கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் அலகுத் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...


➤10, 12-ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் படுத்த நடவடிக்கை


➤கல்வித்தொலைக்காட்சி, ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து ஒவ்வொரு மாத இறுதியிலும் WhatsApp மூலம் அலகுத் தேர்வு நடத்த வேண்டும்.


 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


ஆண்டுதோறும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனினும், கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும், ஆன்லைன் வகுப்புகள் மூலமும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில், பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் மூலமாக மாதம்தோறும் அலகு தேர்வுகள் நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள், மாணவர்களுக்கென தனி வாட்ஸ்அப் குழுக்கள் அமைப்பது, மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது குறித்து ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதன்படி, மாணவர்களுக்கு தனியாகவும், மாணவியருக்கு தனியாகவும் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் குழுவில் வினாத்தாள்களை அனுப்பி மாணவர்கள், வினாத்தாளைப் பார்த்து அதற்கு உரிய விடைகளை தனித்தாளில் எழுதி, அதில் பெற்றோர் கையொப்பம் பெற்று, அதை பி.டி.எப்., பைலாக மாற்றி அனுப்ப வேண்டும்.


மாணவர்களின் அந்த விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் இடம்பெற வேண்டும் என்றும், ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அலகு தேர்வுகளை நடத்துவதன் மூலம், மாதம் தோறும் மாணவர்களின் கல்வித்திறனை மதிப்பீடு செய்ய இந்தத் திட்டம் மிகவும் பயனுடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, கல்வி தொலைகாட்சி வாயிலாக ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 2 மாதங்களுக்கான நடத்தி முடிக்கப்பட்ட பாட பகுதிகளுக்கு அலகுத் தேர்வை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை 50 மதிப்பெண்களுக்கு நடத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் எழுத்துக்கள் கொண்டு திருவள்ளுவர் ஓவியம் வரைந்த கணேஷ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு...

 தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து. கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள தமிழ் எழுத்துக்கள் 741 கொண்டு வரையப்பட்ட திருவள்ளுவர் ஓவியம்..


தமிழ் எழுத்துக்கள் கொண்டு திருவள்ளுவர் ஓவியம் வரைந்த கணேஷ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு...



தமிழ் படிக்க மாதம்தோறும் ரூபாய் 2000 - தமிழ் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை...

 தமிழ் படிக்க மாதம்தோறும் ரூபாய் 2000 உதவித்தொகை - தமிழ் பல்கலைக்கழகம் வழங்குகிறது...



தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர்களின் விகிதத்தை 3 ஆண்டுகளில் 100 சதவீதமாக்க நடவடிக்கை - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி...

 தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர்களின் விகிதத்தை 3 ஆண்டுகளில் 100 சதவீதமாக்க நடவடிக்கை - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி...



பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணிக்கு செல்வது - விவரம் தெரிவித்தல் - சார்பு... முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் - ந.க.எண்: 2907ஈ5/2020, நாள் : 20.07.2021...



ஆசிரியர்கள் பணிக்கு செல்வது - விவரம் தெரிவித்தல் - சார்பு... 


>>> கோயம்புத்தூர் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் - ந.க.எண்: 2907ஈ5/2020, நாள் : 20.07.2021...


Departmental Exam Results ( December 2020 ) Published in TNPSC website...



 துறைத் தேர்வு முடிவுகள் ( டிசம்பர் 2020 ) TNPSC வலைதளத்தில் வெளியீடு...


>>> Click here to go TNPSC Departmental Examinations Result Website...


>>> CLICK HERE TO DOWNLOAD TNPSC - DEPARTMENTALEXAMINATIONS, DECEMBER 2020 - LISTOF TESTS AVAILABLE IN NET (updated as on 20.07.2021)...


அகவிலைப்படி உயர்வு 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக, 11% உயர்த்தி 01.07.2021 முதல் வழங்க ராஜஸ்தான் மாநில அரசு அறிவிப்பு...

 


>>> அகவிலைப்படி உயர்வு 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக, 11% உயர்த்தி 01.07.2021 முதல் வழங்க ராஜஸ்தான் மாநில அரசு அறிவிப்பு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...