கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கேரளாவில் தமிழ் மொழியில் ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் – மாநில அரசு நடவடிக்கை...



 மொழி சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாளில் தமிழ் மற்றும் கன்னட மொழிகள் இடம் பெற கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கேரள அரசின் இந்த செயல்பாடு பிற மாநிலங்களுக்கும் ஓர் முன்னுதாரணமாக திகழ்கிறது.


தமிழ்மொழி வினாத்தாள்:


கேரளாவில் மற்ற மொழிகள் பேசும் மாநிலத்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மலையாள மொழி தெரியாததால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மொழி சிறுபான்மையினர் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க திராவிட மொழிகளுக்கான சர்வதேச பள்ளியின் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த குழு மாநிலம் முழுவதும் மலையாள மொழி தெரியாத சிறும்பான்மையினர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தது. இவர்கள் அலுவலகங்கள், நிறுவனங்கள், கேரள அரசின் தேர்வுகள் போன்றவற்றை சந்திப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது என கருத்து தெரிவித்தனர்.


இதனால் அண்டை மாநிலத்தவர்களின் குறைகளை களையும் வகையில், மலையாளம் தெரியாத பிற மொழி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவர்கள் மொழி தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அனைத்து அரசு தேர்வுகளும், அதற்கான அறிவிப்புகளும் தமிழ் மற்றும் கன்னட மொழியில் இருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள்களும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்ற பரிந்துரையை கேரள அரசுக்கு கோபாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்துள்ளது. அரசு இதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.


கேரள அரசின் இந்த நடவடிக்கை மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறது. தமிழ் மற்றும் கன்னட மாநில மக்கள் கேரள அரசுக்கு தனது நன்றியை தெரிவித்து வருகின்றனர். மற்ற மாநிலங்களிலும் இந்த முறை கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. கேரள அரசின் இந்த முயற்சியால் இனி வெளி மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் மொழியால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தீரும் என அரசு தெரிவித்துள்ளது.


உங்களுக்கே தெரியாமல் உங்களின் அலைபேசி வேவு பார்க்கப்படுகிறதா? காட்டிக் கொடுக்கும் சில அறிகுறிகள்...



 செல்போன், கம்ப்யூட்டரில் என்னதான் வலுவான பாஸ்வேர்டுகளுடன் தகவல்களை பத்திரமாக வைத்திருந்தாலும், ஸ்பைவேர்கள் மூலம் அவற்றை எளிதாக திருடி விடலாம் என்பதை தற்போதைய பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த ஸ்பைவேர் சாப்ட்வேர் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாருடைய செல்போனையும் ஒட்டு கேட்கலாம், தகவல்களை திருடலாம். பெகாசஸ் ஸ்பைவேரால் சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், மால்வேர்கள் பிற உளவு சாப்ட்வேர்கள் மூலமாக செல்போனை ஹேக் செய்ய முடியும். அப்படி ஹேக் செய்து, உங்கள் வங்கி கணக்கு பாஸ்வேர்டு அறிந்து, அதன் மூலம் பணத்தையும் திருட முடியும். ஒருவேளை உங்கள் செல்போனில் இதுபோன்று ஹேக் செய்யப்பட்டாலோ, வேவு பார்க்கப்பட்டாலோ சில அறிகுறிகள் காட்டிக் கொடுத்திடும். அதன் மூலம், நீங்கள் உஷாராகி செல்போனை ரீசெட் செய்யலாம் அல்லது வேறு செல்போனை மாற்றி விடலாம். செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறது அல்லது வேவு பார்க்கப்படுகிறது என்பதை காட்டிக் கொடுக்கும் சில அறிகுறிகள் இதோ…



* வழக்கத்தை விட போன் பேட்டரி வேகமாக தீரும். அப்படி எனில், மால்வேர் அல்லது உங்கள் செல்போனில் தில்லுமுல்லு செய்வதற்கான மோசடி மென்பொருள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என அர்த்தம்.


* நீங்கள் டவுன்லோடு செய்யாத ஆப்கள் போனில் இருக்கும். அது, ஸ்பைவேர் அல்லது ஹேக்கர்களின் வேலையாக இருக்கும். உங்களுக்கே தெரியாமல் அந்த ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அதன் மூலம் உங்கள் போன் வேவு பார்க்கப்படும்.


*போன் செயல்பாட்டு வேகம் திடீரென மிகவும் குறைந்துவிடும். மோசடி மென்பொருளான மால்வேர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் என்பதால் போனின் செயல்திறன் இப்படி குறையும்.


* மொபைல் இன்டர்நெட் டேட்டா வேகமாக தீரும்.


* போன் வித்தியாசமாக செயல்படும். வழக்கமான வெப்சைட்கள் வித்தியாசமாக தோன்றும். ஆப்கள் திடீரென செயலிழக்கும் அல்லது ஓபன் செய்ய முடியாது.


* வித்தியாசமான பாப்-அப் நோட்டிபிகேஷன்கள் வந்தபடி இருக்கும். செல்போன் திரையில் பாப்அப் மெசேஜ்கள் நிரம்பி வழியும். அதில், வரும் எந்த லிங்க்கையும் தொடாதீர்கள்.


* போட்டோ, வீடியோ கேலரியில் உங்களுக்கு சம்மந்தமில்லாத படங்கள் திடீரென சேமிக்கப்பட்டு இருக்கும். அது, ஏதோ தெரியாமல் நடந்திருக்கும் என அலட்சியமாக இருக்கக் கூடாது.


* நீங்கள் போனை பயன்படுத்தாத நேரத்திலும் திடீரென டார்ச் லைட் தானாகவே எரிய தொடங்கும்.


* அதிக நேரம் போனை பயன்படுத்தினால்தான் சூடாகும். ஆனால், நீங்கள் போனை எடுக்கும் போதே அது சூடாக இருந்தால், யாரோ ஹேக் செய்து இயக்குகிறார்கள் என அர்த்தம்.


* நீங்கள் செய்யாத போன் கால் அல்லது எஸ்எம்எஸ்.கள் உங்கள் லாக் அல்லது கால்ஸ் லிஸ்ட்டில் காணப்படும்.


- இதுபோன்ற அறிகுறிகள் உஷாராகி விடுங்கள். உடனே, உங்கள் செல்போனை ரீசெட் செய்திடுங்கள். அப்படி செய்தால், உங்கள் போனுக்குள் ஊடுருவிய கோல்மால் மென்பொருள்கள் அழிந்து விடும்.


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இளைஞர் மற்றும் சுற்றுச் சூழல் சார் மன்றப் போட்டிகள் - 31.07.2021க்குள் EMIS தளத்தில் பதிவு செய்ய இணை இயக்குநர் உத்தரவு...



>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இளைஞர் மற்றும் சுற்றுச் சூழல் சார் மன்றப் போட்டிகள் - 31.07.2021க்குள் EMIS தளத்தில் பதிவு செய்ய இணை இயக்குநர் உத்தரவு...


இன்றைய (24-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 24, 2021



வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் தனவரவுகள் மேம்படும். கால்நடைகளின் மூலம் வருமானமும், முதலீடுகளும் அதிகரிக்கும். நண்பர்களுடைய ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : தனவரவுகள் மேம்படும்.


பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 24, 2021



மனதில் புதிய நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்விற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள்.


ரோகிணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 24, 2021



உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் அவ்வப்போது சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனமாக இருக்கவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் அமையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மிருகசீரிஷம் : கவனம் தேவை.


திருவாதிரை : நிதானம் வேண்டும்.


புனர்பூசம் : நெருக்கடியான நாள்.

---------------------------------------




கடகம்

ஜூலை 24, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகளும், ஆசைகளும் தோன்றும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் அகலும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



புனர்பூசம் : ஆசைகள் பிறக்கும்.


பூசம் : அன்பு அதிகரிக்கும்.


ஆயில்யம் : இழுபறிகள் அகலும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 24, 2021



வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உபரி வருமானம் மேம்படும். அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலும், வாழ்க்கை பற்றிய தெளிவும் ஏற்படும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : தாமதங்கள் அகலும்.


பூரம் : புரிதல் உண்டாகும்.


உத்திரம் : தெளிவு பிறக்கும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 24, 2021



மன்றம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு உயர்வும், மேன்மையும் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தகவல் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : மேன்மையான நாள்.


அஸ்தம் : பாராட்டுகள் கிடைக்கும்.


சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 24, 2021



உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகனம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். வியாபார விருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.


விசாகம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 24, 2021



மன உறுதியுடன் பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : ஆதரவான நாள்.


அனுஷம் : மாற்றங்கள் உண்டாகும்.


கேட்டை : மதிப்புகள் மேம்படும்.

---------------------------------------




தனுசு

ஜூலை 24, 2021



புதிய நபர்களின் அறிமுகமும், ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு பிறகு முடிவெடுப்பது நன்மையை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான புரிதல் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : பொறுமை வேண்டும்.


உத்திராடம் : புரிதல் அதிகரிக்கும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 24, 2021



தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அவ்வப்போது பழைய நினைவுகள் மற்றும் பிரச்சனைகளின் மூலம் மனவருத்தங்கள் நேரிடும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.


திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


அவிட்டம் : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 24, 2021



கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய முடிவுகளில் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும். கூட்டாளிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : ஈடுபாடு உண்டாகும்.


சதயம் : கற்பனைத்திறன் மேம்படும்.


பூரட்டாதி : ஆதரவான நாள்.

---------------------------------------




மீனம்

ஜூலை 24, 2021



தொழில் மற்றும் வியாபாரத்தில் அலைச்சல்கள் இருந்தாலும் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



பூரட்டாதி : லாபகரமான நாள்.


உத்திரட்டாதி : இழுபறிகள் அகலும்.


ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------


அனைத்து வகை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, High Tech Lab மற்றும் ICT திறன் வளர் பயிற்சி 02.08.2021 முதல் 30.08.2021 வரை நடைபெறுவதன் காரணமாக பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற வாய்ப்பில்லை எனத் தகவல்...

 அனைத்து வகை  ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, High Tech Lab மற்றும் ICT திறன் வளர் பயிற்சி 02.08.2021 முதல் 30.08.2021 வரை நடைபெறுவதன் காரணமாக பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற வாய்ப்பில்லை எனத் தகவல்...



ஆகஸ்ட் 1 முதல் சம்பளம், ஓய்வூதியம், EMI செலுத்துதலுக்கான புதிய விதிகள் – RBI அறிவிப்பு...

 


ஆகஸ்ட் 1 முதல் சம்பளம், ஓய்வூதியம், EMI செலுத்துதலுக்கான புதிய விதிகள் – RBI அறிவிப்பு...


ரிசர்வ் வங்கியானது ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவால் இயக்கப்படும் NACH திட்டத்திற்கான புதிய விதிகளை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.


புதிய விதிகள்:

பொதுவாக நாம் நமது மாதாந்திர செலவுகளையும், கடன் தவணைகளையும் தனித்தனியாக குறிப்பிட்ட முறையில் செலுத்துவோம். தற்போது RBI மாதந்திர ஊதியம் பெறும் நபர்கள் இது போன்ற தங்களின் மாதந்திர கடன் தவணை மற்றும் செலவுகளை ஒரே தளத்தின் வழியாக செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (NACH) மூலம் செயல்படுத்த இருக்கிறது.


தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் என்பது நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படும் மொத்த கட்டணம் செலுத்தும் முறையாகும். இதன் மூலம் EMI செலுத்துதல், வட்டி, சம்பளம், ஓய்வூதியம் போன்ற பல பரிவர்த்தனைகளுக்கு பணத்தை செலுத்த உதவுகிறது. மேலும், மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, நீர் கட்டணம், காப்பீடு தொகை, நிதி முதலீடு போன்றவற்றையும் செய்ய உதவுகிறது.


NACH வாரத்தின் அனைத்து நாட்களிலும், ஆகஸ்ட் 1, 2021 முதல் செயல்பட இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் அறிவித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் அனைத்து வசதிகள் பற்றிய அனைத்து நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களும் RBI ஆல் தனித்தனியாக அறிக்கையாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



________________


💢 *விடுமுறை நாட்களிலும் இனி சம்பளத்தை வரவு  வைக்கலாம்- ரிசர்வ் வங்கி 


💸ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளத்தை வரவு வைக்கும் வகையில் விதிமுறைகளில் RBI மாற்றம் செய்துள்ளது.


💸 *வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வார இறுதி நாட்கள், விழா கால மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை வரவு வைக்கலாம்* என்று ரிசர்வ் வங்கியின் விதிமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. வங்கிகளின் வாயிலாக முக்கியமான பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்வதற்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள், வங்கி விடுமுறை நாட்களில் அனுமதி இல்லாமல் இருந்தது. இப்போது ஆர்டிஜிஎஸ் எனப்படும் இணையதள பரிமாற்றங்கள், ஐஎம்பிஎஸ் என்ற மொபைல் வழி பணப் பரிமாற்றங்களை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ள முடியும். அதே நேரத்தில் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் எனப்படும் பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கிரெடிட் செய்வது குறித்த பணப்பரிமாற்றங்களை வங்கி அலுவலக நேரத்தில் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. இதில் இப்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.


💸அதன்படி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் எனப்படும் பணப்பரிமாற்ற முறையில் 24 மணி நேரமும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இந்த நடைமுறை அமலுக்கு வரும் போது வங்கிகளின் வாயிலாக சம்பளம் தரும் நிறுவனங்கள் இனி சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் வங்கி விடுமுறை நாட்களிலும், பண்டிகை விடுமுறை நாட்களிலும் கூட வங்கிகளில் ஊழியர்களின் சம்பளத்தை வரவு வைக்க முடியும். அதே போல வங்கி கடன்களுக்கான EMI தொகையையும் இனிமேல் விடுமுறை நாட்களில் செலுத்துவதற்கும் இதன் மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது. சம்பளம் தவிர பொதுத்துறை நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோரின் பென்ஷன் தொகையையும் விடுமுறை தினங்களில் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.


2016 ஆம் ஆண்டு நிலுவையில் இருந்த தள்ளுபடி செய்யப்படாத கடன்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவு...

 2016 ஆம் ஆண்டு நிலுவையில் இருந்த தள்ளுபடி செய்யப்படாத கடன்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவு...


2021 சட்டமன்ற தேர்தலின் போது விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், விவசாயிகளின் பயிர்க்கடன் மத்திய கால கடன்களாக மாற்றம் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள கடன் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


அசல், வட்டி, அபராதவட்டி, இதர செலவுகளின் விவரங்களை முழுமையாக அனுப்பிவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...