கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி (Polytechnic College) 2021ஆம் ஆண்டின் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் முறை - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிக்கை...

 தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி  2021 ஆம் ஆண்டின் சேர்க்கை (தமிழ்நாடு மாணவர்களுக்கு மட்டும்) விண்ணப்பிக்கும் முறை குறித்து சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் விளம்பர அறிக்கை எண்.012645 / 2021...




இன்றைய (24-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 24, 2021



உத்தியோகத்தில் சவாலான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். வாகனப் பயணங்களில் மிதமான வேகத்துடன் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தமான திட்டங்கள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : காரியசித்தி உண்டாகும்.


பரணி : புரிதல் ஏற்படும்.


கிருத்திகை : திட்டங்கள் நிறைவேறும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 24, 2021



குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிதானம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்



கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.


ரோகிணி : நிதானம் வேண்டும்.


மிருகசீரிஷம் : கவனமாக செயல்படவும்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 24, 2021



வியாபாரத்தில் செய்யும் சில மாற்றங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். நண்பர்கள் வட்டம் விரிவடையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.


திருவாதிரை : சுபச்செய்திகள் கிடைக்கும்.


புனர்பூசம் : மனக்கசப்புகள் குறையும்.

---------------------------------------




கடகம்

ஜூன் 24, 2021



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கூட்டாளிகளின் விஷயத்தில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.


பூசம் : தாமதங்கள் குறையும்.


ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 24, 2021



புதிய முயற்சிகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உறவினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பூரம் : எண்ணங்கள் மேம்படும்.


உத்திரம் : லாபம் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஜூன் 24, 2021



மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். பயணங்களின் மூலம் அலைச்சல்களும், புதுவிதமான அனுபவமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். மனை தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை



உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.


அஸ்தம் : சாதகமான நாள்.


சித்திரை : அனுபவம் மேம்படும்.

---------------------------------------




துலாம்

ஜூன் 24, 2021



மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அறிமுகமில்லாத நபர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டாகும். உறவினர்களிடம் வாக்குவாதங்கள் தோன்றி மறையும். தனவரவுகள் மேம்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்



சித்திரை : எதிர்ப்புகள் நீங்கும்.


சுவாதி : நிம்மதி உண்டாகும்.


விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூன் 24, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் அமையும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களுக்கிடையே செல்வாக்கு மேம்படும். முன்கோப சிந்தனைகளை குறைத்துக்கொள்வது நல்லது. வீட்டின் தேவைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



விசாகம் : கலகலப்பான நாள்.


அனுஷம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


கேட்டை : செல்வாக்கு மேம்படும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 24, 2021



வெளியூர் தொடர்பான பயணங்களில் கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். பழைய நினைவுகள் மனதில் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மூலம் : கவனம் வேண்டும்.


பூராடம் : தடைகள் குறையும்.


உத்திராடம் : மந்தமான நாள்.

---------------------------------------




மகரம்

ஜூன் 24, 2021



குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத பணவரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பிறமொழி பேசும் நபர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


திருவோணம் : முன்னேற்றமான நாள்.


அவிட்டம் : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 24, 2021



வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் உதவிகளால் எண்ணிய பணியை நிறைவு செய்வீர்கள். மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பழைய சரக்குகளால் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : லாபம் உண்டாகும்.


சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------




மீனம்

ஜூன் 24, 2021



அரசு பணியில் இருந்துவந்த தடைகள் அகலும். உறவினர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். கூட்டாளிகளின் உதவிகளால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த அனுகூலமான சூழல் உண்டாகும். தலைமை பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



பூரட்டாதி : தடைகள் அகலும்.


உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.


ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------


கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் Channel எண் & நேரம்...

 


கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் Channel எண் & நேரம் :


📌Tata Sky - 1554 ( Channel Number)


📌Airtel Digital TV - 821 ( Channel Number)


📌Sun Direct - 33 ( Channel Number)


📌TACTV - 200 (Channel number)


📌SCV - 98 (Channel number)


📌TCCL - 200 (Channel number)


📌VK Digital -55 (Channel number)


📌Akshaya Cable -17 (Channel number)






சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களின் GPF கணக்கில் இருந்து தற்காலிக முன் பணம் மற்றும் 90% பகுதி இறுதித் தொகை பெறுவதற்கு அனுமதி அளித்து அரசுக் கடிதம் & விண்ணப்பப் படிவங்கள் வெளியீடு...



 சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்  திட்டத்தில்  பணிபுரியும் பணியாளர்களின் பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து (GPF) தற்காலிக  முன்பணம் மற்றும் பகுதி இறுதி தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் நெறிமுறைகள்......


 

>>> அரசுக் கடிதம் & விண்ணப்பப் படிவங்கள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை புரிவதில் இருந்து 21-06-2021 முதல் 27-06-2021 வரை விலக்களித்து அரசாணை வெளியீடு...

 


மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை புரிவதில் இருந்து 21-06-2021 முதல் 27-06-2021 வரை விலக்களித்து  அரசாணை (வாலாயம்) எண்: 90, நாள்: 23-06-2021 வெளியீடு...


>>>   அரசாணை (வாலாயம்) எண்: 90, நாள்: 23-06-2021...


தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15 ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்- உச்ச நீதிமன்றம்...

 தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வரும் செப்.15-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.


2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்து அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக தரப்பிலும், வேறு சிலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டு இருந்தது. அதன்படி பிற மாவட்டங்களில் கடந்த 2019-ம்ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.


இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த புதிய மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்து 2020 டிச.11-ம் தேதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டு இருந்தது.


ஆனால் கரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் இந்த பணிகளை முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என்றுதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியிருந்தது.


இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.


அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா தனது வாதத்தில், ‘‘இந்தியாவிலேயே கரோனா பரவல் தமிழகத்தில்தான் அதிகமாக இருந்தது. இதனால் இந்த 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகளை குறித்த காலத்துக்குள் செய்ய முடியவில்லை.


இதுவரை தமிழகத்தில் 24.29 லட்சம் பேருக்கு கரோனா தொற்றுபாதிப்பு ஏற்பட்டு, அதில் 31 ஆயிரத்து 386 பேர் இறந்துள்ளனர். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற வேண்டியுள்ளது. இதன் காரணமாகவும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை. எனவே மீண்டும் அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றார்.


அதையேற்க மறுத்த நீதிபதிகள், ‘‘எதற்கெடுத்தாலும் கரோனாவைக் காரணம் காட்டி அவகாசம் கோருவது என்பது அனைத்து வழக்குகளிலும் தற்போது சகஜமாகி விட்டது. இந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. ஏற்கெனவே போதுமான அவகாசம் வழங்கப்பட்டு விட்டது’’ என மாநில தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினர்.


தொடர்ந்து, ‘‘உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்து வரும் செப்.15-ம் தேதிக்குள்அந்த மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.


முதல்வர் ஆலோசனை


உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, விடுபட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.




ஸ்மார்ட் போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்களின் விவரங்களை சமர்பிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...

 ஸ்மார்ட் போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்களின் விவரங்களை சமர்பிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...


ஸ்மார்ட் போன்’ இல்லாததால், இணையதள வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்களின் விவரங்களை சேகரித்து அனுப்புமாறு முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.



இணையவழியில் கற்பித்தல்

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலால், நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளைத் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டுப்பள்ளித் திட்டத்தின்கீழ் கல்வி தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வழியாக மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை முன்னெடுக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தனியார் பள்ளிகள் இணையதளம் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வருகின்றன. மறுபுறம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், பாடம் சார்ந்த பயிற்சி வழிமுறைகளை ஆசிரியர்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் மூலம் மாணவர்களுக்கு அனுப்பி, கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.



‘ஸ்மார்ட் போன்’ வசதி

அதேநேரம் அரசுப் பள்ளிகளில் பயிலும் கணிசமான மாணவர்கள், ஸ்மார்ட் போன் வசதியில்லாததால் இணைய வழியிலான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை நிலவுகிறது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. இந்நிலையில் இணையதள வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்டஇயக்குநர் சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:



கல்வி தடைபடக் கூடாது

புதிய கல்வியாண்டு தொடங்கியநிலையில், இணையதள வகுப்புகளில் அனைத்து மாணவர்களையும் பங்கேற்கவைக்க வேண்டும்என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து ஸ்மார்ட்போன் இல்லாததால், இணைய வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்களின் பட்டியலை மாவட்ட வாரியாக சேகரித்து அனுப்ப வேண்டும். ஏழை மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க ஏதுவாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இந்த பட்டியல் கிடைத்ததும் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி கொண்டு மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஸ்மார்ட் போன்’ இல்லாததால், இணையதள வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்களின் விவரங்களை சேகரித்து அனுப்புமாறு முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ...