கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது...?

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது...?


தமிழகத்தில் கொரோனா வைரஸ்தொற்று குறைந்து வருவதை அடுத்து மேனிலை வகுப்புகளை மட்டும் ஜூலை மாதம் தொடங்கலாம் என்று தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் கடந்தஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியதையடுத்து பள்ளிகள் கல்லூரிகள் அனை த்தும் மூடப்பட்டன. குறிப்பாக 1ம் வகுப்பு முதல் 9ம்  வரை தொடங்கப்படாமல் மாணவ,மாணவியர் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகளும் நடத்த முடியாமல் போனது. அதனால் அந்த  வகுப்பில் படித்து வந்த மாணவ,மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.



தேர்தலுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வுகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா  வைரஸ் தொற்றின் பரவல் தீவிரம் அடைந்ததால் பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 50 சதவீதம் இயல்பு நிலை திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், 2021-2022ம் கல்வி ஆண்டுக்காக மாணவர்கள் சேர்க்கையும் கடந்த 14ம் தேதியில் இருந்து நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் இலவசப் பாடப்புத்தகங்கள் தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அந்த பாடப்புத்தகங்கள் மாணவ, மாணவியருக்கு இன்று வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. புத்தக வினியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்ததுடன்  கல்வித் தொலைக்காட்சியையும் தொடங்கி  வைத்தார்.

கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து, ஜூலை மாதம் பள்ளிகளை திறப்பதற்கு ஏற்ப பள்ளிகள் அனைத்து தயார்படுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜூலை  முதல் பள்ளிகள்  திறக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்து விட்டது. இருப்பினும் கொரோனா தொற்றின் 3வது அலை அடுத்து தொடங்கும் என்று சுகாதார வல்லுநர்கள் நம்புவதால், தற்போதைக்கு கீழ் வகுப்புகளை தொடங்குவதற்கு பதிலாக மேனிலை வகுப்புகளை மட்டும் ஜூலை மாதம் தொடங்கலாம் என்று அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்க TC தேவையில்லை - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு...

 அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்க TC தேவையில்லை - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு...


அரசு பள்ளிகளில் மாணவர்களை 8ம் வகுப்பு வரை சேர்க்க டிசி தேவையில்லை: தனியார் கொடுக்காவிட்டாலும் ஆதார் போதும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு


அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது 8ம் வகுப்பு வரை மாற்றுச் சான்று இல்லாமல் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கலாம் என்று பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 1 வகுப்புகளில் கடந்த 14ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை  நடக்கிறது. கொராேனா தொற்றின் காரணமாக பொதுமக்களிடம் ஒரு வித பாதுகாப்பு உணர்வு இருந்து வருகிறது. அதனால், தனியார் பள்ளிகளில் படித்து வரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு பொதுமக்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். மாற்றுச் சான்று வழங்க தனியார் பள்ளிகள் மறுப்பு தெரிவித்து, கடந்த ஆ ண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்துவோருக்கு மட்டுமே மாற்றுச் சான்று வழங்கி வருகின்றன.



இந்த பிரச்னையால், மாற்றுச் சான்றை பெறுவதில் பெற்றோர் சிரமப்படுகின்றனர். இதற்கிடையே, தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களை மாற்றுச் சான்று இல்லாமல் அரசுப் பள்ளிகளில் சேர்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டை தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் கூறும்போது, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் , தங்கள் பள்ளிகளில் இறுதி வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கும் அந்த பள்ளிகளில் இருந்து வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கும் மாற்றுச் சான்று கொடுப்பதற்கான அனைத்து விவரங்களையும் கல்வித் தகவல் மேலாண்மை இணையத்தில் அந்த மாணவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். அதிலிருந்து மாணவர்களின் மாற்றுச் சான்றை கேட்கும் போது பதிவிறக்கம் செய்து கொடுக்க வேண்டும்.

அனைவரும் கட்டாய கல்வி சட்டத்தின்படி அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி  வழங்கப்படுவதால், தனியார் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மாற்றுச் சான்று இல்லாமலேயே அரசுப் பள்ளிகளில் அவர்கள் படிக்க வேண்டிய வகுப்பில் சேர்ந்து கொள்ள முடியும். மாணவர் சேர்க்கையின்போது அவர்கள் தங்கள் ஆதார் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும்.கல்வி மேலாண்மை தகவல் முகமையில் அந்த எண்ணை பயன்படுத்தி  பெற்றுக் கொள்ள  முடியும். தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிட்டு, அவர்களின் மாற்றுச் சான்றிதழைஅனுப்ப அந்த பள்ளிக்கு கல்வித் தகவல் மேலாண்மை முறைமையின் மூலம் வேண்டுகோள் விடுக்கலாம். எனவே அரசுப் பள்ளியில் 8ம்  வகுப்பு வரையில் மாணவர்களை சேர்க்க மாற்றுச் சான்று ஏதும் தேவையில்லை. இவ்வாறு ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறும்  மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிட்டு, அவர்களின் மாற்றுச்  சான்றிதழை அனுப்ப அந்த       பள்ளிக்கு கல்வித் தகவல் மேலாண்மை முறைமையின் மூலம் வேண்டுகோள் விடுக்கலாம். எனவே அரசுப் பள்ளியில் 8ம்  வகுப்பு வரையில்  மாணவர்களை சேர்க்க மாற்றுச் சான்று ஏதும் தேவையில்லை.



இன்றைய (21-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜூன் 21, 2021



 

உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். தற்பெருமை எண்ணங்களை குறைத்து செயல்படுவது நன்மையளிக்கும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எந்தவொரு செயலையும் மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



அஸ்வினி : புரிதல் உண்டாகும்.


பரணி : மாற்றங்கள் ஏற்படும்.


கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 21, 2021



 ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் மேன்மை ஏற்படும். ஆவணம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்



கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.


ரோகிணி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


மிருகசீரிஷம் : மேன்மை ஏற்படும்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 21, 2021



 தொழில் மற்றும் வியாபார முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் உண்டாகும். கலைநயம் மற்றும் கவித்துவமான சிந்தனைகள் மேம்படும். புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மிருகசீரிஷம் : லாபம் உண்டாகும்.


திருவாதிரை : முன்னேற்றமான நாள்.


புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




கடகம்

ஜூன் 21, 2021



 மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்



புனர்பூசம் : எண்ணங்கள் நிறைவேறும்.


பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


ஆயில்யம் : வெற்றிகரமான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 21, 2021



 சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். போட்டித்தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : திறமைகள் வெளிப்படும்.


பூரம் : சாதகமான நாள்.


உத்திரம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.

---------------------------------------




கன்னி

ஜூன் 21, 2021



 தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உங்களின் மீதான நம்பிக்கை வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்



உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.


அஸ்தம் : பொறுமை வேண்டும்.


சித்திரை : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஜூன் 21, 2021



 உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.


சுவாதி : பிரச்சனைகள் குறையும்.


விசாகம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூன் 21, 2021



 கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் மேம்படும். சோம்பேறித்தனத்தால் செயல்பாடுகளில்  காலதாமதங்கள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



விசாகம் : அனுசரித்து செல்லவும்.


அனுஷம் : தெளிவு பிறக்கும்.


கேட்டை : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 21, 2021



 காப்பீடு தொடர்பான தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். விவாதங்களின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 



மூலம் : வாய்ப்புகள் ஏற்படும்.


பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.


உத்திராடம் : விருப்பம் உண்டாகும்.

---------------------------------------





மகரம்

ஜூன் 21, 2021



 உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைந்து புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் மேன்மையை ஏற்படுத்தும். தொழில் கல்வி சார்ந்த பணிகளில் புதுவிதமான எண்ணங்களும், அதற்குண்டான உதவிகளும் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களின் மூலம் நன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : பொறுப்புகள் குறையும்.


திருவோணம் : மேன்மையான நாள்.


அவிட்டம் : நன்மை உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 21, 2021



 பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப உயர்வும், அங்கீகாரமும் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அவிட்டம்: முன்னேற்றமான நாள்.


சதயம் : அங்கீகாரம் கிடைக்கும்.


பூரட்டாதி : திருப்தியான நாள்.

---------------------------------------




மீனம்

ஜூன் 21, 2021



 

செய்யும் காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது தேவையற்ற பகையை தவிர்க்க இயலும். சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.


உத்திரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.


ரேவதி : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------



சாலையோரத்தில் காத்திருந்த ஆசிரியர்களிடம் காரை நிறுத்தி விசாரித்த முதல்வர்...



சாலையோரத்தில் காத்திருந்த ஆசிரியர்களிடம் காரை நிறுத்தி விசாரித்த முதல்வர்...



மாத ஊதியம் /ஓய்வூதியம் பெறுவோர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 01-04-2021க்குப் பின் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தால் எஸ்.பி.ஐ. வங்கியிலிருந்து ரூ.5 இலட்சம் வரை 8.5% வட்டி வீதத்தில் கடனுதவி பெறலாம்...



மாத ஊதியம் /ஓய்வூதியம் பெறுவோர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 01-04-2021க்குப் பின் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தால் எஸ்.பி.ஐ. வங்கியிலிருந்து ரூ.5 இலட்சம் வரை 8.5% வட்டி வீதத்தில் கடனுதவி பெறலாம்...


 SBI KAVACH Personal Loan Scheme


If monthly Salary Person / Pensioners / Family members have been exposed to corona infection after 01-04-2021, You can get a loan up to Rs 5 lakh from SBI bank...


Purpose

For Covid treatment of self or family member who are found Covid Positive on or after 01.04.2021


>>> கடன் திட்டம் குறித்த முழுமையான தகவல்களை அறிய இங்கே சொடுக்கவும்...



TC தயார் செய்து வழங்க வேண்டியது ஆசிரியர்களா? அலுவலகப் பணியாளர்களா? - யாருடைய பொறுப்பு? - CM Cell Reply...

 மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தயார் செய்து வழங்க வேண்டியது ஆசிரியர்களா? அலுவலகப் பணியாளர்களா? - யாருடைய பொறுப்பு? - CM Cell Reply...



28-06-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிந்துள்ளது தமிழ்நாடு அரசு...






 28-06-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிந்துள்ளது தமிழ்நாடு அரசு...


🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷


தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது!


மாவட்டங்களை 3️⃣ வகையாக பிரித்து கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி உள்ளது


*வகை-1 ல் ஏற்கனவே கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் அடங்கும்-இங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும்-புதிய தளர்வுகள் இல்லை!


2️⃣3️⃣ மாவட்டங்களுக்கான தளர்வுகள் விவரங்கள்!


1️⃣ *மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி!


2️⃣  *11 மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ள செயல்பாடுகளுக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி! புதிய தளர்வுகள் இல்லை!


3️⃣ *மாவட்டங்களுக்குள் குளிர் சாதன வசதிகள் இல்லாத 50% பேருந்துகள் இயங்க அனுமதி!


சென்னையில் மெட்ரோ இரயில் இயங்க அனுமதி.


4️⃣ *33% பணியாளர்கள் உடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி!


5️⃣ *காலணி, கண் கண்ணாடி கடைகள் செயல்பட அனுமதி!



6️⃣ *வாடகை டாக்ஸியில் 3 பேரும் ஆட்டோக்கள் 2 பேருடன் செல்ல அனுமதி!



7️⃣ *சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசின் அத்தியாவசிய அலுவலகங்கள்  100% பணியாளர்கள் உடன் செயல்பட வேண்டும்!


*பிற அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்கள் உடன் செயல்பட அனுமதி!


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 100% அரசு அலுவலகங்கள் இயங்கும்! தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்கள் உடன் 3 மாவட்டங்களில் மட்டுமே அனுமதி


8️⃣ *உணவகங்கள், பேக்கரி, தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி!


9️⃣ *வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் திறக்க அனுமதி!


🔟 *செல்போன் கடைகள், TV, MIXIE, GRINDER பழுது பார்க்கும் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி!


1️⃣1️⃣ *திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் களிடம் இருந்து E- registration மூலம் அனுமதி பெற வேண்டும்...


>>> தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு - நாள்: 20-06-2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Thamizh Pudhalvan Scheme - 38 Districts - Total No. Data for Verification - Action Taken - Verification Pending - School Data Updation Pending Report

  தமிழ்ப் புதல்வன் திட்டம் - 38 மாவட்டங்களில் விண்ணப்பித்தோர்,  சரிபார்க்கப்பட்ட & நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் எண்ணிக்கை அறிக்கை Tamil...