கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களின் முயற்சியால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு - அமைச்சர் தகவல்...

 


ஆசிரியர்களின் முயற்சியால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.


ஈரோடு பெரியார் வீதி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் இலவச பாடநூல் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தலைமையில் நடந்தது.


வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாணவர் சேர்க்கையைத் தொடங்கி வைத்து, இலவச பாடநூல்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:


பெரியார் நகர் தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு 369 மாணவர்கள் படித்தனர். தற்போது 69 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்த நிலையில், 436 ஆக மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது போன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்களின் முயற்சியால் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணமாக உள்ள ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து நாளை (2-ம் தேதி) ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. கடந்தகாலங்களை விட தற்போது கூடுதலாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி மையத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது.


மாவட்டத்தில் வீட்டு வசதிக்கான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து புதிய திட்டங்கள் நடைமுறைபபடுத்தப்படும். கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதில் மாவட்ட ஆட்சியர் முறையான நடவடிக்கை எடுப்பார். பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்த இடங்களில் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.




அரசு உதவிபெறும் கல்லூரி - இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் - 16 பணியிடங்கள்...





 அரசு உதவிபெறும் கல்லூரி - இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் - 16 பணியிடங்கள்...


>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாட்டில் இருந்து 6 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்துக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு - NCERT ICT Awards Announcement PDF...

List of selected School Teachers for National ICT Award for the year 2018 and 2019


 தமிழ்நாட்டில் இருந்து 6 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்துக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் 2010-ம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலைக் கொண்டு சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த ICT விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் NCERT சார்பில் இந்த விருது விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் கல்வித்துறை சார்ந்து சிறந்த முறையில் தகவல் மற்றும் தொழில்நுட்பக் கலை மூலம் கற்பிப்பவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. தமிழகப் பிரதிநிதித் துவத்தின்படி 6 ஆசிரியர்கள் மாநிலம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனுப்பப்படுவர். அதில் அதிகபட்சமாக 3 ஆசிரியர்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்து கவுரவிக்கும். 


அந்த வகையில் 2018 மற்றும் 2019-ம் ஆண்டுக்கான விருது பெற்ற ஆசிரியர்களின் பட்டியலை என்சிஇஆர்டி வெளியிட்டுள்ளது.


கரோனா காலம் என்பதால் இதற்காக நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்கள் இணைய வழியில் நடைபெற்ற தேர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் கற்பித்தல் மாதிரிகளை விளக்கினர். இதில் 2018-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் நாடு முழுவதிலும் இருந்து 25 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 


தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர். 


1.கணேஷ், (கணினி சார் வளங்களான வீடியோக்கள், விளையாட்டுகள், interactive apps வாயிலாகக் கணிதம் கற்பிப்பவர், மதிப்பீட்டில் புதிய அணுகுமுறையாக க்யுஆர் கோட் ஸ்கேனர் கொண்டு சில நிமிடங்களில் மதிப்பீடு செய்து கற்பிப்பவர்) கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருவாரூர் மாவட்டம். 



 2.மனோகர் சுப்பிரமணியம் (க்யூஆர் குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை தயாரித்து மாணவர்களை கற்றல்- கற்பித்தல் செயல்பாடுகளில் ஆர்வமுடன் பங்கேற்கச் செய்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்தொடர்பு தொழில்நுட்பப் பணிகளை மேற்கொண்டவர்) வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கரூர் மாவட்டம். 


 3.தயானந்த் (கற்றல் கற்பித்தலைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாணவர்களுக்குப் புரியும் விதத்திலும் அதேநேரத்தில் எளிமையாகவும், அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 170-க்கும் மேற்பட்ட காணொலிகள் மற்றும் அனிமேஷன்களை உருவாக்கியவர், புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் பங்காற்றியவர்) உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 


 அதேபோல 2019-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் நாடு முழுவதிலும் இருந்து 24 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 


இதில் தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர். அதாவது, 


 1.ஜெ.செந்தில் செல்வன், (குறைந்த செலவில் ஸ்மார்ட் போர்டை உருவாக்கியவர். கணிதப் பாடத்துக்கு ஜியாமென்ட்ரி, கிராஃப் உள்ளிட்டவற்றுக்கான வழிமுறை விளக்கங்களை எளிய முறையில் ‘பவர்பாயிண்ட் பிரசண்டேஷன்’ அமைத்தவர்) மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை மாவட்டம். 



 2.தங்கராஜா மகாதேவன், (அனிமேஷன் பாடங்களை உருவாக்கி, சூழலியல் சார்ந்த வீடியோக்களைத் தயாரித்துக் கற்பிப்பவர்) பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம். 


 3.இளவரசன் (தொழில்நுட்பத்தின் உதவியுடன் 22 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் தன் மாணவர்களை உரையாட வைத்தவர், அரசு அறிமுகப்படுத்தும் முன்னரே QR Code திட்டத்தைச் செயல்படுத்தியவர்) வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம். 

ஆகிய ஆசிரியர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஐசிடி விருது மத்தியக் கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஈடானது என்பது குறிப்பிடத்தக்கது.


>>> Click here to Download List of selected School Teachers for National ICT Award for the year 2018 and 2019...






இன்றைய (02-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 02, 2021



நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : பொருட்சேர்க்கை உண்டாகும்.


கிருத்திகை : வாய்ப்புகள் ஏற்படும். 

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 02, 2021



குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் அமையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனதில் இருக்கும் பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



கிருத்திகை : மாற்றமான நாள். 


ரோகிணி : நெருக்கம் அதிகரிக்கும். 


மிருகசீரிஷம் : தெளிவு கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 02, 2021



பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் குடும்ப நபர்களிடம் ஒற்றுமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மிருகசீரிஷம் : ஒற்றுமை உண்டாகும்.


திருவாதிரை : சுறுசுறுப்பான நாள். 


புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 02, 2021



உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் சாதகமாக அமையும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : முன்னேற்றமான நாள். 


பூசம் : முயற்சிகள் ஈடேறும்.


ஆயில்யம் : ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 02, 2021



தனவரவுகள் எதிர்பார்த்தபடி இருந்தாலும் அதற்கேற்ற செலவுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். மனதில் குழப்பங்களும், தனம் தொடர்பான நெருக்கடிகளும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மகம் : செலவுகள் உண்டாகும்.


பூரம் : காலதாமதம் ஏற்படும்.


உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 02, 2021



நிலுவையில் இருந்துவந்த உத்தியோகம் தொடர்பான பணிகளை செய்து முடிப்பீர்கள். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தந்தைவழி சொத்துக்களின் மூலம் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : ஆர்வம் உண்டாகும்.


அஸ்தம் : இழுபறிகள் குறையும்.


சித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 02, 2021



மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த சில பணிகளை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களையும், சந்தேக உணர்வுகளையும் தவிர்த்து பொறுமையுடன் செயல்பட வேண்டும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.


சுவாதி : புரிதல் உண்டாகும். 


விசாகம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 02, 2021



விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



விசாகம் : மேன்மையான நாள். 


அனுஷம் : லாபம் உண்டாகும்.


கேட்டை : மாற்றங்கள் ஏற்படும். 

---------------------------------------




தனுசு

ஜூலை 02, 2021



வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்ளும் பொழுது அதற்கு தகுந்த ஆவணங்களையும், கோப்புகளையும் எடுத்து செல்ல வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளை திறமையுடன் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் மூலம் மனமகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மூலம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


பூராடம் : திறமைகள் வெளிப்படும்.


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




மகரம்

ஜூலை 02, 2021



போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் மேம்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மனதில் புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



உத்திராடம் : வெற்றிகரமான நாள். 


திருவோணம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 02, 2021



சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். விவசாயம் தொடர்பான விளைச்சல்களில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அவிட்டம் : எண்ணங்கள் மேம்படும். 


சதயம் : சாதகமான நாள். 


பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 02, 2021



கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். சிறு தொழில் புரிபவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். எந்தவொரு காரியத்தையும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் செய்து முடிப்பீர்கள். மனதில் இருக்கக்கூடிய எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



பூரட்டாதி : அனுகூலமான நாள்.


உத்திரட்டாதி : புத்துணர்ச்சி உண்டாகும். 


ரேவதி : எண்ணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------


01-07-2021 முதல் கேஸ் சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை கட்டணங்கள் உயர்வு உட்பட செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்...



ஜூலை 1 முதல் பல விதமான சேவைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அந்த வகையில் கேஸ் சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை சில புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவை அமலுக்கு வர உள்ளன. 


முதலாவதாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கி அதன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பண பரிமாற்ற சேவைகளில் பல மாற்றங்களை அறிவித்துள்ளது. அதாவது SBI வங்கியில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, காசோலை போன்ற சேவைகளுக்கு கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


அதன் படி SBI வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் ஒரு இலவசமாக 4 முறை  பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் 4 முறைக்கு மேலான  பரிவர்த்தனைக்கு 15 ரூபாய் கட்டணம் மற்றும் GST யும் வசூலிக்கப்படும். இது தவிர SBI வங்கியில் காசோலை பரிவர்த்தனையில் 10 காசோலைகள் புத்தகத்திற்கு 40 ரூபாயுடன் GST கட்டணமும், 25 காசோலைகள் அடங்கிய புத்தகத்துக்கு 75 ரூபாயுடன் GST கட்டணமும், வசூலிக்கப்படவுள்ளது.


அதே நேரத்தில் ஒவ்வொரு மாதமும் மாற்றமடையும் LPG சிலிண்டரின் விலையானது வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மீண்டுமாக அதிகரிக்கவுள்ளது. முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கேஸ் சிலிண்டர் விலையிலும் சில மாற்றங்கள் ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.


 இது தவிர சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அவ்வங்கியின் IFSC கோடுகள் மாறவுள்ளது. அந்த வகையில் சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் பழைய IFSC கோர்டுகளை வைத்து பண பரிமாற்றம் செய்ய முடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஸ்விப்ட் கோடு, MICR கோடுகள், காசோலை என அனைத்திலும் நாளை முதல் புதிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. 


மேலும் ஹீரோ மோட்டார் கார்ப்பின் இருசக்கர வானங்களின் விலையும் 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் ஆந்திரா வங்கி மற்றும் கார்பொரேஷன் வங்கி வாடிக்கையாளர்கள் புதிய காசோலைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.


 தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக வருமானவரி தாக்கல் செய்யாதவர்களுக்கு, ஜூலை 1 முதல் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஜூலை 1 ஆம் தேதி முதல் வருமான வரித்துறையின் இணையதளத்தில் புதிய வசதிகள்  அமல்படுத்தப்படவுள்ளது.


நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய அறிவிப்புகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை - செய்தி வெளியீடு எண்: 360...

 பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய அறிவிப்புகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை - செய்தி வெளியீடு எண்: 360, நாள்: 01-07-2021...


💥பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய அறிவிப்புகள்  குறித்து தமிழ்நாடு முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை.


💢முன்னதாக துறைரீதியாக பல்வேறு  அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்.


💢இம்மாத இறுதியில் இவ்வாண்டுக்கான நிதி நிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.










NHIS மாத சந்தா 01-07-2021 முதல் ரூ.300ஆக உயர்வு - 31-06-2025வரை ரூ.5இலட்சம் வரையிலான சிகிச்சைக்கு அனுமதி - அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியல் - அரசாணை ( G.O.Ms.No.: 160, Dated: 29-06-2021) வெளியீடு...



 NHIS 2021 மாத சந்தா 01-07-2021 முதல் ரூ.300ஆக உயர்வு - 31-06-2025வரை ரூ.5இலட்சம் வரையிலான சிகிச்சைக்கு அனுமதி - அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியல் - அரசாணை ( G.O.Ms.No.: 160, Dated: 29-06-2021) வெளியீடு...


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் NHIS- 2021 அறிமுகம்...


NHIS - 2021 - தமிழ்நாடு அரசுத் துறைகள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள், சட்ட ரீதியான வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் ஊழியர்களுக்கும், அவர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் அமலாக்கம் - அரசாணை வெளியீடு...


💥இத்திட்டம் 01-07-2021 முதல் 30-06-2025 வரை அமலுக்கு வருகிறது


💥சந்தா தொகை Rs. 180 என்பது Rs .300 ( 295 +5) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


💥அதிகபட்சமாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.10 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை பெறலாம்.


அதன் விபரங்கள்

a) Rs 4 லட்சம் என்பது Rs.5 லட்சமாக உயர்ந்தப்பட்டுள்ளது


b) கேன்சர் உறுப்பு மாற்று சிகிச்சை Rs .7.50 லட்சம் என்பது Rs .10 லட்சமாகவும்


C) கண்புரை அறுவை சிகிச்சைக்கு Rs 25,000 என்பது Rs 30,000 ஆகவும்


d) கர்ப்பை அகற்றும் சிகிச்சைக்கு Rs.45000 என்பது Rs.50,000 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது


💥அவசரம் மற்றும் அவசரமில்லாத சிகிச்சைக்கு அங்கீகாரம் இல்லாத மருத்துவமனைகளில் செய்யலாம்.


💥75 % தொகை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்


💥இத்திட்டம் அமலுக்கு வரும் ஜூலை-2021 முதல் ரூ300 ஆக காப்பீட்டுத் தொகையாக  செலுத்த வேண்டும்...


💥REIMBURSEMENT பெறும் நிகழ்வில் CLAIM DOCUMENTS- ஐ  பயனாளர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் GRIEVANCE REDRESSAL OFFICER க்கு அனுப்பி வைக்க வேண்டும்! இதன்மூலம் தொகையினை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்


💥இத்திட்டத்தின் கீழ் 203 வகையான அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை பெறலாம்


💥இத்திட்டத்தின் கீழ் 1169 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க இணைந்து உள்ளது...


>>> Click here to Download G.O.Ms.No.: 160, Dated: 29-06-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...