றி பூர்த்தி செய்தல் வேண்டும். * Student is promoted to the next class_ 10 மற்றும் 12 வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு மட்டும் Refer Marksheet எனவும், பிற வகுப்பு மாணவர்களுக்கு Yes/No/No-discontinued என்பதில் பொருத்தமான ஒன்றையும் தேர்வு செய்தல் வேண்டும்.
'School recognition number_அரசு உதவி பெறும் பள்ளிகள்சுயநிதிப் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள்நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளி அங்கீகார எண்ணைப்பூர்த்தி செய்தல் வேண்டும். அவ்வாறு நிரப்பும்போது ஆங்கில எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தவும். (Ex: ந.க.எண் - R.C Number) *Caste/ community/ religion_அரசின் வழிகாட்டுதல் படி மாணவர்களின் மதம்/ இனம் சார்ந்த விபரங்களை மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடாமல், Refer community certificate / leave bank/ No caste( communilty) என்பதில் பொருத்தமான ஒன்றை தேர்வு செய்தல் வேண்டும்.
"TC application date & issue date தற்போது எந்த தேதியில் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கோரிவிண்ணப்பம் அளித்துள்ளாரோ/ தாங்கள் எந்த தேதியில் மாற்று சான்றிதழ்கள் வழங்க இருக்கிறீர்களோ அதனை குறிப்பிடுதல் வேண்டும்.
4. அதனைத்தொடர்ந்து மேற்கண்டவாறு பூர்த்திசெய்து விவரங்கள் அனைத்தும் மிகச்சரியாக உள்ளதை உறுதி செய்த பின் save என்பதை தேர்வு செய்தல் வேண்டும்.
5. அவ்வாறு save செய்த பின்பு, என்பதை தேர்வு செய்து மாணவன் பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெறுவதற்கான சரியான காரணத்தை தேர்வு செய்தல் வேண்டும். தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு (highest class) பயிலும் மாணவர்களுக்கு மட்டும் terminal class என்பதையும், பிற வகுப்பு மாணவர்களுக்கு சரியான காரணத்தையும் தேர்வு செய்தல் வேண்டும். அதனை தேர்வு செய்து save செய்தபின், சார்ந்த மாணவனது விவரங்கள் commonpoolக்கு சென்றுவிடும் தங்கள் பள்ளியில் students listல் இருந்து மாணவனின் பெயர் நீக்கப்பட்டுவிடும்.
6.அதேசமயம் students- students TC details - current student listல் இடம் பெற்றிருந்த மாணவனின் விவரங்களும் past students listக்கு சென்றுவிடும்.
7. தற்போது past students listல் இடம்பெற்றுள்ள சார்ந்த மாணவனது பெயருக்கு எதிரே உள்ள pdf iconயை கிளிக் செய்வதன் மூலம் மாற்றுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் மாற்றுச் சான்றிதழை நகலெடுத்து தலைமையாசிரியர் கையொப்பமிட்டு மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
8. Pdf வடிவில் பதிவிறக்கம் செய்த பின்பு மாற்றுச் சான்றிதழில் பிழைகள் கண்டறியப்படின், past students listல் சார்ந்த மாணவனின் பெயருக்கு எதிரே இடம்பெற்றுள்ள edit optionயை தேர்வு செய்து திருத்தங்களை செய்தபின், மீண்டும் pdf iconயை கிளிக் செய்வதன் மூலம் திருத்தம் செய்யப்பட்ட மாற்றுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
9. Student TC detailsல் இடம்பெறும் save optionயை மொத்தமாக மூன்று முறை மட்டுமே பயன்படுத்த இயலும். முதல் முறையில் அங்க அடையாள விபரம் முதல் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் தேதி வரையிலான விவரங்களை பதிவு செய்து save செய்தபின், திருத்தங்கள் கண்டறியப்படும் போது மேலும் இரண்டு முறை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம்.
10. மாணவனின் பெயரில் 'ஸ்ரீ' என்ற வடமொழி எழுத்து இருப்பின் Emis TC ல் அந்த ஒரு எழுத்து தவறாக வரும் ... அதற்கான தீர்வு பின்னர் கூறப்படும்.
மேஷம்
ஜூன் 12, 2021
குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : கலகலப்பான நாள்.
பரணி : முன்னேற்றம் ஏற்படும்.
கிருத்திகை : மாற்றமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
ஜூன் 12, 2021
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.
ரோகிணி : நெருக்கடிகள் குறையும்.
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஜூன் 12, 2021
உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
திருவாதிரை : மனம் மகிழ்வீர்கள்.
புனர்பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
---------------------------------------
கடகம்
ஜூன் 12, 2021
உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முன்னோர்களின் சொத்துக்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகளும், ரகசியமான செயல்பாடுகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகளும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
புனர்பூசம் : மாற்றமான நாள்.
பூசம் : சேமிப்புகள் குறையும்.
ஆயில்யம் : மேன்மையான நாள்.
---------------------------------------
சிம்மம்
ஜூன் 12, 2021
புதுவிதமான ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். செய்கின்ற தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
பூரம் : புத்துணர்ச்சியான நாள்.
உத்திரம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
---------------------------------------
கன்னி
ஜூன் 12, 2021
முத்திரை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், பழக்கவழக்கங்களில் புதுமையும் உண்டாகும். மனதிற்கு பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் நீங்கி முயற்சிக்கேற்ப வெற்றியும், பாராட்டுகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும்.
அஸ்தம் : எண்ணங்கள் நிறைவேறும்.
சித்திரை : எதிர்ப்புகள் அடங்கும்.
---------------------------------------
துலாம்
ஜூன் 12, 2021
உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இழுபறியான செயல்களையும் சாதுர்யமான முறையில் செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். வாழ்க்கைத்துணைவருடன் மேற்கொள்ளும் சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்களும், புத்துணர்ச்சியும் உண்டாகும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.
சுவாதி : முடிவுகள் காலதாமதமாகும்.
விசாகம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
---------------------------------------
விருச்சகம்
ஜூன் 12, 2021
உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். அரசு தொடர்பான பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். நீண்ட நாள் கடன் தொடர்பான பிரச்சனைகளின் மூலம் மனதில் வருத்தங்கள் ஏற்படும். முக்கியமான கோப்புகள் மற்றும் பொருட்களில் கவனம் வேண்டும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : அலைச்சல்கள் ஏற்படும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : பொறுமையுடன் செயல்படவும்.
---------------------------------------
தனுசு
ஜூன் 12, 2021
கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு மறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். செய்யும் செயல்களில் இருந்துவந்த தடைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை
மூலம் : விவாதங்கள் மறையும்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : திருப்தியான நாள்.
---------------------------------------
மகரம்
ஜூன் 12, 2021
உத்தியோகம் தொடர்பான நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். மாணவர்களுக்கு ஞாபகமறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். வாகனப் பயணங்களின்போது விவேகம் அவசியமாகும். போட்டித்தேர்வுகள் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
திருவோணம் : பிரச்சனைகள் மறையும்.
அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
---------------------------------------
கும்பம்
ஜூன் 12, 2021
விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வாரிசுகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மேலும் அவர்களின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : மேன்மை ஏற்படும்.
சதயம் : இன்னல்கள் குறையும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
மீனம்
ஜூன் 12, 2021
மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
ரேவதி : சாதகமான நாள்.
---------------------------------------
🍁 தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ( ஜீன் 21 வரை ) ஊரடங்கு நீட்டித்து அரசு உத்தரவு...
🍁 பள்ளி , கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளுக்கு மட்டும் அனுமதி...
🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷
*தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் அனுமதி!*
_ஜூன் 14 முதல் ஜூன் 21 காலை 6 மணிவரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு_
_தொற்று பரவல் அதிகம் உள்ள 1️⃣1️⃣ மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்_
*கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர்,தஞ்சை, நாகை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகள் தொடரும்!*
1️⃣ *பள்ளி - கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி!*
2️⃣ *கட்டுமான பொருட்கள் கடைகளுக்கு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி!*
3️⃣ *செல்போன் கடைகள் செயல்பட அனுமதி!_விளையாட்டு திடல்கள் மற்றும் பூங்காக்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதி!_*
4️⃣ *டாஸ்மாக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட (27 மாவட்டங்கள் மட்டும்) அனுமதி!*
5️⃣ *குளிர்சாதன வசதி இல்லாமல் சலூன்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50% சதவீத பணியாளர்கள் உடன் செயல்பட அனுமதி!*
6️⃣ *மிக்ஸி, கிரைண்டர் மற்றும் தொலைக்காட்சி பழுது பார்க்கும் கடைகளுக்கு அனுமதி!*
7️⃣ *பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை!*
8️⃣ *காப்பீடு தொடர்பான அலுவலகங்கள் 33% பணியாளர்கள் உடன் இயங்க அனுமதி!*
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
>>> செய்தி வெளியீடு எண்: 263, நாள்: 11-06-2021...
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி காணியாளம்பட்டியில் 2021-22 ஆம் கல்வியாண்டு சேர விருப்பம் உள்ள மாணவர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. Google formல் விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்பும் மாணாக்கர்களுக்கு விண்ணப்ப விநியோகம் குறித்த தகவல்கள் பரிமாறப்படும்.
>>> விண்ணப்பங்கள் வழங்கப்படும் விவரங்கள் குறித்து அறிய...
தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 51.4% ஆக உயர்வு...
2010-11-ல் 32.9% ஆக இருந்த நிலையில், 2019-20-ல் 51.4% ஆக உயர்வு
NEP-ல் 2030-க்குள் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை 50% ஆக உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு 10 ஆண்டுகள் முன்னோக்கி பயணம்.
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...