கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை உடனடியாக மூடுமாறு தமிழ்நாடு அரசு உத்தரவு...



அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும், அங்கு பயின்று வரும் மாணவர்களை மாற்று பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என தொடக்கப்பள்ளி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " தொடக்கப்பள்ளிகள் நடத்த அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை மூடுமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அங்கீகாரம் இல்லாத தொடக்கப்பள்ளிகள் இனி செயல்பட கூடாது.


அங்கீகாரம் இல்லாத பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அங்கு பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் பொருட்டு, அவர்களை மாற்று பள்ளிகளில் சேர்க்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் மாவட்டத்தில் செயல்படுமாயின் அதற்கு அந்தந்த வட்டார, மாவட்ட கல்வி அலுவலர்கள் தான் முழு பொறுப்பு. அரசு விதிமுறையை நடைமுறைப்படுத்த மறந்த கல்வி அலுவலர்கள் மீண்டும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


>>> தமிழ்நாட்டில் அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மீது முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்: 07.05.2021...


கொரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...



 கொரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வழிகாட்டு நெறிமுறை வெளியீடு: 18 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டுமே பயன்பெற முடியும்...


கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள் பெயரில் வைப்பீடு செய்வதுடன் மறுவாழ்வு, பாதுகாப்பு அளிப்பது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.


தமிழகத்தில் கரோனா காரணமாக பெற்றோரை அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 29-ம் தேதி அறிவித்தார். அதில், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள், ஏற்கெனவே பெற்றோரில் ஒருவரை இழந்து தற்போது மற்றொருவரையும் இழந்த குழந்தைகள் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும். 18 வயதுநிறைவடைந்ததும் அந்த குழந்தைகளுக்கு வட்டியுடன் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் அதில் இடம் பெற்றிருந்தன.


அத்துடன், முதல்வர் அறிவிப்பின்படி நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட, நிதித்துறை செயலர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த 7-ம் தேதி கூடி வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தி அறிக்கை தயாரித்தது.


இதற்கிடையே, முதல்வர் ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு அவற்றை நிறைவேற்றுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதில், கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சத்தை தமிழ்நாடு மின் நிதி நிறுவனத்தில் வைப்பீடுசெய்து, 18 வயது நிரம்பியதும் வட்டியுடன் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும், உறவினர் மற்றும் பாதுகாவலருடன் வாழும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பராமரிப்புத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


சிறப்பு பணிக்குழு அமைப்பு

அரசாணையுடன், நிதித்துறை செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தயாரித்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்டம் தோறும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியசிறப்பு பணிக்குழு மாவட்ட ஆட்சியர்தலைமையில் அமைக்கப்படுகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிய, சுகாதாரத் துறையிடம் உள்ள கரோனாவால் இறந்தவர்கள் பட்டியலை பயன்படுத்த லாம்.


இதுதவிர, பிறப்பு, இறப்பு பதிவாளர்களிடம் இருந்து தகவல் பெறலாம். அச்சு மற்றும் மின்னணு ஊடகத்தில் கிடைக்கும் செய்திகளை பெற்று ஆய்வு செய்து பயன்படுத்தலாம். மாவட்ட அளவிலான பணிக்குழு இந்த விவரங்களை கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.


சில நேரங்களில், மருத்துவமனை செல்லாமல் வீடுகளிலேயே கரோனா பாதிப்பால் பெற்றோர் இறக்கும் நிகழ்வுகளில், இறப்புசான்றிதழ்களில் கரோனா இறப்புஎன்பது பதிவு செய்யப்பட்டிருக்காது. அப்படிப்பட்ட நிகழ்வுகளில்,பெற்றோரில் ஒருவர் உயிருடன் இருந்தாலோ அல்லது பாதுகாவலரோ உரிய ஆவணங்கள், மருத்துவ சான்றிதழ்கள் அதாவது மருத்துவரின் பரிசோதனை அறிக்கை, மருந்துச்சீட்டு, ஆர்டிபிசிஆர் பரிசோதனை, சிடி ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட கரோனா பாதிப்பு என்பதை நிரூபிக்கும் சான்றிதழை வழங்கி இறப்பு சான்றிதழ் பெறலாம்.


பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் கரோனா காரணமாக இழந்திருக்கும் குழந்தைகளாக இருக்கும் நிலையில், 18 வயதுக்கு குறைவாக இருந்தால் மட்டுமே இந்த நிவாரணத்தை பெற முடியும்.


மேலும் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு குடும்ப வருமானம் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளை பொறுத்தவரை, உடன் இருக்கும் தாயோ, தந்தையோ குடும்பத்துக்காக சம்பாதிப்பவராக இருக்கும்பட்சத்தில் அவரது வருவாய் சான்றிதழ் கேட்டு பெறப்பட்டு, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இருப்பது உறுதி செய்யப்படும்.


அப்படி பட்டியலில் இடம்பெறாதபட்சத்தில், அந்த குடும்பத்தை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வேளை பெற்றோர் அரசு அல்லது பொதுத்துறை நிறுவன ஊழியராக இருந்தால் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறமுடியாது என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


>>> கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியீடு - இணைப்பு:  விண்ணப்பப் படிவம்...


பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியோருக்கு அரசின் புதிய திட்டம்...



 பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியோரின் விபரங்களை சேகரித்து, அவர்கள் மீண்டும் படிப்பை தொடர நிதியுதவி அளிக்கும் திட்டத்தை, அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.


பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் கைவிட்டோர் குறித்த தகவல்களை சேகரிக்க,  கல்வி அமைச்சகம், 'பிரபந்த்' என்ற வலைதளத்தை துவக்கியுள்ளது. இது குறித்து, இந்தியாவின் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டு உள்ள செய்தி: அரசு, ஒவ்வொரு மாணவரின் நலனுக்கும் முன்னுரிமை அளிக்கிறது. அதன்படி, பிரபந்த் என்ற வலைதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவை, பள்ளி மற்றும் சிறப்பு பயிற்சி மையங்களில் படிப்பை பாதியில் நிறுத்திய, 6 - 18 வயது வரை உள்ளோரின் விபரங்களை பதிவேற்ற வேண்டும். அதன் அடிப்படையில், 6 - 14 வயது வரையிலான மாணவர்கள், 'சமக்ரா சிக்ஷா' திட்டத்தின் கீழ், பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படும்.


அதேபோல, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, படிப்பை பாதியில் நிறுத்திய, 16 - 18 வயதினருக்கு, திறந்தவெளி பல்கலையில் படிப்பை தொடர ஏற்பாடு செய்யப்படும். அவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டம், இந்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Kendriya Vidyalaya பள்ளி - மாணவர் சேர்க்கை கால அட்டவணை வெளியீடு...

 


Kendriya Vidyalaya பள்ளி - மாணவர் சேர்க்கை கால அட்டவணை வெளியீடு...


கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


இது குறித்து கே.வி., சங்கதன் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுதும் உள்ள கே.வி., பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, ஏற்கனவே விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்பட்டது. விண்ணப்பித்தவர்களுக்கு உரிய விதிகளின்படி, தகுதி பெற்றவர்களின் முதல் பட்டியல் வரும், 23ம் தேதி வெளியிடப்படும். இரண்டாவது பட்டியல் ஜூன் 30; மூன்றாவது பட்டியல் ஜூலை 5ல் வெளியிடப்படும். 


முன்னுரிமை அடிப்படையில் உள்ளவர்களுக்கான பட்டியல் ஜூலை 2ல் வெளியாகும். இவற்றில் மாணவர்கள் சேராமல் காலியாகும் இடங்களுக்கு, ஜூலை 8 முதல், 12 வரை விண்ணப்ப பதிவுகள் நடக்கும். ஜூலை 13 முதல், 16க்குள் பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்படுவர்.


இரண்டாம் வகுப்புக்கு, ஜூன் 24ல் பட்டியல் வெளியாகும். ஜூன் 25 முதல், 30க்குள் மாணவர் சேர்க்கை நடக்கும்.பிளஸ் 1 தவிர, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலியான இடங்களில் ஆக., 31க்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்படும்.பிளஸ் 1க்கு, 10ம் வகுப்பு தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட 10 நாட்களில் பதிவுகள் துவங்கி, மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பொறியியல், கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி விளக்கம்...



அண்ணா பல்கலைக்கழக விருப்ப பாடங்களில் 9வது பாடமாக தமிழ் மொழி இணைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


தொழில்நுட்ப இயக்கக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை நடக்கும். 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பம் பெறப்பட்டு மாணவர்கள் சேர்க்கை தொடங்கவுள்ளது. பாலிடெக்னிக் அரியர் தேர்வுக்கு ஒரு பேப்பருக்கு 65ரூ கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சேலம் பெரியார், காமராஜர் , அண்ணா பல்கலைகழக முறைகேடு புகார் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி நியமித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.


12 வகுப்பு தேர்வு ரத்து ஆகியுள்ளதால், மதிப்பெண் வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் குறித்த முடிவுகள் எடுத்த பின்னரே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்படும். முதலமைச்சருடன் ஆலோசித்த பின்னர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்து முடிவெடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழக விருப்ப பாடங்களில் 9வது பாடமாக தமிழ் இணைக்கப்படும்" எனக் கூறினார்.

ஊரக வங்கிகளில் 10729 காலியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) மூலம் நிரப்பப்பட உள்ளது - விண்ணப்பிக்க கடைசி நாள்: 28-06-2021...



 ஊரக வங்கிகளில் 10729 காலியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection) ஊரக வங்கிகளில்  கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மொத்த காலியிடங்கள்: 10729


1.பணி: Office Assistant (Multipurpose)


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 18 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.


2.பணி: Officer Scale I


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


3.பணி: Officer Scale II


கல்வித்தகுதி:


(Assistant Manager): ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


Officer Scale-II General Banking Officer(Manager): ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Officer Scale-IISpecialist Officers(Manager): 


Information Technology Officer: Electronics / Communication / Computer Science / Information Technology பிரிவில் பட்டப்படிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Chartered Accountant: CA


Law Officer: சட்டப்பிரிவில் பட்டப்படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Treasury Manager: CA/MBA பட்டப்படிப்புடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Marketing Officer: MBA பட்டப்படிப்புடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Agricultural Officer: Agriculture/ Horticulture/ Dairy/ Animal Husbandry/ Forestry/ Veterinary Science/ Agricultural Engineering/ Pisciculture பிரிவில் பட்டப்படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 21- 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.


4.பணி: OfficerScale-III (Senior Manager)


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 21 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பட்டியலினத்தவர்/ பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் படை வீரர்/ இதர பிற்படுத்தப்பட்டோர்  பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


தேர்ந்தெடுக்கும் முறை:


இணையவழி தேர்வு


விண்ணப்பக்கட்டணம்:


Officer (Scale I, II & III):


பட்டியலினத்தவர்/ பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் படை வீரர் : ₹175. 


பொது/இதர பிற்படுத்தப்பட்டோர்: ₹850


Office Assistant (Multipurpose):


பட்டியலினத்தவர்/ பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் படை வீரர் : ₹175. 


பொது/இதர பிற்படுத்தப்பட்டோர்: ₹850


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியானவர்கள் https://www.ibps.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில்  விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.06.2021


மேலும் விவரங்களுக்கு : https://www.ibps.in/wp-content/uploads/Advt-_CRP-RRB-X_final_final.pdf


ஜூன் 14ஆம் தேதி முதல் 50 % பணியாளர்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து பிரிவுகளும் செயல்பட அனுமதி...

 


வரும் ஜூன் 14ஆம் தேதி முதல் 50 % பணியாளர்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து பிரிவுகளும் செயல்பட அனுமதி - சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு.


ஜூன் 30 வரை நீதிமன்ற பணிகள்   ஆன்லைனில்  தொடரும்.


14ம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள் - சென்னை உயர்நீதிமன்றம் தலைமை பதிவாளர் தனபால் அறிவிப்பு.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...